Khub.info Learn TNPSC exam and online pratice



நட்சத்திரங்கள் -- STARS

Q1. நட்சத்திரம் என்பது என்ன?
பிரகாசமான வாயுக்கள் -- ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் -- நிறைந்த ஒரு வான் பொருள்.

Q2. நட்சத்திரங்கள் எவ்வாறு வானில் நிலைத்து நிற்கின்றன?
ஈர்ப்புசக்தி -- Gravity.
Q3. மிக பிரகாசமான நட்சத்திரம் எது?

சிரியஸ் -- SIRIUS -- இது Dog Star எனவும் அழைக்கப்படுகிறது -- Canis Major - என்ற விண்மீன் கூட்டத்தில் உள்ளது. இது சூரியனை விட 24 மடங்கு பிரகாசமானது.

Q4. மிக கணமான நட்சத்திரம் எது?

 HDE 269810 -- இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 170000 ஒளி வருட தூரத்தில் உள்ளது. இது சூரியனை சுமார் விட 190 மடங்கு அதிக கனம் என கணிக்கப்பட்டுள்ளது. இதை Hopkins Ultraviolet Telescope மூலம் கண்டுபிடித்துள்ளனர். 

Q5. மிகப்பெரிய நட்சத்திரம் எது?

M Class Super Giant BETELGEUSE or ALPHA ORIONIS -- Orion விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளது. இதன் விட்டம் சுமார் 700 மில்லியன் கி.மீ -- சூரியனை விட சுமார் 500 மடங்கு பெரியது. 

Q6. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
PROXIMA CENTAURI -- பூமியிலிருந்து சுமார் 4.22 ஒளி வருடங்கள் கொண்டது.
Q7. “Supernovae” என்பது என்ன?

ஒரு நட்சத்திரத்துக்குள் நடக்கும் மிகப்பெரிய வெடிப்பு மூலம் அந்த நட்சத்திரம் முழுமையாக அழியக்கூடும்.

Q8. "கருந்துளை" என்பது என்ன?
ஒரு நட்சத்திரம் தனக்குள்ளேயே அழிந்து கொள்வது.
Q9. Alpha Canis Majoris என்ற நட்சத்திரம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிரியஸ் -- Sirius A or Dog Star.