Khub.info Learn TNPSC exam and online pratice

இந்திய கோட்டைகள் -- INDIAN FORTS

Q1.

ஆக்ரா கோட்டை -- AGRA FORT

Q2.
ஆக்ரா கோட்டை வேறு எந்த பெயர்களில் அழைக்கப்படுகிறது?
லால் கீலா, ஆக்ரா செங்கோட்டை.

Q3. ஆக்ராவில் இந்த கோட்டை எங்குள்ளது?
தாஜ் மஹாலில் இருத்து வட மேற்காக சுமார் 2.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு அரண் சுவர்களால் சூழப்பட்ட கோட்டை மற்றும் அரண்மனை.. யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது
Q4. ஆக்ரா கோட்டையின் வரலாற்று பின்னணி என்ன?
இது அசலில் 1080ல் சௌஹான் வம்சத்தினால் செங்கற்களால் கட்டப்பட்ட சாதாரண கோட்டை. பிறகு, 1517 வரை, சிக்கந்தர் லோதியின் வசமிருந்தது. பிறகு 1526ல் பாபரிடம் தோல்வியடையும் வரை, இப்ராஹிம் லோடியின் வசமிருந்தது. இவ்வழியாக இந்த கோட்டை ஏகப்பட்ட சொத்துக்களுடன், கோஹினூர் வைரமும் சேர்ந்து, முகலாயர் வசம் 1526ல் வந்தது. 1558ல் அக்பரால் கட்டுப்பாடு புதுப்பிக்கப்படத் தொடங்கி, 1573ல் ஷாஜஹானால் முடிவு பெற்றது.
Q5. முகலாயர்கள் வரலாற்றில், ஆக்ரா கோட்டையில், நடந்த மிக துயரமான சம்பவம் எது?
இந்த கோட்டையைக் கட்டி முடித்த ஷாஜஹானே, பிற்காலத்தில் இதே கோட்டையில், அவருடைய மகன் அவுரங்கசீப்பினால் கைது செய்யப்பட்டு, சிறையடைக்கப்பட்டு, 10 வருட சிறைவாசத்துக்குப் பிறகு, இங்கு மறைந்தார்.
Q6. ஆக்ரா கோட்டையின் முக்கிய வாயில்கள் யாவை?
டெல்லி வாயில் -- டெல்லியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழி பொது மக்கள் பயனுக்கு அனுமதியில்லை, ஏனெனில் இங்கு ஒரு ராணுவ அமைப்பு அமைந்துள்ளது. இதற்கு அமர் சிங் வாயில் என்ற பெயரும் உண்டு.
லாகூர் வாயில் -- லாகூர் திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பார்வைக்கு இந்த வழியே பயன்படுத்தப்படுகிறது.
Q7. ஆக்ரா கோட்டைக்குள் அமைந்துள்ள வெவ்வேறு அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கட்டுமானங்கள் யாவை, அவை எதற்காக பயன்படுத்தப்பட்டன?
MINA MASJID: ஒரு சிறிய மசூதி.
MOTI MASJID: பவள மசூதி. ஷாஜஹானுக்கானது.
MUSAMMAN BURJ : தாஜ்மகாலை நோக்கிய எண்கோண வடிவ மாடம்.
NAGINA MASJID: பெண்களுக்கான இடம். சிறிய அளவிலான பெண்கள் மட்டும் சந்தை.
RANG MAHAL : மன்னரின் துணைவியார்கள் வாழ்ந்த பகுதி.
NAUBHAT KHANA: மன்னரின் இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்துமிடம்.
SHAHI BURJ: ஷாஜஹானின் அலுவல் அறை.
SHAH JAHANI MAHAL: ஷாஜஹான் புதுப்பித்த செங்களிமண் அரண்மனை முதல் பகுதி.
SHEESH MAHAL: மன்னர் பரம்பரையின் உடைமாற்று அறை.
Q8. ஆக்ரா கோட்டையில் நடந்த மற்றொரு வரலாற்று நிகழ்ச்சி என்ன?
12.5.1666ல், முகலாய மன்னர் அவுரங்க சீப் அழைப்பின் பேரில், ""புரந்தர் உடன்படிக்கை"" கையொப்பமிட இங்கு வந்த போது, அவுரங்கசீப் அவரை சிறைபிடித்தார். இருப்பினும், சிவாஜி 17.5.1666 அன்று இங்கிருந்து தப்பிச் சென்றது சரித்திரம்.
Q9. தொல்லியல் ரீதியாக ஆக்ரா கோட்டையின் முக்கியத்துவம் என்ன?
1984 முதல் இது ஒரு உலகப் புராதனச் சின்னம் அந்தஸ்து பெற்றுள்ளது.
Q10. ஆக்ரா கோட்டை எந்த ஒரு துப்பறியும் நாவலில் இடம் பெற்றுள்ளது?
“The Sign of the Four” -- எழுதியவர் Sherlock Holmes.
Q11. ஆக்ரா கோட்டை எகிப்திய இசை காணொளியில் இடம் பெற்றுள்ளது. அது என்ன?
“Habibi Da” -- எகிப்திய பாப் பாடகர் Hisham Abbas.

செங்கோட்டை -- RED FORT

Q12.
செங்கோட்டை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டெல்லி கோட்டை, லால் கீலா.
Q13. செங்கோட்டை எங்கு அமைந்துள்ளது?
டெல்லியில் யமுனை நதிக்கரையில்.
Q14. செங்கோட்டை எப்போது யாரால் கட்டப்பட்டது?
1638-1648 ல் முகலாயர் காலத்தில், ஷாஜஹானால் கட்டப்பட்டது.
Q15. செங்கோட்டையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் யாவை?
(1) 1857ல் சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, இந்த கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி, தங்களது ராணுவ தலைமையகமாக பயனபடுத்தப்பட்டது.
(2) இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஸாஃபர் மீது இந்த கோட்டையில் விசாரணை நடத்தப்பட்டு பர்மாவுக்கு (மியான்மார்) நாடு கடத்தப்பட்டார். பிறகு அவர் அங்கேயே மறைந்தார். அதே சமயம், மன்னரின் மைந்தர்கள் இங்கு வெட்டிக்கொலைச் செய்யப்பட்டனர்.
(3) நவம்பர் 1945ல், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ அதிகாரிகள் மூன்று பேர் மீது விசாரணை இங்கு தான் நடைபெற்றது. எந்த ஒரு நிதிச் சலுகைகள் இல்லாமல் விடுவிக்கப் பட்டனர். அவர்கள்: கர்னல் ப்ரேம் சாகல், கர்னல் குர்பக்ஷ் சிங் தில்லோன் மற்றும் மேஜர் ஜெனரல் ஷா நவாஸ் கான்.
Q16. செங்கோட்டையில் நடத்தப்படும் வருடாந்திர முக்கிய அரசாங்க விழா என்ன?
15 ஆகஸ்ட் அன்று இந்திய சுதந்திர தின விழா இங்கு தான் நடத்தப்படுகிறது. இங்கு கொடியேற்றம் முடிந்தவுடன், பிரதம மந்திரி நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்தும் அரசாங்க திட்டங்களையும் எடுத்துரைப்பார்.
Q17. 2000ம் ஆண்டு, செங்கோட்டையில் நடந்த தீவிரவாத நடவடிக்கை என்ன?
22nd டிசம்பர் 2000, லஷ்கர்-எ-தொய்பா தீவிரவாதிகள் கோட்டையைத் தாக்கி, இரண்டு ராணுவ அதிகாரிகளையும் ஒரு பொது மக்களையும் கொன்றனர்.
Q18. தொல்லியல் ரீதியாக செங்கோட்டையின் முக்கியத்துவம் என்ன?
2007 முதல் உலகப் புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வில்லியம் கோட்டை -- FORT WILLIAM

Q19.
வில்லியம் கோட்டை எங்குள்ளது, யாரால் எப்போது கட்டப்பட்டது?
கொல்கத்தா -- ஹூக்ளி நதிக்கரை -- 1781ல் ஆங்கிலேயர்களால் கட்டி முடிக்கப்பட்டு, இங்கிலாந்து மன்னர் வில்லியம் III ன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Q20. வில்லியம் கோட்டைக்குள் எத்தனை கோட்டைகள் உள்ளன? அவற்றை கட்டியவர்கள் யார்?
(1) பழைய கோட்டை -- 1701-1706 காலத்தில், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, இப்போது இந்திய அரசாங்க சுங்கவரி அலுவலமாக இயங்குகிறது.
(2) புதிய கோட்டை -- 1756ல் சிராஜ் உத் தௌலா இந்த நகரைக் கைப்பற்றி, அலிநகர் என பெயரிட்டு, இந்த கோட்டையை ஆங்கிலேயர் ராபர்ட் க்ளைவை கட்ட வைத்தார். 1756ல் தொடங்கி, 1781ல் முடிவடைந்தது. தற்போது இங்கு, இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல அலுவலகம் இயங்குகிறது. இந்த கோட்டை எண்கோண வடிவில் ஆறு வாயில்களுடன் கட்டப்பட்டுள்ளது.
Q21. 20.6.1756ல் இந்த கோட்டையில் இந்திய வரலாற்றுடன் சம்பந்தப்பட்டு நடந்த துயர சம்பவம் என்ன?
கருந்துளை நிகழ்வு -- Black Hole Incident: 20.6.1756 அன்று, நவாபின் சிப்பாய்கள் சுமார் 146 ஆங்கிலேயர்களைச் சிறைப்பிடித்து, ஒரு சிறிய அறையில் அடைத்து விட்டனர். அதில் 123 ஆங்கிலேயர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மறைந்தனர் என்பது துயரமான ஒரு சம்பவம்.

வேலூர் கோட்டை -- VELLORE FORT

Q22.
வேலூர் கோட்டை யாரால் எப்போது கட்டப்பட்டது?
விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் திம்ம ரெட்டி நாயக் மற்றும் சின்ன பொம்மி நாயர் ஆகியோரால் 1566 காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
Q23. வேலூர் கோட்டை வரலாற்று படி, எந்த மன்னர்களின் கீழ் இருந்தது?
1) 1566-1656 -- விஜயநகர சாம்ராஜ்யம்.
2) 1656-1678 -- பீஜாப்பூர் சுல்தான்கள்
3) 1678-1707 -- மராத்தா சாம்ராஜ்யம்
4) 1707-1760 -- கர்நாட்டிக் நவாப்கள்.
5) 1760-1947 -- ஆங்கிலேயர்கள்.
Q24. வேலூர் கோட்டையில் நடந்த எந்த நிகழ்வு, சுதந்திர போராட்டத்தின் போராட்டங்களுக்கு துவக்கமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது?
10th ஜூலை 1806. இந்த கலகம், ஆங்கிலேயர்கள், சிப்பாய்கள் மீது திணித்த சில விதிமுறைகள், இவை அவரவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக இருந்ததால், எதிர்த்து தொடங்கி கலவரமாக மாறி, ஒருநாள் மட்டுமே நீடித்தாலும், சுமார் 100 ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டது மட்டுமின்றி, 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுவே 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியாகவும், பிற்கால சுதந்திரப் போராட்டத்துக்கு வழியும் வகுத்தது எனக் கூறப்படுகிறது.
Q25. வேலூர் கோட்டையில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் யாவை?
1) திப்பு சுல்தானின் குடும்பம் மற்றும் இலங்கை கண்டி பகுதி கடைசி நாயக் மன்னர் இங்கு ஆங்கிலேயர்களால் சிறையடைக்கப்பட்டிருந்தனர்.
(2) விஜய நகர சாம்ராஜ்யத்தின் ஸ்ரீ ரங்கராயா அரச பரம்பரையினர், இங்கு தான் ஜக்க ராயா என்பவரால் படுகொலைச் செய்யப்பட்டனர்.
Q26. வேலூர் கோட்டை மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. எவ்வாறு?
இந்த கோட்டையில், இந்து, முஸ்லீம், கிறித்துவர்களின் இடையே நிலவிய ஒற்றுமையை போற்றும் வகையில் --
1) ஜலகண்டேஸ்வரர் இந்து கோவில்
2) ஒரு மசூதி
3) ஒரு கிறித்துவ தேவாலயம் -- ஆகியவை அமைந்துள்ளது.
Q27. What are the various other forts in India?
(1)பேகால் கோட்டை -- BEKAL FORT: கேரளாவின் கனங்காடு அருகில் பேகால் என்ற இடத்தில் உள்ளது. 12ம் நூற்றாண்டில் நாயக மன்னர்களால் கட்டப்பட்ட இது கேரளாவின் பெரிய கோட்டை.
(2) தேவகிரி கோட்டை -- DEVAGIRI FORT: தௌலதாபாத் கோட்டை எனவும் அழைக்கப்படும் இந்த கோட்டை 12ம் நூற்றாண்டில் யாதவ வம்சத்தால் கட்டப்பட்டது. மகாராஷ்டிராவின் தௌலதாபாத் நகரில் உள்ளது. முகமது பின் காலத்தில் தௌலதாபாத் தலைநகரமாக விளங்கியது.
(3) கோல்கொண்டா கோட்டை -- GOLCONDA FORT: ஹைதராபாத் ன் மேற்கு திசையில் 11 கி.மீ தூரத்தில் உள்ளது. 120 மீட்டர் உயரமுள்ள ஒரு குன்றின் மீது, காகத்திய வம்சத்தால் 1143ல் கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில், குதுப் ஷாஹி வம்சம் இந்த கோட்டையை விரிவு மற்றும் பலப்படுத்தியது. இதன் வெளிச்சுவர்கள் சுமார் 10 கி.மீ சுற்றளவு கொண்டது.
(4) ஜெய்சல்மேர் கோட்டை -- JAISALMER FORT: ஜெய்ப்பூர், ராஜஸ்தான். 1156ல் ஜெய்சால் என்ற ராஜபுத்ர மன்னரால் கட்டப்பட்டது. திரிகுடா மலையின் மீது அமைந்துள்ள இது அரச அரண்மனையாகவும் பயன்படுத்தப்பட்டது. இங்குள்ள ஜெயின் மற்றும் லக்ஷ்மிநாத் கோவில் சேர்த்து, இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலம். ஜெய்ப்பூர் நகரின் கணிசமான மக்கள் தொகை இங்கு கோட்டைக்குள் வசிக்கின்றனர்.
(5) கொலாபா கோட்டை -- KOLABA FORT: மகாராஷ்டிராவின் அலிபாக் என்ற இடத்தில், கடலுக்குள் சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 1680ல் சிவாஜியால் கட்டப்பட்ட இந்த கோட்டை கடலுக்குள் இருந்தாலும், கோட்டைக்குள் நல்ல குடிநீர் கிணறு உள்ளது. இரண்டு வாயில்களும், ஒரு சித்தி விநாயகர் கோவிலும் கொண்டது.
(6) லோஹாகாட் கோட்டை -- LOHAGAD FORT: ""இரும்பு கோட்டை"" எனப்படுகிறது. தரையில் இருந்து சுமார் 3450 அடி உயரத்தில் மலைமீது அமைந்துள்ள கோட்டை.. பூனே நகரிலிருந்து பாம்பே வழியில் சுமார் 52 கி.மீ தூரத்தில் உள்ளது. பாம்பே-பூனே ரயில் தடத்தில், மாலவ்லி ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது.
(7) வாசாப்பூர் கோட்டை -- VASAPUR FORT: லோஹாகாட் கோட்டைக்கும் மேலே உள்ள கோட்டை.
(8) முருத் ஜஞ்சிரா -- MURUD JANJIRA: மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் முருத் என்ற இடத்தில், அரபிக்கடலுக்குள் சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 16ம் நூற்றாண்டில், அகமது நகர் ஆண்ட மன்னர் புர்ஹான் கான் என்பவரால் கட்டப்பட்டது. சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடலுக்குள் இருக்கும் காரணத்தால் எந்த படையும் இந்த கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. அரபு மொழியில் ஜஞ்சிரா என்றால் கோட்டை எனப் பொருள்.
(9) நால்துர்க் கோட்டை -- NALDURG FORT: மகாராஷ்டிராவின் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ளது. கட்டிடக் கலைக்கும், நீருக்குள் இருக்கும் அரண்மனை, சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய விருந்து.
(10) பாலக்காடு கோட்டை -- PALAKKAD FORT: 1766ல் மைசூரின் ஹைதர் அலியால் கட்டப் பட்ட இந்த கோட்டை கேரளாவின் பாலக்காடு என்ற இடத்தில் உள்ளது.
(11) பன்ஹாலா கோட்டை -- PANHALA FORT: 1178-1209 காலத்தில் ஷில்ஹாரா வம்சத்தால் கட்டப்பட்ட கோட்டை. இது மகாராஷ்டிராவின் கோலாப்பூரிலிருந்து சுமார் 18 கீ.மீ தூரத்தில் ஒரு அழகான மலைமீது, சுமார் 3177 அடி உயர மலையில் கட்டப்பட்டுள்ளது.
(12) ப்ரதாப்கட் கோட்டை -- PRATAPGAD FORT: ப்ரதாப்கர் எனவும் அழைக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலையில், மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வர் என்ற இடத்திலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. சுமார் 900 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய கோட்டை, பேஷ்வா மோரோபந்த் த்ரிம்பக் பிங்ளே காலத்தில் முடிவடைந்தது. இந்தக் கோட்டையில் சிவாஜி சுமார் 500 நாட்கள் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
(13) ராஜ்கட் கோட்டை -- RAJGAD FORT: மகாராஷ்டிராவின் பூனே மாவட்டத்தில், சுமார் 4250 அடி உயர மலைமீது அமைந்துள்ளக் கோட்டை. சிவாஜி காலத்தில் தலைநகராகவும் இருந்த நகரம்.
(14) ராய்கட் கோட்டை -- RAIGAD FORT: மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4350 அடி உயரத்தில் 17வது நூற்றாண்டில் கட்டப்பட்டு அமைந்துள்ள கோட்டை. சிவாஜியின் தலைநகரமாக இருந்த நகரம். மேலே போவதற்கு இப்போது இரும்புக்கயிறு வாகன வசதி உள்ளது.
(15) சிந்து துர்க் கோட்டை -- SINDHODURG FORT: மகாராஷ்டிராவின் சிந்து துர்க் மாவட்ட கடற்கரையில் ஒரு தீவின் மீது அமைந்துள்ள கோட்டை. 1664ல் சிவாஜியால் கட்டப்பட்டது.
(16) சுதாகட் கோட்டை -- SUDHAGAD FORT: மகாராஷ்டிராவின் பச்சாப்பூர் என்ற இடத்தில் சுமார் 2030 அடி உயரத்தில் அமைந்துள்ள கோட்டை. இதன் அருகில் பாலி என்ற இடத்தில் உள்ள அஷ்டவிநாயகர் கோவில் மிகவும் பிரபலமானது.
(17) சிங்காகட் கோட்டை -- SINHAGAD FORT: பூனே வின் அருகில், சுமார் 800 அடி உயரக் குன்றின் மீது அமைந்துள்ள இந்த கோட்டை மராத்தா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கோட்டை இப்போது தேசிய ராணுவ அகாடமியின் (கடக்வாஸ்லா, பூனே) வசம் உள்ளது.
(18) டிக்கோனா கோட்டை -- TIKONA FORT: பூனேவிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் மாவல், காம்ஷெட் என்ற இடத்தில் உள்ளது.
(19) அச்சால்கர் கோட்டை -- ACHALGARH FORT: ராஜஸ்தானின், மவுண்ட் அபு அருகில் உள்ள இந்த கோட்டை 1452ல் மகாராணா கும்பா வால் கட்டப்பட்டது. இங்கு ஒரு பிரபலமான சிவன் கோவில் மற்றும் ஜெயின் கோவில் உள்ளது.
(20) விஜயதுர்க் கோட்டை --VIJAYADURG FORT: மகாராஷ்டிராவின் தேவ்கட் என்ற இடத்தின் அருகில், சிவாஜியால் கட்டப்பட்ட இந்த கோட்டை, அரபிக்கடலுக்குள் செல்லும் ஒரு நீண்ட நிலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 6 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது. இந்தப்பகுதி புகழ் பெற்ற ""அல்ஃபோன்ஸோ"" வகை மாம்பழத்திற்கு புகழ் பெற்றது.
(21) அலகாபாத் கோட்டை -- ALLAHABAD FORT: 1583ல் அக்பரால், யமுனா நதிக்கரையில் கட்டப்பட்ட கோட்டை. இங்கு ஒரு அரண்மனையும், அசோகர் தூணும் உள்ளது. இந்தக் கோட்டை இப்போது இந்திய ராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பகுதி கோட்டை பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.
(22) பேலாப்பூர் கோட்டை -- BELAPUR FORT: புது பாம்பேயின் அருகில் பேலாப்பூர் என்ற இடத்தில் உள்ளது. 1560-1570 காலத்தில் சித்தி மன்னர்களால் ஒரு மலைக்குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது.
(23) ஆம்பர் கோட்டை -- AMBER FORT: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஆம்பர் என்ற இடத்தில், 16ம் நூற்றாண்டில் அக்பரின் தளபதி ராஜா மான்சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த கோட்டை அமைந்துள்ளது. இதை ஜெய்கர் கோட்டை எனவும் அழைப்பர்.
(24) ஆசீர்கர் கோட்டை -- ASIRGARH FORT: மத்திய பிரதேசத்தின் புராப்பூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை அமைந்துள்ளது.
(25) பீம்கார் கோட்டை -- BHIMGARH FORT: ரியாஸி கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. மகாராஜா ரிஷிபால் ராணா என்பவரால் கட்டப் பட்டது.
(26) பந்தவ்கர் கோட்டை -- BANDAVGARH FORT: மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் உள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவின் நடுவில் உள்ளது. சுமார் 811 மீட்டர் உயரத்திலுள்ளது. மிகப் பழமையான கோட்டை எனக் கருதப்படுகிறது.
(27) சந்தேரி கோட்டை -- CHANDERI FORT: மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோட்டை 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
(28) சந்திரகிரி கோட்டை -- CHANDRAGIRI FORT: ஆந்திரபிரதேசத்தின் சித்தூர் அருகில், விஜய நகர சாம்ராஜ்ய மன்னர்களால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டக் கோட்டை.
(29) சந்திரகிரி கோட்டை -- CHANDRAGIRI FORT: 17ம் நூற்றாண்டில், சிவப்பா நாயக் என்பவரால் கட்டப்பட்டு, கேரள மாநிலத்தின் காசரகோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
(30) சித்தோர்கர் கோட்டை -- CHITTORGARH FORT: ராஜஸ்தானின் சித்தோர்கர் என்ற இடத்தில் 180 மீட்டர் உயர குன்றின் மீது, சுமார் 280 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கோட்டை. 7 வது நூற்றாண்டில் மௌர்ய வம்சத்தினரால் கட்டப்பட்டதாக தெரிகிறது. இதை ""சித்திரகூட்"" என்றும் அழைப்பர்.
(31) அர்னாலா கோட்டை -- ARNALA FORT: 1516 ல், மகாராஷ்டிராவின் வசாய் என்ற இடத்தில் கடலில் ஒரு தீவில் சுல்தான் மகமூத் பேக்டா என்பவரால் கட்டப்பட்ட கோட்டை.
(32) செஞ்சி கோட்டை -- GINGEE FORT: தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி என்ற நகரில் அமைந்துள்ள கோட்டை. 9 வது நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, 13 வது நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தால் விரிவாக்கம் செய்யப்பட்டு, 1677ல் சிவாஜியால் மேலும் வலுவடைய செய்யப்பட்டது. தாக்குதல் செய்வதற்கு மிக கடினமான கோட்டை என சிவாஜி குறிப்பிட, ஆங்கிலேயர்கள் இதை “The Troy of the East” எனவும் விவரித்து இருந்தனர்.
(33) கோஹட் கோட்டை -- GOHAD FORT: மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தின் கோஹட் நகரில், 1505ல் ஜாட் ராணா மன்னர் சிங்காந்தர் என்பவரால் கட்டப்பட்டது. (34) குவாலியர் கோட்டை -- GWALIOR FORT: மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில், 12ம் நூற்றாண்டில், தோமர் வம்ச மன்னர் ராஜா மான் சிங் என்பவரால் கட்டப்பட்ட கோட்டை.
ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இதில், சில வரலாற்று கட்டமைப்புகளும், கோவில்களும் உள்ளன. மிகப்பெரிய கோட்டை.. “The Gibraltar of India” எனவும், “Pearl in the necklace of the forts of Hind” என பாபரால் போற்றப்பட்டது. (35) ஹரிச்சந்திரகட் -- HARISHCHANDRA GAD: மகாராஷ்டிராவின் அஹமத்நகரில் அமைந்துள்ள இந்த கோட்டை, காளச்சூரி வம்ச காலத்தில் 6 வது நூற்றாண்டில் கட்டப்பட்டது.
(36) ஹோஸ்துர்க் கோட்டை -- HOSDURG FORT: 16வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, கேளாடி நாயக வம்சத்தால், கேரளாவின் காசரகோட் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் ""ஆனந்தாஸ்ரம்"" என்ற இடத்தில் சுமார் 45 குகைகள் உள்ளன. (37) ஜெய்கர் கோட்டை -- JAIGARH FORT: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகில் சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு குன்றின் மீது அமைந்துள்ள மிக அழகான கோட்டை. இதன் கீழ் அமைந்துள்ளது, ஆம்பர் கோட்டை. 16வது நூற்றாண்டில், இரண்டு கோட்டைகளும் ராஜா மான் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோட்டையில் ""ஜெய்வன்"" என்ற மிகப் பெரிய சக்கர பீரங்கி உள்ளது. ஒரு அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.
(38) மாத் கோட்டை -- MADH FORT: போர்ச்சுகீசியர்களால், மும்பையின் மலாட் பகுதியில் இருந்து, 15 கி.மீ தூரத்தில் கட்டப்பட்டுள்ளது. வெர்சோவா கோட்டை எனவும் அழைக்கப் படுகிறது.
(39) ஜாலோர் கோட்டை -- JALORE FORT: 8 - 10ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டை, ராஜஸ்தானின் ஜாலோர் நகரில் அமைந்துள்ளது. 1200 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள மிக சிறப்பானக் கோட்டை. கோட்டைக்குள் ஒரு அரண்மனையும் உள்ளது.
(40) ஜூனாகர் கோட்டை -- JUNAGARH FORT: 1588ல் பீகானீர் மன்னர் ராஜா ராய் சிங் என்பவரால் கட்டப்பட்டக் கோட்டை. ராஜஸ்தான் மாநில பீகானீர் நகரில் அமைந்துள்ள மிக சிறப்பான கோட்டை. இதில் சில அரண்மனை போன்ற மாளிகைகளும், அருங்காட்சியகம் போன்றவையும் அமைந்துள்ளன.
(41) கங்காவாடி கோட்டை -- KANKWADI FORT: ராஜஸ்தான் மாநில ஆல்வார் மாவட்டத்தில் உள்ளது. அவுரங்கசீப் தனது சகோதரர் தாரா சிக்கோ வை இங்குதான் சிறை வைத்து இருந்தார்.
(42) கும்பால்கர் கோட்டை -- KUMBALGARH FORT: 15வது நூற்றாண்டில், ரணகும்பா வால் கட்டப்பட்ட இந்த கோட்டை, மிகவும் கடினமானதொரு மலைக்குன்றின் மீது கட்டப்பட்டு உள்ளது. சுமார் 36 கி.மீ சுற்றளவு கொண்டது (சீன பெருஞ்சுவருக்கு அடுத்தது) . கோட்டைக்குள் சுமார் 360 ஜைன, இந்து கோவில்கள் உள்ளன.
(43) லோஹாகர் கோட்டை -- LOHAGARH FORT: ""இரும்பு கோட்டை"" எனப்பட்டது. 17/18வது நூற்றாண்டு வாக்கில் பரத்பூர் ஜாட் இன மன்னர்களால் கட்டப்பட்டது. இந்தியாவின் மிக வலுவானக் கோட்டை என கருதப்படுகிறது. எந்த படையாலும் தகர்க்கமுடியாத ஒரு கோட்டை.
(44) மாஹிம் கோட்டை -- MAHIM FORT: மும்பை மாஹிம் பகுதியில் உள்ள ஒரு கோட்டை.
1670ல், பாம்பேயின் முதல் ஆளுநார் ஜெரால்ட் ஆங்கியர் என்பவரால் கட்டப்பட்டது.
(45) மெஹ்ராங்கர் கோட்டை -- MEHRANGARH FORT: ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் 400 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. உள்ளே ஓரிரண்டு அரண்மனைகளுமுள்ளன. இந்த கோட்டை, ஜோத்பூர் நகரை நிறுவிய ராவ் ஜோதா என்பவரால் தொடங்கப்பட்டு 17ம் நூற்றாண்டில் முடிவடைந்தது.
(46) நஹர்கர் கோட்டை -- NAHARGARGH FORT: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரின் ஆரவல்லி மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கோட்டை. 1734ல் மகாராஜா சவாய் ஜெய்சிங்க் 2 வால் கட்டப்பட்டது. சிப்பாய் கலகத்தின் போது, ஆங்கிலேயர்கள் இந்த கோட்டைக்குள் தஞ்சம் புகுந்திருந்தனர்.
(47) நார்வார் கோட்டை -- NARWAR FORT: மத்ய பிரதேசத்தின் நார்வார் என்ற இடத்தில், சுமார் 500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இது, 10வது நூற்றாண்டில், ராஜபுத்ரா மன்னர்களால் கட்டப்பட்டது. விந்தியா மலைத்தொடரில் அமைந்துள்ளது.
(48) பழைய கோட்டை -- OLD FORT: -- டெல்லி -- ""புரானா கீலா- Purana Qila"", என்றைழைக்கப்படுகிறது. 16வது நூற்றாண்டில் சூர் வம்ச மன்னர் ஷேர் ஷா சூரி யால் கட்டப்பட்டது. இப்போது இங்கு ஒரு விலங்கியல் பூங்காவும், ஒரு படகு சங்கம் இங்குள்ளது.
(49) பள்ளிப்புரம் கோட்டை -- PALLIPURAM FORT: 1503ல் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட கோட்டை, கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது.
(50) செயிண்ட் ஏஞ்செலோ கோட்டை -- ST. ANGELO FORT: கேரளாவின் கன்னூர் நகரில் அமைந்துள்ளது. 1505ல் போர்ச்சுகீசிய டான் ஃப்ரான்சிஸ்கோ டி அல்மெய்டா இந்த கோட்டையைக் கட்டினார்.
(51) தலசேரி கோட்டை -- THALASSERY FORT: 1708ல் ஆங்கிலேயர்களால் தலசேரி, கன்னூர் மாவட்டம், கேரளா வில் கட்டப்பட்டக் கோட்டை. மிகப்பெரிய சுவர்களும், கடற்கரைப் பகுதிக்கு செல்ல, ரகசிய சுரங்கப் பாதைகளும் உள்ளது.
(52) உதயகிரி கோட்டை -- UDAYAGIRI FORT – கேரளா -- திருவனனந்தபுரம்-நாகர்கோவில் பாதையில் புளியூர்குறிச்சி என்ற இடத்தில், 1600 களில் பத்மநாபபுர மன்னர்களால் கட்டப்பட்டது.
(53) உதயகிரி கோட்டை -- UDAYAGIRI FORT – ANDHRA: ஆந்திராவின் நெல்லூர் நகரிலிருந்து சுமார் 96 கி.மீ தூரத்தில் உள்ளது. உதயகிரி என்ற--3079 அடி உயர- மலை மீது அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.
Q28. நூற்றுக்கும் மேற்பட்ட கோட்டைகள் கட்டிய புகழ் பெற்ற இந்திய மன்னர் யார்?
மராத்தா மன்னர் -- சத்ரபதி சிவாஜி
Q29. தான் கட்டிய கோட்டையிலேயே 10 வருட சிறை வாசமும், மரணமும். இந்த துயர சம்பவம் எந்த மன்னருக்கு ஏற்பட்டது?
ஷா ஜஹானுக்கு. அவருடைய மகன் அவுரங்கசீப் இவரை ஆக்ரா கோட்டையில் 10 வருடம் சிறைவாசம், மரணம் வரை வைத்திருந்தார்.
Q30. எந்த கோட்டையில், சிவாஜி, அவுரங்கசீப்புடன் புரந்தர் உடன்படிக்கை கையொப்பம் இட சென்று, சிறைபிடிக்கப்பட்டார்?
ஆக்ரா கோட்டை.
Q31. இந்தியாவின் எந்த கோட்டை, ஆங்கிலேய ராணுவத்தின் தலைமையகமாக செயல்படுத்தப்பட்டது?
செங்கோட்டை, டெல்லி.
Q32. எந்த கோட்டையில், முகலாய மன்னர் பகதூர் ஷா அவர்களின் விசாரணை, மற்றும் அவருடைய மகன்கள் படு கொலைசெய்யப்பட்டனர்?
செங்கோட்டை, டெல்லி.
Q33. எந்த கோட்டையில் இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளின் விசாரணை நடத்தப்பட்டது?
செங்கோட்டை, டெல்லி.
Q34. ராபர்ட் க்ளைவால் கட்டப்பட்ட எந்த கோட்டையில் இப்போது இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலம் இயங்குகிறது?
கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்குள் இருக்கும் புதிய கோட்டையில்.
Q35. "கருந்துளை நிகழ்வு" Black Hole -- எந்த கோட்டையில் நிகழ்ந்தது?
கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்குள் இருக்கும் பழைய கோட்டையில்.
Q36. காகத்திய வம்சத்தால் கட்டப்பட்ட புகழ் பெற்ற கோட்டை எது?
கோல்கொண்டா கோட்டை.
Q37. எந்த கோட்டைக்குள், ஒரு நகரத்தின் கணிசமான (சுமார் 25%) பொதுமக்கள் வாழ்கின்றனர்?
ஜெய்சல்மேர் கோட்டை, ஜெய்ப்பூர் -- ராஜபுத்ர மன்னர் ஜெய்சால் என்பவரால் திரிகூட குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது.
Q38. மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கோட்டை கடலுக்குள் 2 கி.மீ தூரத்தில் கட்டப்பட்டு, அதில் ஒரு நல்ல குடிநீர் கிணறும் உள்ளது?
கொலாபா கோட்டை, அலி பாக். சிவாஜியால் கட்டப்பட்டது.
Q39. "இரும்பு கோட்டை" என பெயர் கொண்ட கோட்டை எது?
லோஹாகட் கோட்டை -- பூனே பாம்பே வழியில், மாலவாலி என்ற இடத்தின் அருகில், 3450 அடி உயர மலை மீது அமைந்திருக்கும் கோட்டை.
Q40. மகாராஷ்டிரா, ராய்கட் மாவட்டத்தில் உள்ள ""முருத் ஜஞ்சிரா"" கோட்டையின் சிறப்பு அம்சம் என்ன?
மேற்கு கடலுக்குள் சுமார் 3 கி.மீ தூரத்தில், 16 வது நூற்றாண்டில், புர்ஹான் கான் என்பவரால் கட்டப்பட்டிருப்பது.
Q41. கட்டிட கலைக்கு ஒரு சிறப்பு எடுத்துக்காட்டாக, நீருக்குள் (நீரின் அடியில் அல்ல) கட்டப்பட்டுள்ள கோட்டை எது?
நல்துர்க் கோட்டை, ஒஸ்மனாபாத், மகாராஷ்டிரா.
Q42. எந்தக் கோட்டை சிவாஜியின் தலைநகராக விளங்கியது?
ராய்காட் கோட்டை, மகாராஷ்டிரா.
Q43. தேசிய ராணுவ அகாடமி (கடக்வாஸ்லா, பூனே) யின் ஒரு பகுதியாக இயங்கும் கோட்டை எது?
சின்ஹகாட் கோட்டை, பூனே.
Q44. “The Troy of East” என எந்த கோட்டை விவரிக்கப்பட்டது?
செஞ்சி கோட்டை, விழுப்புரம் மாவட்டம். ஆங்கிலேயர்களால் இவ்வாறு விவரிக்கப்பட்டது.
Q45.
செஞ்சி கோட்டையை சிவாஜி எவ்வாறு விவரித்தார்?
"இந்தியாவின் தகர்க்க முடியாத கோட்டை" -- “The most impregnable fortress in India”.
Q46. “Gibraltar of India” என எந்தக் கோட்டை அழைக்கப்படுகிறது?
குவாலியர் கோட்டை, மத்தியபிரதேசம்.
Q47. குவாலியர் கோட்டையை முகலாய மன்னர் பாபர் எவ்வாறு விவரித்தார்?
""கோட்டைகளால் செய்யப்பட்ட கழுத்து மாலையில் (நெக்லேஸ்) ஒரு வைரம்"" “Pearl in the necklace of the forts of Hind”.
Q48. குவாலியர் கோட்டையை கட்டியவர்கள் யார்?
தோமர் வம்ச மன்னர் ராஜா மான் சிங் .
Q49. "கழுகுகளின் கோட்டை" என அழைக்கப்படும் கோட்டை எது? “Cheel Ka Teela”
ஜெய்கர் கோட்டை -- ஜெய்ப்பூர், ராஜஸ்தான். இது ""வெற்றிக் கோட்டை"" எனவும் அழைக்கப்படுகிறது. ராஜா மான் சிங் அவர்களால் கட்டப்பட்டது.
Q50. உலகின் மிகப் பெரிய சக்கர பீரங்கி எந்த கோட்டையில் உள்ளது?
ஜெய்கர் கோட்டை -- ஜெய்ப்பூர்.
Q51. ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மிகப்பெரிய அழகான கோட்டை எது?
கும்பால்கர் கோட்டை -- இதன் சுற்றளவு சுமார் 36 கி.மீ. கோட்டைக்குள் 360 கோவில்கள் உள்ளன.
Q52. இந்திய கோட்டைகளுள் மிகவும் வலுவானது, தகர்க்கமுடியாததும் என கருதப்படும் கோட்டை எது?
லோஹாகர் கோட்டை -- இரும்புக் கோட்டை -- ராஜஸ்தான்.
Q53. 1857 சிப்பாய் கலகத்தின் போது, ஆங்கிலேயர்கள் எந்த கோட்டைக்குள் தஞ்சம் அடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்?
மஹர்கர் கோட்டை, ஜெய்ப்பூர், ராஜஸ்தான். 1734ல் மன்னர் சவாய் ஜெய் சிங் கட்டியது.
Q54. 1757 ப்ளாசிப் போருக்குப் பிறகு கட்டப்பட்ட ஆங்கிலேயர் கோட்டை எது?
வில்லியம் கோட்டை, கொல்கத்தா.
Q55.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை எது?
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை -- 1644ல் கட்டப்பட்டது. ஃப்ரான்சிஸ் டே என்பவர் வடிவமத்த கோட்டை. இதனுள் உள்ள செயிண்ட் மேரி தேவாலயம், இந்தியாவின் முதல் ஆங்கிலேய பாரம்பரிய தேவாலயம் -- Anglican Church. 1678-1680 களில் கட்டப்பட்டது.
Q56. துக்ளகாபாத் கோட்டையை கட்டியவர் யார்?
கியாசுத்தீன் துக்ளக். துக்ளக் வம்ச நிறுவனர்.
Q57. வேலூர் கோட்டையை நிறுவியவர் யார்?
சின்ன பொம்மு நாயக் & திம்ம ரெட்டி நாயக் -- 1526.

கோடை வாசத்தலங்கள் -- HILL STATIONS

Q58. கோடை வாசத்தலம் என்ன?
மலைப் பகுதியின் உயரமான இடங்கள், எங்கு, வெப்பம் குறைவாகவும், செடி கொடி மரங்கள் சூழ்ந்த ஒரு குளிர்ச்சியான பகுதி, தரைப்பகுதியில் நிலவும் உயர் வெப்ப நிலையிலிருந்து வெளிச்சென்று வாழும் இடங்கள்.
Q59. இந்தியாவில் உள்ள கோடைவாசத்தலங்கள் யாவை?
1. ஹார்ஸ்லி ஹில்ஸ் -- HORSLEY HILLS: மதனபள்ளி, ஆந்திரபிரதேசம் -- கடப்பா மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயர் W.D.Horsley என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
2. அரக்கு வேலி (பள்ளத்தாக்கு) -- ARAKU VALLEY: விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம். இங்குள்ள போரா குகைகள் மிகவும் புகழ் பெற்றவை.
3. சத்புதாரா --SAPUTARA: டாங் மாவட்டம், குஜராத்.
4. செயில் -- CHAIL: இமாச்சலபிரதேசம். Himachala Pradesh.
5. டல்ஹௌசி -- DALHOUSIE : சம்பா மாவட்டம், இமாச்சல பிரதேசம். 1854ல் மேம்படுத்தப்பட்டு, டல்ஹௌசி பிரபுவின் பெயரிடப்பட்டது.
6. தர்மஷாலா -- DHARMSHALA: கங்ரா மாவட்டம், இமாச்சல பிரதேசம். இங்குள்ள கிரிக்கெட் மைதானம் உலகின் அழகான மைதானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
7. கசௌலி -- KASAULI : கண்டோன்மெண்ட் பகுதி -- சோலன் மாவட்டம், இமாச்சல பிரதேசம்.
8. குளு -- KULLU : இமாச்சலப் பிரதேசம் -- தசரா திருவிழா மற்றும் சுடுநீர் ஊற்றுகள் மிகவும் புகழ் பெற்றவை.
9. சிம்லா -- SHIMLA: இமாச்சல பிரதேசம் -- 1819ல் ஆங்கிலேயர்கள் குர்க்கா போருக்குப் பிறகு இந்த இடத்தைக் கண்டுபிடித்து, மேம்படுத்தி, தங்களது கோடை தலைநகரமாக மாற்றினர்.
10. ஸ்ரீநகர் -- SRINAGAR : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை தலைநகரம்.
11. ஹசாரி பாக் -- HAZARIBAGH: ஜார்க்கண்ட்.
12. நந்தி துர்க் -- NANDIDURG : கோலார் மாவட்டம், கர்நாடகா.
13. கெம்மங்குடி -- KEMMANGUDI: சிக்மகளூர் மாவட்டம், கர்நாடகா.
14. தேவிக்குளம் -- DEVIKULAM: இடுக்கி மாவட்டம், கேரளா. முன்னார் அருகில். தேயிலை தோட்டங்கள்.
15. முன்னார் -- MUNNAR : கேரளா -- தேயிலைத்தோட்டம், அணை மற்றும் சுற்றுச்சூழல்.
16. பீர்மேடு -- PEERMADE : கோட்டயம், கேரளா. சுஃபி துறவி பீர் முகமதுவின் பெயர் இடப்பட்டுள்ளது.
17. பொன்முடி -- PONMUDI: திருவனன்ந்தபுரம், கேரளா.
18. வயநாடு -- WAYANAD : கேரளா.
19. பஸ்மாரி -- PACHMARHI: மத்யபிரதேசம் -- சத்புரா மலைத்தொடரில் உள்ளது.
20. கண்டாலா -- KHANDALA: மகாராஷ்டிரா -- பூனே-பாம்பே துரிதப் பாதையில் உள்ளது.
21. லோனாவாலா -- LONAVALA: மகாராஷ்டிரா -- பூனே-பாம்பே துரிதப் பாதையில் உள்ளது.
22. மகாபலேஷ்வர் -- MAHABALESHWAR : சத்தாரா மாவட்டம், மகாராஷ்டிரா. ஆங்கிலேய பாம்பே மாகாணத்தின் கோடை தலைநகரம்.
23. மத்தேரன் -- MATHERAN: மகாராஷ்டிரா -- பூனே அருகில் -- எல்ஃபின்ஸ்டன் பிரபுவால் மேம்படுத்தப் பட்ட தலம்.
24. பஞ்ச்கனி -- PANCHGANI: மகாராஷ்டிரா.
25. இகத்புரி -- IGATPURI: நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா.
26. பன்ஹாலா -- PANHALA: கோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா. மராத்தா சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது. இங்குள்ள கோட்டையில், சிவாஜி சுமார் 500 நாட்கள் தங்கியிருந்தார்.
27. மவுண்ட் அபு -- MOUNT ABU : சிரோஹி மாவட்டம், ராஜஸ்தான் -- ஆரவல்லி மலைத்தொடர்.
28. குன்னூர் -- COONOOR : நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு. முக்கியமான சுற்றுலாத்தலம்.
29. உதகமண்டலம் -- OOTACAMUND : ஊட்டி என்றும் அழைக்கப்படுகிறது. 1818ல் ஜான் சுல்லிவன் என்ற ஆங்கிலேயர் இந்த இடத்தை மேம்படுத்த தொடங்கி, இன்று, உலகின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
30. கொடைக்கானல் -- KODAIKANAL: திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
31. ஏற்காடு -- YERCAUD : சேலம் மாவட்டம், தமிழ்நாடு.
32. பீம்தால் -- BHIMTAL: நைனிடால் மாவட்டம், உத்தரகாண்ட்.
33. சமோலி -- CHAMOLI: உத்தராகாண்ட்.
34. முசோரி -- MUSSORIE: டெஹ்ராடூன், உத்தராகாண்ட்
35. நைனிடால் -- NAINITAL : உத்தராகாண்ட் -- குமாவ்ன் மலைத்தொடரில் உள்ளது.
36. ராணிகேட் -- RANIKHET : அல்மோரா மாவட்டம், உத்தராகாண்ட்.
37. முன்சியாரி -- MUNSIYARI: பித்தோர்கர் மாவட்டம், உத்தராகாண்ட்.
38. சம்பாவத் -- CHAMPAWAT : உத்தராகாண்ட்
39. கங்கோலிஹாத் -- GANGOLIHAT : பித்தோர்கர் மாவட்டம், உத்தராகாண்ட்.
40. பெரிநாக் -- BERINAG : பித்தோர்கர் மாவட்டம், உத்தராகாண்ட்.
41. ஆஸ்காட் -- ASKOT : பித்தோர்கர் மாவட்டம், உத்தராகாண்ட்.
42. தீதீஹாத் -- DIDIHAT : பித்தோர்கர் மாவட்டம், உத்தராகாண்ட்.
43. சௌகோரி -- CHAUKORI: பித்தோர்கர் மாவட்டம், உத்தராகாண்ட்.
44. லோஹாகாட் -- LOHAGHAT: சம்பாவத் மாவட்டம், உத்தராகாண்ட்
45. டார்ஜீலிங் -- DARJEELING : ஷிவாலிக் மலைத்தொடர், மேற்கு வங்காளம்.
46. காலிம்போங் -- KALIMPONG: ஷிவாலிக் மலைத்தொடர், மேற்கு வங்காளம்.
47. பஹல்காம் -- PAHALGAM: அனந்த் நாக் மாவட்டம், ஜம்மு காஷ்மீர்
48. குல்மார்க் -- GULMARG: பராமுல்லா மாவட்டம், ஜம்மு காஷ்மீர்
49. பத்னிடாப் -- PATNITOP: உதாம்பூர் மாவட்டம், ஜம்மு காஷ்மீர்.
50. நெல்லியம்பதி -- NELLIAMPATHY: பாலக்காடு, கேரளா.
51. வெள்ளரிமலா -- VELLARIMALA: கேரளா
52. ஷில்லாங் -- SHILLONG: மேகாலயா -- Meghalaya – capital city.
53. பித்தோர்கர் -- PITHORGARH: உத்தராகாண்ட்.
54. ஔலி -- AULI: சமோலி மாவட்டம், உத்தராகாண்ட் -- 4.5 கி.மீ நீளத்திற்கு, இரும்புக்கயிறு உயர் வாகன வசதியுடன், மலைமீதுள்ள ஜோஷிமத் கோவிலுக்கு செல்லும் வசதி உடையது.
55. அல்மோரா -- ALMORA : கண்டோன்மெண்ட் பகுதி -- உத்தராகாண்ட்.
Q60. ஆந்திர பிரதேசத்தின் ஹார்ஸ்லி ஹில்ஸ் எதற்கு பெயற் பெற்றது?
கோடை வாசத்தலம், மல்லம்மா கோவில், ரிஷி வேலி தனியார் பொது பள்ளி.
Q61. ஆந்திராவின், விசாகப்பட்டினம் அருகில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு எதற்கு புகழ் பெற்றது?
கோடை வாசத்தலம், போரா குகைகள்.
Q62. இமாச்சலபிரதேசத்தின் செய்ல் எதற்கு புகழ் பெற்றது?
கோடை வாசத்தலம். இப்பகுதியை மேம்படுத்தியவர் மகாராஜா பூபிந்தர் சிங், பட்டியாலா. இங்குள்ள வன சரணாலயம், உலகின் உயரமான கிரிக்கெட் மைதான, மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை மிகவும் புகழ் பெற்றது.
Q63. டல்ஹௌசி கோடைவாசத்தலம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
தௌலதார் மலைத் தொடர், இமாச்சல பிரதேசம்.
Q64. கசௌலி, இமாச்சலபிரதேச கோடைவாசத்தலத்தில் பிறந்த உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் யார்?
ரஸ்கின் பாண்ட் -- Ruskin Bond.
Q65. கசௌலி, இமாச்சலபிரதேசத்தில் அமைந்துள்ள முக்கியமான மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என்ன?
பேஸ்ச்சர் இன்ஸ்டிட்யூட் -- Pasteur Institute, வெறிநாய்க் கடிக்கான தடுப்பு ஊசி தயாரிப்பு ஆராய்ச்சி நிறுவனம் இங்குள்ளது.
Q66. தர்மஷாலா கோடை வாசத்தலம், 1905 ல் ஒரு மிகப்பெரிய இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டது. அது என்ன?
நில அதிர்வு -- சுமார் 20000 பேர் மாண்டதாக கூறப்பட்டுள்ளது.
Q67. இமாச்சல பிரதேச தர்மஷாலா வை சம்பந்தப்படுத்தி, இந்திய அரசாங்கம், ஜவஹர்லால் நேரு காலத்தில் 1960, ஒரு உலக அரசியல் முடிவு எடுத்தது. அது என்ன?
திபெத்தை சேர்ந்த மத குரு தலாய் லாமா அவர்களை, ஒரு திபெத்திய அரசாங்கத்தை ""வெளிநாட்டில் உள்ள அரசு"" “Government in Exile” அந்தஸ்தில் நிறுவ அனுமதித்தார்.
Q68. சிம்லா கோடை வாசத்தலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
"கோடைவாசத்தலங்களின் ராணி" மற்றும் “British Jewel of the Orient”.
Q69. சிம்லாவில் முதல் முதலில் ஒரு குடியேற்ற வசதி கட்டிடத்தைக் cottage கட்டியவர் யார்?
சார்லஸ் ப்ராட் கென்னடி, ஸ்காட்லாந்து.
Q70. சிம்லா கோடைவாசத்தலத்தில் உள்ள புகழ் பெற்ற இந்து கோவில் எது?
சங்கட் மோட்சன் ஹனுமான் கோவில் - நூற்றுக்கணக்கான குரங்குகள் விளையாடிக் கொண்டிருக்கும்.
Q71. சிம்லாவின் அருகில் ஒரு இடத்தில் சல்ஃபர் அடங்கிய பல சுடுநீர் ஊற்றுகள் உள்ளன. எங்கு?
தட்டா ஃபானி. Tatta Phani.
Q72. சிம்லாவில் ஒரு புகழ்பெற்ற பள்ளியான பிஷப் காட்டன் பள்ளியில் பயின்ற ஒருவர், பிற்காலத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரியாக நடத்திய கொடுமையான செயல்களுக்காக இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவர் யார்?
ஜெனரல் ஓ டையர் -- 1919ல் பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் என்ற இடத்தில் உள்ள ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு உத்தரவிட்டவர்.
Q73. ஸ்ரீநகர் கோடைவாசத்தலத்தின் முக்கிய சுற்றுலா மையங்கள் யாவை?
(1) தால் ஏரி (2) ஷிகாரா படகு வீடுகள் (3) முகல் தோட்டம்.
Q74. ""ஆயிரம் தோட்டங்கள் கொண்ட நகரம்"" என அழைக்கப்படும் ஜார்க்கண்ட் மாநில கோடை வாசத்தலம் எது?
ஹசாரிபாக். (இந்தியில் ஹசார்=1000; பாக்=தோட்டம்)
Q75. மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு மிகவும் பிடித்த கோடை வாசத்தலம் எது?
பஸ்மார்ஹி -- ஹோஷங்காபாத் மாவட்டம், மத்திய பிரதேசம்.
Q76. மகாராஷ்டிராவின் கோடை வாசத்தலம் கண்டாலா புகழ் பெற காரணமாக இருந்த இந்தி திரைப்படப் பாடல் எது?
"ஆத்தி க்யா கண்டாலா" என்ற பாடல், திரைப்படம் "குலாம்".
Q77. மகாராஷ்டிராவின் கோடைவாசத்தலம் ஒன்றில், புகழ் பெற்ற சிவாலயம் உள்ளது. அது எது?
மகாபலேஷ்வர் ஆலயம்.
Q78. மகாராஷ்டிராவின் கோடைவாசத்தலம் மத்தேரான் எதற்குப் புகழ் பெற்றது?
மத்தேரான்--நேரால் மலை ரயில் பாதை. 1907ல் சர் ஆடம்ஜி பீர்பாய் என்பவரால் 20 கி.மீ தூர ரயில் பாதை.
Q79. ராஜஸ்தானின் மவுண்ட் அபு கோடைவாசத்தலத்தின் முக்கிய சுற்றுலா மையம் என்ன?
தில்வாரா ஜெயின் கோவில்கள். வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஒரு மிக அழகான கோவில்.
Q80. தமிழ்நாட்டின் குன்னூர் கோடைவாசத்தலத்தில் உள்ள முக்கியமான அரசாங்க அமைப்புகள் யாவை?
1) The Defence Services Staff College , Wellington.
2) Pasteur Institute – Anti Rabbis Vaccine Centre.
Q81. தமிழ்நாட்டின் உதகமண்டலம் கோடைத்தலம் மேம்பாட்டுக்கு காரணமாக இருந்த ஆங்கிலேய அதிகாரி யார்?
ஜான் சுல்லிவன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியாளர். உதகமண்டலத்தில் முதன் முதலாக ஒரு வலுவான கட்டிடம், ஏரி, படகு சவாரி ஆகியவைகளை எழுப்பியவர் இவரே. ஆங்கிலேய மதராஸ் மாகாணத்தின் கோடை வாசத்தலமாக இருந்தது.
Q82. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கொடைக்கானல் கோடை வாசத்தலம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
பழநி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை.
Q83. தமிழ்நாட்டின் கோடை வாசத்தலம் ஏற்காடு எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
சேர்வராயன் மலைத்தொடர், கிழக்குத் தொடர்ச்சி மலை.
Q84. உத்தராகாண்ட் முஸ்ஸோரி யை ஒரு கோடைவாசத்தலமாக மேம்படுத்த காரணமாக இருந்தவர்கள் யார்?
கேப்டன் யங் மற்றும் திரு. ஷோர் என்ற ஆங்கிலேய அதிகாரிகள்.
Q85. உத்தராகாண்ட் மாநில நைனிதால் ஐ ஒரு வாசத்தலமாக உருவாக்கியவர் யார்?
1841ல் P. பேரோன் என்ற ஆங்கிலேயர் இங்கு ஒரு கட்டிடத்தை எழுப்பி தொடங்கிவைத்தார்.
Q86. நைனிதால் கோடைவாசத்தலத்தின் முக்கிய சுற்றுலா மையங்கள் யாது?
1. நைனா தேவி கோவில் (இந்த அம்மனின் பெயரால் இந்த ஊர் பெயர் பெற்றது)
2. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா. ஜிம் கார்பெட் என்ற ஆங்கிலேயர் புகழ் பெற்ற வேட்டை காரர், எழுத்தாளர். அவர் இங்கு தான் பிறந்தார்.
Q87. ராணிகேட், உத்தராகாண்ட் என்ற கோடை வாசத்தலம் ஒரு முக்கியமான இந்திய ராணுவ மையமாக உள்ளது. அது என்ன?
இந்திய ராணுவத்தின் குமாவ்ன் மற்றும் நாகா படையின் தலைமையகம்.
Q88. ஜார்க்கண்ட் மாநில சம்பாவத் ஒரு கோடைவாசத்தலம் மட்டுமின்றி, இந்திய புராணத்துடனும் சம்பந்தம் கொண்டது. அது என்ன?
விஷ்ணு பகவான் ஆமை அவதாரம் எடுத்த இடமாகக் கருதப்படுகிறது.
Q89. உத்தராகாண்ட் கங்கோலிஹாத் மலைத்தலம் எதற்கு புகழ் பெற்றது?
பெண் தெய்வம் காளியின் சக்தி பீடம் இங்கு அமைந்துள்ளது.
Q90. டார்ஜிலிங் என்ற புகழ்பெற்ற கோடை வாசத்தலம் எங்குள்ளது?
மேற்கு வங்காளத்தின் ஷிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது.
Q91. டார்ஜிலிங் வேறு எந்த சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது?
"இடிமுழக்க பூமி" -- "The land of the Thunderbolt".
Q92. டார்ஜிலிங் எவ்வாறு ஒரு கோடைவாசத்தலமாக மேம்படுத்தப்பட்டது?
1835ல் ஆங்கிலேயர்கள் இந்த இடத்தை சோக்யால் மன்னரிடமிருந்து குத்தகைக்குப் பெற்று கோடை வாசத்தலமாக மேம்படுத்தினர்.
Q93. டார்ஜிலிங் உலகத்தர தேயிலை உற்பத்தியில் முக்கியமான இடம். அதற்கு காரணமாக இருந்தவர் யார்?
1841 -- ஆர்தர் கேம்ப்பெல், ஆங்கிலேய மருத்துவர். இவர் தான் இங்கு முதன் முதலில் தனது தோட்டத்தில் தேயிலை வளர்ப்பைத் தொடங்கி, பிறகு இதர இடங்களுக்கு எடுத்துச் சென்றார்.
Q94. மேற்கு வங்காள காலிம்ப்போங் ஒரு முக்கியமான கோடைவாசத்தலம். இதை மேம்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர் யார்?
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம், இப்பகுதியை 1865ல் கோர்க்க மன்னரிடமிருந்து சிஞ்சுலா உடன்படிக்கை மூலம் பெற்று மேம்படுத்தினர். இந்த தலம், மலர்களுக்கும், புத்த மத ஆலயங்களுக்கும், ஆரஞ்சு உற்பத்திக்கும் புகழ் பெற்றது.
Q95. ஜம்மு காஷ்மீர் அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்ல நுழைவாயிலாக அமைந்துள்ள இடம் எது?
பஹல்காம், அனந்த்நாக் மாவட்டம், ஜம்மு காஷ்மீர்.

கலங்கரை விளக்கம் -- LIGHT HOUSES

Q96. கலங்கரை விளக்கம் என்பது என்ன?
கடல் போக்குவரத்துக்கு தரைப்பகுதியை மாலுமிகளுக்குக் குறிப்பிட்டு காட்டும் ஒரு கட்டமைப்பு. இது ஒரு உயரமான இடத்தில், உயரமான கட்டமைப்பு கொண்டதாகவும், வெளிச்சத்தை அவ்வப்போது கடல் பகுதிகளுக்குள் காட்டும்படியாக அமைந்திருக்கும்.
Q97. உலகின் பழமையான கலங்கரை விளக்கம் எது?
எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரா என்ற இடத்தில், ""ஃபரோஸ்"" என்ற தீவில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம். 3ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
Q98. எந்த நாட்டில் அதிகமான கலங்கரை விளக்கங்கள் உள்ளது?
அமெரிக்கா. இங்கு இருக்கும் 50 மாகாணங்களில், சுமார் 23/24 மாகாணங்களில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன. இங்கு சுமார் 1000 இருப்பதாகவும், அதிலும் மிச்சிகன் மாகாணத்தில் சுமார் 150 இருப்பதாகவும் தெரிகிறது.
Q99. இந்தியாவில் உள்ள முக்கிய கலங்கரை விளக்கங்கள் யாவை?
நம் நாட்டில் சுமார் 123 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
(1) DOLPHIN LIGHT HOUSE : மும்பையின் Gateway of India. அருகில் மும்பை துறைமுகத்தில் உள்ளது. 1850ல் கட்டப்பட்டது.
(2) PRONG'S LIGHT HOUSE : கொலாபா, மும்பை -- 1875ல் கட்டப்பட்டது.
(3) CHENNAI LIGHT HOUSE : சென்னை. இது தற்போது சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள இந்த கலங்கரை விளக்கம் 1977ல் தொடங்கப்பட்டது. மின் தூக்கி வசதியுடன் கூடியது. இதற்கு முன்பாக சென்னை உயர்நீதி மன்ற கலங்கரை விளக்கம் உபயோகத்திலிருந்தது.
(4) FALSE POINT LIGHT HOUSE : ஒடிசா. இந்த கலங்கரை விளக்கம் சில நேரங்களில் மாலுமி- களுக்கு குழப்பத்தை ஏற்படுத்து விதமாக அமைந்திருப்பதால் இந்த பெயர் பெற்றது.
(5) HUGH ROSE , ATLANTA , CONNAUGHT , CAMPBELL , KEATING: இவையெல்லாமே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளன.
(6) OYSTER ROCKS LIGHT HOUSE : கார்வார், கர்நாடகா.
(7) KHANOJI ANDRE LIGHT HOUSE : கந்தேரி தீவு, மும்பை, மகாராஷ்டிரா.
(8) INDIRA POINT LIGHT HOUSE : கன்னியாகுமரி. இந்தியாவின் தென் கோடி. முன்பு இது ""பிக்மேலியன் பாயிண்ட்"" என அழைக்கப்பட்டது. அதற்கும் முன்பாக ""பார்சன்ஸ் பாயிண்ட்"" எனவும் அழைக்கப்பட்டது.
(9) MAHABALIPURAM LIGHT HOUSE : மகாபலிபுரம் கலங்கரை விளக்கம்.
(10) COWCOLLY LIGHT HOUSE : ஹூக்ளி ஆற்றின் முகத்துவாரத்தில், கொல்கத்தாவில் அமைந்துள்ளது.

அருங்காட்சியகங்கள் -- MUSEUMS

Q100. அருங்காட்சியகம் என்பது என்ன?
ஜீவராசிகள் வாழ்ந்த சான்றுகள், பயன்படுத்திய பொருட்கள், என எவ்வகையான சான்றுகள் கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் சேகரித்து, அவற்றிற்கான ஆதாரங்களை ஆராய்ந்துக் கண்டுபிடித்து, அதை தக்க ஆவணப்பதிவு செய்து, அவற்றை தகவல்களுடன் மக்கள் பார்வைக்கு சீரான முறையில் பாதுகாத்து காண்பிப்பதே அருங்காட்சியகம்.
Q101. What are the Museums in India?
(1) இந்தியன் அருங்காட்சியகம் -- INDIAN MUSEUM : கொல்கத்தா -- 1814 -- டாக்டர் நாதேனியல் வாலிச் என்ற டென்மார்க் நாட்டு தாவரவியல் நிபுணரால் நிறுவப்பட்டது. ஆசியாவின் முதல், மற்றும் உலகின் பழமையான அருங்காட்சியகங்களுள் ஒன்று.
(2) சர்வதேச பொம்மை அருங்காட்சியகம் -- INTERNATIONAL DOLLS MUSEUM: இந்தியாவின் புகழ்பெற்ற கேலிச்சித்திர கலைஞர் அவர்களால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட பொம்மைகளின் மாதிரிகளை சேகரித்து மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம். இது டெல்லியின் பகதூர் ஷா ஸாஃபர் மார்க் என்ற இடத்தில் உள்ளது.
(3) ஷன்ஸ்கார் கேந்த்ரா -- SHANSKAR KENDRA : சாபர்மதி நதிக்கரையில் அஹமதாபாத் நகரில் அமைந்து உள்ளது. உலகின் புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் வடிவமைப்பாளர் லீ கார்புஸியார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
(4) நேப்பியர் அருங்காட்சியகம் -- NAPIER MUSEUM: திருவனந்தபுரம், கேரளா. 1855ல் உருவாக்கப்பட்ட இது மதராஸ் ஆளுநர் நேப்பியர் பிரபுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
(5) பிர்லா ஹவுஸ் -- BIRLA HOUSE : 30.1.1948 அன்று காந்திஜி நாதுராம் கோட்ஸே வால் கொலை செய்யப்பட்ட இடம். இது காந்திஜி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அருங்காட்சியகம்.
(6) தேசிய அருங்காட்சியகம் -- NATIONAL MUSEUM: புது டெல்லி -- இந்தியாவின் 5000 ஆண்டு பழைய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் சுமார் 2 லட்சம் பொருட்கள் சேகரிக்கப்பட்டு இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அருங்காட்சியகம்.
(7) தீன் மூர்த்தி பவன் -- TEEN MURTI BHAVAN: புது டெல்லி -- ஜவஹர்லால் நேருவின் முன்னாள் இல்லம். இப்போது, நவீன இந்தியாவின் வரலாற்று அருங்காட்சியகம். நூலகமும் உள்ளது.
(8) வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம் -- PRINCE OF WALES MUSEUM: மும்பை. இப்போது சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகம் என அழைக்கப்படுகிறது. மும்பையின் இந்திய நுழைவு வாயில் அருகில் உள்ளது.
(9) ராஜா திங்கர் கேல்கர் அருங்காட்சியகம் -- RAJA DINEKAR KELKAR MUSEUM : பூனே -- டாக்டர் திங்கர் கேல்கரின் சொந்த சேகரிப்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம்.
(10) சாலார் ஜங் அருங்காட்சியகம் - SALAR JUNG MUSEUM: ஹைதராபாத் -- ஹைதராபாத் – மூசி ஆற்றுக் கரைமீது அமைந்துள்ளது. இஸ்லாமிய கலாச்சாரத்தின் அரும்பொருட்கள் அதிகமான சேகரிப்பு இங்குள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
(11) சங்கர் தேவ் கலாக்ஷேத்ரா -- SHANKAR DEV KALAKSHETRA: குவஹாத்தி, அஸ்ஸாம். அஸ்ஸாமிய கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டான அருங்காட்சியகம். வைஷ்ணவ சீர்திருத்தவாதி சங்கர் தேவா வின் பெயரிடப்பட்டது.
(12) மாநில தொல்லியல் அருங்காட்சியகம் -- STATE ARCHAEOLOGICAL GALLERY : கொல்கத்தா -- 1962.
(13) விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் -- VISWESVARAYYA INDUSTRIAL AND TECHNOLOGICAL MUSEUM: பெங்களூரு -- 1962 -- Bengaluru – 1962. தொழில் நுட்ப உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றின் அருங்காட்சியகம்.
(14) விக்டோரிய மெமொரியல் -- VICTORIA MEMORIAL: கொல்கத்தா -- விக்டோரியா மகாராணியின் நினைவாலயம் இப்போது ஒரு அருங்காட்சியமாக இயங்குகிறது.
(15) அரசாங்க அருங்காட்சியகம் -- GOVERNMENT MUSEUM : Chennai – 1851ல் தொடங்கப்பட்ட ஒரு பழமையான அருங்காட்சியகம். பல வகையான சேகரிப்புகள் உள்ளன.
1. ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் -- ASHMOLEAN MUSEUM : -- இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அருங்காட்சியகம் -- 1683ல் நிறுவப்பட்ட பழமையான அருங்காட்சியகம்.
2. ம்யூசியோ சாக்ரோ -- MUSEO SACRO : வத்திகான், ரோம், இத்தாலி -- 1756ல் நிறுவப்பட்ட கிறித்துவ கலாச்சார அருங்காட்சியகம்.
3. ப்ரிட்டிஷ் அருங்காட்சியகம் -- BRITISH MUSEUM : லண்டன் -- உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம். 1753ல் நிறுவப்பட்டது. சர் ஹான்ஸ் சோலேன் என்ற விஞ்ஞானி மற்றும் மருத்துவர் ன் சொந்த சேகரிப்பால் நிறுவப்பட்ட அருங்காட்சியகம்.
4. லாவ்ரே அருங்காட்சியகம் -- LOUVRE MUSEUM : பாரீஸ், ஃப்ரான்ஸ். உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப் புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்று. 1793ல் நிறுவப்பட்ட இது இதே பெயர் கொண்ட ஒரு மிகப்பெரிய அரண்மனையில் இயங்குகிறது.
5. மேடம் டுஸ்ஸாட் மெழுகு அருங்காட்சியகம் -- MADAME TUSSAD WAS MUSEUM: லண்டன். 1835ல் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், உலகின் புகழ் பெற்ற பிரபலங்களின் உருவங்கள் மெழுகில் வடிவமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதிகமான பொது மக்கள் பார்வையிடும் மிகப்பெரிய அருங்காட்சியகம். இந்தியாவின் காந்திஜி, இந்திராகாந்தி, அமிதாப் பச்சான், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் டென்டுல்கர், கரீனா கபூர், என பல பிரபலங்களின் உருவச்சிலைகள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
6. ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிட்யூட் -- SMITHSONIAN INSTITUTE -- வாஷிங்டன், அமெரிக்கா - உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்.
Q102. இந்தியாவின் மிகப்பெரிய/பழமையான அருங்காட்சியகம் எது?
இந்தியன் அருங்காட்சியகம் Indian Museum, கொல்கத்தா – 1814.
Q103. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியக எது?
ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிட்யூட், வாஷிங்டன், அமெரிக்கா.
Q104. பொம்மைகளுக்கான அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ளது?
சர்வதேச பொம்மைகள் அருங்காட்சியகம், டெல்லி. கேலிச்சித்திர கலைஞர் சங்கர் பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டது.
Q105. இந்தியாவின் எந்த அருங்காட்சியகம், உலகப்புகழ் பெற்ற வடிவமைப்பாளர் லீ கார்புஸியர் அவர்களால் வடிவமைக்கப்பட்டது?
சன்ஸ்கார் கேந்த்ரா -- அகமதாபாத்.
Q106. இந்தியாவின் எந்த அருங்காட்சியகம் காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது?
பிர்லா ஹவுஸ், மும்பை.
Q107. எந்த இந்திய அருங்காட்சியகம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது?
சாலார்ஜங் அருங்காட்சியகம், ஹைதராபாத்.
Q108. வத்திகான், ரோம் இத்தாலியிலுள்ள அருங்காட்சியகம் பெயர் என்ன?
ம்யூசியோ சேக்ரோ. Museo Sacro.
Q109. உலகிலேயே மிக விரிவான பொருள் அடக்கம் கொண்ட அருங்காட்சியகம் எனக் கருதப்படுவது எது?
ப்ரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன்.
Q110. ப்ரிட்டிஷ் அருங்காட்சியகம் யாருடைய சொந்த சேகரிப்பால் தொடங்கப் பட்டது?
சர் ஹான்ஸ் ஸ்லோன், விஞ்ஞானி மற்றும் மருத்துவர்.
Q111. லண்டனில் உள்ள மெழுகு உருவ அருங்காட்சிக்கு இணையான அருங்காட்சி- யகமாக கருதப்படுவது எது?
ம்யூசி க்ராவிஸ், பாரீஸ், ஃப்ரான்ஸ்.

அரண்மனைகள் -- இந்தியா -- PALACES – INDIA

Q112.
இந்திய அரண்மனைகள் -- LIST OF PALACES IN INDIA:
1) லக்ஷ்மி விலாஸ் -- LAKSHMI VILAS PALACE – வடோடரா, குஜராத். மகாராஜா சாயாஜி ராவ் கேக்வாட் III அவர்களால் 1890ல் கட்டப்பட்டது. மேஜர் சார்லஸ் மாண்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது. சுமார் 700 ஏக்கர் பரப்பளவு. தற்சமயம் இதில், ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி Railway Staff College for Officers இங்கு இயங்குகிறது.
2) லால் கர்ஹ் -- LAL GARH PALACE – பீகானீர், ராஜஸ்தான். 1902-1926களில் ராஜா கங்கா சிங் என்பவரால் கட்டப்பட்டது. சர் சாமுவேல் ஸ்விண்டன் ஜேகப் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனையில் அருங்காட்சியகம், நூலகம், அரச குடும்ப இல்லம் மற்றும் இரண்டு நட்சத்திர விடுதிகள் இங்கு இயங்குகிறது.
3) குடியரசு மாளிகை -- RASHTRAPATI BHAVAN – டெல்லி -- புது டெல்லியின் லுட்யென் என்ற பகுதியிலுள்ள ரெய்ஸினா குன்றின் மீது அமைந்துள்ளது. சர் எட்வின் லேண்ட்சீர் லுட்யென்ஸ் என்பவரால் வடிவமைக்கப் பட்டது. 1912ல் தொடங்கி 1930ல் முடிவடைந்தது. 2 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அரண்மனையில் 360 அறைகள் உள்ளன. இந்த அரண்மனையில் முதன் முதலில் குடியேறியவர் இர்வின் பிரபு. இங்கு குடியேறிய முதல் இந்தியர் சி. இராஜகோபாலாச்சாரி அவர்கள் (கவர்னர் ஜெனரலாக). இந்த அரண்மனையின் முன் உள்ள ""ஜெய்ப்பூர் தூண்"" சார்லஸ் சார்ஜண்ட் என்ற ஆங்கிலேய வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டது. அரசாங்க தலைவர்கள் வாழும் மாளிகைகளில் இதுவை உலகில் மிகப்பெரியது.
4) அரசபரம்பரை இல்லம் -- ROYAL PALACE – ஃபத்தேஹ்பூர் சிக்ரி -- 1570 ல் அக்பரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் கட்டிடக்கலையின் சான்றாக கீழ்க்கண்ட அரச கட்டுமானங்கள் உள்ளன: ஜமா மஸ்ஜீத், புலந்த் தர்வாஸா, சலீம் சிஸ்டியின் கல்லறை, திவானி ஆம், திவானி காஸ், இபாதத் கானா, மரியம் உஸ் ஸமானி அரண்மனை. இது ஒரு உலகப் புராதனச் சின்னம்.
5) புரானி ஹவேலி -- PURANI HAVELI – ஹைதராபாத், தெலங்கானா. நிஸாம் மன்னரின் இல்லமாக விளங்கியது. 1880களில் அலி கான் பஹதூர் ஆசாஃப் ஜா 2 ஆல் கட்டப்பட்டது. இப்போது ஒரு அருங்காட்சியகமும், தொழிற்பயிற்சி கல்வி மையமும் Industrial Training Institute இயங்குகிறது.
6) சௌமஹல்லா அரண்மனை -- CHOWMAHALLA PALACE – ஹைதராபாத், தெலங்கானா -- 1857-1869 களில் மன்னர் ஆஸாஃப் அத் தௌலா ஆஸாஃப் ஜா 5 காலத்தில் கட்டப்பட்டது.
7) ஃபலக்நூமா அரண்மனை -- FALAKNUMA PALACE – ஹைதராபாத், தெலங்கானா - நவாப் விகர் உல் உம்ரா என்ற நவாப் மன்னரின் பிரதம மந்திரியால் கட்டப்பட்டது. இப்போது தாஜ் குழும நட்சத்திர விடுதி உள்ளது.
8) ஹவா மகால் -- HAWA MAHAL – ஜெய்ப்பூர், ராஜஸ்தான் -- சிகப்பு மற்றும் இளஞ்சிவப்பு கற்களால் 1799ல் மகாராஜா சவாய் ப்ரதாப் சிங் அவர்களால் கட்டப்பட்டது. முன் தோற்றம், கிருஷ்ணரின் முகம் போன்று அமைந்திருக்கும். இந்த அரண்மனையில் சுமார் 953 சன்னல்கள் உள்ளன.
9) ராம்பாக் அரண்மனை -- RAMBAGH PALACE – ஜெய்ப்பூர் ராஜஸ்தான் -- 1887ல் தொடங்கி, 1931ல் முடிவடைந்தது. மகாராஜா சவாய் மான் சிங் 2 என்பவரால் கட்டப்பட்டது. இப்போது தாஜ் குழுமத்தின் நட்சத்திர விடுதி இயங்கி வருகிறது.
10) சம்சோட் அரண்மனை -- Samsode Palace – ஜெய்ப்பூர், ராஜஸ்தான் -- 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆம்பர் மற்றும் ஜெய்ப்பூர் பகுதியை ஆண்ட சிறு மன்னர்களால் கட்டப்பட்டது.
11) ராஜ் மகால் அரண்மனை -- RAJMAHAL PALACE – ஜெய்ப்பூர், ராஜஸ்தான் -- தற்போது ஒரு நட்சத்திர விடுதி இயங்குகிறது. 12) நாராயண் நிவாஸ் அரண்மனை -- NARAIN NIWAS PALACE – ஜெய்ப்பூர், ராஜஸ்தான்.
13) உமைத் பவன் அரண்மனை -- UMAID BHAWAN PALACE – ஜோத்பூர், ராஜஸ்தான் -- 1926-1943 காலத்தில், மகாராஜா உமைத் சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த மிகப் பெரிய அரண்மனையில், சுமார் 347 அறைகள் கொண்டு, தற்போது ஒரு நட்சத்திர விடுதி, ஒரு அருங்காட்சியகம் மற்றும் மன்னர் பரம்பரையில் இல்லமாக இயங்கிவருகிறது.
14) லக்ஷ்மிபுரம் அரண்மனை -- LAKSHMIPURAM PALACE – சங்கணாச்சேரி, கேரளா -- தம்புரான் அரச பரம்பரையின் இல்லமாக விளங்கியது.
15) நெடும்புரம் அரண்மனை -- NEDUMPURAM PALACE – திருவள்ளா, கேரளா.
16) மைசூர் அரண்மனை -- MYSORE PALACE – மைசூர், கர்நாடகா -- 1897-1912 களில், கிருஷ்ணராஜ உடையார் 4 ஆல் கட்டப்பட்டது. ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேய வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அரண்மனை தசரா பண்டிகை காலத்தில் அலங்காரம் செய்யப்படுவது ஒரு கண்கொள்ளாக்காட்சி.
17) பத்மநாபபுரம் அரண்மனை -- PADMANABHAPURAM PALACE – திருவனந்தபுரம், கேரளா. 1601ல், இரவி வர்மா குலசேகர பெருமாள் அவர்களால் கட்டப்பட்டது. இதைச்சுற்றியுள்ள பகுதி முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த போதிலும், அரண்மனை கேரளாவுக்கு சொந்தமானது. இங்கு 300 வருட பழமையான கடிகாரத் தூண் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் நேரம் காட்டியுடன், உள்ளது.
18) அமர் மகால் அரண்மனை -- AMAR MAHAL PALACE – ஜம்மு, காஷ்மீர் -- 19ம் நூற்றாண்டில் டோக்ரா இன மன்னர் அமர் சிங் என்பவரால் கட்டப்பட்டு, இப்போது ஒரு அருங்காட்சியகம் இயங்குகிறது.
19) ஜகன் மோஹன அரண்மனை -- Jagan Mohana Palace – மைசூர், கர்நாடகா -- 1861ல் கிருஷ்ணராஜ உடையார் 3 ஆல் கட்டப்பட்டது. இப்போது ஒரு கலை காட்சியகமாக விளங்குகிறது.
20) கிளிமானூர் அரண்மனை -- Kilimanoor Palace – கிளிமானூர், கேரளா -- 1753ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் மன்னர் ராஜா ரவி வர்மா பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
21) பருவகால அரண்மனை -- Monsoon Palace – உதய்ப்பூர், ராஜஸ்தான் -- சஜ்ஜன்கர் அரண்மனை எனவும் அழைக்கப் படுகிறது. 1884ல் மேவார் வம்ச மன்னர் சஜ்ஜன் சிங் என்பவரால், ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. அரண்மனைக்கு முன்பு பிச்சொலா ஏரியும், சுற்றுப்புறமும் சேர்ந்து ஒரு அழகான சூழ்நிலையை நமக்களிக்கிறது. இதைச் சுற்றி ஒரு விலங்குகள் சரணாலயமும் உள்ளது.
22) டச்சு அரண்மனை -- Dutch Palace – மட்டஞ்சேரி, கேரளா -- போர்ச்சுகீசியரால் கட்டப்பட்டு, 1555ல் மன்னர் வீர கேரள வர்மாவுக்கு கொடுக்கப்பட்டது.
23) ராஜேந்திர விலாஸ் அரண்மனை -- Rajendra Vilas Palace – மைசூர், கர்நாடகா. உடையார் வம்ச அரண்மனை. 1897ல் ஒரு தீ விபத்தில் முற்றிலும் நாசமாகியது.
24) பளிங்கு மாளிகை -- Marble Palace – கொல்கத்தா -- 1835ல் ராஜா ராஜேந்திர மல்லீக் என்பவரால் கட்டப்பட்டு, இப்போது அவருடைய சந்ததியினர் வாழ்கின்றனர்.
25) குதிர மாளிகா -- Kuthira Malika – திருவனந்தபுரம், கேரளா. 1840களில் மன்னர் ஸ்வாதி திருநாள் அவர்களால் கட்டப்பட்டது. இப்போது ஒரு அருங்காட்சியகமும், ஜனவரி மாதத்தில், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
26) லே அரண்மனை -- Leh Palace – லே, லடாக் -- 17வது நூற்றாண்டில் மன்னர் செங்கே நம்க்யால் அவர்களால் கட்டப்பட்டது. இப்போது ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது.
27) நீர்மகால் அரண்மனை -- Neermahal Palace – அகர்தலா, திரிபுரா -- 1930ல் மன்னர் பிக்ரம் கிஷோர் தேவ் வர்மன் அவர்களால் கட்டப்பட்டது. ருத்ரசாகர் என்ற ஏரியின் நடுவே அமைந்துள்ளது. இந்தியாவில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனைகளில் இது இரண்டாவது. (மற்றொன்று ராஜஸ்தானின் உதய்ப்பூரில் பிச்சோலா ஏரியில் அமைந்துள்ளது)
28) மோதி ஷாஹி அரண்மனை -- Moti Shahi Palace – அகமதாபாத், குஜராத் -- 1618-1622ல் ஷாஜஹானால் கட்டப் பட்டது. இப்போது சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம் இயங்குகிறது.
29) திருமலை நாயக்கர் மகால் -- Tirumalai Nayak Mahal – மதுரை -- தமிழ்நாடு. 1636ல் நாயக்கர் வம்ச மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டு, இப்போது ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
30) உஜ்ஜயந்தா அரண்மனை -- Ujjayanta Palace – அகர்தலா, திரிபுரா -- 1899-1901களில் மன்னர் ராதாகிருஷ்ண மானிக்யா என்பவரால் கட்டப்பட்டு, இப்போது மாநில சட்டசபை இயங்குகிறது.
31. ஏரி அரண்மனை -- Lake Palace -- உதய்ப்பூர், ராஜஸ்தான் -- பிச்சோலா ஏரியின் நடுவை அமைந்துள்ளது. இதை ""ஜக் நிவாஸ்"", ""ஜன் நிவாஸ்"" எனவும் அழைப்பர். 1743-1746களில் மன்னர் மகாராணா ஜகத் சிங் 2 ஆல் கட்டப் பட்டது. உலகின் அழகான அரண்மனைகளில் முதன்மையாக விளங்குகிறது. இப்போது ஒரு 5 நட்சத்திர விடுதி இயங்குகிறது.
Q113. அரண்மனை என்பது என்ன?
மன்னர்களும், மாமன்னரகளும் தங்கள் வாழ்வு இல்லங்களாக கட்டப்பட்ட மிகப் பெரிய மாளிகைகளே அவை. இவற்றுள் பெரும்பாலானவை, இடைக்கால வரலாற்று காலங்களிலும், நவீன காலத்தின் முன் பகுதியிலும் கட்டப்பட்டவை. இவற்றில் பெரும்பாலான உலகப்புகழ் பெற்ற அரண்மனைகள் இன்று அரசாங்க தலைவர்களின் இல்லங்கள், அலுவலகங்கள், விருந்தினர் மாளிகைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
Q114. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை எங்குள்ளது?
வடோடரா (பரோடா) -- 1890ல் மகாராஜா சாயாஜி ராவால் கட்டப்பட்டது.
Q115. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை இப்போது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
ரயில்வே அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி. Railway Staff College for Officers training.
Q116. லால்கர் அரண்மனை எங்குள்ளது?
பீகானீர், ராஜஸ்தான். 1902-1906 காலத்தில் மன்னர் கங்கா சிங் ஆல் கட்டப்பட்டது.
Q117. லால்கர் அரண்மனை யை வடிவமைத்தவர் யார்?
சர் ஸ்விண்டன் ஜேகப், ஆங்கிலேயர் கட்டிட வடிவமைப்பாளர்.
Q118. பீகானீர் லால்கர் அரண்மனையில் இப்போது இயங்குவது ….
அரண்மனையின் ஒரு பகுதி மட்டும், தாஜ் குழுமத்தின் நட்சத்திர விடுதியாக இயங்குகிறது.
Q119. இந்திய குடியரசுத் தலைவர் மாளிகை எங்கு அமைந்துள்ளது?
டெல்லியின் லுட்யென் பகுதியில் ரெய்சினா குன்றின் மீது.
Q120. இந்திய குடியரசுத் தலைவர் மாளிகை எப்போது கட்டப்பட்டது?
1920களின் பிற்பகுதியில் தொடங்கி, 1931ல் முடிவடைந்தது.
Q121. இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
"Viceregal Lodge" -- 1950ல் ராஷ்டிரபதி பவன் என அழைக்கப்படத் தொடங்கியது.
Q122. இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையை வடிவமைத்தவர் யார்?
ஆங்கிலேய வடிவமைப்பாளர் எட்வின் லுட்யென் மற்றும் பேக்கர் என்பவர்களால்.
Q123. இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையின் புகழ்பெற்ற அறை எது?
“Throne Room” இந்திய வைஸ்ராய் தங்கிய அறை. இப்போது "தர்பார் ஹால்" எனப்படுகிறது.
Q124. இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையின் முக்கிய அம்சங்கள் யாவை?
(1) அரசாங்கத் தலைவர்கள் வாழும் மாளிகைகளில் உலகில் மிகப்பெரியது.
(2) இதன் கட்டுமானத்தில், இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(3) இந்த மாளிகையில் சுமார் 360 அறைகள் உள்ளன.
Q125. குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் யார்?
சி. ராஜகோபாலாச்சாரி -- முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல்.
Q126. இந்திய குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள ரோஜா தோட்டத்திற்கு என்ன பெயர்?
முகலாய தோட்டம் -- Mughal Garden
Q127. ஃபத்தேஹ்பூர் சிக்ரி யில் உள்ள மன்னர் அரண்மனையைக் கட்டியவர் யார்?
1571 -- அக்பர் -- சுஃபி துறவி சலீம் சிஸ்டி நினைவாகக் கட்டப்பட்டது. 1571-1575 காலத்தில் இது முகலாய தலைநகராக இருந்தது. 1986 முதல் இது உலகப் புராதனச் சின்னமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
Q128. "புரானி ஹவேலி" என்ற அரண்மனை எங்குள்ளது?
நிஸாம் மன்னர்களின் அதிகார இல்லம். இது U வடிவ அரண்மனை. இதில் உள்ள அலமாரி (உடைகள் வைக்கும்) உலகத்திலேயே பெரியது. இரண்டு அடுக்காக அமைந்துள்ள இதை மனித இயக்கி தூக்கி மூலம் செல்லவேண்டும்.
Q129. சௌமஹல்லா அரண்மனை எங்குள்ளது?
ஹைதராபாத் -- ஆஸாஃப் ஷாஹி வம்சத்தின் விருந்தினர் மாளிகை. 1857ல் கட்டப்பட்ட இது தெஹ்ரானில் உள்ள அரச அரண்மனைப் போன்ற வடிவம் கொண்டது.
Q130. ஃபலக்நூமா அரண்மனை எங்குள்ளது?
ஹைதராபாத் -- இத்தாலிய வடிவமைப்பாளர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட இது, 650 மீ உயர குன்றின் மீது, 1880களில் பைகா நவாப் விக்ரம் 6 உம்ரா என்பவரால் கட்டப்பட்டது. 1897ல் இதை ஹைதராபாத் நிஸாம் வாங்கி, விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தினர். இது முழுவதுமாக இத்தாலிய பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. இங்குள்ள விருந்து மேசை சுமார் 100 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து சாப்பிடும் அளவுக்குப் பெரியது. இப்போது இதில் தாஜ் குழுமத்தின் நட்சத்திர விடுதி இயங்குகிறது. இந்த விடுதியிலிருந்து ஹைதராபாத் நகரின் கண்கவர் காட்சியை காணமுடியும்.
Q131. ""ஹவா மகால்" ("தென்றல் அரண்மனை") எங்குள்ளது?
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் -- 1799ல் மகாராஜா சவாய் ப்ரதாப் சிங் என்பவரால், சிகப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற கற்களால், 5 அடுக்குகள் கொண்டு, முன் தோற்றம் கிருஷ்ணரைப் போலவும், வெளிப்புற தோற்றத்தில் மட்டும் 953 சன்னல்களை கொண்ட மிகப்பெரிய அரண்மனை. இதில் உலாவும் காற்றோட்டத்தின் அடிப்படையில் இது இப்பெயர் பெற்றது.
Q132. ராம்பாக் அரண்மனை எங்குள்ளது?
""ஜெய்ப்பூரின் ஆபரணம்"" என அழைக்கப்படுகிறது. இது ஆரம்ப காலத்தில், வேட்டையாடும் போது தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்டது. பிறகு 1925ல் அரச அரண்மனையாக மாற்றப்பட்டது. 1972லிருந்து, இது தாஜ் குழுமத்தின் நட்சத்திர விடுதியாக இயங்கிவருகிறது.
Q133. சம்சோட் அரண்மனை எங்குள்ளது?
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் -- 19வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்போது ஒரு நட்சத்திர விடுதி.
Q134. ராஜ்மஹால், நாராயண் நிவாஸ் அரண்மனைகள் எங்குள்ளன?
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் -- 19வது நூற்றாண்டில் கட்டப்பட்டு, இப்போது நட்சத்திர விடுதிகள்.
Q135. "உமைத் பவன் அரண்மனை" எங்குள்ளது?
ஜோத்பூர், ராஜஸ்தான் -- சட்டார் குன்றின் மீது, 1930-40 களில், மகாராஜா உமேத் சிங் ஆல் கட்டப்பட்டது. 26 ஏக்கர் பரப்பளவில், 347 அறைகளுடன் கூடிய தனியார் மாளிகை. இப்போது இது 3 பிரிவாக பிரிக்கப்பட்டு, நட்சத்திர விடுதி, அருங்காட்சியகம் மற்றும் அரச குடும்ப வாரிசுகள் வசிக்கும் இல்லமாக இயங்குகிறது.
Q136. லக்ஷ்மிபுரம் அரண்மனை எங்குள்ளது?
சங்கணாச்சேரி, கேரளா -- தம்பூரான் மன்னர்களின் இல்லமாக திகழ்ந்தது.
Q137. நெடும்புரம் அரண்மனை எங்குள்ளது?
திருவள்ளா, கேரளா. உதயமங்கலம் பகுதியை ஆண்ட குலசேகர வம்ச மன்னர் இல்லம்.
Q138. மைசூர் அரண்மனை, யாரால் கட்டப்பட்டது, அதன் முக்கிய அம்சங்கள் யாவை?
மைசூர், கர்நாடகா. 1897ல் தொடங்கி, 1912ல் முடிவடைந்தது. மகாராணி கெம்பநஞ்சமண்ணி வாணி விலாசா சன்னிதானா காலத்தில் முடிக்கப்பட்டது.ஆங்கிலேய வடிவமைப்பாளர் ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தசரா திருவிழாவின் முக்கிய மையம் இந்த அரண்மனை. இந்த திருவிழாவின் போது இந்த அரண்மனையின் அலங்காரம் கண்ணுக்கும் மனதுக்கும் ஒரு பெரிய விருந்து. இந்த அரண்மனைக்குள் இரண்டு இந்து ஆலயங்கள் உள்ளன. ஒரு பொம்மை காட்சியகமும் உள்ளது.
Q139. பத்மநாபபுரம் அரண்மனை எங்குள்ளது?
திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பாதையில் 63 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அரண்மனை 4 கி.மீ நீளமுள்ள ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ளது. 1601 ல் ரவி வர்மா குலசேகர பெருமாள் அவர்களால் கட்டப்பட்டது. பெரும்பாலும் வேலைப்பாட்டுடன் கூடிய மரம் மட்டுமே, பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ள அரண்மனை. இங்குள்ள, இன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் நேரங்காட்டித் தூண் 300 வருடங்களுக்கு மேலானது. விருந்தினர் பகுதி, சுமார் 1000 விருந்தினர்களுக்கு இடமளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மன்னர்/பரம்பரை தப்பிச் செல்ல ரகசிய சுரங்கப்பாதையும் இருந்தது.
Q140. அமர் மகால் அரண்மனை எங்குள்ளது?
ஜம்மு காஷ்மீர். ராஜா அமர் சிங் ஆல் கட்டப்பட்டது. இப்போது இங்கு ஒரு நூலகமும் அருங்காட்சியகமும் இயங்குகிறது.
Q141. ஜகன் மோகனா அரண்மனை எங்குள்ளது?
மைசூர், கர்நாடகா. உடையார் மன்னர்களின் இல்லம். இப்போது ஒரு கலைக் காட்சியகம், நூலகம் மற்றும் இசை அரங்கம் உள்ளது.
Q142. கிளிமானூர் அரண்மனை எங்குள்ளது, முக்கியத்துவம் என்ன?
கிளிமானூர், கேரளா. சுமார் 6 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை, கேரள கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. உலகப்புகழ் பெற்ற ஓவியர் மன்னர் ராஜா ரவி வர்மா பிறந்த இடம்.
Q143. பருவக்கால அரண்மனை Monsoon Palace -- சஜ்ஜன்கர் அரண்மனை எங்குள்ளது?
உதய்ப்பூர், ராஜஸ்தான். 1884ல் மகாராஜா சஜ்ஜன் சிங் என்பவரால் கட்டப்பட்டது. 3100 அடி உயர மலை மீது அமைந்துள்ளது.
Q144. மட்டஞ்சேரி அரண்மனை யாரால் கட்டப்பட்டது?
மட்டஞ்சேரி, கேரளா. போர்ச்சுகீசியர்களால் 1555ல் கட்டப்பட்டு, கொச்சி மன்னர் வீர கேரள வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
Q145. ராஜேந்திரவிலாஸ் அரண்மனை எங்குள்ளது?
மைசூர், கர்நாடகா. 1938-1939 களில், சாமுண்டி மலை மீது, மன்னர் கிருஷ்ணராஜா உடையார் (நான்கு) அவர்களால் கட்டப்பட்டது.
Q146. பளிங்கு அரண்மனை எங்குள்ளது?
கொல்கத்தா. 1835ல் ராஜா ராஜேந்திர மல்லிக் அவர்களால் கட்டப்பட்டது.
Q147. "குதிர மாளிகா" என்ற அரண்மனை எங்குள்ளது?
குதிரைகளின் மாளிகை எனப் பொருள். 1840ல் மன்னர் ஸ்வாதி திருநாள் அவர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் மரத்தூண்களை தாங்கும் குறுக்கு கட்டைகள் குதிரை வடிவத்தில் -- சுமார் 108 -- அமைக்கப்பட்டிருப்பதால், இந்த பெயர் பெற்றது. அரண்மனையின் முன் உள்ள பகுதியில், ஜனவரி மாதத்தில், இசைத் திருவிழா நடத்தப்படுகிறது.
Q148. லே அரண்மனை எங்குள்ளது?
லே, லடாக். 17வது நூற்றாண்டில் செங்கே நம்க்யால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. தற்போது சிதிலமடைந்த நிலையில், புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
Q149. நீர்மகால் அரண்மனை எங்குள்ளது?
1930ல் திரிபுரா மன்னர் பீர் பிக்ரம் கிஷோர் தேப் பர்மன் என்பவரால், அகர்தாலாவிலிருந்து 53 கி.மீ தூரத்தில் ருத்ர சாகர் ஏரியின் நடுவில் கட்டப்பட்டுள்ள ஒரு அழகான மன்னர் பரம்பரை அரண்மனை.
Q150. மோதி ஷாஹி அரண்மனை எங்குள்ளது?
அகமதாபாத், குஜராத். 1618-1622ல் ஷாஜஹானால் கட்டப்பட்டது. 1978 வரை ஆளுநர் மாளிகையாகவும், பிறகு சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகமாகவும் இயங்குகிறது.
Q151. திருமலை நாயக்கர் மகால் அரண்மனை எங்குள்ளது?
மதுரை. 1636ல் நாயக்கர் பரம்பரை மன்னர் திருமலை நாயக்கர் அவர்களால் கட்டப்பட்டது. இப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுற்றுலா தலம். மாலை நேரங்களில் ஒலி & ஒளி கண்காட்சி நடத்தப்படுகிறது.
Q152. உஜ்ஜயந்தா அரண்மனை எங்குள்ளது?
திரிபுரா -- 1890-1901 களில் மன்னர் ராதாகிஷோர் மானிக்யா வால் கட்டப்பட்டது. இப்போது திரிபுரா சட்டசபை இங்கு இயங்குகிறது. நம் நாட்டின் அழகான அரண்மனைகளில் ஒன்று.
Q153. நம் நாட்டின் எந்த நகரத்தில் அதிகமான அரண்மனைகள் உள்ளன?
ஜெய்ப்பூர், ராஜஸ்தான்.
Q154. இந்திய அரண்மனைகளில் இரண்டு அரண்மனைகள் ஏரிகளின் நடுவில் அமைந்துள்ளது?
1. ராஜஸ்தானின் உதய்ப்பூர் ல் பிச்சோலா ஏரியில் உள்ள அரண்மனை.
2. நீர் மகால் அரண்மனை, அகர்தாலா, திரிபுரா.

உலகின் புகழ் பெற்ற அரண்மனைகள் -- PALACES - ABROAD

Q155. உலகில் எத்தனை அரண்மனைகள் உள்ளன?
நிறைய உள்ளன. அவற்றில் சில மட்டும், இன்றைய பயன்பாடு, வரலாற்று முக்கியத்துவம் என சில முக்கியத்துவத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல அழிவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன.
Q156. தாருல் அமான் அரண்மனை -- Darul Aman Palace எங்குள்ளது?
காபூல், ஆஃப்கானிஸ்தான் -- 1920ல் மன்னர் அமானுல்லா கான் ஆல் கட்டப்பட்டு இன்று பயனின்றி அழிந்துக் கொண்டிருக்கிறது.
Q157. அர்ஜெண்டினா குடியரசுத்தலைவர் அரண்மனைப் பெயர் என்ன?
காஸா ரோஸடா -- Casa Rosada. இளஞ்சிவப்பு நிற அரண்மனை 1882ல் கட்டப்பட்டது.
Q158. ஆஸ்திரிய நாட்டு குடியரசுத்தலைவர் அரண்மனைப் பெயர் என்ன?
ஹாஃப்பர்க் அரண்மனை -- Hofburg Palace – 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Q159. பெல்ஜிய மன்னரின் அரண்மனைப் பெயர் என்ன?
லேக்கேன் அரண்மனை -- Royal Castle of Laeken – 1782-1784களில் கட்டப்பட்டது.
Q160. பூட்டான் மன்னரின் அரண்மனையின் பெயர் என்ன?
ஸாம்டெலிங் அரண்மனை -- Samteling Palace – மன்னர் ஜிக்மே சிங்யே வாங்க்சுக்.
Q161. ப்ரேசில் நாட்டு குடியரசுத்தலைவரின் அரண்மனைப் பெயர் என்ன?
டா அல்வொராடா, ப்ராஸிலியா -- 1958ல் கட்டப்பட்டது.
Q162. மலேசியா, இந்தோனேசியா மற்றும் ப்ரூணே நாடுகளில் அரண்மனை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இஸ்தானா -- Istana.
Q163. ப்ரூணே சுல்தான் அரண்மனை பெயர் என்ன?
நூருல் இமான் அரண்மனை -- Istana Nurul Iman Palace – பெண்டர் சேரி பெகவான் -- – 2152782 ச.அடி – 1788 அறைகள், 257 குளியலறைகள், 110 வாகனம் நிறுத்துமிடம், 200 குதிரைகள் நிறுத்தும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இடம், 5 நீச்சல் குளங்கள், 5000 பேர் அமரக்கூடிய அரங்கம், 1500 பேர் அமரும் வசதி கொண்ட மசூதி, என பல வசதிகள் கொண்ட அரண்மனை. உலகின் மிகப்பெரிய மன்னர் அரண்மனை.
Q164. டென்மார்க் நாட்டின் அரச ராணுவ பயிற்சி கல்லூரி அமைந்திருக்கும் அரண்மனையின் பெயர் என்ன?
ஃப்ரெடெரிக்ஸ்பர்க் அரண்மனை. 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Q165. ஃப்ரான்ஸ் நாட்டின் முதல் குடியரசுத்தலைவர் வாழ்ந்த அரண்மனைப் பெயர் என்ன?
எலிஸி அரண்மனை -- Elysee Palace. தற்போதும் இதுவே நாட்டுத் தலைவரின் இல்லம்.
Q166. ஃப்ரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் அமைந்துள்ள அரண்மனை எது?
பர்பன் அரண்மனை -- Palace Bourbon.
Q167. ஃப்ரான்ஸ் நாட்டு அரசாங்க செயலகம் எங்கு அமைந்துள்ளது?
லக்ஸம்பர்க் அரண்மனை -- Luxembourg Palace.
Q168. "தடை செய்யப்பட்ட நகரம்" “Forbidden City” எனப்படுவது என்ன?
சீனாவின் பெய்ஜிங் நகரில் சுமார் 178 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பகுதியில் சீன மன்னர்களின் அரண்மனைகள் அமைந்துள்ள இடம்.
Q169. 2007ல் G8 உச்சி மகாநாடு ஒரு புகழ்பெற்ற அரண்மனையில் நடந்தது. அது என்ன?
Cecilienhof -- 1914-1917ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ப்ராண்டன்பர்க் நகரம், ஜெர்மனி யில் உள்ளது.
Q170. கிரேக்க நாட்டு பாராளுமன்றம் எந்த அரண்மனையில் அமைந்துள்ளது?
பழைய அரச பரம்பரை அரண்மனை -- Old Royal Palace.
Q171. க்ரீஸ் நாட்டு குடியரசுத்தலைவர் வாழும் அரண்மனைப் பெயர் என்ன?
புதிய அரச பரம்பரை அரண்மனை -- New Royal Palace. 1897ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரண்மனை ""குடியரசுத் தலைவர் மாளிகை"" என இப்போது அழைக்கப்படுகிறது.
Q172. க்ரீஸ் நாட்டு ரோட்ஸ் தீவில் அமைந்துள்ள அரண்மனைப் பெயர் என்ன?
க்ராண்ட் மாஸ்டர் அரண்மனை -- Palace of the Grandmaster. 7வது நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Q173. "மலர்களின் அரண்மன" என அழைக்கப்படுவது எது?
குலிஸ்தான் அரண்மனை Gulistan Palace, தெஹ்ரான், இரான்.
Q174. இரான் நாட்டின் கடைசி ஷா முகமது ரெஸா பஹல்வியின் அரண்மனை எது?
நியாவரன் அரண்மனை -- Niavaran Palace – சில அரண்மனைகள் கொண்ட வளாகம். தெஹ்ரான், இரான்.
Q175. இத்தாலிய குடியரசுத்தலைவர் மாளிகையின் பெயர் என்ன?
Quirimal Palace -- 1583ல் கட்டப்பட்டது.
Q176. வத்திகான் நகரின் “Lateran Palace” இப்போது எவ்வாறு பயன்படுகிறது?
கிறித்துவ பழமையான பொருட்களின் அருங்காட்சியகம்.
Q177. ஜப்பானிய மன்னர் வாழும் அரண்மனையின் பெயர் என்ன?
அரச பரம்பரை அரண்மனை --Imperial Palace.
Q178. லித்துவேனிய குடியரசுத்தலைவரின் இல்லத்தின் பெயர் என்ன?
குடியரசுத்தலைவர் மாளிகை, வில்னியஸ் -- 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Q179. மால்டா நாட்டு குடியரசுத்தலைவர் இல்ல அரண்மனைப் பெயர் என்ன?
சான் ஆண்டோன் அரண்மனை -- San Anton Palace, அட்டார்ட், மால்டா - 1625ல் கட்டப்பட்டது.
Q180. மெக்ஸிகோ நாட்டு குடியரசுத்தலைவர் அரண்மனைப்பெயர் என்ன?
லாஸ் பினோஸ் -- Los Pinos -- மெக்ஸிகோ. 1934ல் குடியரசுத்தலைவர் மாளிகையானது.
Q181. நெதர்லாந்து நாட்டு மன்னரின் அரண்மனைப் பெயர் என்ன?
அரச பரம்பரை அரண்மனை.
Q182. நெதர்லாந்து நாட்டு மகாராணியின் அலுவலக அரண்மனைப் பெயர் என்ன?
Noor Deinde Palace -- தி ஹேக் -- 1533ல் கட்டப்பட்டது.
Q183. கராச்சியில் இந்திய வணிகரால் கட்டப்பட்ட பெரிய அரண்மனைப் பெயர் என்ன?
மொஹத்தா அரண்மனை - கராச்சி, பாகிஸ்தான் -- 1920களில் மார்வாடி வணிகர் ஷிவ்ரதன் சாந்த்ரதன் மொஹத்தா என்பவரால் கட்டப்பட்டது. பிரிவினைக்குப் பின் ஃபாத்திமா ஜின்னா அவர்கள் வாழ்ந்து, பிறகு ஒரு அருங்காட்சியகமாக இயங்குகிறது.
Q184. பெரு நாட்டுக் குடியரசுத் தலைவரின் அரண்மனைப் பெயர் என்ன?
அரசாங்க அரண்மனை -- Government Palace -- 1535ல் கட்டப்பட்டது.
Q185. பிலிப்பைன் நாட்டு குடியரசுத்தலைவரின் அரண்மனைப் பெயர் என்ன?
மலக்கானங் அரண்மனை -- மணிலா -- 1750ல் கட்டப்பட்டது.
Q186. "தேங்காய் அரண்மனை" “Coconut Palace” எங்குள்ளது?
மணிலா, பிலிப்பைன்ஸ் -- 1981ல் கட்டப்பட்டது. இவ்வாறு அழைக்கப்படக் காரணம், தென்னை மரத்தின் மரப்பகுதி, தேங்காயின் ஓடுகள் ஆகியவற்றைப்பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. இதை இமெல்டா மார்க்கோஸ் என்ற முன்னாள் அதிபரின் துணைவியாரால் கட்டப்பட்டது. இப்போது ஒரு அருங்காட்சியகம் இயங்குகிறது.
Q187. எந்த அரண்மனையில் போலந்து நாட்டு அறிவியல் மையம் Polish (Poland) Academy of Sciences இயங்குகிறது?
ஸ்டாஸிக் அரண்மனை -- Staszic Palace -- 1823ல் கட்டப்பட்டது.
Q188. "தாமிரக் கூரை அரண்மனை" Copper Roof Palace ?
போலந்து -- Poland. 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் கூரை முழுவதும் தாமிர தகட்டினால் கவரப்பட்டுள்ளது.
Q189. போர்ச்சுகல் நாட்டு குடியரசுத்தலைவரின் அரண்மனை பெயர் என்ன?
பெலெம் அரண்மனை -- Belem Palace --லிஸ்பன் -- 1754ல் கட்டப்பட்டது.
Q190. “the Cultural Landscape of Sintra” என்ற சிறப்புப் பெயருடன் உள்ள அரண்மனை எது?
Pena National Palace, போர்ச்சுகல் -- இது ஒரு உலகப் புராதனச் சின்னம். 1836ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை அரசாங்க விருதுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
Q191. ரோமேனியா அதிபரின் அரண்மனை மாளிகையின் பெயர் என்ன?
Controceni Palace -- புக்காரெஸ்ட் -- 1679ல் கட்டப்பட்டது.
Q192. ரஷ்ய குடியரசுத்தலைவரின் அரண்மனைப் பெயர் என்ன?
க்ரெம்ளின் மாளிகை -- Great Kremlin Palace – 1837-51 – மாஸ்கோ -- மாஸ்க்வா நதிக்கரை மீது அமைந்துள்ள உலக புராதனச் சின்னம்.
Q193. ரஷ்யாவின் ஸார் மன்னர் பீட்டர் கட்டிய அரண்மனையின் பெயர் என்ன?
Peterhof – பீட்டர்ஸ்பர்க் -- செயிண்ட்பீட்டர்ஸ் பர்க் -- 1705ல் கட்டப்பட்ட உலகப்புராதன சின்னம்.
Q194. ரஷ்யாவின் எந்த அரண்மனையில் மேக்ஸிம் கார்கி அகாடமி இயங்கி வருகிறது?
வ்ளாடிமிர் அரண்மனை, செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் -- 1867-72 – அலெக்ஸாண்டர் 2 ஆல் கட்டப்பட்டது.
Q195. சிங்கப்பூர் குடியரசுத்தலைவரின் அலுவலக இல்லம் எது?
இஸ்தானா -- சிங்கப்பூர் -- 1867ல் கட்டப்பட்டது.
Q196. ஸ்வீடன் நாட்டு மன்னர் பரம்பரை அரசியல் அரண்மனை எது?
ஸ்டாக்ஹோம் அரண்மனை -- 1760ல் கட்டப்பட்டது.
Q197. ஸ்வீடன் நாட்டு மன்னர் பரம்பரையின் இல்லம் எது?
ட்ராட்னிங்கோம் அரண்மனை -- 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Q198. ஸ்பெயின் நாட்டு மன்னர் ன் அலுவலக இல்லம் எது?
ராயல் அரண்மனை -- மேட்ரிட், ஸ்பெயின் -- 1755ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது.
Q199. ஸ்பெயின் நாட்டுக்கு விஜயம் செய்யும் இதர நாட்டு தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரண்மனையின் பெயர் என்ன?
எல் பார்டோ -- மேட்ரிட் -- ஸ்பெயின் -- 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Q200. ஸ்லோவாகியா குடியரசுத்தலைவரின் அரண்மனை பெயர் என்ன?
க்ராஸ்ஸல் கோவிச் அரண்மனை -- Grassal Kovich Palace – ப்ரதிஸ்லாவா -- ஸ்லோவாகியா -- 1760ல் கட்டப்பட்டது. கிறிஸ்துமஸ் காலத்தில் இந்த அரண்மனை ""கோக கோலா"" வடிவில் அலங்காரப்படுத்துவது ஒரு கண்கொள்ளாக்காட்சி.
Q201. "மரகதக்கல் புத்தர்" சிலை கொண்ட அரண்மனை எங்குள்ளது?
""பெரும் அரண்மனை"" Grand Palace, பாங்காக் -- இந்த அரண்மனை 1782ல் இது கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இது தாய்லாந்தின் மன்னர்கள் வாழ்ந்த இல்லமாக இயங்கியது. இப்போது அரசாங்க விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Q202. தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள ""விமான்மெக் அரண்மனை"" Vimanmek Palace யின் சிறப்பு என்ன?
சில அரண்மனைகள் கொண்ட துஷித் அரண்மன வளாகத்தினுள் அமைந்திருக்கும் ஒரு அரண்மனை. முழுவதுமாக தேக்கு மரத்தால் கட்டப்பட்டது. உலகத்திலேயே தேக்கு மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட மிகப்பெரிய அரண்மனை.
Q203. "பொட்டாலா அரண்மனை" Potala Palace எங்குள்ளது அதன் முக்கியத்துவம் என்ன?
லாசா -- திபெத் -- இந்தியாவில் தஞ்சம் அடைந்த 14வது தலாய் லாமா வாழ்ந்து வந்த இல்லம். 17வது நூற்றாண்டில் 1645-1648 காலத்தில், லொசாங் க்யாட்ஸோ என்ற 4வது தலாய் லாமா வால் கட்டப்பட்டது. இப்போது, சீனாவின் வசம் உள்ள உலகப் புராதனச் சின்னம். ஒரு அருங்காட்சியகமாகவும், சுற்றுலா மையமாகவும் இயங்குகிறது.
Q204. துருக்மெனிஸ்தான் குடியரசுத்தலைவர் அவர்களின் அலுவலக தலைமை அகமாக விளங்கும் அரண்மனை எது?
Oguzkhan Palace – அஸ்காபாத், துருக்மெனிஸ்தான்.
Q205. உக்ரெய்ன் நாட்டு அதிபரின் அரண்மனை மாளிகையின் பெயர் என்ன?
மேரின்ஸ்கி அரண்மனை, கீவ், உக்ரெய்ன் -- 1745ல் கட்டப்பட்டது.
Q206. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை"" “Westminster” Palace எதற்கு புகழ் பெற்றது?
தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த அரண்மனை, இங்கிலாந்து பாரளுமன்றத்தை (இரண்டு அவைகளையும்) உள்ளடக்கியது. உலகில் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் இதுவும் ஒன்று. 1295ல் இங்குதான் முதன் முதலாக இங்கிலாந்தின் நாட்டின் முதல் ""மாதிரி பாராளுமன்றம்"" நடத்தப்பட்டது.
Q207. இங்கிலாந்து அரசாங்கத்தின் நிர்வாக மையம் எந்த அரன்மனையிலிருந்து இயங்குகிறது?
Palace of White Hall -- வெஸ்ட்மின்ஸ்டர் நகரம், லண்டன். 1698ல் கட்டப்பட்டது.
Q208. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையைப் பற்றிய சின குறிப்புகள்:
1703ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, பக்கிங் ஹாம் அரச பரம்பரை இளவருக்காக கட்டப் பட்டது. இதை, மன்னர் ஜார்ஜ் 3 அதை பெற்றுக்கொண்டார். 1837ல் மகாராணி விக்டோரியா இல்லமானது. இந்த அரண்மனையின் முன் அழகான தோட்டம், சர் தாமஸ் ப்ராக் என்ற சிற்பியின் 1911ம் ஆண்டு சிற்பம், நீதி, உண்மை, தியாகம் என்ற மூன்று சிலைகளும் உள்ளன.
Q209. அமெரிக்காவின் "வெள்ளை மாளிகை White House" எங்கு அமைந்துள்ளது?
1600, பென்னிஸ்ல்வேனியா அவென்யூ, வாஷிங்டன் டி.சி. 1792-1800 களில் கட்டப்பட்டது.
Q210. "வெள்ளை மாளிகை" என பெயரிட்டவர் யார்?
தியோடர் ரூஸ்வெல்ட் -- முன்னாள் அமெரிக்க அதிபதி.
Q211. "வெள்ளை மாளிகை" யில் முதலில் குடியேறியவர் யார்?
ஜான் ஆடம்ஸ், அதிபதி – 1.11.1800.
Q212. "வெள்ளை மாளிகை" யில் வாழாத ஒரே அமெரிக்க அதிபதி யார்?
ஜார்ஜ் வாஷிங்டன்.
Q213. போப்பாண்டவரின் மாளிகை/அரண்மனையின் பெயர் என்ன?
அப்போஸ்தலிக் அரண்மனை -- Apostolic Palace. "பாப்பல் அரண்மனை" எனவும் அழைக்கப்படுகிறது.
Q214. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெஃப்ஃபெர்சன் வாழ்ந்த அரண்மனையின் பெயர் என்ன?
மாண்டிசெல்லோ அரண்மனை, விர்ஜினியா, அமெரிக்கா. 1770ல் கட்டப்பட்டது. இவரால் நிறுவப்பட்ட விர்ஜினியா பல்கலைக்கழகம் மற்றும் இந்த அரண்மனை இரண்டும் உலக புராதனச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Q215. ""மறு இணைப்பு அரண்மனை"" “Reunification Palace” என்பது எங்குள்ளது, இப்பெயர் வரக்காரணம் என்ன?
வியட்நாமின் ஹோச்சிமின்ஹ் நகரில் உள்ள இந்த அரண்மனை, முன்பாக ""சுதந்திர அரண்மனை"" மற்றும் ""நொர்டோம் அரண்மனை"" என அழைக்கப்பட்டது. பிளவுபட்டிருந்த வியட்நாம் ஒன்றிணைக்கப்பட்ட போது, இப்பெயர் வரக்காராணமாயிற்று.
Q216. "அமைதி அரண்மனை" “Peace Palace” எங்குள்ளது, இப்பெயர் வரக்காரணம் என்ன?
ஹேக், நெதர்லாந்து. 1913ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை கார்னெகி ஃபவுண்டேஷன் Carnegie Foundation என்ற அமைப்பால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில், சர்வதேச நீதி மன்றம், நிரந்தர நடுவர் மன்றம், ஹேக் சர்வதேச சட்ட அகாடமி மற்றும் ஒரு அமைதி நூலகம் இயங்குகிறது.
Q217. "பாராளுமன்ற அரண்மனை" Palace of the Parliament எங்குள்ளது?
புக்காரெஸ்ட், ரொமேனியா. 1989ல் கட்டப்பட்டது. தரை பரப்பளவில், உலகின் பெரிய அரண்மனைகளில் ஒன்று.
Q218. பெல்ஜியம் நாட்டு "Royal Castle of Lacken of Belgium" எதற்கு புகழ் பெற்றது?
இந்த அரண்மனையின் முன் உள்ள பூங்காவில், வெப்பக்கட்டுப்பாடு கொண்ட பசுமை இல்லங்கள் உள்ளன. ஏப்ரல்-மே மாதங்களில் இந்த பசுமை இல்லங்களில் பூக்கும் மலர்கள் கண்கவர் காட்சி. பார்வையாளர்கள் இரண்டு வாரங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
Q219. ப்ரூணே நாட்டு சுல்தானின் அரண்மனை, “Istana Nurul Iman Palace” பல காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்றது. அவை பற்றி :
(1) 1984 ல், பிலிப்பைன்ஸ் நாட்டு வடிவமைப்பாளர் லியாண்ட்ரோ வி. லூசிஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த அரண்மனை, ப்ரூணே நதிக்கரையில் அமைந்துள்ளது.
(2) சுமார் 400 மில்லியன் அமெரிக்க டால் செலவில் கட்டப்பட்ட இந்த அரண்மனையில், தரை பரப்பளவு சுமார் 21,52, 782 ச. அடி ஆகும்.
(3) 1788 அறைகள், 257 குளியலறைகள், 5 நீச்சல் குளம் கொண்டது.
(4) குளிர் சாதன வசதி செய்யப்பட்ட குதிரை லாயம் -- 200 குதிரைகள் நிறுத்தும் வசதியுடன்.
(5) 110 கார்கள் நிறுத்துமிடம்.
(6) அரண்மனைக்குள் சுமார் 564 தொங்கு ஆடம்பர விளக்குகள், 57000 மின் விளக்குகள், 44 மாடிப்படிகள், 18 மின் தூக்கிகள் உள்ளன.
(7) ரம்ஜானின் முடிவு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
(8) உலகின் மிகப்பெரிய அரண்மனைகளுள் ஒன்று. குடியிருப்பு இல்லமாக, இதுவே உலகின் மிகப்பெரியது.
Q220. இங்கிலாந்தின் பல அரண்மனைகளை வடிவமைத்த வல்லுநர்கள் யாவர்?
ஜான் நேஷ் மற்றும் எட்வர்டு ப்ளோர். John Nash and Edward Blore.
Q221. "ஸ்விஸ்கார்ண் அரண்மனை" “Swiss Corn Palace” எங்குள்ளது, அதன் சிறப்பு என்ன?
ஹாங்காங். முழுவதுமாக தங்கத்தால் கட்டப்பட்டது. சுமார் 2 டன் தங்கம் பயன்படுத்தப் பட்டுள்ளது. சுமார் 175 கோடி செலவு என கூறப்பட்டுள்ளது.

இந்திய உலக புராதனச் சின்னங்கள் -- WORLD HERITAGE SITES- INDIA

Q222. உலகப்புராதனச் சின்னம் என்ற அங்கீகாரம் எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?
யுனெஸ்கோ -- UNESCO எனப்படும் ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations, Educational, Scientific and Cultural Organization) மூலமாக வழங்கப்படும் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதை வழங்குவதில், ஐ.நா.சபையின் கீழ்க்கண்ட அமைப்புகள் இணைந்துள்ளன. (1) International council of monuments and site மற்றும் (2) World conservation union.
Q223. எந்த அம்சங்களின் அடிப்படையில் உலகப்புராதனச் சின்னம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது?
ஒரு இடம், இந்த அங்கீகாரம் பெறுவதற்கு, 6 கலாச்சார அம்சங்களையும், நான்கு இயற்கை அமைப்புகளையும் பெற்றிருக்க வேண்டும். அவை:
1) மனித கற்பனை மற்றும் கலாச்சார முக்கியத்துவம்.
2) கலை நயம், தொழிற்நுட்பம்
3) கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டு.
4) வரலாற்று முக்கியத்துவம்
5) காலப்போக்கை தாங்கும் தன்மை
6) கலாச்சாரம் மற்றும் இலக்கியத்துடன் தொடர்பு.
7) இயற்கைவளம், சுற்றுச்சூழல்.
8) புவியியலுடன் தொடர்பு.
9) இயற்கையின் மாறுதல்களை தாங்கும் தன்மை.
10) இயற்கை வளம் பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள், வாய்ப்புகள்.
Q224. உலகில் எத்தனை உலகப்புராதன சின்னங்கள் உள்ளன?
2016 நிலையில் சுமார் 1052 உலகப் புராதனச் சின்னங்கள் உள்ளன. (இந்த எண்ணிக்கை மாற்றத்துக்குரியது)
Q225. இந்தியாவில் 2016 நிலையில் எத்தனை உலகப் புராதன சின்னங்கள் உள்ளன, அவை யாவை?
2016 ஆகஸ்ட் நிலையில் 35 உலகப் புராதனச்சின்னங்கள் உள்ளன. (இந்த எண்ணிக்கை மாற்றத்துக்குரியது). அவை:
(1) ஆக்ரா கோட்டை, ஆக்ரா, உத்திரப்பிரதேசம் -- 11ம் நூற்றாண்டு கோட்டை -- 1578ல் முகலாய மன்னர் பாபரால் புதுப்பிக்கப்பட்டது. (1983)
(2) அஜந்தா குகைகள் -- அவுராங்கபாத் மாவட்டம், மகாராஷ்டிரா -- கி.மு. 2ம் நூற்றாண்டின் காலத்து குகைகள். (1983)
(3) சாஞ்சி ஸ்தூபி -- போப்பால் -- மத்திய பிரதேசம் -- மௌரியர் காலத்தில் கி.மு. 3ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. (1989)
(4) சம்பனேர் பவகத் தொல்லியல் பூங்கா -- பஞ்ச்மகால் மாவட்டம், குஜராத். (2004)
(5) சத்ரபதி சிவாஜி ரயில்வே சந்திப்பு, (விக்டோரியா டெர்மினஸ்) மும்பை. 1887ல் ஃப்ரெடெரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் ஆல் வடிவமைக்கப்பட்டு, 1887 ல் கட்டப்பட்டது. (2004)
(6) கிறித்துவ தேவாலயங்களும், மத கல்வி மையங்களும், கோவா. (1986)
(7) எலிஃபெண்டா குகைகள், மும்பையின் அரபிக்கடலில் சுமார் 11 கி.மீ தூரத்தில் உள்ளது. கராபூரி என்றும் அழைக்கப்படுகிறது. (1987)
(8) எல்லோரா குகைகள், அவுரங்காபாத் மாவட்டம், மகாராஷ்டிரா -- ராஷ்டிரகுடா மன்னர்களால் உருவாக்கப்பட்டது. (1983)
(9) ஃபத்தேஹ்பூர் சிக்ரி, உத்தரபிரதேசம் -- 1569ல் முகலாய மன்னர் அக்பரால் நிறுவப்பட்டது. (1986)
(10) ப்ரஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு -- ராஜ ராஜ சோழனால் 1010 ல் கட்டப் பட்டது. (1987) ப்ரஹதீஸ்வரர் ஆலயம், கங்கைக் கொண்ட சோழ புரம், தமிழ்நாடு -- 1035ல் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. (1987) அய்ராவதீஸ்வரா கோவில், தாராசுரம், கும்பகோணம், தமிழ்நாடு. 12ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழன் 2 ஆல் கட்டப்பட்டது. (1987)
(11) செங்கோட்டை, டெல்லி -- 1648ல் ஷாஜஹானால் கட்டப்பட்டது. (2007)
(12) ஜந்தர் மந்தர், ஜெய்ப்பூர் -- 1734ல் மன்னர் சவாய் ஜெய் சிங் ஆல் நிறுவப்பட்டது. (2010).
(13) ஹம்பி நினைவுச் சின்னங்கள் -- கர்நாடகம். விஜயநகர சாம்ராஜ்யத்தால் 14 - 16 நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப் பட்டது. (1986)
(14) ஹூமாயூன் கல்லறை, டெல்லி. 1572ல் அவருடைய துணைவியார் ஹமீதா பானு பேகம் அவர்களால் கட்டப்பட்டது. (1993)
(15) காஸிரங்கா தேசிய பூங்கா, அஸ்ஸாம். ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்துக்கு புகழ்பெற்றது. (1985)
(16) க்யாலாதேவ் தேசிய பூங்கா -- பரத்பூர், ராஜஸ்தான். (1985)
(17) கஜூராஹோ சிற்பங்கள், சத்தார்பூர், மத்தியபிரதேசம். (1986)
(18) மகாபோதி கோவில், புத்த கயா, பீஹார். (2002)
(19) மனாஸ் தேசிய பூங்கா, பார்ப்பேட்டா, அஸ்ஸாம். (1985)
(20) டார்ஜிலிங்க், கல்கா மற்றும் நீலகிரி மலை ரயில் பாதைகள். (1999, 2005, 2008) (இவற்றைப் பற்றி இந்திய அரசாங்க துறைகளின் போக்குவரத்து பகுதியில் ரயில்வேயில் தெரிந்துகொள்ளுங்கள்)
(21) கடற்கரைக் கோவில்கள், மகாபலிபுரம், தமிழ்நாடு -- 8 வது நூற்றாண்டில் பல்லவ மன்னர் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது. (1984)
(22) நந்தா தேவி தேசிய பூங்கா -- உத்தராகாண்ட் (2005)
(23) பட்டடக்கல் கோவில்களும், சிற்பங்களும் -- மலப்ரபா நதிக்கரையில், பகல்கோட் மாவட்டம், கர்நாடகா -- சாளுக்ய மன்னர்களால் 7-11ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. (1987).
(24) குதுப் மினார், டெல்லி -- 13 வது நூற்றாண்டில், குத்புதீன் ஐபெக்/ஃபிருஸ்ஷா துக்ளக் காலத்தில் கட்டப்பட்ட 72 மீட்டர் உயரம் கொண்ட இஸ்லாமிய தொழுகைத் தூண். (1993)
(25) பிம்பேட்கா குகைகள், ரெய்சென் மாவட்டம், மத்யபிரதேசம். (2003)
(26) கொனாரக் சூர்யன் கோவில் -- பூரி யின் அருகில், ஒடிசா -- கிழக்கு கங்கா வம்சா மன்னர் நரசிம்மதேவா 1 ஆல் உருவாக்கப்பட்டது. (1984)
(27) சுந்தரவன தேசிய பூங்கா, மேற்கு வங்காளம். (1987)
(28) தாஜ் மஹால், ஆக்ரா, உத்திரபிரதேசம் -- 1648 ல் ஷாஜஹானால் கட்டப்பட்டது. (1983)
(29) மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி -- சுற்றுச் சூழலுக்காக. (2012) (30) ராஜஸ்தானை சுற்றியுள்ள -- சித்தோர்கர், கும்பல்கர், ரணதம்போர், ஆம்பர், ஜெய்சல்மேர் மலைக் கோட்டைகள். (2013)
(31) ராணி கி வாவ், பதான், குஜராத். (2014)
(32) இமாலயன் தேசிய பூங்கா, இமாச்சலப் பிரதேசம் (2014)
(33) நாளந்தா, பீஹார் (2016)
(34) கஞ்செண்ட்ஸோங்கா தேசிய பூங்கா, சிக்கிம். (2016)
(35) சந்திகார் நகரை வடிவமைத்த லெ கார்புசியர் என்பவரின் கலைநயம் கொண்ட கட்டுமானங்கள் (2016)
Q226. அஜந்தா குகைகள் எங்குள்ளன, அங்குள்ளவை யாவை?
அஜிந்த்தா, அவுரங்காபாத் மாவட்டம், மகாராஷ்டிரா -- 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குடைவுக் கோவில்கள். புத்தமத சிற்பங்கள், சித்திரங்கள். உலகப்புராதனச் சின்னம் (1983).
Q227. உலகப்புராதனச் சின்னம் சாஞ்சியின் முக்கியத்துவம் என்ன?
சாஞ்சி ஸ்தூபி -- மன்னர் அசோகரால் உருவாக்கப்பட்டது.
Q228. சம்பானேர் பாவகத் தொல்லியல் பூங்காவில் உள்ளவை என்ன?
8 முதல் 14 வது காலத்தில் கட்டப்பட்ட பல கட்டுமானங்கள். உலகப்புராதன சின்னம் (2004).
Q229. சத்ரபதி சிவாஜி ரயில் சந்திப்பு முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
விக்டோரியா டெர்மினஸ் -- ரயில்வே சந்திப்பு.
Q230. சத்ரபதி சிவாஜி ரயில் சந்திப்பை வடிவமைத்தவர் யார்?
ஃப்ரெடெரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் -- இங்கிலாந்து.
Q231. சத்ரபதி சிவாஜி ரயில் சந்திப்பு எந்த கலைவடிவத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது?
Venetian Gothic style – 1888.
Q232. சத்ரபதி சிவாஜி ரயில் சந்திப்பு எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?
மத்திய ரயில்வேயின் தலைமயகமும்.
Q233. கோவாவின் எந்த உலகப்புராதன சின்ன கிறித்துவ ஆலயத்தில், புனித ஃப்ரான்சிஸ் சேவியர் ன் பூத உடல் இன்றும் பாதுகாக்கப்படுகிறது?
பாம் ஜீசஸ் தேவாலயம். Bom Jesus Church.
Q234. எலிஃபெண்டா குகைகள் எங்குள்ளன?
எலிஃபெண்டா தீவு, மும்பைக் கடற்பகுதி, மகாராஷ்டிரா.
Q235. எலிஃபெண்டா குகைகளில் உள்ள முக்கிய அம்சங்கள் யாவை?
இவை குகைக் கோவில்கள் -- 9 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் உருவாக்கப்பட்டது. இங்கு பல சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சிவனின் ""த்ரிமூர்த்தி"" (சிவனின் மூன்று முகங்கள்) மிகவும் புகழ் பெற்றது. மும்பையின் இந்திய வாயிலிருந்து சுமார் 11 கி.மீ தூரத்தில் கடலில் உள்ள ஒரு தீவு. 1987 முதல் உலகப் புராதனச் சின்னம்.
Q236. உலகப்புராதனச் சின்னமான ப்ருஹதீஸ்வரர் ஆலயங்கள் எங்குள்ளன?
1. தஞ்சாவூர் - தமிழ்நாடு. 10ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது.
2. கங்கைகொண்ட சோழ புரம், அரியலூர் மாவட்டம் -- ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இரண்டுமே 1987 முதல் உலகப் புராதனச் சின்னமாக உள்ளன.
Q237. தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் கோவிலின் முக்கிய அம்சங்கள் யாவை?
(1) 1987 முதல் உலகப் புராதனச் சின்னம்.
(2) இதன் சிகரம் (கோபுரம்) இரண்டு பெரும் கருங்கற்களால் செதுக்கப்பட்ட ஒரு எண்கோண விதானம். சுமார் 81.25 டன் எடை கொண்டது. இந்த கற்களை மேலே எடுத்துச்செல்ல, 11 கி.மீ தூரத்திலிருந்து ஒரு சாய்வு மேடை செய்யப்பட்டு, மேலே கொண்டுசெல்லப்பட்டது.
(3) இதன் கோபுர கலசம் தாமிரத்தால் செய்யப்பட்ட குடம் போன்ற அமைப்புடன் சுமார் 107 கிலோ எடை கொண்டது. அதன் மேல் சுமார் 13 கிலோ தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
(4) கோவிலில் உள்ள ஒரே கல்லால் ஆன நந்தி சுமார் 27 டன் எடை கொண்டது. உலகில் மிகப்பெரிய நந்தி.
Q238. தஞ்சாவூர் ப்ரஹீதீஸ்வரர் கோவிலின் கட்டமைப்பில் உள்ள ஒரு அறிவியல் விநோதம் என்ன?
கோவிலின் கோபுரம் அதன் விமானமும் சேர்த்து வடிவமைப்பட்ட விதம், இதன் நிழல் தரையில் எங்குமே காணமுடியாது. இந்த விநோதம் இன்றும் அறிவியல் அறிஞர்களை வியக்க வைக்கிறது.
Q239. கங்கைக்கொண்ட சோழபுரம் ப்ரஹதீஸ்வரர் கோவிலின் சிறப்புகள் யாவை?
(1) இந்த நகரம் மற்றும் கோவிலை, ராஜேந்திர சோழன் 1 உருவாக்கியது.
(2) சோழ சாம்ராஜ்யத்துக்கு சுமார் 250 ஆண்டுகள் தலை நகரமாக விளங்கியது.
(3) கட்டுமான தரம் மற்றும் அளவில் இது, தஞ்சாவூர் கோவிலை விட பெரியது.
(4) 1987 முதல் உலகப் புராதனச் சின்னம்.
Q240. ஹம்பி உலகப் புராதனச் சின்னங்கள் எங்குள்ளன? சிறப்புகள் யாவை?
(1) வட கர்நாடகாவில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது.
(2) விஜயநகர சாம்ராஜ்யத்தால் கட்டப்பட்டது.
(3) விருபாக்ஷா கோவிலும், அதைச் சுற்றியுள்ள சிற்பக் கட்டுமானங்கள அனைத்தும் சேர்த்து உலகப்புராதனச் சின்னமாக 1986 முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Q241. ஹூமாயூன் கல்லறை எங்குள்ளது?
கிழக்கு நிஸாமுதீன், டெல்லி -- 1562ல் ஹூமாயூனின் துணைவியார் ஹமீதா பானு பேகம் ஆல் கட்டப்பட்டது. இங்குள்ள சார் பாக் தோட்டம் மிகவும் புகழ் பெற்றது.
Q242. காஸிரங்கா தேசிய பூங்கா எங்குள்ளது?
அஸ்ஸாம் மாநிலத்தில், ப்ரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. 1985 முதல் உலகப் புராதனச் சின்னம். ஒற்றைக்கொம்பு காண்டாமிருத்திற்கு புகழ் பெற்ற தேசிய பூங்கா.
Q243. க்யாலதேவ் தேசிய பூங்கா எங்குள்ளது?
இது ஒரு பறவைகள் சரணாலயம். பரத்பூர், ராஜஸ்தானில் உள்ளது. 1982 முதல் உலகப் புராதனச் சின்னமாக உள்ளது.
Q244. கஜூராஹோ சிற்பங்கள் எங்குள்ளன?
சாத்பூர் மாவட்டம், மத்திய பிரதேசம்.
Q245. மஹாபோதி புத்தர் கோவில் எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன?
புத்த கயா, பீஹார். புத்தர் இங்கு தான் அறிவொளி பெற்றார். 2002 முதல் உலகப் புராதனச் சின்னமாக உள்ளது.
Q246. அஸ்ஸாமின் பார்பேட்டாவில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா எதற்கு முக்கியமானது?
புலிகள் சரணாலயம்.
Q247. இந்தியாவின் எந்த மலை ரயில் பாதைகள் உலகப் புராதனச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன?
(1) டார்ஜிலிங் இமாலயம் ரயில்வே, மேற்கு வங்காளம் -- 1999.
(2) நீலகிரி மலை ரயில் பாதை, தமிழ் நாடு -- 2005.
(3) கல்கா-சிம்லா மலை ரயில் பாதை -- 2008 .
Q248. மகாபலிபுர உலகப்புராதனச் சின்ன சிற்பங்களை உருவாக்கியவர் யார்?
நரசிம்ம பல்லவன் (மாமல்லன்) -- பல்லவ அரசர்.
Q249. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலில் உள்ள சிற்பங்கள் யாவை?
(1) ஆகாய கங்கை Descent of the Ganges
(2) அர்ஜூனர் தவம் Arjuna's Penance
(3) வராஹ குகைகள் Varaha Caves
(4) ஒற்றைக்கல் யானை Single stone elephant
(5) கலங்கரை விளக்கம் மற்றும் கோவில் Light house and temples
(6) பஞ்ச ரதம் Panchrathas – ஐந்து ரதங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி பாறைக்கல்லில் செதுக்கப்பட்டு பஞ்ச பாண்டவர்களின் பெயரிடப்பட்டுள்ளது.
(7) வெண்ணெய் உருண்டை - ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய பந்து பாறை.
Q250. நந்ததேவி தேசிய பூங்கா எங்குள்ளது?
உத்தராகாண்ட் -- சுமார் 3500 அடி உயரமலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்தது கார்வால் மலைப்பகுதியின் ""மலர்களின் பள்ளத்தாக்கு"" ம் சேரும். 1999 முதல் உலகப் புராதனச் சின்னம்.
Q251. கர்நாடகாவின் பட்டடக்கல் ல் உள்ள உலகப் புராதனச் சின்னம் பற்றி …..
பல நினைவுச்சின்ன சிற்பங்களின் தொகுப்பு. 8ம் நூற்றாண்டில் சாளுக்ய மன்னர்களால், திராவிட மற்றும் நகரா கட்டிட வடிவமைப்பில், விருபாக்ஷா கோவிலையும் சேர்த்த சிற்பங்கள். இவை சாளுக்ய மன்னர் விக்ரமாதித்யா 2ன் துணைவியார் லோகமா தேவி யின் விருப்பத்தில் கட்டப்பட்ட கோவில். சில ஜைன மத கோவில்களும் உள்ளன. சங்கமேஸ்வரா, காசி விஸ்வநாதா மற்றும் மல்லிகார்ஜூனா கோவில்கள் மிகவும் புகழ் பெற்றவை.
Q252. உலகப் புராதனச்சின்னம் குதுப்மினாரின் முக்கிய அம்சங்கள் யாவை?
(1) அடிமை வம்ச ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
(2) 1313 ல் குத்புதீன் ஐபெக் தொடங்கி வைத்தார்.
(3) இல்துமிஷ் 3 அடுக்குகளைச் சேர்த்தார்.
(4) ஃபிருஸ்ஷா துக்ளக் 1368ல் முடித்து வைத்தார்.
(5) இது ஒரு உலோகத்தூண். உச்சியில் ஒரு உலோக கருடன், சாஞ்சியில் அருகில் செய்யப் பட்டு, சந்திரகுப்தா 2 ஆல் வைக்கப்பட்டது. இது உலோக அறிவியலில் ஒரு விநோதம்.
(6) 105 மீ/237.8 அடி உயரம், 14.3 மீ அடிப்பகுதி விட்டம், 399 படிகளைக் கொண்டது.
(7) உலகின் உயரமான இஸ்லாமிய தொழுகை கூவல் தூண்.
(8) 1993 முதல் உலகப் புராதனச் சின்னமாக உள்ளது.
Q253. உலகப் புராதனச் சின்னம் பிம்பேட்கா வின் சிறப்பு அம்சம் என்ன?
இவை கற்காலத்து பாறைக் குடைவுகளும், ஓவியங்கள். மத்திய பிரதேசத்தின் போப்பால் அருகில் உள்ள விந்திய மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவை சுமார் 9000 வருடங்கள் பழமையானவை எனத் தெரிகிறது. 2003 முதல் உலகப் புராதனச் சின்னம்.
Q254. ஒடிசாவின் கொனரக் சூர்ய பகவான் கோவில் சிறப்பு அம்சங்கள் யாவை?
(1) ஒடிசாவின் பூரி அருகில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.
(2) 13ம் நூற்றாண்டில், கங்கா வம்ச மன்னர் நரசிம்ம தேவா-வால் செவ்வண்ண கற்களாலும் கரும் பாறைக் கற்களாலும் கட்டப்பட்டது.
(3) ஒரு கற்பனை, 7 குதிரைகள் பூட்டிய ரதம் போன்று வடிவமைக்கப்பட்டு, நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய 12 ஜோடி கல் உருளைகளின் மீது நிறுத்தப்பட்டுள்ளது.
Q255. ரவீந்திரநாத் தாகூர், கொனாரக் சிற்பங்களைப் பற்றி எவ்வாறு வர்ணித்தார்?
""கற்களின் மொழி, மனித இன மொழிகளை மிஞ்சிவிட்டது"". “Here the languages of stone surpasses the languages of man”.
Q256. மேற்கு வங்காளத்தின் ""சுந்தரவனக் காடுகள்"" “Sunderbans” National Park -- உலகின் மிகப்பெரிய டெல்டா பகுதி ஒரு உலகப் புராதனச் சின்னம். அதை பற்றி ……
(1) 1985 முதல் உலகப் புராதனச் சின்னம்.
(2) உலகின் மிகப்பெரியா ஆற்று படுகை (டெல்டா)
(3) புலிகள் சரணாலயம் மற்றும் உயிரினக்கோளம்.
(4) கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிகளால் உருவான சுமார் 54 சிறிய தீவுகளைக் கொண்டது.
(5) உவர்நீர் முதலைகள் அதிகமாக காணப்படும் இடம்.
Q257. தாஜ்மகால் ஒரு உலகப்புராதன சின்னம் மட்டுமல்ல, உலகின் அதிசயங்களில் ஒன்று. அதன் முக்கிய அம்சங்கள் யாவை?
(1) 1632-1648 காலத்தில், ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் மஹல் நினைவாகக் கட்டியது.
(2) உஸ்தாத் அஹமத் லஹௌரி என்பவர் தான் முக்கிய வடிவமைப்பாளர் எனத் தெரிகிறது.
(3) தாஜ் மகாலின் முன்புள்ள ""சார்பாக்"" எனப்படும் தோட்டம் மிகவும் அழகானது. (சார்பாக் என்பது நான்கு பகுதிகள் எனப்படும். இந்த வடிவமைப்பு முகலாய தோட்டக்கலையின் ஒரு முக்கிய அங்கம்)
(4) தாஜ் மகாலின் உயரம் சுமார் 180 அடி.
Q258. தாஜ்மகாலைப் போன்ற வடிவமைப்புக் கொண்ட மற்ற கட்டிடங்கள் யாவை?
(1) தாஜ்மகால், வங்காள தேசம் -- டாக்கா நகரின் சோனார்காவ்ன் பகுதியில் உள்ளது.
(2) பீபி கா மக்பரா -- அவுரங்காபாத், மகாராஷ்டிரா.
(3) Tripoli Shrine கோவில் – மில்வாக்கி, விஸ்கான்ஸின், அமெரிக்கா.
Q259. உலகில் அதிகமான உலகப் புராதனச் சின்னங்களைக் கொண்ட முதல் ஐந்து நாடுகள் யாவை?
(1) இத்தாலி -- 51
(2) சீனா -- 50
(3) ஸ்பெயின் -- 45
(4) ஃப்ரான்ஸ் -- 42
(5) ஜெர்மனி -- 41 (இந்தியா 35) இவை ஆகஸ்ட் 2016 நிலையில்.
Q260. இந்தியாவில் எத்தனை உலகப் புராதனச் சின்னங்கள் உள்ளன?
ஆகஸ்ட் 2016 நிலையில் 35.