Khub.info Learn TNPSC exam and online pratice

இல்யாஸ் ஷாஹி வம்சம் -- ILYAS SHAHI DYNASTY

Q1. இல்யாஸ் ஷாஹி வம்ச ஆட்சியை நிறுவியவர் யார், எந்த பகுதிகளை ஆண்டனர்?
ஷம்சுத்தீன் என்பவரால் நிறுவப்பட்டு, வங்காள பகுதிகளை 1348 முதல் 1538 வரை ஆண்டனர்.

Q2. இந்த வம்ச மன்னர்கள் யாவர்?
ஷம்சுத்தீன் இல்யாஸ் ஷா Shamsuddin Ilyas Shah – 1345-1358;
சிக்கந்தர் ஷா Sikandar Shah – 1358 – 1389;
கியாஸூத்தீன் ஆஸாம் ஷா -- Ghyasuddin Azam Shah -1389-1409;
ஜலாலுத்தீன் Jalaluddin – 1442-1459;
ருக்னுத்தீன் பர்பக் ஷா Ruknuddin Barbak Shah – 1459-1474;
அலாவுத்தீன் ஹூசைன் ஷா Alauddin Hussain Shah – 1493-1519;
நுஸ்ரத் ஷா Nusrat Shah – 1519-1532
கியாஸூத்தீன் மஹ்மூத் ஷா Ghyasuddin Mahmud Shah – 1532 – 1538.
Q3. இடைப்பட்டக் காலத்தில் (1409 - 1442 மற்றும் 1479-1493) இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் யாவர்?
"1409-1442 – வட வங்காளத்தின் தினாஜ்பூர் பகுதியின் பிராமண ஜமீந்தார்களால் ஆளப்பட்டு, ஜலாலுத்தீனால் 1442 - 59 களில் கைப்பற்றப்பட்டது. 1474-1493 – இந்த காலத்தில் ஷாஸாதா பரக் ஷா என்ற அபிஸ்ஸினிய அடிமை வீரரால் கைப்பற்றப்பட்டு ஆட்சி புரிந்து வந்தனர். அலாவுத்தீன் ஹூசைன் ஷா இந்த பகுதியை மீண்டும் கைப்பற்றி இல்யாஸ் ஷாஹி வம்ச ஆட்சியை நிலை நிறுத்தினார். "
Q4. இல்யாஸ் ஷாஹி வம்ச ஆட்சி எவ்வாறு முடிவுக்கு வந்தது?
"1538ல் கியாஸூத்தீன் மஹ்மூத் ஷா, ஆப்கானிஸ்தான் பழங்குடி வீரர் ஷேர் ஷா வால் தோற்கடிக்கப்பட்டு இந்த வம்ச ஆட்சி முடிவடைந்தது. (பிறகு ஷேர் ஷா அக்பரிடம் 1574ல் தோல்வியடைந்தார்). "