Khub.info Learn TNPSC exam and online pratice

ஆஹோம் வம்சம் -- AHOM DYNASTY – 1228 to 1826.

Q1. ஆஹோம் வம்சம் எந்த பகுதிகளை ஆண்டது?
"கிழக்கு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும், குறிப்பாக அஸ்ஸாம் (அந்த காலத்தில் காம்ரூபா எனப்பட்டது) மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளை ஆண்டு வந்தது. மலைப்பிரதேச பகுதியாக இருந்ததால், மற்ற மன்னர்கள் இந்த பகுதியை கைப்பற்ற முயற்சிக்கவில்லை. அதனால் தான், இந்த வம்சம் தொடர்ச்சியாக 600 ஆண்டுகள் ஆண்டது. "

Q2. ஆஹோம் வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
"ஆஹோம் வம்சம் மங்கோலிய பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த வம்ச ஆட்சி சுக்கஃபா என்பவரால் 1228ல் தொடங்கப் பட்டு 1826 வரைத் தொடர்ந்தது. இந்த வம்ச ஆட்சியில் பல மன்னர்கள் ஆண்ட போதிலும், சுகுங்மங் (1493 -1539) மிக பிரபலமானவரும் முக்கியமானவரும் ஆவார். "
Q3. ஆஹோம் வம்சத்தின் இதர முக்கியமான மன்னர்கள் யாவர்?
சுமார் 41 மன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர். அவர்களுள் முக்கியமானவர்கள்:
சுக்கஃபா Sukhaaphaa - 1228-1268;
சுகங்ஃபா Sukhaangphaa – 1293-1332;
சுகுங்மங் Suhungmung – 1493-1539;
சுசெங்ஃபா Susengphaa – 1603 – 1641;
சுபங்மங் Supangmung – 1663-1670;
சுக்லம்ஃபா Sukhlamphaa – 1672-`1674;
சுபாத்ஃபா Supaatphaa – 1681 – 1696;
சுக்ருங்ஃபாSukhrungphaa – 1696-1714;
சுதன்ஃபா Sutanphaa – 1714 – 1744;
சுனென்ஃபா Sunenphaa – 1744-1751;
சுரெம்ஃபா Suremphaa – 1751-1769;
சுனெயோஃபா Sunyeophaa – 1769-1780;
சுஹித்பாங்ஃபா Suhitpangphaa – 1780-1795;
சுக்லிங்ஃபா Sukhlingphaa – 1795-1811;
சிந்திங்ஃபா Sindingphaa – 1811-1818 and 1819-1821.
Q4. ஆஹோம் வம்ச ஆட்சி எவ்வாறு எப்போது முடிவடைந்தது?
"1820களில், பர்மா ராஜ்யம், இந்த பகுதியைக் கைப்பற்றும் எண்ணத்தில் படையெடுத்தது. அந்த சமயத்தில், ஆங்கிலேயர்கள் உதவி புரிந்து, அந்த முயற்சியை தோற்கடித்து அந்த வம்ச ஆட்சியை பாதுகாத்தனர். இதனால் பர்மா மிகுந்த சேதம் அடைந்தது. யண்டாபோ 1826 உடன்படிக்கைப் படி இந்த போர் முடிவுக்கு வந்தது. பர்மா ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரிய ஈட்டுத் தொகை கொடுக்கும் படியானதால், பொருளாதார ரீதியாகவும் பர்மா ராஜ்யம் மிகவும் பாதிக்கப்பட்டது. இது ஆங்கிலேய-பர்மா முதல் போர் எனப்பட்டது. "