Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. சூர்யவம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
கபிலேந்திரா -- KAPILENDRA – 1435-1467 – கிழக்கு கங்கா வம்ச மன்னர் பானுதேவா 4 இடமிருந்து ஆட்சியை கைப்பற்றியவர். இந்த வம்சம் ஒடிசா பகுதியை சுமார் 100+ ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். வங்காள் சுல்தான், பஹ்மானி சுல்தான் மற்றும் விஜயநகர மன்னர்களிடம் இழந்த பகுதியை மீட்டார்.
Q2. சூர்யவம்ச ஆட்சியின் இதர மன்னர்கள் யாவர்?
புருஷோத்தம் PURUSHOTTAM – 1467-1497 – பஹ்மானி மன்னர்களிடம் சில ஆந்திர கடற்கரையோர் பகுதிகளையும், விஜயநகர மன்னரிடம் உதயகிரி பகுதியையும் இழந்தார். இருப்பினும், தனது கங்கைக்கரை முதல் தெற்கில் பெண்ணாறு வரையிலான பகுதியை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினார்.
ப்ரதாப் ருத்ரா --PRATAPRUDRA -1497-1540 – ஒடிசாவின் கடைசி சக்தி வாய்ந்த இந்து மன்னர். வங்காள மன்னர் அலாவுத்தீன் ஹூசைன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இடமும், கோல்கொண்டா சுல்தானிட்மும் தோல்வி அடைந்து பல பகுதிகளை இழந்தார். இவருடைய காலத்தில் வாழ்ந்த வைஷ்ணவ இந்து மத போதகர் சைதன்யா உடன் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் இந்த வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.
Q3. சூர்ய வம்ச கஜபதி ஆட்சியை தொடர்ந்து ஒடிசா பகுதியை ஆண்டவர்கள் யார்?
போய் வம்சம் -- THE BHOIS – 1542-1568 – இந்த வம்சத்தில், கோவிந்தா வித்யாதரா மற்றும் முகுந்தா ஹரிச்சந்திரா என்ற இரு மன்னர்களே ஆட்சி புரிந்தனர். இந்த பகுதியை வங்காள சுல்தான் சுலைமான் கராரைன் கைப்பற்றி இந்த ஆட்சியும் முடிவுக்கு வந்தது.