Khub.info Learn TNPSC exam and online pratice

ஷர்கி வம்சம் SHARQI DYNASTY – 1394-1505

Q1. ஷர்கி வம்சத்தை நிறுவியவர் யார்?
"ஃபிருஸ் ஷா துக்ளக் மறைவுக்குப் பிறகு, ஜான்பூர் பகுதி தங்களை தனி விடுதலைப் பகுதியாக அறிவித்துக் கொண்டது. அவ்வமயம், மஹ்மூது துக்ளக், மாலிக் சர்வார் (இவர் ஒரு திருநங்கை) (க்வாஜா ஜஹான் என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரை ஜான்பூரின் ஆளுநகராக நியமித்தார். இவர் டெல்லி சுல்தானியத்துடன் நட்பு பாராட்டி, தனியாக ஆட்சி செய்து வந்தார். இவருக்கு "" சுல்தான் உஸ் ஷர்க் "" என்ற பட்டமளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இந்த வம்சம் ஷர்கி வம்சம் என அழைக்கப்பட்டது. ஆவாத், பீஹார், திரூத் போன்ற பகுதிகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். "

Q2. ஷர்கி வம்சத்தின் இதர மன்னர்கள் யாவர்?
கரன்ஃபால் QARANFAL – 1399-1402 – முபாரக் ஷா எனவும் அழைக்கப்பட்டார்.
இப்ராஹிம் ஷா IBRAHIM SHAH – 1402-1440 – இவர் தனது காலத்தில் கலாச்சார, பொருளாதார மற்றும் கட்டிடக்கலை மேம்பாட்டில் கவனம் செலுத்தினார்.
மஹ்மூத் ஷா MAHMUD SHAH – 1440-1457 – பஹ்லூல் லோதியிடம் தோல்வி கண்டார்.
முஹமது ஷா MUHAMMAD SHAH – 1457-1458 – இவருடைய சகோதரர் ஹூசைன் இவரை கொலை செய்தார்.
ஹூசைன் ஷா HUSSAIN SHAH – 1450-1505 – இந்த வம்சத்தின் கடைசி அரசர். பஹ்லூல் லோதியிடம் தோல்வி கண்டு, இந்த பகுதி டெல்லி சுல்தானியத்துடன் இணைக்கப்பட்டது.