Khub.info Learn TNPSC exam and online pratice

பாண்டிய வம்சம் -- PANDYANS கி.பி.560 - 1342.

Q1. பாண்டிய வம்ச ஆட்சி எந்த பகுதியில் இருந்தது?
"இந்த ஆட்சியின் உச்சக் கட்டத்தில், தமிழ்நாடு, மற்றும் ஆந்திரா, ஒடிசா, கர்நாடகாவின் சில பகுதிகள் மற்றும் இலங்கை, இவர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மிகக் குறிப்பாக, முக்கியமாக கூறினால் மதுரை, திருநெல்வெலி மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டாரங்கள். "

Q2. பாண்டிய வம்சம் எப்போது நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது?
"3ம் நூற்றாண்டிலேயே நிறுவப்பட்டு சிறு அளவில் ஆட்சி நடந்ததாக தெரிகிறது. 6வது நூற்றாண்டிலிருந்து ஆட்சி செய்த இந்த வம்ச ஆட்சியின் அரசர்கள் வரலாற்றில் இடம்பெற தொடங்கினர். சேர வம்ச ஆட்சியை 3 பகுதியாக பார்க்கலாம். இதில் முதல் பகுதி (560-920)யில் ஆட்சி செய்த சில முக்கியமான அரசர்கள் -- கடுங்கோன் 560 - 590; அரிகேசரி பராங்குச மாறவர்மன் (650 -700), ஸ்ரீமாற ஸ்ரீவல்லபா (815 -862) மற்றும் ராஜசிம்ஹா (905 -920). இரண்டாம் பகுதி (1020-1221) காலத்தில் புகழ் பெற்ற அரசர் பராக்ரம பாண்டியன் 1161-1162. மூன்றாம் பகுதி (1216 - 1342) காலத்தில் புகழ் பெற்ற அரசர்கள் -- மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1241); சுந்தரவரம்பன் குலசேகரன் 2 (1238-1240); மாற வரம்பன் குலசேகர பாண்டியன் (1268-1311). கடைசியாக ஆட்சி செய்தவர் வீரபாண்டியன் 4 -- 1309-1342. திருநெல்வேலியில் ஒரு சிறு பகுதியைக் கொண்டு ஆட்சி செய்து இந்த ஆட்சி முடிவுற்றது. அதற்கு பிறகு சுல்தானியர்கள் இப்பகுதியர்கள் ஆட்சி. "
Q3. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது எது?
"ஆரம்ப காலத்தில் திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில் ""கொற்கை"" என்ற இடம். பிறகு மதுரைக்கு மாற்றப்பட்டது. "
Q4. பாண்டிய மன்னர்களின் மிகப்பெரிய கலாச்சார பங்களிப்பு என்ன?
"பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி அளவிடமுடியாதது. இவர்கள் தமிழ் மொழி வளர்ச்சியை ""சங்கத் தமிழ்"" எனக் கூறுவர். இதை தவிர்த்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயம் ஆகியவை இவர்கள் காலத்தில் உருவானது. "
Q5. பாண்டியர்களின் ஒட்டு மொத்த சுமார் 13 - 14 நூற்றாண்டுகள் ஆட்சியின் போது இருந்த முக்கியமான மன்னர்கள் யாவர்?
1. கடுங்கோன் கி.பி 560-590 -- காளப்பிரர்கள் என்ற மன்னர்களை தோற்கடித்து பாண்டிய ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்தினார்.
2. அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் -- கி.பி 670 -- 710 -- சேரர்களுடன் நடந்த சில போர்களில் வெற்றி பெற்றார்.
3. கொச்சடியன் ரணதீரன் -- கி.பி. 710-735
4. அரிகேசரி பராங்குச மாறவர்மன் ராஜசிம்ஹா -- கி.பி. 735-765 -- சாளுக்ய மன்னர் கீர்த்தி- வர்மன் 2 ஐ தோற்கடித்தார்.
5. ஸ்ரீமாரா ஸ்ரீ பல்லவா -- கி.பி.815-862 -- பல்லவ சேர மன்னர்களை தோற்கடித்தார். இலங்கையில் ஆட்சியை பலப்படுத்தினார் -- பல்லவ மன்னர் நந்திவர்மன் 3 உடன் நடந்த தெள்ளாறு போரில் மரணம்.
6. வரகுண வர்மன் -- கி.பி. 862-880 7. மாறவர்மன் ராஜசிம்ஹா -- கி.பி. 900-920 -- சோழருடன் கொடும்பலூர் போரை வெற்றி- கரமாக தடுத்தார். சேர தலைநகர் வாஞ்சி மற்றும் கொங்குநாடு மீது படையெடுத்து பலத்த சேதம் விளைவித்தார். 910 ல் சோழ மன்னர் பராந்தகா 1 இடம் தோல்வி, மற்றும் தொடர் தோல்விகளால் மனமுடைந்து, பதவியை விட்டு, கேரளா சென்று தஞ்சமடைந்தார்.
8. பராக்ரம பாண்டியன் -- கி.பி. 1161-1162 -- வாரிசுச் சண்டையில் உயிரிழந்தார்.
9. ஜடவர்மன் குலசேகரன் 1 -- கி.பி. 1190-1216 -- சடையவர்மன் குலசேகரன் எனவும் அழைக்கப் பட்டார். சோழர்களிடம் தோல்வி கண்டார்.
10.மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1 -- கி.பி. 1216-1238 -- குலோத்துங்க சோழன் 3 ன் மீது படை எடுத்து வெற்றி கண்டார். இவரால் பாண்டிய வம்ச மீண்டும் பலமடைந்தது. ""கலியுக ராமன், அதிசய பாண்டிய தேவன், சோனாடு கொண்டான்"" என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப் பட்டார்.
11. சடயவர்மன் சுந்தர பாண்டியன் -- கி.பி. 1251-1268 -- சேர சோழ மன்னர்களான உதய மார்த்தாண்ட வர்மன் மற்றும் ராஜேந்திர சோழன் 3 ஐ தோற்கடித்தார். ஹொய்சாள மன்னர் படையெடுப்பையும் தோற்கடித்து கன்னட பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தார். கடவா மன்னர் படையெடுப்பையும் திறமையாக கையாண்டு வெற்றி கண்டார். 1258ல் இலங்கையில் மன்னர் சந்திரபானு எதிர்ப்பை அடக்கி, தனது ஆட்சியை நிலைநிறுத்தினார். ""எம்மண்டலமும் கொண்டருளிய பாண்டியன், திரிபுவன சக்கரவர்த்தி, பொன் வேய்ந்த பெருமாள், ஹேமசந்திரா ராஜா"" போன்ற சிறப்பு பட்டங்கள் பெற்றார். கடைசியாக, மாறவரம்பன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1302, சுந்தர பாண்டியன் 4 -- 1309-1327, மற்றும் வீரபாண்டியன் 4 --1309-1345 போன்ற மன்னர்களும் ஆண்டு, பாண்டியர்கள் ஆட்சி, டெல்லி சுல்தானியர்கள், பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் என மாற்று ஆட்சிகள் அமைந்தன.