Khub.info Learn TNPSC exam and online pratice

துக்ளக் வம்சம் -- TUGHLAQ DYNASTY கி.பி. 1320 – 1415

Q1. துக்ளக் வம்ச ஆட்சியை நிறுவியவர் யார், ஆட்சிக்காலம் என்ன, அவருடைய ராணுவ நடவடிக்கைகள் என்ன?
"கியாஸூத்தீன் துக்ளக் (முன்பு காஸி மலிக்) GHIYAZUDDIN TUGHLAQ -- 1320 -- 1325. 1323ல் வாரங்கல் மற்றும் வங்காளம் கைப்பற்றப்பட்டு, டெல்லி சுல்தானிய ஆட்சி நிறுவப்பட்டது. "

Q2. கியாஸூத்தீன் துக்ளக் எவ்வாறு மரணம் அடைந்தார்?
"இவர் போர் வெற்றிகளுக்குப் பிறகு டெல்லி திரும்பிய போது, அதைக் கொண்டாடும் வகையில் போடப்பட்டிருந்த மேடை திடீரென சரிந்ததால் இவருக்கு மரணம் ஏற்பட்டது. இவருடன் இவருடைய இளைய மைந்தனும் மரணம் அடைந்தார். துக்ளகாபாத், டெல்லியை சார்ந்த ஒரு நகரம், இவரால் உருவாக்கப்பட்டது."
Q3. கியாஸூத்தீன் துக்ளக் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
உலூக் கான் -- ULUGH KHAN – 1325 --1351 – பிற்காலத்தில் முகமது பின் துக்ளக் என அழைக்கப்படுகிறார்.
Q4. முகமது பின் துக்ளக் ன் ராணுவ வெற்றிகள் யாவை, அவருடைய நிர்வாக நடவடிக்கைகள் யாவை?
"இந்த வம்சத்தில் நன்கு கல்வி கற்ற மன்னர். மங்கோலியர் படையெடுப்பையும், குர்ஷாஸ்ப் என்ற தனது ஆளுநரின் எதிர்ப்பையும் 1326-1327 ல் வெற்றிகரமாக தடுத்து அவரை கொலை செய்தார். தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத் க்கு மாற்றினார். இந்த மாற்றம் இவருக்கு நிர்வாக ரீதியாக சில நஷ்டத்தை ஏற்படுத்தியது. சில வசதி குறைபாட்டினால், தலைநகரை மீண்டும் டெல்லி க்கு மாற்றினார். 1329-1330 களில் தங்க நாணயங்களுக்கு பதிலாக வெண்கல நாணயங்களை அறிமுகப்படுத்தி தங்க சேமிப்பை மேம்படுத்தினார். ஆனால் வெளிநாட்டு வணிகர்கள் இந்த வெண்கல நாணயங்களை ஏற்க மறுத்தனர். அதனால் இவை பயனற்றதாக கிடங்குகளில் தேங்கின. இந்த நாணய மாற்றம் அவருக்கு ஒரு நிர்வாக தோல்வி. 1336-1347 களில் தன்னை எதிர்த்த மலபார் சய்யித் அசன் ஷா வை அடக்க இவரே படையெடுக்க, வழியில் இவருடைய பல ராணுவ அதிகாரிகள் இறக்கவும், அவரே நோய்வாய்ப் படவும், டெல்லிக்கு திரும்பினார். மதுரையை ஆட்சி புரிந்த அசன் ஷா இவருக்கு எதிராக நின்று, மதுரையில் தனது சொந்த சுல்தானிய ஆட்சியை நிறுவினார். 1336ல் உருவான விஜயநகர சாம்ராஜ்யம் வாரங்கல் மற்றும் காம்ப்ளி பகுதிகளை மீட்டுக்கொண்டு சுல்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டனர். அதே சமயம் வங்காளமும் சுல்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டனர். 1347ல் அலாவுத்தீன் பஹமன் ஷா (ஹசன் கங்கு) -- டெக்கான் பகுதியில் தனது பஹமானி ராஜ்யத்தை நிறுவினார். இவ்வாறாக முகமது பின் துக்ளக்கின் சாம்ராஜ்யம் சிதறத் தொடங்கியது. இந்நிலையில், தனது தீவிர எதிரியாக இருந்த குஜராத் தளபதி தகி Taghi என்பவரைத் தொடர்ந்து சென்று, நோய்வாய்ப்பட்டு வழியிலேயே தட்டா (சிந்த்) பகுதியில் 1351ல் இறந்தார். "
Q5. முகமது பின் துக்ளக் ஐ தொடர்ந்த துக்ளம் வம்ச மன்னர் யார்?
"ஃபிரோஸ்ஷா துக்ளக் -- FIRUZ SHAH TUGHLAQ – 1351 to 1388 - வங்காளத்தை மீண்டும் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டாலும், ஒடிசா பகுதியில் சில பகுதிகளில் வெற்றி கண்டார், பூரி ஜகந்நாதர் கோவிலை தாக்கி சேதம் விளைவித்தார். இமாச்சல பிரதேசத்தில் கங்ரா பகுதியைக் கைப்பற்றினார். சிந்த் பகுதிகளையும் கைப்பற்றிய பிறகு, தனது பதவியை 1387ல் தனது இளவரசர் முகமதுவுக்கு விட்டுக்கொடுத்தார். முகமது பலத்த எதிர்ப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார். அதனால், தனது பேரன் துக்ளக் ஷா 2 ஐ பதவியமர்த்தி, 1388ல் காலமானார். "
Q6. துக்ளக் வம்சத்தின் இதர மன்னர்கள் யாவர்?
"ஃபிரோஸ்ஷா துக்ளக்கிற்கு பின் வந்த எந்த மன்னரும் திறம்பட ஆட்சி புரியவில்லை. இவர்கள் காலத்தில் துக்ளம் சாம்ராஜ்யம் சிறிது சிறிதாக பிளவு படத் தொடங்கி முடிவுற்றது.
கையாத் அலி துக்ளக் – 1388 – 89.
அபு பக்கர் – 1389 – 1390.
நாசிர் அல் தின் முகமது – 1390 – 1393
மஹ்மூத் நாசிர் அல் தின் – 1393 – 1394 (டெல்லி மட்டும்)
நஸ்ரத் ஷா -- 1394 - 1399 (ஃபிரோஸாபாத் மட்டும்)
நஸிருத்தீன் மஹ்மூத் ஷா -- 1399 -- 1413 (கிழக்கு டெல்லி) "
Q7. துக்ளக் வம்ச ஆட்சி எவ்வாறு முடிவுற்றது?
"1394 ல் மஹ்மூத் நாசிர் அல் தின் பதவியேற்றபோது, டெல்லி மட்டுமே எஞ்சியிருந்தது. அதற்கு முன்பாகவே, மாளவா மற்றும் குஜராத் பகுதிகள் சுல்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டு தனி ராஜ்யங்களாயின். ஜான்பூர் என்ற பகுதியில் 1394ல் தனி ஷர்கி ராஜ்யம் அமைந்தது. 1398-99ல் மங்கோலிய தைமூர் பஞ்சாப் மற்றும் டெல்லியை கைப்பற்றினர். தைமூரின் படை டெல்லியை ஆக்கிரமித்து பெருத்த சேதம் விளைவித்தது மட்டுமின்றி இந்து முஸ்லிம் என பல்லாயிர மக்களைக் கொன்று குவித்தனர். 1399ல் தைமூர் திரும்பி சென்றாலும், இவருடைய படையெடுப்பு துக்ளக் ராஜ்யத்தின் மீது அதிக பாதிப்பும் சரிவும் ஏற்படுத்தியது. டெல்லி மற்றும் சில இடங்களில் சிறிய அளவிலான ஆட்சி நடத்தி மறைந்தனர்."
Q8. துக்ளக் வம்ச ஆட்சியின் போது, நிர்வாக சீரமைப்புக்காக தொடங்கப்பட்ட துறைகள் யாவை?
"திவானி-இ-கோஹி -- Diwani-i-kohi -- விவசாய அமைச்சகம்.
திவானி-இ-பந்தகன் -- Diwani-i-Bandagan -- அடிமைகள் துறை
திவானி-இ-கைரத் -- Diwani-i-Khairat -- மக்கள் நலம் மற்றும் பொதுப்பணி
திவானி-இ-சியாசத் -- Diwani-i-Siyasat -- பிரத்தியேக நீதிமன்றம்
திவானி-இ-வசாரத் --Diwani-i-Wazarat -- நிதித்துறை
திவானி-இ-அர்ஸ் -- Diwani-i-arz -- ராணுவத்துறை
திவானி-இ-ரிசாலத் -- Diwani-i-risalat -- பொதுத் தொண்டு
திவானி-இ-இன்ஷா -- Diwani-i-insha -- ஆவன காப்பகத் துறை."
Q9. துக்ளக் வம்ச அரசர்களை வரிசைப்படுத்தவும்.
"கியாஸூத்தின் துக்ளம் -- 1321-1325
முகமது பின் துக்ளக் -- 1325-1351
ஃபிருஸ்ஷா துக்ளக் -- 1351-1388
கையாத் அல் தின் துக்ளக் -- 1388-1389
அபு பக்கர் -- 1389-1390.
நாசிர் அல் தின் முகமது -- 1390-1394
மஹ்மூத் நாசிர் அல் தின் -- 1394-1413 "