Khub.info Learn TNPSC exam and online pratice

சாண்டெல்லா வம்சம் -- CHANDELLAS -- கி.பி. 916 – 1203

Q1. சண்டெல்லா வம்ச மன்னர்கள் எந்த வம்சத்தின் தொடர்ச்சி என்று கருதப்படுகிறது?
சந்தாத்ரேயா -- Chandratreya – சந்திர வம்சாவளி என கருதப்படுகிறது.

Q2. சண்டெல்லா வம்சத்தை நிறுவியவர் யார்?
"நன்னுக்கா -- NANNUKKA – கஜூராஹோ மற்றும் பண்டெல்காண்ட் பகுதியில், 10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டது. "
Q3. சண்டெல்லா வம்ச ஆட்சிப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஜெஜாகாபுக்தி -- JEJAKABHUKTI.
Q4. நன்னுக்கா - வைத் தொடர்ந்த மன்னர்கள் யாவர்?
"வாக்பதி, ஜெயசக்தி, விஜயசக்தி, யஸோவர்மன், தங்கா, கண்டா, வித்யதாரா, விஜயபாலா, தேவவர்மன், கீர்த்திவர்மன், சல்லாக்ஷவர்மன், ஜெயவர்மன், ப்ருதிவிவர்மன், மதனவர்மன், பரமார்தி, த்ரிலோக்யவர்மன், வீரவர்மானந்த், வீரவர்மன் 2. "
Q5. சண்டெல்லா வம்சத்தின் மிகவும் புகழ் பெற்ற மன்னர்கள் யார்?
"ரஹீலா யஸோவர்மன் -- RAHILA –YASOVARMAN – லக்ஷவர்மன் எனவும் அழைக்கப்பட்டார். கஜூராஹோவில் மிகப்பெரிய விஷ்ணு கோவில் கட்டியவர்.
தங்கா -- DHANGA (954-1002) – சண்டெல்லா வம்சத்தின் புகழ் பெற்ற மன்னர். இவருடைய ஆட்சியில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அரசாக உருவெடுத்தது. கஜூராஹோ கோவில்களின் கலைநயத்திற்கு இவர் முக்கிய காரணம். இவருக்கு பிறகு வந்த அரசர்கள் பலவீனமாகவும் திறமையற்றவர்களாக இருந்ததினால், இஸ்லாமிய மன்னர்கள் சிறிது சிறிதாக இவர்கள் பகுதியை கைபற்றினர். "
Q6. சண்டெல்ல வம்ச ஆட்சி எப்போது முடிவுக்கு வந்தது?
"1202 லேயே இந்த வம்சம் வலுவியக்கத் தொடங்கியது. இருப்பினும் த்ரிலோக்ய வர்மன் இழந்த பகுதிகளை மீட்டு சுமார் 45 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு பிறகு பதவிக்கு வந்த இவருடைய மைந்தன் வீரவர்மன் 2 காலத்தில், அலாவுதீன் கில்ஜி இந்த வம்ச ஆட்சியின் பெரும் பகுதியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்த வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. "