Khub.info Learn TNPSC exam and online pratice

பொது கேள்விகள் -- அடிமை வம்சம் -- GENERAL QUESTIONS – SLAVE DYNASTY

Q1. அடிமை வம்ச ஆட்சியாளர்கள் இஸ்லாமியத்தின் எந்த நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்?
டர்க் இனத்தவர் -- துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள்.

Q2. துருக்கிய ஆட்சியாளர்கள் தங்களது தலைமையாக யாரைக் கருதினர்?
"காலிஃப் எனப்படுபவர். காலிஃப் என்பவர் தீர்க்கதரிசி முகமது வின் நேர்வழி வந்த மத மற்றும் அரசியல் தலைவர் எனக் கருதப்படுகிறார்.
காலிஃபேட் -- Caliphate என்பது காலிஃப் ஆட்சி செய்யும் பகுதியின் பெயர். எகிப்தில் இருந்ததாக தெரிகிறது. "
Q3. "பால்பன், தனது அரசவை மற்றும் இதர பிரபுக்கள் தனது பதவிக்குரிய அதிகாரத்தை மதிக்கவேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்திய ஒழுங்கு நடவடிக்கை என்ன? "
சைஸாதா -- SAIZADA – காலில் விழுதல்; பைபோஸ் -- PAIBOS – சுல்தானின் கால்களை முத்தமிடுவது.
Q4. அடிமை வம்ச ஆட்சியில் நிர்வாக அமைப்பின் வரிசைக்கிரமம் என்ன?
உலிமா -- ULEMA – இஸ்லாமிய ஆன்மீக தலைவர்கள் – குரானை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை அமைப்பு.
ஸவாபித் -- ZAWABIT – சுல்தானால் இயற்றப்படும் சட்டம் மற்றும் விதிகள்.
சுல்தான் -- SULTAN – ராஜ்யத்தின் அதிகாரபூர்வமான தலைவர். வம்ச ரீதியான ஒரு பதவி.
நாயப் சுல்தான் -- NAIB SULTAN – திறமையற்ற அரசர் அல்லது இளம் வயது அரசருக்கு உதவியாக நியமிக்கப்படுபவர்.
ஒரு சுல்தானுக்குரிய அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்.
வாஸிர் -- WAZIR – நிதித்துறையின் தலைவர்.
அர்ஸ் இ முமாலிக் -- ARIZ I MUMALIK – ராணுவத்தின் தலைவர் ஆனால் தளபதி அல்ல.
சதர் உஸ் சுதுர் -- SADR US SUDUR – தொண்டு மற்றும் ஆன்மீக நன் கொடைகள் துறை தலைவர்.
காஸி உல் கஸத் -- QAZI UL QAZAT – நீதித்துறை தலைவர்.
அமீர் முன்ஷி -- AMIR MUNSHI – ஆவணக் காப்பக தலைவர்.
பத்ரித் இ முமாலிக் -- BADRID I MUMALIK – தகவல் மற்றும் ரகசிய உளவுத்துறை.
வக்கீல் இ தார் -- VAKIL I DAR – அரண்மனைக் காப்பாளர்.
அமீர் எ ஹஜேப் -- AMIR E HAJEB – பார்வையாளர்களை பரிசோதித்தல்
அமீர் எ ஷிக்கார் - AMIR E SHIKAR – அரச வம்ச வேட்டை பொழுதுபோக்கை அமைத்தல்
அமீர் எ மஜ்லீஸ் -- AMIR E MAJLIS – விழா ஏற்பாடுகளைக் கவனிப்பவர்.
சர் இ ஜந்தர் -- SAR I JANDAR – சுல்தானின் முக்கிய மெய்க்காப்பாளர்.
Q5. அடிமை வம்ச காலத்தில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விலாயத் அல்லது இக்லிம். Wilayat or Iqlim.
Q6. அடிமை வம்ச காலத்தில் ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
நயீம் அல்லது வாலி -- Nayim or Wali.
Q7. அடிமை வம்ச காலத்தில் கிராமங்களின் முக்கிய அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
முகத்தம் அல்லது சௌத்ரி. Muqaddam or Chaudhari.
Q8. அடிமை வம்ச காலத்தில் மாகாணங்கள் நிர்வாக ரீதியாக எவ்வாறு பிரிக்கப்பட்டு அழைக்கப்பட்டன?
ஷிக், அதன் கீழ் பரகானா. Shiqs and below it Paraganas. பரகானா அமில் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது.
Q9. அடிமை வம்ச காலத்தில் நிலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டு அழைக்கப்பட்டன?
"இக்தா -- IQTA - அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்கள். அதில் வரும் வருமானம் ஊதியத்திற்கு பதிலாக கிடைப்பது.
காலிசா -- KHALISA – சுல்தானின் வசம் உள்ள நிலங்கள். அதில் கிடைக்கும் வருமானம் அரசவை பராமரிப்புக்காக.
இனாம் -- INAM – ஆன்மீக தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் நிலங்கள். "
Q10. அடிமை வம்ச காலத்தில் விவசாயிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பாலஹரா -- Balaharas.
Q11. முகமது பின் துக்ளக் அரசவைக்கு விஜயம் செய்த மொராக்கோ நாடு யாத்திரிகர் யார்?
இபின் பட்டுட்டா -- IBN BATTUTAH –
Q12. அடிமை வம்ச காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான நினைவுச் சின்னம் எது?
"குதுப் மினார் -- QUTUB MINAR – டெல்லி -- குத்புதீன் ஐபெக் ஆல் தொடங்கி, இல்துமிஷால் 13ம் நூற்றாண்டில் முடிக்கப் பட்டது. சுஃபி துறவி குத்புதீன் பக்தியார் காக்கி என்பவர் நினைவாகக் கட்டப்பட்டது. 71.4 மீ. உயரம்."
Q13. துக்ளக் வம்சத்தினரின் கலை பங்களிப்பு என்ன?
"1. துக்ளகாபாத் -- TUGHLAQABAD – அரண்மனை மற்றும் கோட்டை -- கியாஸூத்தீன் மற்றும் முகமது பின் துக்ளக்கால் கட்டப்பட்டது.
2. ஹாஸ் - காஸ், டெல்லி மற்றும் கோட்லா துறைமுகம். ஹாஸ் காஸ் ஒரு பொழுதுபோக்கு தலம் -- ஃபிரோஸ்ஷா துக்ளக்கால் உருவாக்கப்பட்டது. "
Q14. கில்ஜி மற்றும் துக்ளக் வம்ச முன் கால மன்னர்கள் அரசவையில் இருந்த புகழ்பெற்ற கவிஞர் யார்?
அமீர் குஸ்ரூ.
Q15. பூரி ஜகந்நாதர் கோவிலை சேதப்படுத்திய துக்ளக் வம்ச மன்னர் யார்?
ஃபிரோஸ்ஷா துக்ளக் -- 14வது நூற்றாண்டில்.
Q16. எந்த துக்ளக் வம்ச மன்னர் டோக்கன் நாணயமுறையை அறிமுகப்படுத்தினார்?
முகமது பின் துக்ளக் -- வெள்ளியை சேமிப்பதற்காக.
Q17. கியாஸூத்தீன் துக்ளக் எவ்வாறு இறந்தார்?
இவருடைய வெற்றி விழாவைக் கொண்டாட போடப்பட்டிருந்த மேடை சரிந்து இவரும், இவரது மகனும் இறந்தனர்.
Q18. ""மக்கள் இவரிடமிருந்து விடுதலைப் பெற்றார்கள், அதே போல் அவரும்"" என முகமது பின் துக்ளக் பற்றி வர்ணனை செய்தவர் யார்?
பதாவ்னி -- இடைக்கால இஸ்லாமிய அறிஞர்.
Q19. கரஜ் -- “Kharazj” என்பது என்ன?
"செல்வம்" -- BOOTY – எதிர்பாராத ஒரு செல்வம். -- ஒரு போர் முடிந்த பிறகு அங்குள்ள செல்வங்களை சேர்த்தெடுப்பது.
Q20. இஸ்லாமியர்கள் ஆட்சிக்காலத்தில் ரகசிய உளவாளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பரீத் -- Barids.
Q21. "திவானி அர்ஸ்" என்பது என்ன, எந்த மன்னர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
ராணுவத் துறை -- பால்பன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Q22. முதல் காலீஃப், பாரசீகத்தின் உம்மயாத் காலீஃபேட் வம்சத்தை (661-749AD) நிறுவியவர் யார்?
அபு பக்கர்.
Q23. ஆக்ரா நகரை உருவாக்கியவர் யார்?
சிக்கந்தர் லோதி.
Q24. எந்த சுல்தானிய மன்னர் தன்னை "இரண்டாவது அலெக்ஸாண்டர்" என போற்றிக்கொண்டார்?
அலாவுத்தீன் கில்ஜி.
Q25. 16வது நூற்றாண்டில் (1526) பாபர் இந்தியா மீது படையெடுத்த போது டெல்லியில் வம்சம் ஆட்சியில் இருந்தது?
லோதி வம்சம் (இப்ராஹிம் லோதி)
Q26. தீர்க்கதரிசி முகமதுவை தொடர்ந்த நான்கு முஸ்லீம் ஆட்சியாளர்கள் பிரபலமாக எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ரஷிதூன் -- RASHIDUN – நேர்வழியில் வழிகாட்டுதல் பெற்ற காலீஃப் எனப் பொருள்.
Q27. ""ரஸியாவுக்கு மன்னராக தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன, ஆனால் அவர் பெண்ணாக பிறந்து விட்டார்"" என கூறியவர் யார்?
மின்ஹாஸ் சிராஜ் -- Minhas Siraj – நஸீருத்தீன் முகமது வின் அரசவையில் இருந்தவர்.
Q28. எந்த வம்சம் இந்திய இஸ்லாமியர்களையும் அரசாங்க பதவியில் அமர்த்தத் தொடங்கினார்?
கில்ஜி வம்சம்.
Q29. எந்த சுல்தானிய மன்னர் இஸ்லாமிய மத தலைவர் காலீஃபிடமிருந்த ஒரு நற்சான்றிதழ் பெற்றார்?
பால்பன்.
Q30. இஸ்லாமிய சட்டமான "ஷரியத்" ஆல் அனுமதிக்கப்படாத வரி எது?
திருமண வரி.
Q31. முகமது பின் துக்ளக் எவ்வாறு இறந்தார்?
காய்ச்சல் - சாதாரணமான நோய்.
Q32. முகமது பின் துக்ளக் ஆல் தொடங்கப்பட்ட "திவானி கோஹி" “Diwan-i-Kohi” என்ன துறை?
விவசாயம்
Q33. வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய முதல் சுல்தான் யார்?
முகமது பின் துக்ளக்
Q34. தென் இந்தியாவை முழுமையாக கைப்பற்றும் பணியை முடித்தவர் யார்?
துக்ளக் வம்ச தளபதி -- ஜானா கான்.
Q35. எந்த சுல்தான் முதன் முதலில் வீரர்களுக்கு, நிலத்திற்கு பதிலாக, நாணயத்தை ஊதியமாக அளித்தார்?
அலாவுத்தீன் கில்ஜி.
Q36. முகமது பின் துக்ளக்குக்கு முன்பாக, சீனாவில் டோக்கன் நாணயத்தை token currency அறிமுகப்படுத்தியவர் யார்?
குப்லைக் கான்.
Q37. "ஷாஹ்னா" “Shahna” என இஸ்லாமியர்கள் ஆட்சிக்காலத்தில் அழைக்கப்பட்டவர் யார்?
சந்தை கண்காணிப்பாளர்.
Q38. "பாலஹரா" “Balahars” என இஸ்லாமியர்கள் காலத்தில் அழைக்கப்பட்டவர் யார்?
குற்றேவலர்கள் -- வீட்டுப்பணி செய்பவர்கள்.
Q39. ஃபிரோஸ்ஷா ஆட்சிக்காலத்தில் "ரஜாப் வா" “Rajab-wah” மற்றும் "உலூக் கானி" ‘Ulugh Khani” எனப்பட்டது என்ன?
சுல்தானால், யமுனாவிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால்கள்.
Q40. இஸ்லாமியர்கள் ஆட்சிக்காலத்தில் "அராகட்டா" “araghatta” என அழைக்கப்பட்டது என்ன?
நீர் இறைப்பதற்கான ஒரு சாதனம்.
Q41. எந்த மன்னர் காலத்தில் "ஜசியா" வரி, பிராமாணர்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்டது?
ஃபிரோஸ்ஷா துக்ளக்.
Q42. இஸ்லாமியர்கள் காலத்தில் கால்நடை ராணுவ வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பாயகா (பாய்க்) -- Payakas or Paiks.
Q43. தைமூர் டெல்லியைக் கைப்பற்றிய போது, எந்த துக்ளக் மன்னர் டெல்லியை விட்டு தப்பித்துச் சென்றார்?
நசீருத்தீன் முகமது.
Q44. மின்ஹாஸ் சிராஜ் “Minhas Siraj” யாருடைய அரசவையில் அரசுக்கவிஞராக இருந்தார்?
நசீருத்தீன் முகமது.
Q45. குதுப் மினார் என பெயரிடக் காரணம் என்ன?
குத்புத்தீன் பக்தியார் காக்கி -- இஸ்லாமிய சுஃபி பிரிவு துறவி.
Q46. முகமது பின் துக்ளக் டோக்கன் நாணயம் அறிமுகப்படுத்த காரணம் என்ன?
உலகளவில் வெள்ளி குறைபாடும் தட்டுப்பாடும் இருந்த காரணத்தினால்.
Q47. குத்புத்தீன் முபாரக் ஷா வின் தளபதியாக இருந்த குஸ்ரூ கான் ஒரு …..
இந்து மத சூத்திரர்.
Q48. கங்கை நதிக்கரையில் ஒரு முகாமில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்த துக்ளக் அரசர் யார்?
முகமது பின் துக்ளக். அந்த முகாமின் பெயர் "ஸ்வர்கத்வாரி" (சொர்க்கத்தின் வாயில்) “Svargadvari”
Q49. "ச்சாரா" “Chahra” என்பது என்ன, அறிமுகப்படுத்தியவர் யார்?
ராணுவ வீரர்களைப்பற்றிய ஒரு விளக்கமான ஆவணம். அறிமுகப்படுத்தியவர் அலாவுத்தீன் கில்ஜி.
Q50. எந்த ஜைன மத துறவியுடன் முகமது பின் துக்ளக் பேச்சு வார்த்தை/விவாதம் நடத்தினார்?
ஜீனாப்ரபா சூர்.
Q51. டெல்லி சுல்தானிய வம்ச ஆட்சியை வரிசைப்படுத்துக.
அடிமை - 1206 – 1290; கில்ஜி -- 1290 - 1320; துக்ளக் -- 1321 – 1398; சய்யித் -- 1414 – 1451; லோதி -- 1451 – 1526.
Q52. "சுல்தான்" என்ற பட்டத்தைப்பெற்ற முதல் இஸ்லாமிய மன்னர் யார்? யாரால் இந்த பட்டம் கொடுக்கப்பட்டது?
"கஜினி முகமத் வுக்கு அப்பாஸித் காலீஃப் காதிர். (அப்பாஸித் என்பது தீர்க்கதரிசி முகமது வுக்கு பின் வந்த மூன்றாம் காலீஃப்.) "
Q53. "லாக் பக்ஷ்" “Lakh Buksh” எனப்படும் சுல்தான் மன்னர் யார்?
குத்புதீன் ஐபெக்.
Q54. எந்த சுல்தான் ஆட்சியில், இஸ்லாமிய சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கிடையில் கலவரம் ஏற்பட்டது?
ரஸியா சுல்தானா.
Q55. கி.பி.1303ல் எந்த தென் இந்திய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி படைகளை கட்டுப்படுத்தி அடிபணிய வைத்தார்?
ப்ராதாப் ருத்ரா 2 -- காகத்திய வம்சம்.
Q56. மத்திய இந்தியாவின் டெக்கான் பகுதியில் நுழைந்த முதல் சுல்தானிய மன்னர் யார்?
ஜலாலுத்தீன் கில்ஜி.
Q57. "கனிமா" “Ghanima” என்ற சுல்தானிய காலத்து சொல் எதைக் குறிக்கிறது?
போர் முடிந்து அள்ளி செல்லப்படும் செல்வங்கள்.
Q58. எந்த டெல்லி சுல்தான் ""வேலைவாய்ப்பு அலுவலகம்"" ""தொண்டு அலுவலகம்"" மற்றும் ""தொண்டு மருத்துவமனை"" அமைத்தார்?
ஃபிரூஸ்ஷா துக்ளக்.
Q59. டெல்லி சுல்தானிய மன்னர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
டங்கா மற்றும் சாஷ்கனி வெள்ளியிலும், ஜித்தால் வெண்கலத்திலும் வெளியிடப்பட்டது.
Q60. எந்த சுல்தானிய மன்னரிடம், மங்கோலிய மன்னர் ஒருவர், புத்த தலங்களை விஜயம் செய்ய அனுமதி கேட்டு, ஒரு தூதுக்குழுவை அனுப்பி வைத்தார்?
முகமது பின் துக்ளக்.
Q61. எந்த அடிமை வம்ச மன்னர், தனது அரண்மனை வாயிலில், ஒரு பெரிய மணியை, மக்கள் தங்கள் குறைகளை மணி அடித்து எடுத்துச் சொல்வதற்காக, கட்டித் தொங்க விடச் சொன்னார்?
பால்பன்.
Q62. எந்த டெல்லி சுல்தான், தனது நாணய முறையை மாற்றி, தங்கத்தில் ""தினார்"" நாணயத்தையும், வெள்ளியில் ""அடில்"" என்ற நாணயத்தையும் வெளியிட்டார்?
முகமது பின் துக்ளக்.
Q63. இந்தியாவில் பாரசீக புதுவருடமான "நௌரோஸ்" “Nauroz” கொண்டாடும் முறையை அறிமுகப்படுத்தினார்?
பால்பன்.
Q64. சீன மன்னர் அரசவையில், முகமது பின் துக்ளக், தனது தூதுவராக, யாரை நியமித்தார்?
இபின் பட்டுட்டா.
Q65. "" நான் செய்வது சட்டத்துக்குட்பட்டதா இல்லையா என எனக்குத் தெரியாது. எது நாட்டுக்கு/மக்களுக்கு நல்லதென்று நான் நினைக்கிறேனோ அதை மன்னனாகியா நான் உத்தரவிடுகிறேன்."" இந்த கூற்று யாருடையது?
அலாவுத்தீன் கில்ஜி.
Q66. ஃபிரோஸ்ஷா துக்ளக் நிர்மாணித்த நகரங்கள் யாவை?
ஜான்பூர், ஹிசார், ஃபிரோசாபாத்.
Q67. எந்த டெல்லி சுல்தான், தனது ராணுவத்தை, மங்கோலிய ராணுவ அமைப்பு போல் மாற்றும் முயற்சியில் இறங்கினார்?
முகமது பின் துக்ளக்.
Q68. டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் "மஸாஹத்" “Masahat” என அழைக்கப்பட்டது என்ன?
நில அளவை முறை.
Q69. டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் "கிதாமத்" “Khidamat” எதைக் குறிக்கிறது?
அடக்கப்பட்ட இந்திய மன்னர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கப்பம் - இதன் பெயர்.
Q70. பெஷாவர் மற்றும் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்ற, முகமது கஜினி யாரைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது?
இந்து ஷாஹி மன்னர்களை.
Q71. கஜினி முகமதுவின் அரசவையில் இருந்து, "ஷாநாமா" என்ற நூலை எழுதிய அறிஞர் யார்?
ஃபிர்தௌஸி -- பாரசீக கவிஞர். "ஷாநாமா" என்பது பாரசீக (இரான்) நாட்டு தேசிய காவியம்.
Q72. முகமது கோரி யை தோற்கடித்த முதல் இந்திய அரசர் யார்?
முலராஜா 2 -- குஜராத்தின் சோலங்கி வம்ச மன்னர்.
Q73. முகமது கோரி கடைசி முறையாக இந்தியா மீது எதற்காக படையெடுத்தார்?
"1206ல் பஞ்சாப் பகுதியில் கொக்கர் இனத்தவர்களின் புரட்சியை அடக்க. ( ஜாட் மற்றும் ராஜபுத்திரர்கள் அடங்கிய விவசாய பழங்குடியினர்) "
Q74. திவானி கைரத் -- Diwan-i-Khairat என்ற துறையின் பணி ……
பொதுப்பணி மற்றும் மக்கள் நலம்.
Q75. கிழக்கிந்தியாவில் சேனா வம்சத்தை தோற்கடித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய முகமது கோரியின் தளபதி யார்?
பக்தியார் கில்ஜி.
Q76. போலோ (இந்தியில் சௌகன்) விளையாட்டின் போது காயமுற்று இறந்த டெல்லி சுல்தான் யார்?
குத்புத்தீன் ஐபெக்.
Q77. எந்த டெல்லி சுல்தான் ஆட்சியின் போது, ஜலாலுத்தீன் என்ற டமாஸ்கஸ் இளவரசரை தேடி, இந்திய எல்லைகள மங்கோலிய வீரர் செங்கிஸ் கான் தாக்கினார்?
இல்துமிஷ்.
Q78. எந்த டெல்லி சுல்தான் தன்னை, சமமானவர்களில் ஒருவராகவும், சமமானவர்களில் முதல்வராகவும் கருதாமல், அனைவரை விட பல மடங்கு உயர்ந்தவராக கூறிக் கொண்டார்?
பால்பன்.
Q79. ஃபிரூஸ்ஷா துக்ளக்கின் 37 வருட ஆட்சியை எதிர்த்த ஒரே அரசவை அறிஞர் யார்?
மாலிக் ஷம்சுத்தீன் தம்கானி.
Q80. ""பிரபஞ்சத்தின் பிரபு வின் ஆட்சி, டெல்லி முதல் பாலம் வரை பரவியுள்ளது"" என எந்த டெல்லி சுல்தான் ஆட்சியைப் பற்றி கூறப்பட்டது?
நசீருத்தீன் மஹ்மூத் துக்ளக்.
Q81. டெல்லி சுல்தானிய தளபதி, தென் இந்தியாவில் கன்னியாகுமரி வரை படையெடுத்து பலத்த சேதங்களையும், பகுதிகளையும் கைப்பற்றினார்? அப்போதைய டெல்லி சுல்தான் யார்?
மாலிக் காஃபூர் -- அலாவுத்தீன் கில்ஜியின் தளபதி.
Q82. டெல்லியில் உள்ள ""குவ்வை உல் இஸ்லாம்"" மசூதி -- Quwwai-ul-Islam mosque தொடக்கத்தில் என்னவாக இருந்ததாக கூறப்படுகிறது?
ஜைன மத ஆலயம்.
Q83. எந்த புகழ் பெற்ற கவிஞர், தனது காலத்தில் எட்டு சுல்தான்களின் ஆட்சியைப் பார்த்ததாக கூறப்படுகிறது?
அமீர் குஸ்ரூ.
Q84. எந்த டெல்லி சுல்தானிய வம்சம் "மாம்லுக் வம்சம்" “Mamluk Dynasty” எனவும் அழைக்கப்பட்டது?
அடிமை வம்சம்.
Q85. இஸ்லாமிய வரலாற்று அறிஞர்களை அவர்கள் காலவரிசையில் கூறுக.
அபு பக்கர், ஃபிர்தௌஸி, ஹசன் நிசாமி, அமீர் குஸ்ரூ, பரௌனி.
Q86. இந்து மத தாய்களுக்குப் பிறந்த டெல்லி சுல்தானிய மன்னர்கள் யாவர்?
"நசீருத்தீன் குஸ்ரூ -- இந்துவாக இருந்து இஸ்லாமியத்திற்கு மாறிய கடைசி கில்ஜி வம்ச மன்னர். பிறகு, கியாஸூத்தீன் துக்ளக், சிக்கந்தர் லோதி, மற்றும் ஃபிருஸ்ஷா துக்ளக். "
Q87. டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் யார், அவரை நியமித்தது யார்?
"ரஸியா சுல்தானா -- இல்துமிஷ் ஆல் நியமிக்கப்பட்டார். இந்தியாவை ஆண்ட அனைத்து மன்னர்களிலும், ஆண் வாரிசுக்கு எதிராக, மன்னராக நியமிக்கப்பட்ட ஒரே பெண்மணி."
Q88. ரஸியா சுல்தானா எவ்வாறு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார், அவர் மறைவு எப்படி ஏற்பட்டது?
"அவரது அரசவை அறிஞர்களால் பதவி நீக்கம் (1240ல்) செய்யப்பட்டு, கைத்தால் என்ற இடத்தில் கொள்ளைக்காரர்களால் கொலை செய்யப்பட்டார். "
Q89. ""இறையாண்மை அனைவருக்கும் கொடுக்கப்படுவதல்ல, ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள் மீது வைக்கப்படுவது"" இந்த கூற்று எந்த சுல்தானைப் பற்றியது?
முகமது பின் துக்ளக்.
Q90. "அதிகமான செல்வங்கள் இருப்பதை விட, மக்களின் செழுமையே மேல்" இந்த கூற்று யாருடையது?
ஃபிருஸ்ஷா துக்ளக்.
Q91. சந்தை கட்டுப்பாட்டு நுட்பத்தை இதை அறிமுகப்படுத்திய சுல்தானிய மன்னர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி.
Q92. சுல்தானியர்கள் காலத்தின் சில சொற்களும் அவற்றின் பொருளும்……………….
தாக் -- DAGH -- குதிரைகளின் உடலில் போடப்படும் அடையாள அச்சு.
ச்சாரா -- CHAHRA -- ராணுவ வீரர் பற்றிய குறிப்பு ஆவணம்.
பைபோஸ் -- PAIBOS -- சுல்தானின் காலில் முத்தமிடுவது.
நௌரோஸ் -- NAUROZ -- பாரசீக புது வருடம்.
சிஜாதா -- SIJADA -- சுல்தானுக்கு முன்பாக விழுந்து வணங்குவது.
சிக்கா -- SIKKA -- நாணயம்
குத்பா -- KHUTBA -- வெள்ளிக்கிழமை பிரார்த்தனை
மன்சூர் -- MANSUR -- பதவி அமர்த்தல் ஆணை
ஆலிம் -- ALIM -- இஸ்லாமிய மதகுரு.
கஃபீர் -- KAFIR -- ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்.
ஸவாபித் -- ZAWABIT -- இஸ்லாமிய சட்டம்.
ஃபர்மன் -- FARMAN -- சுல்தானால் இயற்றப்பட்ட விதிமுறைகள்.
ஷரியத் -- SHARIAT -- அரசு ஆணை
திவானி ரிசாலத் -- DIWAN I RISALAT -- பிரசங்க துறை.
திவானி இன்ஷா -- DIWAN I INSHA -- ஆவண காப்பு மற்றும் கடிதம் எழுதும் துறை.
திவானி வஸாரத் - DIWAN I WAZARAT -- நிதித்துறை
திவானி அர்ஸ் -- DIWAN I ARZ -- ராணுவத்துறை
திவானி கோஹி -- DIWAN I KOHI -- விவசாயத்துறை
திவானி பந்தகானி -- DIWAN I BANDAGANI -- அடிமைகள் துறை
முஸ்ரீஃப் இ முமாலிக் -- MUZRIF I MUMALIK -- தணிக்கை தலைமை அதிகாரி.
அமீர் முன்ஷி -- AMIR MUNSHI -- ஆவணக்காப்பக தலைவர்.
முஸ்தாஃப் இ முமாலிக் -- MUSTAF I MUMALIK -- தலைமை கணக்கு தணிக்கையாளர்.
பரீத் இ முமாலிக் -- BARID I MUMALIK -- உளவுத்துறை தலைமை அதிகாரி.
சதர் உஸ் சுதூர் -- SADR US SUDUR -- ஆன்மீகத் துறை தலைமை அதிகாரி.
இக்தா -- IQTA -- ஊதியத்திற்கு பதிலாக அளிக்கப்பட்ட நிலங்கள்.
காலிசா -- KHALISA -- அரசு நிலங்கள் - வருமானம் அரசு குடும்பத்தினர் பராமரிப்பு
இனாம் -- INAM -- கலைஞர்களுக்கு அளிக்கப்படும் நிலங்கள்.
மதத் இ மாஷ் -- MADAD I MASH -- நாத்திகவாதிகளின் நிலங்கள்.
பரித் -- BARID -- உளவாளி
காஸி -- QAZI -- சிவில் நீதிபதி.
ஷாஹ்னா -- SHAHNA -- சந்தை கண்காளிப்பாளர்.
ஆஹில் இ சைஃப் -- AAHL I SAIF -- போர் வீரர்கள்
ஆஹில் இ கலாம் -- AAHL I QALAM -- எழுத்தாளர்கள் மற்றும் உலிமா.
முக்கத்தம்/தபீர் -- MUQADDAM/DABIR -- கிராம தலைமை அதிகாரி.
ஷிக்தார் -- SHIQDAR -- நிர்வாக எழுத்தாளர்.
பர்பாக் -- BARBAK -- அரசு நீதிமன்ற தலைமை அதிகாரி.
அமீர் எ ஹஜீப் -- AMIR E HAJEB -- அரசவைக்கு ப்ரும் பார்வையாளர்கள் பரிசோதனை.
சர் இ ஜந்தர் -- SAR I JANDAR -- சுல்தானின் பாதுகாப்பு அதிகாரி
வகீல் ஏ தார் -- VAKIL A DAR -- அரசரின் இல்லப் பொறுப்பு அதிகாரி
அமீர் எ மஜ்லீஸ் -- AMIR E MAJLIS -- அரசு விழா மற்றும் விருந்து ஏற்பாட்டு அதிகாரி.