Khub.info Learn TNPSC exam and online pratice

காளப்பிரர்கள் வம்சம் -- KALACHURIS -- கி.பி. 950 -1195

Q1. காளப்பிரர்கள் என்பவர்கள் யார், எந்த பகுதியை ஆண்டனர்?
"இவர்கள் ""ஹைஹயா"" வம்சம் எனவும் அழைக்கப்பட்டனர். குஜராத், வடக்கு மகாராஷ்டிரா ராஜஸ்தான் மற்றும் மாளவ த்தின் சில பகுதிகளை ஆண்டவர்கள். இவர்களுடைய முன் காலத்து மன்னர்களான கிருஷ்ணராயா, சங்கரகானா மற்றும் புத்தராஜா ஆகியோர் கி.பி. 550-620 வரை மகாராஷ்டிரா, மாளவா, தென் டெக்கான் பகுதிகளை ஆண்டனர். இவர்கள் அண்டை பகுதி மன்னர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட சமூக உறவினால், நாளடைவில் பிரியத்தொடங்கி, வட காளப்பிரர்கள் (8 வது நூற்றாண்டு முதல் 13வது நூற்றாண்டு வரையிலும் மத்திய இந்தியாவின் ஜபல்பூர் பகுதிகளையும், தெற்கு காளப்பிரர்கள் (கி.பி.1130-1184) வட கர்நாடகா, மகாராஷ்டிரா சில பகுதிகளையும், ஆண்டனர். வட காளப்பிரர்கள் ஆண்ட பகுதி ""தகல மண்டல"" ""சேடி ராஜ்யம்"" என அழைக்கப்பட்டது, ஜபல்பூர் அருகில் திரிபுரி என்ற இடத்தை தலைநகராக கொண்டு ஆட்சி நடந்து வந்தது. "

Q2. காளப்பிரர்கள் (சேடி) வம்சத்தின் முக்கிய மன்னர்கள் யாவர்?
"காளப்பிரர்களின் இரண்டு பிரிவினர்களில் தெற்கு காளப்பிரர்களின் ஆட்சி மிகவும் குறைந்த காலமாகவும் (1130-1184), எந்த ஒரு பெரியதொரு மாற்றமோ, முன்னேற்றமும் இல்லை. அதனால், வட காளப்பிரர்கள் ஆட்சி மன்னர்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. கோகல்லா 1 -- KOKALLA I – கி.பி. 845 - 885 -- ப்ரத்திஹாரா மன்னர் போஜா 1 மற்றும் ராஷ்டிரகுட மன்னர்கள் கிருஷ்ணா 1 & 2 ஆகியோரைத் தோற்கடித்து வங்காளத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினார். சில வட கொங்கன் பகுதிகளையும் கைப்பற்றினார்.
சங்கராகானா 1 -- SANKARAGANA I – கி.பி.878-888.
யுவராஜா 1 -- YUVARAJA I – கி.பி. 915-945 -- ராஷ்டிரகுட மன்னர் கிருஷ்ணா 3 ன் படையெடுப்புகளை திறமையாக சமாளித்தார் பகுதிகள தக்கவைத்துக்கொண்டார். இவர் மிகப்பெரிய சிவபக்தர். அதனால் சைவ சித்தாந்தங்களை நாட்டில் பரப்ப மிகவும் ஈடுபட்டார். ராஜசேகரா என்ற புகழ் பெற்ற கவிஞர் இவரது அரசவையில் இருந்தார்.
லக்ஷமணராஜா -- LAKSHMANARAJA – 10ம் நூற்றாண்டின் நடுவில் ஆட்சி. சாளுக்ய வம்ச நிறுவனர் முலராஜா 1 உடன் நடந்த போரில் வெற்றி பெற்றார். இவரும் சைவ சித்தாத்தங்கள் மீது ஏடுபாடு கொண்டவராக இருந்தார்.
சம்கரகானா 2 மற்றும் யுவராஜா 2 -- SANKARAGANA II & YUVARAJA II – இருவருமே திறமை இல்லாத அரசர்களாக இருந்தனர்.
கோகில்லா 2 -- KOKALLA II – இழந்த சில பகுதிகள் மீட்டு ஆட்சி செய்தார்.
காயதேவ -- GANGAYEDEVA – கி.பி. 1015-1041 -- Son of Kokalla II – இவருடைய காலத்தில் இந்த வம்ச ஆட்சி மிகவும் சக்தி வாய்ந்த ஆட்சியாக இருந்து, இஸ்லாமியர்களின் படையெடுப்பை வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஒடிசாவின் கடற்கரையோர பகுதிகளை கைப்பற்றினார். அதனால் இவருக்கு ""த்ரிகாலிங்காபதி"" என்ற சிறப்பு பெயர் அளிக்கப்பட்டது. அங்க மற்றும் மகத மன்னர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு ஆட்சி செய்தார்.
கர்ணா - KARNA – கி.பி. 1073 --1123. லக்ஷ்மிகர்ணா என்றும் அழைக்கப்பட்டார். ப்ரத்திஹாரா வம்சத்திடமிருந்து அலகாபாத் பகுதியையும், சண்டெல்லா மன்னர் கீர்த்திவர்மனிடமிருந்து பண்டெல்காண்ட் பகுதிகளையும் கைப்பற்றினார். குஜராத் சாளுக்ய மன்னர் பீமா 1 உடன் சேர்ந்து, பரமாரா மன்னருடன் போரிட்டு மாளவ பகுதியைக் கைப்பற்றினார். அதற்கு பிறகு இருவரும், கைப்பற்றிய சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பிரிந்தனர். இதற்கு பிறகு இவருடைய ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
யாஷ்கர்ணா --- YASHKARNA – இவருடைய ஆட்சியில் சாளுக்யமன்னர் விக்ரமாதித்யா 6, கஹட்வாலா சந்திரதேவா, ஆகியோரின் தொடர் படையெடுப்பினால் தோல்விகளும் பல பகுதிகளையும் இழக்க நேரிட்டது. பரமாரா மன்னர் லக்ஷ்மணதேவா தலைநகரை தாக்கி பெருத்த சேதம் ஏற்பட்டது.
விஜயசிம்ஹா -- VIJAYASIMHA – கி.பி. 1128-1209 -- இந்த வம்சத்தின் கடைசி மிக பலவீனமான அரசர். சண்டெல்லா வம்ச மன்னர் த்ரிலோக்யவர்மனிடம் தோல்வியடைந்து ஆட்சி பகுதிகளை இழந்து இந்த வம்ச ஆட்சி முடிவடைந்தது. "
Q3. தோமரா என்ற வம்சம் எந்த பகுதியை ஆண்டனர்?
"இது ஒரு முக்கியமற்ற ராஜபுத்ர பிரிவு வம்சம். ஹரியானா பகுதிகளில் தில்லிகா (தில்லி) யை 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 11 ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். சஹமானா வம்ச மன்னர் விக்ரகராஜா இவர்களை தோற்கடித்து டெல்லி, மற்றும் இதன் பகுதிகளைக் கைப்பற்றினார்."