Khub.info Learn TNPSC exam and online pratice

மேற்கு சாளுக்யர்கள் -- WESTERN CHALUKYAS - 973 – 1189 AD

Q1. இந்த வம்சம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
"கல்யாணி சாளுக்கியர்கள் -- இதன் தலைநகரம் முதலில் மான்யகேத்தா. பிறகு கல்யாணி க்கு மாற்றப்பட்டது. இந்த இடம் இப்போது பசவகல்யாண் என கர்நாடகாவில் உள்ளது. இவர்கள் மேற்கு டெக்கான், மற்றும் தென் இந்தியாவின் கீழ்க்கண்ட -- கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் இன்றைய தெலங்கானா பகுதிகளைஆண்டு வந்தனர். இவர்கள் முந்தைய கிழக்கு சாளுக்யர்கள் (பாதாமியை தலைநகராகக் கொண்ட) வம்ச வழி வந்தவர்கள். இதனால் பிற்கால சாளுக்யர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். "

Q2. மேற்கு சாளுக்ய வம்ச (ஆட்சியை) நிறுவியவர் யார்?
"தைலப்பா 2 TAILAPA II – கி.பி 957 – 997 – ராஷ்டிரகுட மன்னர் கிருஷ்ணா 3 ன் கீழ் சிற்றரசராக இருந்தவர். ராஷ்டிரகுட அரசர் கர்க்கா 2 ஐ கொலை செய்து விட்டு, அந்த வம்ச ஆட்சியை கைப்பிடித்தார். மாளவ பகுதியை கைப்பற்ற, பரமார மன்னர் முஞ்சாவை எதிர்த்து பல முயற்சிகள் செய்து தோல்வி கண்டவர். ஆனால், முஞ்சா தைலப்பா மீது படையெடுத்த போது, முஞ்சா இறக்கவே, கர்நாடகாவின் முழு பகுதியும் இவர் ஆட்சியின் கீழ் வந்தது. "
Q3. மேற்கு சாளுக்ய வம்சத்தின் மற்ற முக்கியமான அரசர்கள் யாவர்?
சத்யஸ்ராயா -- SATYASRAYA – கி.பி. 997 – 1008. இவர்களுடைய சமகாலத்து எதிரிகளாக இருந்தவர்கள் தமிழ்நாட்டின் சோழ வம்ச மன்னர்கள். சோழ மன்னர் ராஜேந்திரா-வை தோற்கடித்து முன்னோர்கள் காலத்தில் இழந்த பகுதிகளை மீட்டார்.
விக்ரமாதித்யா 5 -- VIKRAMADITYA V – கி.பி. 1008 – 1015 – இவருடைய ஆட்சி 6 ஆண்டு காலமே.
ஜெயசிம்ஹா 2 -- JAYASIMHA II – கி.பி. 1015 – 1042 – இன்றைய ரெய்ச்சூர் அருகில் சோழ அரசர் ராஜேந்திரா விடம் பெருத்த தோல்வி அடைந்தார்.
சோமேஸ்வரா 1 -- SOMESVARA I – கி.பி. 1042 – 1068 – இந்த வம்சத்தின் மிக திறமையான, சக்தியான அரசர். இவர் காலத்தில் தலைநகர் மான்யகேத்தாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றப்பட்டது. இவருடைய காலத்தில் சோழர்களுடனான விரோதம் உச்ச கட்டத்தில் இருந்தது. கொப்பம் என்ற இடத்தில் நடந்த மிகப்பெரிய போரில் சோழ அரசர் ராஜாதிராஜா கொலையுண்ட கண்ட போதிலும், அவருடைய மைந்தன் ராஜேந்திரா 2 மீண்டும் தாக்கி, சோமேஸ்வராவை தோல்வியடையச் செய்தார். குஜராத், மாளவா போன்ற பகுதிகள் இவரால் கைப்பற்றப் பட்டது. கடைசிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு, மீண்டும் சோழர்களுடன் ஏற்பட்ட போரில் (குடலசங்கமா - என்ற இடத்தில்) பெருத்த தோல்வி அடைந்தவுடன், துங்கபத்ரா நதியில் தானாகவே மூழ்கி இறந்தார்.
சோமேஸ்வரா 2 -- SOMESVARA II – கி.பி 1068 – 1076 – குறிப்பிடும் படியான திறமை ஏதும் இல்லாமலேயே 8 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய சகோதரர் விக்கிரமாதித்யா 6 ஆல் கொலையுண்டார்.
விக்ரமாதித்யா 6 -- VIKRAMADITYA VI – கி.பி. 1076 – 1126 – 50 ஆண்டுகள் ஆட்சி. ஹொய்சாள சிநேக மன்னர்களின் எதிர்ப்பு இருந்தது. இவருடைய காலத்தில், இந்த வம்ச ஆட்சி வடக்கில் நர்மதை நதி, மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேச பகுதிகளில் மேலும் பரவியது. இவருடைய காலத்தில் இந்த வம்ச ஆட்சி எல்லா துறைகளிலும் உச்ச கட்டத்தை எட்டியது.
சோமேஸ்வரா 3 -- SOMESVARA III – கி.பி 1126 – 1138 – இவர் அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டியதால், ஆட்சி பின்னடையத் தொடங்கியது. இவருக்குப் பிறகு ஜகதேகமல்லா (1138-1151), தைலப்பா 3 ( 1151-1164) , ஜகதேகமல்லா 3 (1163-1183) மற்றும் சோமேஸ்வரா 4 (1184-1200). இந்த வம்ச ஆட்சி, யாதவ மன்னர் பில்லம்மா 4 இடம் சோமேஸ்வரா 4 தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முடிவடைந்தது. "