Khub.info Learn TNPSC exam and online pratice

சய்யித் வம்சம் -- SAYYID DYNASTY – கி.பி 1414-1451

Q1. சய்யித் வம்சத்தை நிறுவியவர் யார், எந்த பகுதியை ஆண்டனர்?
"கிஸ்ர் கான் -- KHIZR KHAN – கி.பி. 1414 – 1421 -- தைமூரால், முல்தான் மற்றும் தீபால்பூர் பகுதி சுல்தானாக நியமிக்கப் பட்டவர். பிறகு, இவர் டெல்லியை கைப்பற்றி, முல்தானிலிருந்து கனௌஜ், மற்றும் இமாலயாவிலிருந்து மாளவா வரையிலான பகுதியை ஆட்சி புரிந்தனர்."

Q2. சய்யித் வம்சத்தின் இதர மன்னர்கள் யாவர்?
"முபாரக் ஷா -- MUBARAK SHAH – 1421--1434 – மேவத்தி, கத்திஹார், மற்றும் கங்கை கரை பகுதிகளை தனது ஆட்சியின் கீழ் கொணர்ந்து அவர்களை டெல்லி சுல்தானியத்திற்கு கப்பம் கட்ட வைத்தார். அவருடைய அரசவை அறிஞர்களே அவரை கொலை செய்தனர்.
முகமது ஷா -- MUHAMMAD SHAH – 1434 – 1443 – அமைதியான ஆட்சியை மேற்கொண்டார்.
ஆலம் ஷா -- ALAM SHAH – 1443 – 1451 – இவருடைய ஆட்சியை 1447ல் பஹ்லூல் லோதி டெல்லியை கைப்பற்றினார். அமைதியான முறையில் ஆட்சியை லோதி வம்சத்திற்கு மாற்றம் செய்து, லோதியின் கீழ் அவரே ஆட்சியிலிருந்தார். "
Q3. சய்யித் வம்ச அரசர்களை வரிசைப்படுத்தவும்.
"கிஸிர் கான் -- 1414-1421
முபாரக் ஷா -- 1421-1434
முகமது ஷா -- 1434-1443
ஆலம் ஷா -- 1443-1451. "