Khub.info Learn TNPSC exam and online pratice

கில்ஜி வம்சம் -- KHILJI DYNASTY கி.பி. 1290 – 1320

Q1. கில்ஜி வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
"ஜலாலூத்தீன் ஃபிருஸ் கில்ஜி -- JALAL UD DIN FIRUZ KHILJI – 1290 -- 1296. அடிமை வம்ச மன்னர் கைகாபாத் ஐ கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். இவருடைய மருமகன் அலாவுத்தீன் கில்ஜியால் கொலை செய்யப் பட்டார். "

Q2. அலாவுத்தீன் கில்ஜியின் ஆட்ச்சிக்காலம் என்ன, அவருடைய வெற்றிகளும் சீர்திருத்தங்களும் யாவை?
"1315 வரை ஆட்சி. 1297-1303 ல் மங்கோலிய படையெடுப்புகளை வெற்றிகரமாக எதிர்கொண்டார். குஜராத் மன்னர் ராஜா கரண் ஐ தோற்கடித்து, அவருடைய மனைவி கமலா தேவி யை மணந்தார். ரணதம்போர், உஜ்ஜெயின், மண்டு, தார், சந்தேரி போன்ற பகுதிகளை 1302-1303ல் கைப்பற்றினார். 1303ல் ராஜஸ்தானின் சித்தோர், காகத்திய மன்னரிடமிருந்து வாரங்கல், ஹொய்சாள த்வாரசமுத்ர பகுதி, மதுரை பாண்டிய மன்னர்களை தோற்கடித்து, தனக்கு அடிபணிய வைத்து, வருடாந்திர கப்பம் வசூலிக்கத் தொடங்கினார். இவருடைய தளபதி மாலிக் காஃபூர், வாரங்கல் ப்ரதாப் ருத்ரதேவா 2, ஹொய்சாள மன்னர் வீர பல்லாலா 3 ஆகியோரை அடக்கி, கில்ஜி ஆட்சிக்கு அடி பணிய வைத்தார். பாண்டிய மன்னர் பகுதிகளையும் தாக்கி, அளவில்லா சொத்துக்களை கைப்பற்றினார். இந்த சாதனகளுக்காக மாலிக் காஃபூர் பதவி உயர்வு பெற்றார். 1315ல் அலாவுத்தீன் நோய்வாய்ப்பட்ட போது, மாலிக்காஃபூர், அலாவுத்தீனின் இரண்டாவது மகனை மன்னராக்கி, ஆட்சியை இவர் நடத்தினார். இதனால், அலாவுத்தீனின் நம்பிக்கையான மெய்க் காப்பாளர்கள், மாலிக் காஃபூரை கொன்று, அலவுத்தீனின் மூத்த மகனை -- முபாரக் --, மன்னராக இருந்த இளையவர் ஷிகாபுதீன் ன் பிரிதிநிதி ஆட்சியாளராக நியமித்தினர். ஆனால், முபாரக், இளையவர் ஷிகாபுதீனை குருடராக்கி, ஆட்சியைக் கைப்பற்றி தன்னை சுல்தானாக உயர்த்திக்கொண்டார். இவர் படிப்பறிவு இல்லாதிருந்த போதிலும், அமீர் குஸ்ரூ மற்றும் அமீர் ஹாசன் என்ற கவிஞர்களின் ஆதரவு கிடைத்தது. "
Q3. கில்ஜி வம்சத்தின் இதர மன்னர்கள் யாவர்?
"குத்புத்தீன் முபாரக் ஷா -- QUTUBUDDIN MUBARAK SHAH – 1316 – 1320 – இவருடைய சிற்றின்ப வாழ்க்கைதரமே இவரின் அழிவுக்குக் காரணம். தனது ஓரின சேர்க்கைக்காக அடிமையாக்கப்பட்ட குஸ்ரூ கான் என்பவரால் 1320ல் கொலை செய்யப் பட்டு, ஆட்சியை குஸ்ரூ கான் கைப்பற்றி, தன்னை நசீருத்தீன் என அழைத்துக்கொண்டார்.
குஸ்ரூ கான்/நசீருத்தீன் -- KHUSRAU/NASIRUDDIN – 1320 – இவர் சில மாதங்களே ஆட்சி செய்தார். இவருடைய மாகாண ஆளுநராக இருந்த காஸி மலீக் என்பவரால் கொலை செய்யப்பட்டு இந்த வம்ச ஆட்சி முடிவடைந்தது. காஸி மலீக் கியாஸூத்தீன் துக்ளம் என பெயர் மாற்றம் செய்து கொண்டு, துக்ளக் வம்ச ஆட்சியை நிறுவினார்."
Q4. கில்ஜி வம்ச மன்னர்களை வரிசைப்படுத்துக.
"ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி - 1290-1296
அலாவுத்தீன் கில்ஜி - 1296-1316
குத்புத்தீன் முபாரக் ஷா - 1316-1320. "