Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. தில்லையாடி' என்ற ஊர் எங்கே உள்ளது?



பிரபஞ்சம் உருவான வரலாறு -- ORIGIN OF UNIVERSE:

Q2. பிரபஞ்சம் என்பது என்ன?

வானம், பூமி இவற்றுள் அடங்கிய அனைத்தும் பிரபஞ்சம் எனப்படுகிறது.

Q3. பிரபஞ்சம் உருவானதைப்பற்றி விவரிக்கும் விதிகள் (theories) யாவை?

மூன்று விதிகள் நிலவுகிறது. அவை:
1. பெரு வெடிப்புக் கோட்பாடு -- Big Bang;
2. ஊசலாடும் கோட்பாடு -- Oscillating;
3. நிலைத்த நிலைக் கோட்பாடு -- Steady State.

Q4. பிரபஞ்சம் உருவானதைப் பற்றி நிலவும் மூன்று கோட்பாடுகளில், எந்த கோட்பாடு மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது?

பெரு வெடிப்புக் கோட்பாடு -- The Big Bang Theory.

Q5. பெரு வெடிப்புக் கோட்பாடு Big Bang theory கூறுவது என்ன?

பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பின் மூலம் சுமார் 18 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதாகக் கூறுகிறது.

Q6. ஊசலாடும் கோட்பாடு “Oscillating” theory கூறுவது என்ன?

இது பெரு வெடிப்புக் கோட்பாட்டின் நீட்டிப்பு ஆகும். இந்த கோட்பாடு மேலும் சேர்ப்பது என்னவென்றால், பிரபஞ்சத்தின் விரிவாக்கமும் சுருக்கமும் கால கட்டத்தில் குறைந்து நின்று விடும். இதன் மூலம் உருவாகும் நட்சத்திர மண்டலங்கள் பெரு வெடிப்பு கோட்பாட்டுக்கு மீண்டும் உட்படும். இவ்வாறான விரிவாக்கமும் சுருக்கமும் இயற்கையின் விதி மாற்றங்களுடன் கூடிய ஒரு தொடர் நிகழ்ச்சியாக நிலவும். 

Q7. நிலைத்த நிலைக் கோட்பாடு “Steady State” theory கூறுவது என்ன?
"இது பெருவெடிப்பு கோட்பாட்டுக்கு முரண்பாடானது. இந்த கோட்பாடு கூறுவது என்னவென்றால், பிரபஞ்சம் ஒரு தனி நிகழ்ச்சியில் உருவானதும் அல்ல, அது என்றும் அழியப்போவதும் அல்ல எனக் கூறுகிறது. இவ்வாறாக பிரபஞ்சம் விரிவடையும் போது புது பொருள் உருவாக்கப்பட்டு வெற்றிடங்களை நிரப்பிக் கொண்டே இருக்கும். அதனால் பிரபஞ்சத்தின் தோற்றம் என்றும் நிலையானதாக இருக்கும் என வலியுறுத்துகிறது. "
Q8. பெரு வெடிப்பு கோட்பாட்டை ஏற்க மறுத்த இந்திய வானியல் நிபுணர் யார்?
ஜெயந்த் வி. நர்லிகர் -- கோலாப்பூர், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வானியல் நிபுணர். பத்ம விபூஷன் விருதைப் பெற்றவர்.
Q9. LHC -- Large Hadron Collider என்ற வானியல் சம்பந்தப்பட்ட ஆங்கிலத் தொடர் அமீப காலங்களில் அதிகம் பேசப்பட்டது. அது என்ன?

இது ஒரு நவீன கால வானியல் ஆராய்ச்சி முயற்சி. இதன் மூலம், பெரு வெடிப்பு நடந்து முடிந்த போது இருந்த பிரபஞ்சத்தின் நிலையை மீண்டும் உருவாக்கி பார்ப்பது. 

Q10. பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை எவ்வாறு அளவிடுகின்றனர்?

ஹப்பிள் நிலையான கோட்பாடு -- HUBBLE CONSTANT : வானிலை ஆய்வு முறை - இதன் மூலம் கூறப்படுவது என்னவென்றால்
1. வானில் காணப்படும் அனைத்து பொருட்களும், பூமியின் திசை வேகத்தை சார்ந்த உள்ளது. இதை “Doppler shift” டாப்ளர் விளைவு என்பர்.
2. இந்த கோட்பாட்டை 1927ல் Georges Lemaitre என்பவர் தன்னுடைய ஆராய்ச்சிகள் மூலம் முன் வைத்து, பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை ஒரு தோராயமான அளவில் கணித்தார். இதையே பிற்காலத்தில் 1929ல் Edwin Hubble என்பவர் உறுதிப்படுத்தி ஒரு சரியான அளவை முன் வைத்தார். அதுவே இப்போது அவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.