Khub.info Learn TNPSC exam and online pratice

லோதி வம்சம் -- LODHI DYNASTY - கி.பி. 1451 – 1526

Q1. லோதி வம்ச ஆட்சியாளர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?
ஆப்கானிஸ்தானின் பழங்குடியினர்.

Q2. லோதி வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
"பஹ்லூல் கான் லோதி -- BAHLUL KHAN LODHI – 1451 – 1489. சய்யித் வம்ச மன்னர் ஆலம் ஷா வைத் தோற்கடித்து, டெல்லியைக் கைப்பற்றி, இந்த வம்சத்தை 1451ல் நிறுவினார். தனது ஆட்சியை குவாலியர், ஜான்பூர் மற்றும் உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் பரப்பினார். இவருடைய மைந்தர்களுக்கு இடையில் ஆட்சிக்கு நடந்த சண்டையில் இவருடைய மரணம் ஏற்பட்டது. "
Q3. லோடி வம்சத்தின் இதர டெல்லி சுல்தானிய மன்னர்கள் யாவர்?
"சிகந்தர் லோதி -- SIKANDHAR LODHI – 1489 – 1517 – பஹ்லூல் கான் லோதியின் இரண்டாவது மகன். தனது மற்ற இரு சகோதர்களின் எதிர்ப்பை சமாளித்து பதவிக்கு வந்தார். இவர் ஒரு சிறந்த நிர்வாகி. குவாலியர், பீஹார் போன்ற பகுதிகளை கைப்பற்றி தனது ஆட்சியை நிறுவினார். வங்காள மன்னராக இருந்த அலாவுத்தீன் ஹூசைன் ஷா வுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆக்ரா நகரை நிறுவியவர். 1517ல் மரணம் அடைந்தார். இப்ராஹிம் லோதி -- IBRAHIM LODHI – 1517 – 1526 – சிக்கந்தர் லோதியைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர். திறமை அதிகம் இல்லாதவர். 1526ல் ஆப்கானிலிருந்து பாபர் படையெடுத்து, இப்ராஹிம் லோத்யை, பானிபட் என்ற இடத்தில் (முதல் பானிபட் போர் எனப்படுகிறது) தோற்கடித்து, அடிமை வம்ச ஆட்சியை முடித்து, முகலாய வம்ச ஆட்சியை நிறுவி, இந்த முகலாய வம்சம் சுமார் 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது வரலாறு. "
Q4. லோதி வம்ச மன்னர்களை வரிசைப்படுத்துக.
"பப்லூல் கான் லோதி -- 1451-1489
சிகந்தர் லோதி -- 1489-1517
இப்ராஹிம் லோதி -- 1517-1526 "