Khub.info Learn TNPSC exam and online pratice



நட்சத்திர மண்டலம் GALAXY

Q1. நட்சத்திர மண்டலம் -- Galaxy என்பது என்ன?
கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஈர்ப்பு சக்தியின் காரணமாக வானில் நிலை கொண்டுள்ளன.

Q2. நட்சத்திர மண்டலம் வேறு எவ்வாறு அழக்கப்படுகிறது?

பிரபஞ்ச தீவுகள் -- ஏனென்றால் நட்சத்திர கூட்டங்கள் ஆங்காங்கே தனித்தனியாக நிலை கொண்டுள்ளமையால்.

Q3. தற்சமய பிரபஞ்சம் எந்த நட்சத்திர மண்டலத்தில் நிலை கொண்டுள்ளது?
பால் வெளி -- MILKY WAY – இதில் சுமார் 25 நட்சத்திர மண்டலங்கள் அடங்கும்.
Q4. “Local Group” என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நட்சத்திர மண்டலம் எது?
பால் வெளியும் அதனுள் அடங்கியுள்ள நட்சத்திர மண்டலங்களும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q5. பால் வெளியின் விட்டம் எவ்வளவு ?
சுமார் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள்.
Q6. பால் வெளிக்கு அருகில் உள்ள நட்சத்திர மண்டலம் எது?

ஆன்றோமெடா நெபுலா -- ANDROMEDA NEBULA -- இது சுமார் 68000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

Q7. எந்த வானியல் நிபுணர் நட்சத்திர மண்டலங்களை வகைப்படுத்தினார்?
Edwin Hubble – அமெரிக்க வானியல் நிபுணர் -- 1925களில்.
Q8. நட்சத்திர மண்டலங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

மூன்று வகை -- 1. நீள் வட்டம் - Elliptical 2. சுழல் - Spiral மற்றும் 3. -- தடை சுழல் - Barred Spiral.

Q9. பால் வெளிக்கு வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களை கண்டுபிடித்தவர் யார்?
எட்வின் ஹப்பிள் -- Edwin Hubble -- அமெரிக்கா.
Q10. பால் வெளியின் அமைப்பு என்ன, அதனுள் அடங்கியுள்ளவை யாவை?

சூரியன் மற்றும் அதனை சார்ந்த கிரக குடும்பம் அடங்கிய இந்த சுழல் நட்சத்திர மண்டலம் பல கோடி நட்சத்திரங்களைக் கொண்டது.

Q11. மிகவும் பிரகாசமான நட்சத்திர மண்டலம் எது?

தென் துருவத்தில் மட்டுமே புலப்படும் LARGE MAGELLANIC CLOUD – என்ற நட்சத்திர மண்டலம். இது பூமியிலிருந்து சுமார் 1,70,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில், சுமார் 39000 ஒளி ஆண்டுகள் விட்டம் கொண்டது. 

Q12. மிகப்பெரிய நட்சத்திர மண்டலம் - galaxy எது?

ABELL – 2029. 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 1070 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரப்பிலும் 5.6 மில்லியன் ஒளி ஆண்டுகள் விட்டமும் கொண்டது. பால்வெளி மண்டலத்தின் விட்டத்தை விட சுமார் 80 மடங்கு பெரியது. 

Q13. பூமிக்கு மிக அருகில் அமைந்துள்ள நட்சத்திர மண்டலம் எது?

The SAGITTARIUS DWARF – தனுசு குள்ள மண்டலம் -- பூமியிலிருந்து சுமார் 70000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. 1994ல் கண்டுபிடிக்கப்பட்டது. 

Q14. தொலைதூரத்திலிருந்தும் புலப்படும் வான்வெளி அமைப்பு எது?

ஆன்றோமெடா மண்டலம் -- ANDROMEDA . இது பூமியிலிருந்து சுமார் 2,30,900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. இதனுள் சுமார் 300 பில்லியன் நட்சத்திரங்களும் 1,80,000 ஒளி ஆண்டுகள் விடமும் கொண்டது. 

Q15. மிகத்தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலம் எது?

ABELL 135 IR 1916 – பூமியிலிருந்து சுமார் 13.2 பில்லியன் (ஒரு பில்லியன் = சுமார் 1000 கோடி) ஒளி வருட தூரத்தில் உள்ளது. 2004ல் ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் -- கண்டுபிடித்தது. 

Q16. வானியலில் QASARS என்ற ஆங்கில தொடர் எதைக் குறிக்கிறது?

வெகு தொலைவில் உள்ள ரேடியோ நட்சத்திர மண்டலங்கள். இவற்றின் ரேடியோ கதிர் உமிழ்வு மற்ற நட்சத்திர மண்டலங்களை விட மிகவும் அதிகமானது.