Khub.info Learn TNPSC exam and online pratice

முகாலாய சாம்ராஜ்யம் -- MUGHAL EMPIRE. கி.பி. 1526-1540 & கி.பி. 1555-1857.

Q1. முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் யார்?

1526 -- பாபர் -- இவருடைய இயற்பெயர் ஸாஹிருத்தீன் பாபர் -- மங்கோலிய தைமூருக்கும் செங்கிஸ் கானுக்கும் தாய் தந்தை வழியில் உறவினாகிறார். முகலாயர்கள் மங்கோலிய வம்ச வழியில் வந்தவர்கள். தங்களை ""சகதாயித்"" CHAGHATAYIDS என அழைத்துக்கொண்டனர். இந்த வம்சம் இரண்டு நிலைகளில் இந்தியாவில் ஆட்சி செய்தது -- 1526-1540 மற்றும் 1555 - 1857. 

Q2. முகலாய சாம்ராஜ்யம் எவ்வாறு நிறுவப்பட்டது?
1526ல் பானிபட் என்ற இடத்தில் இப்ராஹிம் லோடியை வென்று இந்த வம்சத்தை நிறுவினார். 1530 வரை பதவியிலிருந்தார்.
Q3. பாபரின் தந்தையின் பெயர் என்ன, இந்தியா வரக் காரணம் என்ன, ஆட்சிக்காலம், ராணுவ வெற்றிகள் என்ன?
"ஷேக் மிர்ஸா -- ஃபர்கானா என்ற பகுதியை ஆண்ட மன்னர். இவர் ஷைபானி கான் உஸ்பெக் என்ற உறவினரிடம் தோல்வி அடைந்த போது பாபர் நாடு விட்டு ஓடி ஆப்கானிஸ்தான் அடைந்து காபூல் ஐ கைப்பற்றி தனது ஆட்சியை நிறுவினார். அதற்கு பிறகு தொடர்ந்து இந்திய பகுதியை கைப்பற்ற முயற்சி செய்தார். 1525ல் லாகூரைக் தௌலத் கான் லோதியிடமிருந்து கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து 1526 ல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து, டெல்லி ஐ கைப்பற்றி, 1530 வரை ஆட்சி செய்தார். 1527ல் கன்வா போரில் மேவார் மன்னர் ரணா சங்கா வை தோற்கடித்து அந்த பகுதிகளை கைப்பற்றினார். 1529ல் முகமது லோதி ஐ காகரா என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி கண்டார். இவ்வாறாக டெல்லியில் முகலாய ஆட்சியை ஸ்திரமாக்கினார்."
Q4. பாபரின் மறைவு எப்போது ஏற்பட்டது, அவருடைய கல்லறை எங்குள்ளது?
1530 -- முதலில் ஆக்ராவில் புதைக்கப்பட்டு, 9 வருடங்களுக்குப் பிறகு அவருடைய விருப்பப்படி காபூலில் மீண்டும் புதைக்கப்பட்டார். அப்போது ஆப்கானிஸ்தான் மன்னராக இருந்தவர் ஷே ஷா சூரி.
Q5. பாபர் புதைக்கப்பட்ட இடத்தில் உள்ள பூந்தோட்டத்தின் பெயர் என்ன?
பாக்-எ-பாபர் -- காபூல்
Q6. பாபரின் நினைவாக எந்த மொழியில் ஒரு நூல் எழுதப்பட்டது?
பாபர் நாமா -- சக்தாய் மொழியில் எழுதப்பட்டது.
Q7. பாபரின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் என்ன?
பூமியில் ஒரு சொர்க்கம் இருப்பதென்றால் அது இது, அது இது, அது இது
Q8. பாபரின் காலத்தில் நடந்த போர்கள் யாவை?
1. 1526 -- முதல் பானிபட் போர் -- இப்ராஹிம் லோதியுடன்.
2. 1527 -- கன்வா போர் -- மேவார் ரணா சங்கா வுடன்.
3. 1529 -- காக்ரா போர் -- லோதி வம்ச இணைந்த ராணுவத்துடன்.
Q9. பாபரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ……
இவருக்கு 10 மனைவிகள், நான்கு மகன், 2 மகள்கள். ஹூமாயூன் மூத்தவர். பாபரின் மறைவுக்குப் பிறகு இவரே மன்னரானார்.
Q10. பாபரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த மன்னர் யார், அவருடைய சாதனைகள் என்ன?
"ஹூமாயூன் -- HUMAYUN – 1530 -1540 & 1555 – 1556 – ராணுவ ரீதியாக இவருக்கு தொடர் தோல்விகள். மாளவ பகுதியில் மாண்டு சம்பனேர், அஹமதாபாத் போன்ற பகுதிகளை கைப்பற்றி தனது ஆளுநர் அஸ்காரி இடம் ஒப்படைத்தார். ஆனால் இந்த ஆளுநருடைய திறமையின்மை காரணத்தால், இப்பகுதிகள் இவர்களிடம் மீண்டும் கைமாறியது. ஹூமாயினின் அடுத்த முயற்சியாக வங்காள மன்னர் ஷேர் கான் ஐ அடக்க எடுத்த முடிவும் 1539 சௌசா போரில் தோல்வியில் முடிந்தது. ஹூமாயூன் ஆக்ராவுக்கு தப்பிச்சென்று, தனது லாகூர் ஆளுநர், குஜராத் ஆளுநர் அஸ்காரி மற்றும் தனது சகோதரர் ஹிண்டால் உதவியை நாடி தோல்வி கண்டார்.
பிறகு ஹூமாயூன், மீண்டும் வங்காள் மன்னர் ஷேர்கானுடன் 1540ல் பில்க்ராம் என்ற இடத்தில் போரிட்டு பெருத்த தோல்வி அடைந்தார். ஹூமாயூன் மீண்டும் டெல்லிக்குத் திரும்பி, அங்கிருந்து சிந்த் பகுதிக்கு சென்று தன்னுடைய ராணுவத்தை மீண்டும் பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இந்த முயற்சி அவருக்கு 15 ஆண்டுகள் காலத்தைக் கழித்தது. இரான் மன்னர் ஷா தமாஸ்ப் அளித்த ராணுவ உதவியுடன் மீண்டும் டெல்லி நோக்கி மீண்டும் படையெடுத்து, வழியில் காந்தஹார் மற்றும் காபூலை தனது ஆளுநர்களான அஸ்காரி மற்றும் கம்ரான் ஆகியோரிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினார். "