Khub.info Learn TNPSC exam and online pratice

துருக்கிய முகமதியர்கள் -- TURKISH MOHAMMEDANS

Q1. இந்திய மண்ணில் முதன் முதலாக சில மேற்கு பகுதிகளை கைப்பற்றிய முகமதியர் யார்?

முயுஸூத்தீன் -- MUIZ-UD-DIN – ஷிஹாபுதீன் எனவும் அழைக்கப்பட்டார். துருக்கிய குரித் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். இப்போது பாகிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியை கி.பி.1175ல் கைப்பற்றி, பிறகு நாளடைவில் லாஹூர், சிந்த் (பாகிஸ்தான் பகுதிகள்) பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் ஆட்சியை நிறுவினார்.

Q2. முதல் தரெய்ன் போர் என்பது என்ன?
"தரெய்ன் என்ற இடம் டெல்லிக்கு அருகில் உள்ளது. இங்கு 1191ல் முயுஸூத்தீன் மற்றும் ப்ருதிவிராஜ் சௌஹான் போர் நடந்தது. இதில் முயுஸூத்தின் தோல்வியை சந்தித்து பின்வாங்கி சென்று விட்டார். இந்த போரின் விளைவாக, 1189ல் முயுஸூத்தீன் கைப்பற்றிய தபரிந்தா (இப்போது படிண்டா, பஞ்சாப்) பகுதியை ப்ருதிவிராஜ் மீட்டு கைப்பற்றினார். "
Q3. இரண்டாம் தரெய்ன் போர் என்பது?
"கி.பி.1192ல் முயுஸூத்தீன் மற்றும் ப்ருதிவிராஜ் சௌஹான் இடையில் நடந்த போர். இதில் ப்ருதிவிராஜ் தோல்வி அடைந்து சிறைப் பிடிக்கப்பட்டு, பிறகு கொலைசெய்யப்பட்டார். இந்த போரில் சுமார் ஒரு லட்சம் ராஜபுத்திர வீரர்களும், டெல்லியின் தோமர் வம்ச இளவரசர் கோவிந்தராஜா வும் இறந்தனர்."
Q4. சந்த்வார் போர் என்பது என்ன?
"கி.பி 1194ல் கஹட்வாலா வம்ச கனௌஜ் மன்னர் ஜெயசந்திரா மற்றும் குத்புதீன் ஐபெக் (முயுஸூத்தீன் தளபதி) இடையில் நடந்த போர். ஜெயசந்திரா கொல்லப்பட்டு கனௌஜ் கைப்பற்றப்பட்டது. இவ்வகையாக, 1200க்குள் இந்தியாவின் மேற்கு பகுதிகள் அனைத்தும், சில மத்திய பகுதிகள், வாரணாசி முதல் பஞ்சாப், குவாலியர் முதல் பத்தான் (பாகிஸ்தான்) வரை துருக்கிய முகமதிய ஆட்சியின் கீழ் வந்தது. ( 1206ல் முயுஸூத்தீன் மறைவுக்குப் பிறகு, குத்புதீன் ஐபெக் இந்திய பகுதிகளுக்கு பொறுப்பேற்று அடிமை வம்ச ஆட்சியை நிறுவினார். )"
Q5. துருக்கிய முகமதியர்களிடமிருந்து, பீஹார் மற்றும் வங்காள பகுதிகளை யார் கைப்பற்றினார்?
"பக்தியார் கில்ஜி -- இவர் குத்புதீன் ஐபெக் ன் அடிமை. 12ம் நூற்றாண்டின் நடுக்காலத்திற்குள் மேற்கு, வடக்கு, கிழக்குப் பகுதிகள் அனைத்தும் முகமதியர்கள் ஆட்சிக்கு உட்பட்டது. "
Q6. முயுஸூத்தீன் முகமது வின் மறைவு எப்போது ஏற்பட்டது?
கி.பி.1206ல், ஜீலம் நதிக்கரையில், கொக்கர் பழங்குடியினரால் கொல்லப்பட்டார் என தெரிகிறது.

அடிமை வம்சம் -- SLAVE DYNASTY கி.பி. 1206 – 1290

Q7. "அடிமை வம்சம்" என்ற பெயர் வரக் காரணம்?
இந்த வம்ச ஆட்சியை ஒரு துருக்கிய மன்னரிடம் பணி புரிந்த ஒரு அடிமையால் நிறுவப்பட்டது.
Q8. அடிமை வம்சம் எவ்வாறு நிறுவப்பட்டது?
"முல்தான், டெல்லி, அதைச் சுற்றிய பகுதிகள், வங்காளம், பீஹார் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த முயுஸூத்தீன் முகமது 1206ல் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரிடம் அடிமையாக இருந்த குத்புதீன் ஐபெக் இந்திய பகுதிகளுக்கு தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டு, இந்த வம்ச ஆட்சியை 1206ல் டெல்லியில் நிறுவினார்."
Q9. முயுஸூத்தீன் முகமது ஆட்சி செய்த பற்ற பகுதிகள் யாருடைய ஆட்சியின் கீழ் வந்தது?
வங்காளம் முகமது பின் பக்தியார் கில்ஜி- யின் கீழும், முல்தான் பகுதி நஸீருத்தீன் கபாச்சா-வின் கீழும் வந்தது.
Q10. அடிமை வம்சம் வேறு எந்த பெயர்களிலும் அழைக்கப்பட்டது?
மம்லுக் வம்சம், குலாம் வம்சம், டெல்லி சுல்தானியம்.
Q11. அடிமை வம்சத்தை நிறுவியவர் யார்?
கி.பி. 1206 -- குத்புதீன் ஐபெக். முயுசூத்தீன் முகமது என்ற துருக்கிய மன்னரிடம் அடிமைத் தளபதியாக இருந்தவர்.
Q12. குத்புதீன் ஐபெக் எவ்வாறு இறந்தார்?
"இவருடைய ஆட்சி 4 ஆண்டு காலமே 1206 to 1210. போலோ என்ற விளையாட்டு விளையாடும் போது ஏற்பட்ட காயங்களால் லாகூரில் மரணம் அடைந்தார். "
Q13. குத்புதீன் ஐபெக் ஐ தொடர்ந்த அடிமை வம்ச அரசர் யார்?
"ஆராம் பக்ஷ் -- Aram Baksh – 1210 – 1211 – குத்புதீன் ஐபெக் ன் மைந்தர். இவர் இல்துமிஷ் (குத்புதீன் ஐபெக் ன் மருமகன்) ஆல் கொலைசெய்யப்பட்டார். "
Q14. இல்துமிஷ் ன் ஆட்சிக்காலம் என்ன, அவருடைய ராணுவ வெற்றி/நடவடிக்கைகள் என்ன?
"கி.பி. 1211 -- 1236. 1228ல் முல்தான் மற்றும் சிந்த் பகுதிகளை கைப்பற்றினார். வங்காளம், மற்றும் ராஜஸ்தான் பகுதிகளை அடக்கி அணிபடிய வைத்தார். 1226-1231 காலத்தில், ரணதம்போர், அஜ்மீர், சம்பார், நகௌர், குவாலியர் போன்ற (இழந்த) பகுதிகளை மீட்டார். 1234-1235 களில் மாளவ பகுதியில் பில்சா, உஜ்ஜெயின் ஐ கைப்பற்றி, மகாகாளா கோவிலை சேதப்படுத்தினார். பதௌன், கனௌஜ், வாரணாசி போன்ற பகுதி மன்னர்களை அடிபணிய வைத்தார். 1236ல் மரணம் அடைந்தார். "
Q15. டெல்லி (அடிமை வம்சம்) சுல்தானியத்தின் இதர மன்னர்கள் யாவர், இந்த ஆட்சி எவ்வாறு முடிவடைந்தது?
ருக்னுத்தீன் -- RUKN –UD- DIN – 1236 – இல்துமிஷ் மைந்தன் -- ஆறு மாத ஆட்சி -- சகோதரி ரஸியா வால் கொலைச் செய்யப்பட்டார்.
ரஸியா சுல்தானா -- RAZIYA SULTANA – 1236 – 1240 – இல்துமிஷ் ன் மகள். டெல்லியை ஆண்ட முதல் பெண் மன்னர். சகோதரர் ருக்னுத்தீனை கொலை செய்து பதவியேற்றார். இவருடைய மறைவைப் பற்றிய சரியான விவரங்கள் ஏதுமில்லை.
முயுஸூத்தீன் பஹ்ராம் -- MUIZ UD DIN BAHRAM – 1240 – 1242 – வாரிசு இல்லாத காரணத்தால் தற்காலிகமாக ஆட்சி செய்தார். ஆனால், ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்ததால், சிறைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அலாவுதீன் மசூத் ஷா -- ALAUDDIN MASUD SHAH – 1242 – 1246 – ருக்னுத்தீன் மைந்தன் -- சுல்தானாக பதவியேற்றம் -- பால்பன் என்பவரின் சதித் திட்டத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
நசிருத்தீன் முஹமது -- NASIRUDDIN MUHAMMAD – 1246 – 1266 – இல்துமிஷ் மைந்தன் - 20 வருடங்கள் ஆட்சி -- பால்பன் மகளை திருமணம் செய்து கொண்டு, பால்பனை பிரதிநிதியாக ஆட்சிப் பொறுப்பை அளித்தார். இவர் பால்பனால் விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, பால்பன் ஆட்சியை கைப்பிடித்தார்.
கியாஸூதீன் பால்பன் -- GHIYASUDDIN BALBAN – 1266 – 1287 – குத்புதீன் ஐபெக் ன் அடிமை ஆனால் இளவரசர் போல கவனித்துக்கொள்ளப்பட்டார். தனது 21 ஆட்சியில், தனது எதிரிகளை அழிப்பதிலும், இருந்த தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார். இவருடைய கடைசிக் காலத்தில், 1285ல் இவருடைய மகன் மங்கோலிய படையெடுப்பில் மரணம் அடையவே, அந்த இழப்பை தாங்க முடியாமல் அவரும் 1287ல் இறந்தார்.
முயுசூத்தீன் கைகாபாத் -- MUIZUDDIN QAIQABAD – 1287 – 1290 – பால்பனின் பேரன் - இவர் ஆட்சியை விட அதிக கவனத்தை சிற்றின்பங்களில் செலவழித்து, கடைசியில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, கில்ஜியினரால் கொலை செய்யபபட்டார். இத்துடன் அடிமை வம்ச ஆட்சி முடிவடைந்தது. "
Q16. அடிமை வம்ச மன்னர்களை வரிசைப்படுத்துக?
"குத்புதீன் ஐபெக் - 1206-1210
ஆராம் ஷா - 1210-1211
ஷம்ஸூத்தின் இல்துமிஷ் - 1211-1236
ருக்னுத்தீன் ஃபிருஸ் - 1236
ரஸ்ஸியதுத்தீன் சுல்தானா - 1236-1240
முய்ஸூத்தீன் பஹ்ராம் - 1240-1242
அலாவுத்தீன் மசூத் - 1242-1246
நசீருத்தீன் மஹ்மூத் - 1246-1266
கியாஸூத்தீன் பால்பன் - 1266-1286
முயுஸூத்தீன் கைக்காபாத் - 1286-1290
கயூமர் -- 1290. "