Khub.info Learn TNPSC exam and online pratice

கிழக்கு சாளுக்யர்கள் -- EASTERN CHALUKYAS கி.பி. 624 – 1189.

Q1. கிழக்கு சாளுக்ய வம்சத்தை நிறுவியவர் யார், அவர்கள் ஆட்சி செய்த பகுதி எது?
"விஷ்ணுவர்தனா -- VISHNUVARDHANA (கி.பி.624-641). இந்த வம்சம் வெங்கி (எலூரு அருகில்) எனப்படும் ஆந்திரப்பிரதேச பகுதியை ஆண்டனர். இவர் பாதாமி சாளுக்ய மன்னர் புலிகேசி 2 ன் சகோதரர். இந்த பகுதியை புலிகேசி 2 , கி.பி. 624ல் வென்று, தனது சகோதரர் விஷ்ணு வர்தனை மன்னராக்கி இந்த வம்சம் நிறுவப்பட்டது. இவர் சுமார் 18 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு பின் வந்த அரசர்கள் குறிப்பிடும்படியான ஆட்சி நடத்தவில்லை, மற்றும் எந்தவொரு பெரு நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. "

Q2. கிழக்கு சாளுக்ய வம்சத்தின் இதர முக்கியமான அரசர்/கள் யார்?
விஜயாதித்யா -- VIJAYADITYA – ராஷ்டிரகுட வம்சத்துடன் தொடர் போர்கள்.
விஷ்ணுவர்தனா 2 -- VISHNUVARDHANA II – ராஷ்டிரகுட மன்னர் துருவா-வுடன் சமாதான ஏற்படுத்திக்கொண்டு, தனது மகளையும் அவருக்கு திருமணம் செய்து கொடுத்து, ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு ஆட்சி புரிந்து வந்தார்.
விஜயாதித்யா 2 -- VIJAYAADITYA II – இந்த வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த மன்னராக சுமார் 40 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தார்.
விஜயாதித்யா 3 -- VIJAYADITYA III – மிகவும் வலிமை வாய்ந்த மன்னராகவும் குறிப்பிடும் படியான அரசராக திகழ்ந்தார். ஆட்சியில் இவருக்கு உதவியவர் மந்திரி வினயாதிசராமன் மற்றும் தளபதி பாண்டுரங்கா. ராஷ்டிரகுட மன்னர் கிருஷ்ணா2 வைத் தோற்கடித்தார். கலிங்க மற்றும் கோசள பகுதிகளை அடிமைப்படுத்தினார். இவருடைய சாம்ராஜ்யம் தெற்கில் பழவேற்காடு வரை பரவியிருந்தது. இவர் சுமார் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
பீமா 1 -- BHIMA I – இவர் அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு, பீமாவரம் மற்றும் த்ராக்ஸ்ரமம் கோவிலகளை கிழக்கு கோதாவரி பகுதியில் கட்டினார்.
ஜட ஜோடா பீமா -- JATA JODA BHIMA – சில சிறிய பலவீனமான அரசர்களுக்குப் பிறகு இவர் பதவிக்கு வந்து 27 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். சோழ அரசர் ராஜ ராஜா 1 ஆல் தோற்கடிக்கப்பட்டு, சோழ மன்னர் சக்திவர்மன் 1 ஆட்சியில் அமர்த்தப்பட்டார். அதன் பின் அப்பகுதி முழுமையாக சோழர்களின் ஆட்சியின் கீழ் இயங்கி வந்தது. இருப்பினும், சாளுக்ய மன்னர்களுக்கும் பங்களிக்கப்பட்டது. கடைசியாக சோழ அரசர் குலோத்துங்கா 1 மற்றும் சாளுக்ய மன்னர் விஜயாதித்ய 7 ம் ஆளும் போது, குலோத்துங்கா 1 முழுமையான ஆட்சி நடத்தும் எண்ணத்தில் படையெடுத்த போது, விஜயாதித்யா 7 கலிங்காவுக்கு தப்பிச்சென்று, அங்கு 1075ல் மரணமடைந்ததை அடுத்து, கிழக்கு சாளுக்ய வம்சம் முடிவடைந்தது.