Khub.info Learn TNPSC exam and online pratice

பஹ்மானி ராஜ்யம்/சுல்தானியம் -- BAHMANI KINGDOM/SULTANATE 1322 – 1547

Q1. பஹ்மானி ராஜ்யத்தை நிறுவியவர் யார்?
அலாவுத்தீன் ஹசன் பஹ்மன் ஷா -- 1347 -1358. ஹசன் கங்கு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு முன்பு சில மன்னர்கள் இருந்த போதிலும், டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக் கை எதிர்த்து, இவரே இந்த வம்ச ஆட்சியை நிறுவியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் மகாராஷ்டிரா, மற்றும் வட கர்நாடகா, தெலங்கானா சில பகுதிகள் அடங்கிய டெக்கான் பகுதியை ஆண்டனர். மத்திய/தென் இந்தியாவில் ஒரு சக்தி வாய்ந்த ராஜ்யமாக கருதப்பட்டது.

Q2. பஹ்மானி ராஜ்யத்தின் தலைநகர் எது? அவர்கள் ஆண்ட பகுதி என்ன?
குல்பர்கா (அஹ்சானாபாத் என அழைக்கப்பட்டது)கர்நாடகா. மகாராஷ்டிரா, மற்றும் வட கர்நாடகா, தெலங்கானா சில பகுதிகள் அடங்கிய டெக்கான் பகுதியை ஆண்டனர்.
Q3. பஹ்மானி ராஜ்யத்தின் முக்கியமான சுல்தான்கள் யாவர்?
இந்த வம்சத்தில் 14 சுல்தான்கள் இருந்தனர். அவர்களுள் ஹசன் கங்குவுக்கு பிறகு கீழ்க்கண்டவர்களே முக்கியமானவர்கள்:
முகமது ஷா 1 Muhammad Shah I 1358-1375
தாஜூத்தீன் ஃபிரோஸ் Tajuddin Firoz 1397-1422
அஹமது ஷா வாலி Ahmad Shah Wali 1422-1436
முகமது ஷா 3 Muhammad Shah III 1463-1482.
Q4. முகமத் ஷா 3 ன் ஆட்சியில், அவரை வழி நடத்தி, ராஜ்யத்தை விரிபுபடுத்த உதவியவர் யார்?
மஹ்மூத் கவான் -- MAHMUD GAWAN – இவருடைய அரசவையில் மந்திரியாகவும் ஆலோசகராகவும் இருந்தவர். இவருடைய ஆட்சிக்காலத்தில், கொங்கன், கோவா, மற்றும் கோதாவரி படுகைப் பகுதிகளை கைப்பற்றினார். மஹ்மூத் கவானின் முக்கியத்துவத்தை மறைமுகமாக விரும்பாத சிலர், அவரைப் பற்றி தவறான அறிவுரைகளை சுல்தானிடம் கூறி, சுல்தானின் உத்தரவின் படி 1481ல் அவர் கொலைசெய்யப்பட்டார். இவருடைய மறைவுக்குப் பிறகு இந்த ராஜ்யம் 4 தனி ராஜ்யங்களாக பிளவு பட்டது.
Q5. பஹ்மானி ராஜ்யத்திலிருந்து உருவான தனி ராஜ்யங்களில் முக்கியமானவை எது?
அஹமத் நகர் நிஸாம் ஷாஹி -- NIZAM SHAHIS OF AHMEDNAGAR – 1490 – 1633 – அஹமது பாக்ரி என்பவரால் நிறுவப்பட்டு 1633ல் ஷாஜஹானால் கைப்பற்றப்பட்டது.
பீஜாப்பூர் அடில் ஷாஹி -- ADIL SHAHIS OF BIJAPUR – 1490-1686 – யூசுஃப் அடில் ஷா என்பவரால் நிறுவப்பட்டு, பீஜாப்பூர் ஐ தலைநகராகக் கொண்டு இருந்தது. இந்த வம்ச ஆட்சியின் மன்னர்கள்:
இஸ்மாயில் அடில் ஷா Ismail Adil Shah (1510-1534);
மல்லு அடில் ஷா Mallu Adil Shah (1534);
இப்ராஹிம் அடில் ஷா Abrahim Adil Shah (1534-1558);
அலி அடில் ஷா Ali Adil Shah (1558-1580);
இப்ராஹிம் அடில் ஷா 2 Ibrahim Adil Shah II (1580-1627);
முகமது அடில் ஷா Md. Adil Shah (1627-1657)
அலி அடில் ஷா 2 Ali Adil Shah II (1657-1672).
பீஜாப்பூரில் உள்ள ""கோல் கும்பாஸ்"" “Gol Gumbaz” (உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம்) -- முகமது அடில் ஷா வால் கட்டப்பட்டது. இதனுள்ளே உள்ளது புகழ் பெற்ற ""மெல்லொலி அடுக்கு அரங்கம்"" “Whispering Gallery”. 1686ல் அவுரங்கசீப் இந்த ராஜ்யத்தைக் கைப்பற்றினார்.
பேரார் இமாத் ஷாஹி -- IMAD SHAHIS OF BERAR – 1490-1574 –ஃபதுல்லா கான் இமாத் உல் முல்க் என்பவரால் நிறுவப்பட்டு, பிற்காலத்தில் அஹமத்நகர் நிஜாம் ஷாஹி யினரால் கைப்பற்றப்பட்டது.
கோல்கொண்டா குதுப் ஷாஹி QUTUB SHAHIS OF GOLCONDA – 1518-1687 – குலி குதுப் ஷா என்பவரால் நிறுவப்பட்டது. கோல்கொண்டா இதன் தலைநகரம். கோல்கொண்டா கோட்டை இவரால் கட்டப்பட்டது. இந்த வம்சத்தின் மற்றொரு முக்கியமான மன்னர் முகமது குலி குதுப் ஷா -- ஹைதராபாத் நகரம், மற்றும் ""சார்மினார்"" இவரால் நிறுவப்பட்டது. 1687ல் அவுரங்கசீப், அபுல் ஹசன் குதுப் ஷா என்ற மன்னரைத் தோற்கடித்து, இந்த ராஜ்யத்தைக் கைப்பற்றினார். (ஹைதராபாத் நகரம் இவருடைய மனைவி பாக்யமதி யின் பெயரால் ""பாக்யாநகர்"" எனவும் அழைக்கப்பட்டது.)
பிதார் பரித் ஷாஹி -- BARID SHAHIS OF BIDAR -1528-1619 – அலி பரித் என்பவரால் நிறுவப்பட்டு, பிற்காலத்தில் பீஜாப்பூர் அடில் ஷா வம்சத்தினாரால் கைப்பற்றப்பட்டது. இந்த தனி ராஜ்யங்கள் அனைத்தும் பிற்காலத்தில் ஒவ்வொன்றாக மொகலாய வம்சத்தினரிடம் வீழ்ந்தது -- முக்கியமாக அவுரங்கசீப் மன்னரால். "