Khub.info Learn TNPSC exam and online pratice

விஜயநகர சாம்ராஜ்யம் -- VIJAYANAGARA EMPIRE 1336 - 1646

Q1. விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர் யார்?
"1336. ஹரிஹரா 1 HARIHARA I –(1336-1356 AD) மற்றும் அவருடைய சகோதரர் புக்கா ராயா BUKKA RAYA I(1356- 1377) . இவர்கள், காகத்திய வம்ச மன்னர் ப்ரதாப்ருத்ரா 2 ன் கீழ் பணி புரிந்த சங்கமா வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தென் இந்தியா முழுவதையும் -- டெக்கான், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கேரளா  ஆகிய பகுதிகளை  ஆண்டனர். "

Q2. இந்த வம்சம் ஆட்சியை இந்த சகோதரர்கள் ஏற்படுத்தியதின் பின்னணி என்ன?
"1323ல் காகத்திய பகுதிகளை இஸ்லாமிய மன்னர்கள் கைப்பற்றியவுடன், அங்கிருந்து தப்பிச்சென்று கர்நாடகாவின் காம்பிலி மன்னர் ஆட்சியில் மந்திரிகளாக பணியாற்றி வந்தனர். முகமது பின் துக்ளக் இந்த பகுதியைக் கைப்பற்றி இந்த சகோதரர்களை சிறையிலிட்டு அவர்களை இஸ்லாமியத்திற்கு மாற்றினர். பிற்கு விடுவிக்கபட்டு அங்கேயே இருந்து எதிர்ப்புகளை சமாளிக்க அனுமதிக்கப்பட்டனர். சிறிது காலம் முஸ்லீம் மன்னர்களுக்கு பணியாற்றி, பிறகு தங்களை சுதந்திர ராஜ்யமாக அறிவித்துக்கொண்டு, துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரம் என்ற நகரத்தை உருவாக்கி, இந்த வம்ச ஆட்சியை தொடங்கினர். அதுவே பிற்காலத்தில் ஒரு பெரிய சாம்ராஜ்யமாக பெரும் பகுதியை சுமார் 300 ஆண்டுகள் ஒரு வலுவான ராஜ்யமாக ஆட்சி செய்தது. "
Q3. விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவிய சகோதரர்கள் காலத்தில் கைப்பற்றப்பட்ட பகுதிகள் யாவை?
"ஹரிஹரா மற்றும் புக்கா, 1346க்குள், கர்நாடகாவின் ஹொய்சாள வம்சத்தின் முழு பகுதியையும், மதுரையை ஆண்ட சுல்தானியத்தையும், கைப்பற்றி தென் இந்தியாவில் ராமேஸ்வரம் வரை தங்கள் ஆட்சியை நிறுவினர். "
Q4. விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வம்சங்கள் யாவை?
சங்கமா வம்சம் -- SANGAMA DYNASTY – 1336 – 1487 – ஹரிஹரா 1 மற்றும் புக்கா 1 உடன் தொடங்கி, ப்ரயுதா ராயா 1 உடன் இந்த வம்சம் 1485/7 ல் முடிவடைந்தது.
சளுவா வம்சம் SALUVA DYNASTY – 1485 – 1505 – இந்த வம்சத்தில் 3 மன்னர்களே ஆட்சி செய்து, 1505ல் முடிவடைந்தது.
துளுவா வம்சம் TULUVA DYNASTY – 1491 – 1570 – இந்த வம்சத்தில் 5 மன்னர்கள் இருந்தனர். அவர்களில் மிகவும் புகழ்பெற்ற கிருஷ்ண தேவராயாவும்(1509-1529) அடங்குவார். இந்தியாவை ஆண்ட மன்னர்களிலேயே தலை சிறந்த மன்னர் எனக் கருதப்படுபவர். இவர் ""ஆந்திர போஜா"" மற்றும் ""கன்னட ராஜ்ய ராம ரமணா"" என்ற சிறப்பு பட்டங்களை பெற்றிருந்தார். இவருடைய காலத்தில் ஐரோப்பியர்கள் வருகை தொடங்கியது. போர்சுகீசியர்கள் கோவாவில் ஆட்சியை நிறுவித்து கிருஷ்ண தேவராயருடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டனர். இவர் எல்லா மதங்களையும் சமமாக பாவித்து, கலை, இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் தொண்டு செய்தார். இவருடைய அரசவையில் இருந்த புகழ் பெற்ற நகைச்சுவை கவிஞர் தெனாலிராம(கிருஷ்ண)ன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வம்சம் 1570ல் சதாசிவ ராயவுடன் முடிவடைந்தது.
அரவீடு வம்சம் ARAVIDU DYNASTY – 1542ல் அலியா ராம ராயா வுடன் தொடங்கிய இந்த வம்சம், 1646ல் ஸ்ரீரங்கா 3 உடன் முடிவடைந்தது. ஸ்ரீரங்கா 3, கோல்கொண்டா முஸ்லீம் மன்னர்கள் கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டார். இவர் 1670ல் மறைந்ததாக தெரிகிறது.
Q5. விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கியமான மன்னர்கள் யாவர்?
ஹரிஹரா 2 HARIHARA II – 1377 – 1404 – இவர் நாட்டின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதிலும், பஹ்மானி ராஜ்யமும் காகத்திய வம்சமும் இணைந்து நீண்ட காலம் எதிர்த்ததால் இவரால் முடியவில்லை. இருப்பினும், பெல்காம் மற்றும் கோவா பகுதிகளை பஹ்மானியர்களிடமிருந்து திறமையாக மீண்டும் கைப்பற்றினார்.
தேவராயா 2 DEVARAYA II – 1424 – 1446 – சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த மன்னர். காகத்திய மன்னருடன் நட்புறவு கொண்டு, பஹ்மானி அரசர் ஃபிரோஸ் ஷா வை பலத்த சேதங்களுடன் தோற்கடித்தார். இஸ்லாமியர்களையும் தனது படையில் சேர்த்து, பஹ்மானி ராஜ்யத்திடம் இருந்த தனது முந்தைய பகுதிகள கைப்பற்ற நினைத்து முடியாமல் போனதால், பஹ்மானியர்களுடன் எல்லை ஒப்பந்தம் ஏற்படுத்தி, பகுதிகளை தக்கவைத்துக்கொண்டார். "
Q6. விஜயநகர பேரரசு இறுதியாக எப்படி வீழ்ந்தது?
ராமா ராஜா RAMA RAJA -- கிருஷ்ண தேவராயரின் மருமகன். பீஜாப்பூர் மற்றும் கோல்கொண்டா பகுதிகளை இவர் கைப்பற்றிய போதிலும், 1565ல் தலிகோட்டா என்ற இடத்தில் நடந்த போரில் முஸ்லீம் மன்னர்கள் கூட்டணி படையெடுப்பை சமாளிக்க முடியாமல் படு தோல்வி அடைந்தார். இதற்கு பிறகு, சுமார் 100 வருடங்களுக்கு இந்த வம்சம் ஆட்சி புரிந்தாலும், சிறிது சிறிதாக மொஹமதிய மற்றும் இதர முஸ்லீம் மன்னர்களின் தொடர் தாக்குதல்களால் பலவீனமானது. இதன் கடைசி மன்னரான ஸ்ரீரங்கா 3 (1646-1652) கோல்கொண்டா முஸ்லீம் மன்னரின் கூட்டணியால் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த மிகப்பெரிய வம்சம் சரிவை நோக்கிச் சென்றது. "