Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. டெல்லி சுல்தானியம், முகலாய ஆட்சியை ஏற்று ஆட்சி செய்த போதும், வங்காளத்தில் நவாப் வம்ச ஆட்சி எவ்வாறு ஏற்பட்டது, அதை நிறுவியவர் யார்?
முர்ஷீத் கூலி கான் MURSHID QULI KHAN – 1717 -1727 – வங்காளம் மற்றும் ஒடிசா பகுதிகளில் இந்த வம்ச ஆட்சியை நிறுவியவர். 1700 ல் அவுரங்கசீப்பிடம் திவானாக (அரசவை உறுப்பினர்) பணியாற்றியவர். 1717ல் வங்காளம் மற்றும் ஒடிசாவின் ஆளுநர் ஆக்கப்பட்டார். தலை நகரை டாக்காவிலிருந்து மூர்ஷிதாபாத் க்கு மாற்றினார். நிர்வாக மற்றும் நிதி சீரமைப்புகள் அறிமுகப்படுத்தி, கிழக்கிந்திய கம்பெனியின் வணிகத்தையும் கட்டுக்குள் வைத்திருந்தார். 1727 வரை ஆட்சியிலிருந்தார்.
Q2. ஆங்கிலேயர்கள் ஆட்சியை கைப்பற்றும் வரை, வங்காளத்தை ஆண்ட நவாப்கள் யாவர்?
ஷூஜா உத்தீன் SHUJA UD DIN – 1727-1739 – முர்ஷித் கூலி கான் ன் மாப்பிள்ளை. முர்ஷித் கடைப்பிடித்த ஆட்சி முறையை கடைப்பிடித்தார். முகலாயர்களும் இவரை வங்காள ஆளுநராக தொடர விட்டனர். 1739 வரை ஆட்சியில் தொடர்ந்தார். சர்ஃப்ராஸ் கான் SARFRAZ KHAN – 1739-1740 – ஷூஜா உத்தீன் ன் மைந்தர். 1740ல் பீஹாரின் உதவி ஆளுநர் அலிவர்தி கான் இவரை கொலை செய்தார்.
அலிவர்தி கான் ALIVARDHI KHAN – 1740 - 1756 –முகலாய மன்னர் முகமது ஷா இவரை வங்காள நவாப் ஆக, அதற்கேற்ற ரொக்கம் பெற்று, அனுமதித்தார். இவருடைய காலத்தில் மராத்தியர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வந்தனர். அதனால் 1751ல் மராத்தியர்களுடன், ஒடிசாவில் இருந்து வரும் வருவாய் மற்றும் வருடாந்திர கப்பமாக 12 லட்சத்தை விட்டுக் கொடுத்து, அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். ஆங்கிலேயர்களையும் ஃப்ரெஞ்ச் அதிகாரிகளையும் அதிகமான சுதந்திரம் அளிக்காமல் கட்டுக்குள் வைத்திருந்தார். 1756ல் மறைந்தார்.
சிராஜ் உத் தௌலா SIRAJ UD DAULA – 1756 -1757 – அலிவர்தி கான் ன் பேரன். குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், நிறைய நிகழ்ச்சிகள் நடந்தன. கல்கத்தாவை அலி நகர் என பெயர் மாற்றம் செய்தார். ஆங்கிலேயர்கள் கல்கத்தாவில் கட்டியிருந்த அனைத்து தடுப்பு சுவர்களையும் (fortifications) தகர்க்க உத்தரவிட்டார். தனது உறவினர்களுக்கு ஆங்கிலேயர்கள் அளித்த ஆதரவை, குறிப்பாக ஷவுகத் சிங் ஆளுநர் ஆவதற்கு, நிறுத்தும்படி உத்தரவிட்டார். இதை ஆங்கிலேயர்கள் நிராகரித்தனர். அதனால் சிராஜ் 1756ல் ஆங்கிலேயர்களின் ஒரு தொழிற்சாலையை கைப்பற்றினார். ஆங்கிலேயர்கள் தப்பிச்சென்றனர் என அறிந்த பிறகு, மானிக் சாந்த் என்பவரை மேற்பார்வை செய்யும்படி நியமித்து சென்றார். இவருடைய ஆட்சியில் நடந்த மற்றொரு முக்கியமான நிகழ்வு -- சிராஜ் உத் தௌலா கல்கத்தாவில் இல்லாத போது, 20.6.1756 அன்று, 146 ஆங்கிலேய வீரர்களை சிறைபிடித்து, ஒரு சிறிய அறையில் அடைத்துவிட்டனர். அவர்களில் 23 பேர் சுவாசம் முற்றி இறந்து விட்டனர். இதை ஆங்கிலத்தில் BLACK HOLE INCIDENT என அழைப்பர். இதன் எதிரொலியாக, ராபர்ட் க்ளைவ் சதித்திட்டம் தீட்டி, நவாபின் அரசவையிலிருந்த மீர் ஸாஃபர் (மந்திரி), கல்கத்தா மேற்பார்வையாளர் மானிக் சாந்த், ஒமி சாந்த் என்ற பெரும் வணிகர், ஜகத் சேத் என்ற நிதி வணிகர், ராய் துலாப், காதிம் கான் என்ற பெரியோர்களயும் தன் பக்கம் ஈர்த்தார். வாட்சன் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வந்த ஒரு பெரும் பட்டாளத்தைக் கொண்டு கல்கத்தா நகரத்தை ஆங்கிலேயர்கள் எதிர்ப்பில்லாமல் (மேலே கூறிய சதி திட்டத்தால்) கைப்பற்றினர். பிப்ரவரி 1757ல், ராபர்ட் க்ளைவ் ஒரு படையுடன் சென்று கல்கத்தா நகரத்தை முழுமையாக கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து சிராஜ் உத் தௌலா ""அலிநகர் உடன்படிக்கை"" க்கு கட்டாயப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயர்கள் அனுபவித்து வந்த அனைத்து சலுகைகளையும் திரும்ப அளித்து, ஆங்கிலேயர்களுக்கு கல்கத்தாவில் கோட்டை கட்டும் உரிமையையும் வழங்கினார். இதற்கு பதிலாக ஆங்கிலேயர்கள் சிராஜ் உத் தௌலாவுக்கு நட்புறவும் நம்பிக்கையும் அளிப்பதாக உறுதி அளித்தனர்.
Q3. சிராஜ் உத் தௌலாவைத் தொடர்ந்த வங்காள நவாப் கள் யாவர்?
மீர் ஜாஃபர் MIR JAFFAR – 1757-1760 – சிராஜ் உத் தௌலாவுக்கு எதிராக நடத்தப்பட்ட சதி திட்டத்தின் உடனடி பயனாளி. சிராஜ் உத் தௌலா மறைவைத் தொடர்ந்து இவர் நவாப் பதவி பெற்றார். வங்காளம், பீஹார், ஒடிசா ஆகிய பகுதிகளில் தடையில்லா வணிகம் செய்யும் உத்தரவை ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்தி பெற்றனர். இதைத் தவிர்த்து, கல்கத்தாவின் மீது தாக்குதல்கள் நடத்தியதற்காக 17.7 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடும் பெற்றனர். இந்தியாவின் செல்வங்களை ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கும் திட்டத்தின் தொடக்கம். மீர் ஜாஃபர், டச்சு காரர்களின் உதவி நாடி ஆங்கிலேயர்களை தோற்கடிக்க எடுத்த முடிவும், 1759ல் பெடாரா என்ற இடத்தில் தோல்வியில் முடிந்தது. இவ்வகையில், 24 பர்கானா மாகாணத்தையும் ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்கும்படியாயிற்று.
மீர் காசிம் MIR QASIM – 1760-1763 – மீர் ஜாஃபர் க்கு பதிலாக நவாபாக பதவியேற்றார். தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள புர்த்வான், மிதினாப்பூர், சிட்டகாங் போன்ற பகுதிகளின் ஜமீத்தாரி அதிகாரத்தையும், ஒரு பெரிய தொகையையும் ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார். பதிலாக ராணுவ சீர்திருத்தம், வருவாய் வசூல், உள்ளூர் வணிகம் போன்ற சிறிய சலுகைகளை பெற்றார். ஆங்கிலேயர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளில் சிலவற்றை இவர் நிறுத்த முயற்சித்ததால், 1763ல் மீர் ஜாஃபர் மீண்டும் நவாப் ஆக்கப்பட்டார். இந்நிலையில், மீர் காசிம் அவாத் பகுதி மன்னர் ஷூஜா உத் தௌலா, மற்றும் ஷா ஆலாம் 2 வுடன் சேர்ந்து ஆங்கிலேயர்கள் மீது அக்டோபர் 1763ல் பக்ஸார் என்ற இடத்தில் போர் நடத்தி தோல்வி அடைந்தார். ஆங்கிலேய அணி மேஜர் ஹெக்டர் மன்றோ என்பவரால் வழிநடத்தப்பட்டது.
மீர் ஜாஃபர் MIR JAFAR – 1763-1765 – மீர் காசிமுக்கு பதிலாக நவாப் பதவி பெற்று, 1765ல் தனது மறைவு வரை ஆட்சி செய்தார். நிஜாம் உத் தௌலா NAJM UD DAULA – 1765-1772 – மீர் ஜாஃபரின் மைந்தன். ஆங்கிலேயர்களின் கையில் ஒரு பொம்மை அரசாங்கம் நடத்தி வந்த காரணத்தால், ""இரட்டை நிர்வாக அரசாங்கம்"" “Dual system of Government” முறையை அறிமுகப்படுத்தி, நாளடைவில் முழு அதிகாரத்தையும் பெற்று, நிஜாம் உத் தௌலாவை ஓய்வூதியம் கொடுத்து பதவியிலிருந்து நீக்கி, வங்காளத்தில் ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சி வந்தது.