Khub.info Learn TNPSC exam and online pratice

சோழர்கள் வம்சம் -- CHOLAS கி.பி. 850-1115

Q1. சோழர்கள் வம்சம் எவ்வாறு உருவானது?
"பாண்டியர்களின் சிநேக அரசராக சிறு அளவில் இயங்கிய முத்தரையர்கள் வம்சத்தைச் சேர்ந்த விஜயாலயா என்பவர், 9ம் நூற்றாண்டின் நடுக் காலத்தில் தஞ்சாவூர் நகரத்தைக் கைப்பற்றி, நிஷூம்பாசிதினி (துர்கா) என்ற கோவிலைக் கட்டி இந்த வம்ச ஆட்சியை துவக்கி வைத்தார். ஆகவே, இந்த வம்ச ஆட்சியை நிறுவி விஜயாலயா கி.பி. 848-871 காலத்தில் ஆட்சி புரிந்தார். ஆனால், இவருக்கு முன்பாகவே, எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே இந்த வம்சம் சிறு அளவில் ஆட்சி புரிந்து வந்ததாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் முன் கால சோழ மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால சோழன். இவரால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை (திருச்சி அருகில்) இன்றும் ஒரு சான்றாக நின்று, திருச்சி தஞ்சாவூர் மாவட்டங்களில் விவசாயம் தழைத்தோங்க காரணமாக உள்ளது. இந்த அணை இன்றும் வலுவான நிலையில் உள்ளது என்பது, அந்த கால கட்டத்தில் நிலவிய கட்டுமான தொழிற்நுட்ப நுணுக்கங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. "

Q2. சோழ வம்ச ஆட்சியின் சிறந்த முக்கியமான மன்னர்கள் யாவர்?
ஆதித்யா -- ADITYA I (871-907) – இவர், பல்லவ சிநேக பிரபு அபரஜிதாவை வென்று, தொண்டமான் என்பவர்களால் ஆட்சி புரிந்த பகுதியான தொண்டமண்டலம் பகுதியையும், பிறகு கொங்கு பகுதியையும் கைப்பற்றினார். (இப்பகுதிகள் இப்போது ஈரோடு, கரூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளாகும்).
பராந்தகா 1 -- PARANTAKA I (907-950) – பாண்டிய மன்னர்கள் மீது படையெடுத்து வெற்றி கண்டதால் ""மதுரைக்கொண்டான்"" என்ற சிறப்புப்பட்டம் பெற்றார். ஆனால், ராஷ்டிரகுட அரசர் கிருஷ்ணா 3 உடன், தக்கோலம் (அரக்கோணம்) என்ற இடத்தில் 949ல் நடந்த போரில் பெருத்த தோல்வி கண்டு சில பகுதிகளையும் இழந்தார். இவருக்கு பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்கு சில மன்னர்கள் இருந்தாலும், அவர்கள் திறமை அற்றவர்களாக இருந்து ஆட்சி புரிந்தனர்.
ராஜராஜா -- RAJARAJA I (985-1014) – இவருடைய இயற்பெயர் அருள்மொழிவர்மன், பராந்தகா 2ன் மைந்தன். இவர், பாண்டியர்கள், கேரள அரசர்கள், இலங்கை மன்னர்களை வென்று அவர்களுடைய பகுதிகளை கைப்பற்றிக்கொண்டார். அப்போது தலைநகராக இருந்த அனுராதாபுரா அழிக்கப்பட்டு, வடக்கு இலங்கையில் சோழ ஆட்சி நிறுவப்பட்டு, போலன்னருவா தலைநகராக மாற்றப்பட்டது. கர்நாடகாவில் ஆண்ட கங்கா ஆட்சியில் இருந்த மைசூரை கைப்பற்றியதால், சாளுக்ய மன்னருடன் பெரிய போர் நடந்தது. இதில் சாளுக்ய மன்னர் திருப்பி விரட்டப்பட்டார். மாலத் தீவுகளையும் கைப்பற்றி இந்தியப் பெருங்கடல் மூலம் வணிகத்தை துவக்கினார். தஞ்சாவூரில் ப்ரகதீஸ்வரர் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது. சுமத்ராவை ஆண்டு வந்த சைலேந்திர வம்ச மன்னர் விஜயோட்டுங்கவர்மன்--க்கு, நாகப்பட்டினத்தில் ஒரு புத்த மத மடம் (விஹாரா) கட்டுவதற்கு உதவினார். கம்போடிய மன்னர் 1012ல் இவருக்கு ஒரு தேரை அன்பளிப்பாக வழங்கினார்.
ராஜேந்திரா -- RAJENDRA I (1012-1044) – இவருடைய காலத்தில் சோழர்களின் ஆட்சி மிகப்பெரிய நிலையை அடைந்தது. இலங்கையை முழுமையாக, மன்னர் மஹிந்தா 5 ஐ தோற்கடுத்து, கைப்பற்றினார். பாண்டியர்களின் பகுதியையும் வென்று மதுரையை தலைநகராக்கினார். சாளுக்ய மன்னர்களை தோற்கடித்து, தனது உறவினர் ராஜ ராஜாவை வெங்கியில் மன்னராக் நியமித்தார். மேற்கு சாளுக்ய மன்னர்களுக்கு உதவியதற்காக, கிழக்கு கங்கா வம்ச மன்னர் மதுகர்னாவை போர் தொடுத்து சேதம் விளைவித்தார். பாலா வம்ச மன்னர் மஹிபாலாவைத் தோற்கடித்து கங்கை சமவெளிப் பகுதிகளையும், பீஹார் மற்றும் வங்காளத்தயும் கைப்பற்றினார். பிறகு, கங்கைக்கொண்டசோழபுரத்தை தனது தலைநகராக மாற்றினார். இங்கு பாலா மன்னர்களை தோற்கடித்த நினைவாக, ஒரு மிகப்பெரிய கோவில் ஒன்றை கட்டினார். ஆந்திரபிரதேசத்தில் உள்ள மிகப்புகழ் பெற்ற ராகு-கேது தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலும் இவரால் கட்டப்பட்டது.
ராஜாதி ராஜா -- RAJADHI RAJA (1018-1054) – கேரளா, பாண்டியர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட எதிர்ப்புகளை வெற்றிகரமாக எதிர்கொண்டார். மேற்கு சாளுக்ய மன்னரை, தோற்கடித்து, பிறகு கல்யாணியையும் கைப்பற்றி, ""விஜய ராஜேந்திரா"" என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். அவருடைய கடைசி காலத்தில், சாளுக்ய மன்னர்கள் ஆண்டு வந்த இதர பகுதிகளையும் கைப்பற்றும் எண்ணத்தில், கிருஷ்ணா நதிக்கரையின் கொப்பம் (கொப்பல்) என்ற இடத்தில் சாளுக்யர்கள் மீது போர் தொடுத்து கொலையுண்டார்.
ராஜேந்திரா 2 -- RAJENDRA II (1051-1063) – தனது கொல்லப்பட்ட அதே போரில், அதே இடத்தில் போரைத் தொடர்ந்து வெற்றி கண்டார். இவருடைய ஆட்சி மிக குறைவானதே.
வீர ராஜேந்திரா -- VIRARAJENDRA (1063-1070) – இலங்கையில் ஆட்சி புரிந்து வந்த சோழ ஆட்சியை அகற்ற முயன்ற சிங்கள மன்னர் விஜயபாலு 1 ஐ தோற்கடித்து, சோழ ஆட்சி நீடிக்க வைத்தார்.
ஆதிராஜேந்திரா -- ADIRAJENDRA (1067-1070) – இயற்பெயர் ராஜேந்திரா 2 -- வீரராஜேந்திரர் மறைவுக்குப் பின் பதவியேற்றார். சாளுக்ய வெங்கி ராஜ்யததையும் சோழ ராஜ்யத்தையும் ஒன்றிணைத்தார். இவர் காலத்தில் இலங்கையை மன்னர் விஜயபாலுவிடம் இழந்த போதிலும் தனது ராஜ்யத்தை பலப்படுத்திக்கொண்டார்.
குலோத்துங்கா -- KULOTTUNGA I (1070-1120) -- 1110 ஒடிசா பகுதியை ஆண்டு வந்த கிழக்கு இவருடைய கடைசிக் காலத்தில் சாளுக்ய மன்னர் விக்ரமாதித்யா 6 இடம் சாளுக்ய பகுதிகளை முழுவதுமாக இழந்தார். இவருக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் காலத்தில், சோழ சாம்ராஜ்யம் சிறிது சிறிதாக வலுவிழக்கத் தொடங்கியது. அவர்கள் --
விக்ரமா -- Vikrama (1118-1135)
குலோத்துங்கா 2 -- Kulottunga II (1133-1150)
ராஜ ராஜா 2 -- Raja Raja II (1146-1173)
ராஜாதி ராஜா -- Rajadhi Raja II (1166-1178)
குலோத்துங்கா 3 -- Kulottunga III (1178-1218)
ராஜ ராஜா -- Raja Raja III (1216-1256)
ராஜேந்திரா 3 - Rajendra III (1246 -1279). பாண்டிய மன்னர் மாறவரம்பன் குலசேகரா - வால் தோற்கடிக்கப்பட்டு சோழ வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. "