Khub.info Learn TNPSC exam and online pratice

சேர வம்சம் -- CHERAS: கி.பி 3 முதல் 10வது நூற்றாண்டு வரை.

Q1. சேர வம்சம் ஆண்ட பகுதி எது?
ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் கேரளாவில் கொச்சி வரை.

Q2. சேர வம்சம் ஆண்ட காலக்கட்டம் எது?
"சேர வம்ச ஆட்சி இரண்டு பகுதிகளாக கூறப்படுகிறது. இவர்களுடைய ஆட்சியின் முதல் பகுதி சிறிதளவில் மூன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கி 5வது நூற்றாண்டு வரையிலும் நீடித்ததாகவும், இரண்டாவது பகுதி 9ம் நூற்றாண்டில் தொடங்கி 12வது நூற்றாண்டு வரை நீடித்ததாக தெரிகிறது. முதல் பகுதியை உதியன் சேரலாதன் தொடங்கி, அந்த வம்சத்தில் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், சேரன் இரும்பொறை போன்ற குறிப்பிடத்தக்க மன்னர்கள் இருந்ததாக தெரிகிறது. இவர்களைப்பற்றி அதிகமான விவரங்கள் இல்லை. ஆகவே இரண்டாவது பகுதி குலசேகர மன்னர்களைப் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. "
Q3. முற்பகுதி சேர ஆட்சிக்காலத்தில் நடந்த, இன்றும் பேசப்படும், பழம்பெரும் நிகழ்ச்சி எது?
"கண்ணகியை மையமாகக் கொண்ட ""சிலப்பதிகாரம்"" நிகழ்வு சேரன் செங்குட்டுவன் காலத்தில் நடந்ததாகத் தெரிகிறது. "
Q4. பிற்பகுதி சேர வம்ச ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?
குலசேகர வர்மா
Q5. சேர வம்ச குலசேகர வம்ச ஆட்சியில் ஆட்சி புரிந்த மன்னர்கள் யாவர்?
"குலசேகர வர்மாவைத் தொடர்ந்து பல மன்னர்கள் ஆண்டனர். ஆனால் அவர்களில் மிக முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் -- குலசேகர வர்மா – 800 -820 -- இவர் வைஷ்ணவத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவராக கருதப் படுகிறார். ஆட்சிக்கு பிறகு துறவறம் பூண்டு, அவருடைய தீவிர ஈடுபாட்டினால் வைஷ்ணவ பிரிவில் போற்றப்படும் 12 ஆழ்வார்களில் 9 வது இடத்திற்கு உயர்ந்தார். இவர் முகுந்தமாலா என்ற சமஸ்கிருத நூலையும், நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலுக்கு இவர் பங்களிப்பும் உண்டு. ராஜசேகர வர்மா -- 820 -- 844 -- இவர் ஒரு சைவ பக்தர். சைவ பிரிவில் போற்றப்படும் நாயன்மார்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவருடைய காலத்தில் ""கொல்லம் சகாப்த நாள்காட்டி "" (Kollam Calendar) அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆதிசங்கரர் இவரின் சம காலத்தில் வாழ்ந்ததாகவும், சிவானந்தலஹரி என்ற நூலில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. ராம வர்மா குலசேகரா 1090 -- 1102 -- பிற்கால சேர வம்சத்தின் கடைசி அரசர் எனக்கருதப் - ப்டுகிறார். இவர் இந்த வம்சத்தை, கொல்லத்தை தலைநகராகக் கொண்டு ஆளுகையில், இதிலிருந்து பிரிந்து, சில சிறிய மன்னராட்சிகள் உருவாயின. "