Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. ஆவாத் பகுதி என்பது …..
உத்திரபிரதேசத்தின் இன்றைய அம்பேத்கார் நகர், பரெய்ச், பல்ராம்பூர், பராபங்கி, ஃபஸாபாத், கோண்டா, ஹர்தோய், லக்கிம்பூர் கேரி, லக்னௌ, ப்ரதாப்கர், ரே பரேலி, ஷ்ராவஸ்தி, சுல்தான்பூர் மற்றும் உன்னாவ் அடங்கிய பகுதிகள் ""அவாத்"" என அழைக்கப்பட்டது.
Q2. ஆவாத் நவாப் வம்சம் எவ்வாறு ஆட்சிக்கு வந்தது? யாரால் நிறுவப்பட்டது?
சதாத் கான் புர்ஹான் உல் முல்க் -- SAADAT KHAN BURHAN UL MULK – 1722-1739 – முகலாயர் முகமது ஷா காலத்தில் அவாத் பகுதியின் ஆளுநகராக இருந்தவர். தன்னை சுதந்திர மன்னராக அறிவித்துக்கொண்டு, ஃபைஸாபாத் மற்றும் லக்னௌ ஐ தலைநகராகக் கொண்டு, சுமார் 134 வருடங்கள் ஆண்டனர்.
Q3. ஆவாத் பகுதியை ஆண்ட நவாப்கள் யாவர்?
சதாத் கான் SAADAT KHAN – 1722-1739 – இவருடைய நிதி மற்றும் ராணுவ சீரமைப்புகள், மற்ற மதங்களையும் போற்றுதல் போன்ற நடவடிக்கைகளால் அந்தக் காலக் கட்டத்தில் வளமான பலமான பகுதியாக இருந்தது. 1739, காரணங்கள் தெரியாத் ஒரு நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
சஃப்தார் ஜங் SAFDAR JUNG – 1739-1754 – முகலாயர்களிடம் ஒரு மந்திரியாக இருந்தவர். நவாப் ஆக உயர்த்தப்பட்ட போது அவருக்கு அலகாபாத் பகுதியும் கிடைத்தது. ரோஹில்லா, ஜாட் மற்றும் மராத்தியர்களுடன் போரிட்டு தனது எல்லையை சிறிதளவு விரிவு படுத்தினார்.
ஷூஜா உத் தௌலா SHUJA UD DAULA – 1754-1775 – சஃப்தார் ஜங் ன் மைந்தன். 1764 பக்ஸார் போரில் மிர் காசிமுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு தோல்வி கண்டார்.
இத்தோல்விக்குப் பிறகு 1773ல் ஆங்கிலேயர் வாரன் ஹேஸ்டிங்ஸ் உடன் ஒரு ஒப்பந்தம் போடும் கட்டாயத்துக்குள்ளாகி, கரா, அலகாபாத் போன்ற பகுதிகளை விட்டுக் கொடுக்கவும், ஆவாத் பகுதியில் ஆங்கிலேய ராணுவத்தை மானிய அடிப்படையில் நிறுத்தும் அதிகாரத்தையும் கொடுக்கும் படியாயிற்று. ஆங்கிலேயர்களின் உதவியால், 1774ல் ரோஹில்லா பகுதியை கைப்பற்றினார். ஆங்கிலேயர்களுக்கு அந்த மானியத்தை கொடுக்க முடியாத அழுத்தத்தினால், சுனா கோட்டை, வாரணாசி, காஸிப்பூர், அலகாபாத் போன்ற பகுதிகளை கொடுக்கும் படியாயிற்று. 1761ல் மராத்தா பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் உடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் அஹமத் ஷா அப்தாலியை தோற்கடித்தது ஒரு முக்கிய நிகழ்வு. 26.1.1775 அன்று மறைந்தார்.
" ஆசாஃப் உத் தௌலா ASAF UD DAULA – 1775-1797 – 1775ல் நவாப் பதவி ஏற்றவுடனேயே, ஆங்கிலேயர்களுடன் ஒரு பாதுகாப்பு உடன் படிக்கை ஏற்படுத்திக் கொண்டதால், அவருக்கு நிதி நெருக்கடி மிகவும் பாதித்தது. தலைநகரை 1775ல் ஃபைசாபாத்திலிருந்து லக்னௌ க்கு மாற்றினார். இவருக்கு ஏற்பட்ட குடும்ப நெருக்கடி -- இவருடைய மனைவி மற்றும் தாயார் (பேகம் எனப்படுபவர்) வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆல் அவமானப்படுத்தப்பட்டு, மிகப் பெரிய தோகை வசூலிக்கப்பட்டது. 1797 செப்டம்பரில் மரணமடைந்தார்.
வாஸிர் அலி WAZIR ALI – 1797-1798 – A brief period without any event.
சதாத் அலி கான் SADAAT ALI KHAN -1798-1814 – ஆசாஃப் ன் மூத்த சகோதரர். ஆங்கிலேயர்களின் உதவியுடன் பதவிக்கு வந்தார். 1801ல் ஆங்கிலேயர் வெல்லெஸ்லி பிரபுவுடன் மானிய அடிப்படையில் பாதுகாப்பு உடன்படிக்கை ஏற்றுக் கொண்டதால், ஆங்கிலயர்களுக்கு மானியம் வழங்கமுடியாமலேயே தன் பகுதியின் பாதியை ஆங்கிலேயர்களிடம் இழந்தார். ஜூலை 1814ல் மறைந்தார்.
காஸியுத்தீன் ஹைதர் GAZIUDDIN HAIDER – 1814-1827;
நஸீருத்தீன் ஹைதர் NASIRUDDIN HAIDER -1827-1837;
மும்மத் அலி ஷா MUMMAD ALI SHAH – 1837-1842;
அம்ஜத் அலி கான் AMJAD ALI KHAN – 1842-1847;
வாஸித் அலி ஷா WAZID ALI SHAH – 1847-1856 – இவர்கள் அனைவரும் ஆவாத் பகுதி நவாப்கள் ஆங்கிலேயர்களின் கீழ் ஒரு அலங்கார பதவி வகித்தனர். கடைசி நவாப் வாஸித் அலி ஷா ஓய்வூதியம் கொடுக்கப்பட்டு, இந்த பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது.
Q4. ஆவாத் நவாப் வாஸித் அலி ஷா வின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விநோத மற்றும் இதர தகவல் என்ன?
1. அவருடைய வாழ்நாளில் 359 முறை திருமணம் முடித்தவர்.
2. கதக் நடனத்தை போற்றி வளர்த்த பெருமை இவரைச் சாரும். கலை மற்றும் இசையை மிகவும் ஆதரித்தார்.
3. இவர் ஒரு நல்ல கவிஞர். ""அக்தர் ப்ரியா"" என்ற புனைப்பெயரில் அநேக கவிதைகளும், கஸல்களும் எழுதியவர்.
4. இவரால் எழுதப்பட்ட ஒரு பாடல் “Babul mora naihaar choto joy” இன்றும் பல பாடகர்களால் மேடைகளில் பாடப்படுகிறது. பைரவி தும்ரி ராகத்தில் இசை அமைக்கப்பட்டுள்ளது.