Khub.info Learn TNPSC exam and online pratice

கிழக்கு கங்கா வம்சம் EASTERN GANGA DYNASTY 1078-1434

Q1. கிழக்கு கங்கா வம்ச ஆட்சி பகுதிகள் யாவை?
"முழுவதுமாக ஒடிசா மற்றும், மேற்கு வங்காளம், ஆந்திரபிரதேசம், சத்தீஸ்கர் சில பகுதிகளையும் ஆண்டனர். இந்த வம்சத்தினர் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததால், இந்து மதத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு இருந்தது. "

Q2. கிழக்கு கங்கா வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
அனந்தவர்மன் சோடா கங்கா (1076-1148). இவருடைய ஆட்சிக்காலத்தில் இந்த வம்ச ஆட்சி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்து கங்கையிலிருந்து கோதாவரி வரை ஆட்சி பரவியது. புவனேஷ்வர் லிங்கராஜா கோவில் மற்றும் பூரி ஜகந்நாதர் கோவில் இவரால் கட்டப்பட்டது. (இவருக்கு முன்னாலும் சில மன்னர்கள் இருந்தனர்)
Q3. அனந்தவர்மன் சோடா கங்காவுக்கு பிறகு வந்த மன்னர்களில் முக்கியமானவர் யார்?
நரசிம்மா 1 Narasimha I - 1238-1264 – இஸ்லாமிய மன்னரால் ஆண்டு வந்த வங்காளத்தின் ஒரு பகுதியை கைப்பற்றினார். கொனார்க் ல் சூரிய பகவான் கோவில் இவரால் கட்டப்பட்டது. 1324ல் டெல்லி சுல்தான் மற்றும் 1356ல் விஜயநகர சாம்ராஜ்யத்தின் படையெடுப்பின் காரணமாகவும், நரசிம்மா 1 க்குப் பிறகு வந்த மன்னர்கள் சக்தி மற்றும் திறமையற்றவர்களாக இருந்ததால், இந்த வம்ச ஆட்சி மெதுவாக வலுவிழக்க தொடங்கி 1434ல் முடிவுற்றது.
Q4. கிழக்கு கங்கா வம்சத்தின் கடைசி மன்னர் யார்?
பானுதேவா 4 -- Bhanudeva IV – மிகவும் திறமையற்ற மனரீதியாக நிலையற்றவராக இருந்ததால், அவருடைய மந்திரி கபிலேந்திரா ஆட்சியைக் கைப்பற்றி ""சூர்யவம்ச வம்சம்"" ஆட்சியை 1435ல்நிறுவினார்.