Khub.info Learn TNPSC exam and online pratice

நகைச்சுவை மற்றும் கேலிச்சித்திர புத்தகங்கள் -- COMICS & CARTOONS

Q1. நகைச்சுவை புத்தகங்கள் -- comics என்பது என்ன?
நகைச்சுவை ஏற்படுத்தும் வகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்து, அந்த சித்திரங்களுக்கு ஏற்ப, அந்த சித்திரங்கள் பேசுவது போல், வார்த்தைகளில் நகைச்சுவை, அவற்றை பலூன் வடிவ சித்திரத்திற்குள் போடுவது, கற்பனை வட்டங்கள், என சித்திரங்கள் மூலமாக நகைச்சுவை ஏற்படுத்துவதே இவை.

Q2. நகைச்சுவை புத்தகங்களில் -- comics -- வசனங்களை பலூன் வடிவத்தில் அல்லது கற்பனை வட்டங்களை நாம் பார்த்திருப்போம். இந்த வசன பலூன் என்பது என்ன, என்ன வகைகள்?
கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தின் சிந்தனைகள், வசனங்கள், கற்பனைகள், உணர்வுகள் ஆகியவற்றை பலூன் போன்ற வடிவத்தில் வரைந்து காட்டுவது, இவ்வகை நகைச்சுவை புத்தகங்களில் நாம் காணலாம். இவை தான் ""வசன பலூன்கள்"" எனப்படும். இவை பல காரணங்களுக்காக, பல அளவு, வடிவங்களில் போடப்படுகின்றன. இவற்றிற்கு, ""வசன குமிழி “Speech Bubble”, "" எண்ணக் குமிழி “Thought Bubble”, ""அலறல் குமிழி “Scream Bubble”, ""அறிவிப்பு குமிழி “Broadcast Bubble”, ""வார்த்தை குமிழி “Word Balloon”, "" ரகசிய குமிழி “Whisper Bubbles”, ""வண்ணக் குமிழி “Colored Bubbles”, என பல பெயர்களில் அழைக்கப்படுவதுண்டு. ஒவ்வொன்றும் கதாபாத்திரத்தின் ஒவ்வொரு உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது.
Q3. தலைப்புகள் -- captions என்பது என்ன?
பொதுவாக இது தலைப்பு எனப்படும். நகைச்சுவை புத்தகங்களில், பலூன் வசனங்களுக்கும் கதாபாத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை குறிக்கும் வகையில் போடப்படுவது. இது பொதுவாக, அந்த குறிப்பிட்ட படத்தின் கீழ், வெள்ளை கட்டத்துக்குள் போடப்படும்.
Q4. முதன் முதலில் கேலிசித்திர நகைச்சுவை துணுக்கு comic strip, வெளியிட்டவர் யார்? அதில் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
1894-95 – அமெரிக்காவின் ரிச்சர்ட் எஃப். அவுட்கால்ட். இது “Truth” என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இதன் முக்கிய கதாபாத்திரம் Mickey Dugan. மஞ்சள் உடை அணிந்து, வழுக்கைத் தலையுடன், வெளிநீட்ட பற்களுடன் கொண்ட கதாபாத்திரம் பெயர் -- “Yellow Kid” ..
Q5. “Cerebus the Aardwark” என்ற நகைச்சுவை தொடரை வெளியிட்டவர் யார்?
Dave Sim -- கேனடா.
Q6. குழந்தைகளிடம் மிகவும் புகழ் பெற்ற “Pogo” தொடர் நகைச்சுவைத் தொடர்களை உருவாக்கியவர் யார்?
கிம் கெல்லி -- Kim Kelly -- அமெரிக்கா. 1948 ல் தொடங்கி, 1975ல் நிறைவடைந்தது.
Q7. மிகவும் புகழ் பெற்ற “Asterix” நகைச்சுவை தொடர்களை உருவாக்கியவர் யார்?
ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த Rene Goscinny (கதை,வசனம்) and Albert Uderzo (சித்திரங்கள்). 1959ல் முதலில் வெளி வந்து, சுமார் 33 புத்தகங்கள் வெளிவந்து, சுமார் 100 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புராண காலத்து ""கால் gaul"" என்ற இன மக்கள், ரோம மன்னர்களை எதிர்த்து போராடும் விதமாக அமைந்த நகைச்சுவை சித்திர நூல்கள்.
Q8. Asterix நகைச்சுவைத் தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்கள் யாவை?
ASTERIX: கால் இன போர் வீரர்.
OBELIX : Asterix கூடவே இருப்பவர்.
IDEFIX : Obelixன் வளர்ப்பு நாய்.
PANORAMIX: பாதிரியார்.
ABARARA COURCIX : கிராமத் தலைவர்
BONEMINE : கிராமத் தலைவரின் துணைவி.
AGECANONIX: கிராமத்தின் மூத்தவர்.
ASSURACE TOURIX : நாடோடி கவி
CETAUTO MATIX : கொல்லன்
ORDRAL FATIX : மீன் வியாபாரி
LEDLOSUBMARINE: மீன் வியாபாரியின் மனைவி.
Q9. Tin Tin என்ற புகழ் பெற்ற நகைச்சுவை சித்திரத் தொடர்களை உருவாக்கியவர் யார்?
உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை சித்திர தொடர்கதைகள். முதலில் பெல்ஜிய மொழியில் Georges Remi (புனைப்பெயர் - ""Herge"" ) என்பவர் 1929ல் வெளியிட்டார். பிறகு பல மொழிகளில் வந்து, உலகளவில் சிறுவர்களை மிகவும் கவர்ந்த நகைச்சுவை புத்தகங்கள். இதன் கதாநாயக கதாபாத்திரத்தில் வரும் ""டின் டின்"", பல குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரு துப்பறியும் கதாபாத்திரம். இதன் வரிசையில் சுமார் 24 புத்தகங்கள் உள்ளன.
Q10. Tin Tin நகைச்சுவை சித்திரத் தொடர்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் யாவை?
TIN TIN : பெல்ஜிய பத்திரிகை நிருபர். இவருடைய ஆர்வத்தின் காரணமாக, பல குற்றவாளிகள் செய்யும் குற்றங்களின் வலைகளில் சிக்கி, அவற்றில் இருந்து மீண்டு, குற்றவாளிகளை பிடித்து கொடுப்பார்.
SNOWY: Tin Tin ன் நாய்க்குட்டி தோழன். இவருடைய அனைத்து முயற்சிகளிலும் கூட இருந்து உதவி செய்யும்.
BEN KALISH EZAB & ABDULLAH: தந்தை மகன் கெமெத் என்ற இடத்து அரபு அமீர்கள். இதின் மகனான அப்துல்லா ஒரு குறும்புக்காரராகவும், தொல்லையாகவும் இருந்தார்.
BIANCA CASTAFOIRE : ஒரு பாடகர்.
GENERAL ALACAZAR : ராணுவ ஜெனரல். தனது எதிரி ராணுவ ஜெனரல் Tapioca என்பவருடன் பதவிப் போட்டியில் இவர்களுள் நடக்கும் நகைச்சுவையானப் போட்டி.
PEGGY ALACAZAR : General Alcazar ன் மனைவி.
PROF.HECTOR ALEMBICK: இவர் கடல் வாழ் மிருகங்களின் விஞ்ஞானி.
ALAN THOMPSON: கப்பல் தலைவரின் முதல் துணை அதிகாரி. கடத்தல் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் ஒரு கதாபாத்திரம்.
PROFESSOR CALCULUS: இந்த கதைகளில் வரும் பல கருவிகளை கண்டுபிடித்த, காது கேளாத ஒரு விஞ்ஞான முனைவர்.
MR.BHOLWHINKEL: பெரும் பணக்காரர்.
AL CAPONE: வாழ்நாள் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு கதாபாத்திரம்.
CHING CHONG CHEN: Tin Tin ன் சீன இளைஞர் தோழர்.
CAPTAIN HADDOCK : ஒரு குடிகாரர். இவருடைய உளறல்கள் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும்.
OLIVERA DA FIGUIERA: தலை சிறந்த வியாபாரி, எந்த பொருளையும் விற்கக்கூடிய தன்மையுடைவர்.
GOLDSTEIN: TinTin போன்ற உருவ அமைப்பில் ஒரு அந்தரங்க குற்ற இயக்கத்தின் உறுப்பினர்.
JO, ZETTE and JOCKO: Jo ஒரு சிறுவன்; Zette – ஒரு சிறுமி மற்றும் Jocko – ஒரு குரங்கு.
COLONEL JORGEN : Tin Tin ன் முக்கிய எதிரி. அவர் நாட்டுக்கு எதிராக சதி செயலில் ஈடுபடுபவர்.
MITSHI RATO : ஜப்பானிய உளவாளி.
DR J W MULLER : ஒரு மருத்துவர். தனது பதவியை தவறான செயல்களில் ஈடுபடுத்துபவர்.
NESTOR: ஒரு பணியாளர்.
ABLO: Tin Tin ஐ கொலை செய்ய அனுப்பப்பட்டவர்.
QUICK AND FLUPKE : விளையாட்டு பிள்ளைகள். தங்கள் செயல்களால், பெற்றோரிடமும் காவல் துறையினரிடமும் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்கள்.
RASTA POPOLOUS: கிரேக்க பணக்காரர்.
RIDGEWELL: ஆங்கிலேய பயணி.
POISTRKUT: ஒரு கண்ணில் பட்டை கட்டிக்கொண்டிருக்கும் எஸ்தோனிய பைலட், ரேடியோ தொடர்பு வல்லுநர்/விஞ்ஞானி.
COL.SPONZ: ஒரு உளவாளி.
GENL. TAPIOCA: Genl. Alcazar ன் முக்கிய எதிரி.
THOMSON & THOMSON : ஒரு அரை-குறை துப்பறிவு ஆய்வாளர்கள். இவர்களின் செயல்களே இந்த தொடரின் நகைச்சுவையின் உச்சக்கட்டம்.
JOLYON WAGO : ஒரு காப்பிடு முகவர். WANG CHEN YEE : சீன யாத்திரிகர் -- ஓபியம் கடத்தலுக்கு எதிராக போராடும் ரகசிய அமைப்பின் உறுப்பினர்.
FRANK WOLF : ஒரு விஞ்ஞானி.
ZORRINO : ஒரு மலைநாட்டு சிறுவன். ஆரஞ்சு விற்பதே தொழிலாக கொண்டவன்.
Q11. Tin Tin -- தொடர் புத்தகங்கள் எத்தனை உள்ளன?
இருபத்தி நான்கு. அவை:
1. Tin Tin in the land of the Soviets 1930
2. Tin Tin in the Congo 1931
3. Tin Tin in America 1932
4. Cigars of the Pharaoh 1934
5. The Blue Lotus 1936
6. The Broken Ear 1937
7. The Black Island 1938
8. King Ottokar’s Sceptre 1939
9. The Crab with the Golden Claws 1941
10.The Shooting Star 1942 @
11.The Secret of the Unicorn 1943
12.The Rackham’s Treasure 1944
13.The Seven Crystal Balls 1948
14.Prisoner’s of the Sun 1949
15.Land of Black Gold 1950
16.Destination Moon 1953
17.Explorers on the Moon 1954
18.The Calculus Affair 1956
19.The Red Sea Sharks 1958
20.Tin Tin in Tibet 1960
21.The Castafiore Emerald 1963
22.Flight 714 1968
23.Tin Tin and the Piccaros 1976
24.Tin Tin & Alph Art 1986 @@
@ முதல் வண்ண அச்சு புத்தகம்.
@@ எழுத்தாளரின் கடைசி புத்தகம். அவர் மறைவுக்கு பிறகு வெளிவந்தது.
Q12. Phantom தொடர் சிறுவர்கள் சித்திரக் கதைகளை உருவாக்கியவர் யார்?
புனைப்பெயர் Lee Falk. இயற் பெயர் -- Leon Harrison Gross -- அமெரிக்கர். 1936ல் இந்த தொடர் புத்தகங்களை வெளியிட்டவர். “Mandrake the Magicians” என்ற சிறுவர் தொடர்களையும் வெளியிட்டவர்.
Q13. Phantom என்ற ஆங்கில கதாபாத்திரத்துக்கு தமிழில் என்ன பெயர்?
மாயாவி.
Q14. Phantom தொடர் கதைகள் எந்த இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது?
பங்கல்லா என்ற அடர்ந்த வனத்தில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது. இந்திய பதிப்புகளில் இந்த கதைகள் டெங்காலி வனங்களில் நடந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
Q15. Phantom காட்டில் எங்கு வாழ்ந்தார்?
மண்டை ஓட்டு குகை -- Skull cave.
Q16. பங்கல்லா காடுகளில் வாழ்ந்த பழங்குடியினர் பெயர் என்ன?
பண்டார் -- குள்ள பழங்குடியினர். Bandar – Pygmy Tribe.
Q17. Phantom ன் இளம்பருவ நண்பன் யார்?
குரான் -- குள்ள பழங்குடியினரின் தலைவன். Guran – the pygmy tribe chief.
Q18. Phantom ன் காதலியின் பெயர் என்ன?
Diana Palmer.
Q19. Phantom தனக்கு உதவி செய்வதற்காக பயிற்சியளித்து வளர்த்த கழுகின் பெயர் என்ன?
ஃப்ராகா Fraka.
Q20. Phantom உடன் எப்போதும் இருக்கும் ஓநாயின் பெயர் என்ன?
பிசாசு -- Devil.
Q21. Phantom ன் குதிரையின் பெயர் என்ன?
ஹீரோ -- Hero.
Q22. Phantom ன் யானையின் பெயர் என்ன?
ஜூம்பா -- Jhoomba.
Q23. Phantom ஆல் வளர்க்கப்பட்ட ஆதரவற்ற சிறுவன் பெயர் என்ன?
ரெக்ஸ் கிங் -- Rex King.
Q24. Phantom ன் குடும்பப் பெயர் surname என்ன?
வாக்கர் -- Walker.
Q25. Phantom ன் அடையாளச்சின்னம் என்ன?
மண்டை ஓடு -- Skull.
Q26. Phantom கள் எந்த பொதுப்பெயரில் அழைக்கப்படுகிறார்கள்?
"நடமாடும் பூதம்" "Ghost who walks".
Q27. Phantom ன் சொத்துடைமைகள் யாவை?
ஏடன் தீவு, தங்க கடற்கரை, மர வீடு, வாக்கர் மேசை. Island of Eden, Golden Beach, Tree House, Walker’s Table.
Q28. முதல் Phantom ன் பெயர் என்ன?
சர் க்றிஸ்டோஃபர் ஸ்டாண்டிஷ் வாக்கர்.
Q29. மண்டை ஓடு குகையில் Phantom ன் உடைமைகளாக இருந்தவை யாவை?
(1) Excalibur – மன்னர் ஆர்தர் ன் வாள் (2) அலெக்ஸாண்டரின் கோப்பை (3) Hamlett -- என்ற நூலின் அசல் பிரதி.
Q30. Phantom ன் புகழ்பெற்ற கூற்று என்ன?
"யார் ஒருவர் மாயாவியின் முகமூடி இல்லாத முகத்தை காண்கிறாறோ அவர் கொடூரமான முறையில் மரணம் அடைவார்". “He who looks upon the Phantom’s face unmasked will die horribly”.
Q31. பங்கல்லா வின் குடியரசுத் தலைவர் யார்?
லாராண்டா லுவாகா -- Lauranda Luaga.
Q32. பங்கல்லா வின் தலைநகரம் எது?
மாரிட்டன். Maurittan.
Q33. Phantom பயன்படுத்திய விமான நிலையத்தின் பெயர் என்ன?
மாரிஸ் டவுன். Morris town.
Q34. Phantom தொடர் சித்திர கதை புத்தகங்களை இந்தியாவில் வெளியிட்டவர்கள் யார்?
இந்த்ரஜால் காமிக்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்னெட் கோல்மேன் கம்பெனி.
Q35. தொடர் சித்திர கதைப் புத்தகங்கள் என்ன?
இவை அறிவியல் சார்ந்த சித்திரத் தொடர்கள். 1934ல் முதலில் வெளிவந்தது. இதன் சித்திரங்களை வரைந்தவர் அலெக்ஸ் ரேமாண்ட்.
Q36. “Flash Gordon” சித்திரத் தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்கள் யாவை?
“Flash Gordon” தான் கதாநாயகன். Dale Arden மற்றும் Dr. Hans Zarkon – Flash Gordon ன் தோழர்கள். Ming the Merciless – மாங்கோ என்ற கிரகத்தின் மன்னர். இந்த கிரகத்திலிருந்து தான் பூமியை நோக்கி வெளிஉலக கோள்களையும் ஆயுதங்களையும் வீசி வந்தார்.
Q37. “Spiderman” என்ற சித்திர தொடர்கதைகளை வெளியிட்டவர் யார்?
Stan Lee மற்றும் Steve Ditko, 1962 ல், Marvel Comics என்ற நிறுவனம் வெளியிட்டது.
Q38. Spiderman ன் பெயர் என்ன?
பீட்டர் பார்கர். Peter Barker.
Q39. Spiderman சித்திரத் தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் யாவை?
GREEN GOBLIN , DOCTOR OCTOPUS, VENOM: இவர்கள் தான் கதையின் வில்லன்களாக வரும் குற்றச் செயல்களைப் புரியும் கதாபாத்திரங்கள்.
Uncle Ben: Spiderman ன் உறவினர்.
GWEN STACY:Spiderman ன் கல்லூரி தோழி -- Green Goblin ஆல் கொல்லப்பட்டவர்.
BETTY BRANT : “Daily Bugle” என்ற பத்திரிகையில் காரியதரிசியாக பணிபுரிந்து, spiderman ஐ காதலித்தவர்.
J.JONAH JAMESON: “Daily Bugle” -- பத்திரிகையின் பதிப்பாளர்.
JOSEPH “ROBBIE” ROBERTSON: “Daily Bugle” பத்திரிகையின் தலைமை ஆசிரியர். Spiderman ன் தந்தை போன்றவர்.
Mary Jane Watson:/b> பீட்டர் பார்கரின் மனைவி.
FLASH THOMPSON: Spiderman ன் நெருங்கிய நண்பர்.
HARRY OSBORN: Spiderman ன் கல்லூரி தோழர்.
BLACK CAT FELICIA HARDY: Spiderman ன் காதலியாகவும், மனைவியாகவும் இருந்தவர்.
Q40. “Archie Comics” என்ற சித்திர நகைச்சுவை தொடர்களை உருவாக்கியவர் யார்?
பாப் மொர்டூசா, அமெரிக்கா. 1941ல். எழுத்தாளர் -- விக் ப்ளூம். Bob Mortousa USA – 1941; writer – Vic Bloom.
Q41. Archie comics ல் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் யாவை?
ARCHIE BALD “ARCHIE” ANDREWS: தொடர் கதைகளின் கதாநாயகன்.
ELIZABETH “BETTY” COOPER: கதாநாயகனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு அழகான பெண் -- நன்கு படிப்பவர், விளையாட்டு வீரர், சமையல் கலை அறிந்தவர் மற்றும் தானூர்தி வாகன பழுது பார்ப்பதில் வல்லவர்.
VERONICA “RONNIE-RON” LODGE: பணக்காரப் பெண் - சில நேரங்களில் நல்லவளாகவும், சில நேரங்களில் திமிராகவும் நடந்து கொள்பவர். Betty ன் நல்ல தோழி, ஆனால் ஆர்ச்சி யை கவருவதில், அதிக ஆர்வம் கொண்டவர்.
REGINALD “REGGIE” MANTLE: ஒரு கோமாளி. இரண்டு பெண்களையும் கவருவதில் ஈடுபடுபவர்.
FORSYTHE PENDLETON “JUG HEAD” JONES: Archie யின் நல்ல நண்பன். சோம்பேறி, சாப்பாட்டு ராமன், பெண்களிடம் கோபம் கொள்பவர்.
HOT DOG: Jug Head ன் நாய்.
JELLY BEAN: Jug Head ன் சகோதரி. அவளுடைய இயற்பெயர் Forsythia.
Q42. உலகின் மிகவும் புகழ்பெற்ற Tom and Jerry சித்திர நகைச்சுவை தொடர்களை தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தயாரித்த நிறுவனம் எது?
MGM-Metro Goldwyn Meyer – தொலைக்காட்சி படங்களாக எடுக்கப்பட்ட போது, அதை Hauna Barbara productions மற்றும் Warner Bros. நிறுவனத்தால் எடுக்கப்பட்டது.
Q43. Tom and Jerry நகைச்சுவை தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்கள் யாவை?
Tom -- பூனை; Jerry -- எலி. பூலை எலியை பிடிக்க முயல்வது, எலி பூனையிடமிருந்து தப்பிப்பதும், இதனிடையே ஏற்படும் மோதல்கள், நாசங்கள், இருவரும் போடும் திட்டங்களும் நகைச்சுவையின் உச்சக்கட்டம்.
BUTCH: எலியை பிடிக்க முயலும் மற்றொரு பூனை.
SPIKE: நாய் - எலியின் நண்பன்.
MAMMY TWO SHOES: ஆப்பிரிக்க வீட்டு வேலைக்காரி.
LILLIAN RANDOLPH: வேலைக்காரிக்கு குரல் கொடுப்பவர்.
YACKY DOODLE: ஒரு வாத்து.
NIBBLES: ஆதரவில்லாத ஒரு எலி.
Q44. Tom and Jerry ன் முதல் கார்ட்டூன் திரைப்படம் எது?
Puss Gets the Boot: 1939 – by William Hanna and Joseph Barbara.
Q45. Tom and Jerry ன் கார்ட்டூன் தயாரிப்பின் மூலம் 7 அகாடமி விருதுகள் பெற்ற அந்த தயாரிப்பாளர் யார்?
Fred Quimby. முழுப்பெயர் ஃப்ரெடெரிக் க்ளிண்டன் கும்பி -- அமெரிக்கர். MGM கார்ட்டூன் ஸ்டூடியோ இவரது நிறுவனம்.
Q46. “Scooby Doo” கார்ட்டூன் தொடர்களை உருவாக்கியவர் யார்?
தயாரிப்பாளர் -- Hanna Barbara ; எழுத்தாளர்/கள் -- Joe Ruby and Ken Spears; சித்திர வடிவமைத்தவர் -- Iwao Takamoto, ஜப்பானியர். இது ஒரு தொலைக்காட்சி தொடர்.
Q47. Scooby Doo கார்ட்டூன் தொடர் எந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்கிறது?
Scooby Doo – ஒரு பேசும் நாய்.
Q48. “Popeye the Sailor” என்ற மாலுமியைப் பற்றிய சித்திர நகைச்சுவைத் தொடர் கதைகளை உருவாக்கியவர் யார்?
Eric Crisler Segar -- அமெரிக்கா --1929ல் இந்த நகைச்சுவை சித்திர தொடர்களை உருவாக்கினார். ஆரம்ப காலத்தில், பாரமவுண்ட் திரைப்பட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிறகு ஹன்னா பார்பரா என்பவர் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சிறுவர்களிடையே மிகவும் புகழ் பெற்ற நகைச்சுவைத் தொடர்.
Q49. Popeye the sailor என்ற சித்திர நகைச்சுவைத் தொடரின் முக்கிய கதாபாத்திரம் யாவை?
POPEYE: உடற்கட்டுடைய மாலுமி, வாயில் புகை விடும் குழலுடன், ஒரு விதமான பேச்சுக் கொண்டவர். “Spinach” என்ற ஒரு கீரை வகையை சாப்பிட்டு அதிக சக்தி பெறுபவர்.
BLUTO: வில்லன்.
OLIVE OYL: Popeye ன் காதலி.
Q50. Popeye ன் புகழ்பெற்ற கூற்று என்ன?
“Iyam What Iyam and that is All Iyam”
Q51. Popeye கதாபாத்திரம் வேறு நாடுகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Iron Arm – இத்தாலி; King Alfred – ஸ்வீடன்; Skipper Skrack or Terror of the Sea – டென்மார்க்.
Q52. ஜங்கிள் புக் Jungle Book என்ற கார்ட்டூன் தொடர் உருவாக்கியவர் யார்?
இதன் கதையை எழுதியவர் ருட்யார்ட் கிப்ளிங் -- Rudyard Kipling என்ற ஆங்கிலேயர். இதைத் திரைப்படமாக இயக்கியவர் -- Roman Darydov -- ரஷ்யர்.
Q53. ஜங்கிள் புக் கார்ட்டூன் தொடரின் முக்கிய கதாபாத்திரங்கள் யாவை?
மௌக்லி -- Maugli: காட்டில் சுற்றித் திரியும் சிறுவன்.
ஷேர்கான் -- Sherkhan: புலி.
ரக்ஷா -- Rakhsa: ஓநாய்.
பாலு -- Baloo: கரடி
பாகீரா -- Bagheera: சிறுத்தை
கா -- Kaa: மலைப்பாம்பு The Python.
Q54. “Bugs Bunny” என்பது என்ன கார்ட்டூன் தொடர்?
முயல் -- வார்னர் ப்ரதர்ஸ் திரைப்பட நிறுவனத்திற்காக டெக்ஸ் ஏவெரி Tex Avery என்பவரால் உருவாக்கப்பட்டு, 1940ல் முதலில் வெளிவந்தது.
Q55. Bunny உடைய புகழ்பெற்ற கூற்று என்ன?
“What’s up Doc”.
Q56. “Winnie the Pooh” என்ற கார்ட்டூன் தொடரை உருவாக்கியவர்கள் யார்?
A.A. Milne என்பவர் எழுதிய புத்தகங்களிலிருந்து, வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்பட்ட கார்ட்டூன் தொடர்கள்.
Q57. Donald Duck என்ற கார்ட்டூன் தொடர்களை தயாரித்தவர்கள் யார்?
Walt Disney productions -- வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனம் -- 1934. இதில் டொனால்ட் ஒரு முன் கோபம் கொண்ட வாத்து.
Q58. Mickey Mouse கார்ட்டூன் தொடர்களை உருவாக்கியவர்கள் யார்?
இந்த கதாபாத்திரத்தை Ub Iwerks என்ற அமெரிக்கரால் உருவாக்கப்பட்டு, 1928ல் வால்ட் டிஸ்னி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் முதலில் 1934ல் The Wise Little Hen என்ற படத்தின் மூலம் அறிமுகமானது.
Q59. Webtoon என்பது என்ன?
“Macromedia Flash” என்ற கணினி மென்பொருள் மூலமாக தயாரிக்கப்பட்ட அனிமேஷன் (அசைவூட்டப் படம்) கார்ட்டூன்.
Q60. முதல் முழுநீள அனிமேஷன் திரைப்படம் எது?
"El Apostol" – தயாரித்தவர் -- க்றிஸ்டியன், அர்ஜெண்டினா, 1917. இது cut-out animation
Q61. சீரான ஒலியுடன் கூடிய முதல் அனிமேஷன் படம் எது?
1928 -- Steam Boat Willie என்ற மிக்கி மவுஸ் அனிமேஷன் படம்.
Q62. டெக்னிக் கலர் என்ற முதல் அனிமேஷன் வண்ணப்படம் எது?
ஸ்நோ ஒயிட் & 7 குள்ளர்கள் -- Snow White and the Seven Dwarfs – 1937.
Q63. Batman என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யார்?
Bob Kane என்ற அமெரிக்கர். இவருடன் கதைகளை எழுதியவர் Bill Finger.
Q64. டார்ஜான் -- Tarzan கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யார்?
எட்கர் ரைஸ் பரோஸ் -- Edgar Rice Burroughs -- அமெரிக்கர்.
Q65. ஒலியுடன் கூடிய முதல் கார்ட்டூன் படம் எது?
Stream boat Willie – 1928.
Q66. Superman உடைய குதிரையின் பெயர் என்ன?
Comet.
Q67. "" Amar Chitra Katha அமர் சித்ர கதா"" என்ற சித்திரங்களுடன் கூடிய கதை தொடர் புத்தகங்களை வெளியிட்டவர்கள் யார்?
அனந்த் பாய் என்பவரால் உருவாக்கப்பட்டு, India Book House என்ற வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டது. இந்த புத்தகங்கள், புராணம், மதம், தனி பிரபலங்கள்,தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, என பல பின்னணிகளில், ஆங்கிலம் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியிட்டது. இதில் நிறைய புத்தகங்கள் உள்ளன. இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது.
Q68. "சந்தமாமா -- Chandamama" தொடர் சித்திர கதைப்புத்தகங்கள் என்பது என்ன?
இந்தியாவின் மிகப் பழமையான சிறுவர்களுக்கான சித்திரக் கதைப் புத்தகங்கள். 1947 முதல் வெளிவந்தது. ஆந்திராவின் முன்னாள் திரைப்படப் புகழ் நாகி ரெட்டி என்பவரால் நிறுவப்பட்டு வெளி வந்தது. இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த புத்தகங்களில் வந்த ""விக்ரமன் வேதாளம்"" கதைகள் மிகவும் பிரபலமானது.
Q69. "டிங்கிள் -- Tinkle" தொடர் சித்திர கதைப் புத்தகங்களை வெளியிட்டவர் யார்?
அனந்த் பாய் என்பவரால் உருவாக்கப்பட்டு, இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தால், 1980 முதல் வெளி வரும் சிறுவர்களுக்கான மிக புகழ்பெற்ற புத்தகம். ஆங்கிலம் உள்பட பல இந்திய மொழிகளிலும் வெளிவருகிறது.
Q70. ""டிங்கிள் -- Tinkle"" என்ற தொடர் சித்திர கதைகளில் வரும் முக்கிய கதா- பாத்திரங்கள் யாவை?
காலியா -- KALIA: காகம். டூப் டூப் -- DOOB DOOB: முதலை. சமடகா -- CHAMATAKA: குள்ளநரி. கீச்சு, மீச்சு -- KEECHU, MEECHU: முயல்கள் பப்லூ -- BABLOO: கரடி கபீஷ் -- KAPISH: குரங்கு பீலு -- PEELU: புலி சிகல் -- SIGAL: குள்ள நரி
மோட்டு -- MOTU: Rabbit;
பிண்ட்டு -- PINTU: மான் குட்டி
தாந்திரி என்ற மந்திரி -- TANTRI THE MANTRI: சூழ்ச்சிகள் நிறைந்த மந்திரி எப்போதும் மன்னரை கொலை செய்ய முயல்பவர்.
ஹூஜா -- HOOJA – மன்னர்.
ஷிகாரி ஷம்பு -- SHIKARI SHAMBU: விலங்குகளை கண்டாலே பயப்படும் ஒரு வேட்டைக் காரன், ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் விலங்கைப் பிடித்துவிடுவான்.
சுப்பாண்டி -- SUPPANDI: எந்த வேலைக்கும் லாயக்கில்லாத ஒரு பணியாள், அவருடைய எஜமானர்களுக்கு ஒரு தலைவலி.
அன்வர் -- ANWAR: குறும்புகள் நிறைந்த ஒரு சிறுவன்.
ரகு -- RAGHU: சிறுவன் -- சிறுவர்களுக்கு, மருந்து, பள்ளி, கணிதம் ஆகியவற்றின் மீதுள்ள வெறுப்பை சுட்டிக்காட்டும் வகையிலான ஒரு கதாபாத்திரம்.
ராஜி -- LITTLE RAJI: ரகுவை போன்ற ஒரு சிறுமி.
மூஷிக் -- MOOSHIK: டாம் & ஜெர்ரி போன்ற கதாபாத்திரங்கள்.
அஜய் -- AJAY: ஒரு துப்பறியும் கதா பாத்திரம்.
ராமு & ஷாமு -- RAMU & SHAMU: புத்திசாலியான இரட்டையர்கள் -- இவர்கள் விஷமம் செய்வதில் வழி கண்டு பிடித்து செய்பவர்கள்.
Q71. இந்தியாவின் இதர சித்திர தொடர் சிறுவர் கதை புத்தகங்கள் யாவை?
(1) BATUL THE GREAT : பெங்காலி -- நாராயண் தேப்நாத் பாடூல் என்பவரால் உருவாக்கப் பட்டது. குற்றம் புரிபவர்களை எதிர்த்து செயல்படும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம்.
(2) BILLOO: ஒரு புகழ் பெற்ற சிறுவர் சித்திரத் தொடர். ப்ரான் குமார் ஷர்மா என்றவரால் உருவாக்கப்பட்டு டைமண்ட் காமிக்ஸ் என்ற நிறுவனத்தால் 1973 முதல் வெளிவருகிறது. ""மோதி"" என்ற குட்டி நாய் முக்கிய கதா பாத்திரம்.
(3) CHACHA CHOWDHARY: ப்ரான் குமார் ஷர்மா -- 1971 முதல் வெளி வரும் இந்த சிறுவர் புத்தகத்தில், சாச்சா முக்கிய கதா பாத்திரம். அவர் மனைவி பினி (சாச்சி), சபு என்ற பெரிய உருவம், ராக்கெட் என்ற தெரு நாய் ஆகியோர் -- குற்றச் செயல்களில் ஈடுபடும் ராக்கா, கோபர் சிங், தமாகா சிங், மற்றும் பலீதா ஆகியோருக்கு எதிராக போராடுவதே.
(4) Spiderman – இந்தியா – ஆங்கிலத்தில் வந்த ஸ்பைடர்மேன் தொடர்களைப் போலவே இந்திய சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைத்து வழங்கியவர்கள் ஷரஹ் தேவராஜன், சுரேஷ் சுப்ரமணியன், மற்றும் ஜீவன் காக் என்பவர்கள். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
Q72. Peanuts -- Snoopy என்ற சித்திர நகைச்சுவை தொடரை உருவாக்கியவர் யார்?
Charles Schulz -- அமெரிக்கர்.
Q73. எந்த கார்ட்டூர்ன் படத்தில் முதல் முதலாக ஒலி சேர்க்கப்பட்டு, மிக்கி மௌஸ் கதாபாத்திரத்துக்கு வால்ட் டிஸ்னி யின் குரல் கொடுக்கப்பட்டது?
Steam Boat Willie
Q74. சிறுவர்களுக்காக தமிழில் சித்திரக் கதைகளும், இதர கதைகள் எழுதி மகிழ்வித்த புகழ்பெற்ற எழுத்தாளர் யார்?
வாண்டு மாமா என்பது புனைப்பெயர். இவருடைய இயற்பெயர் கௌசிகன். சிறுவர்களுக்கு இவர் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை இன்றும் பிரபலமானவை.
Q75. தமிழில் சிறுவர்களை மிகவும் கவர்ந்த சித்திரத்தொடர் கதைகள், மற்றும் சிறு கதைகள், கதைகள் யாவை?
அம்புலிமாமா (சந்தாமாமா வின் தமிழ்ப் பெயர்), ஈசாப் நீதிக்கதைகள், தெனாலிராமன், பஞ்சதந்திரம், பரமார்த்த குரு, மரியாதை ராமன், முல்லா, விக்கிரமாதித்தன், அக்பர்-பீர்பால், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என பல வெளிவந்துள்ளன.