Khub.info Learn TNPSC exam and online pratice

சூர் வம்சம் -- SUR DYNASTY

Q1. சூர் வம்சத்தை நிறுவியவர் யார்?
ஷேர் ஷா சூரி -- 1540. இந்த வம்ச ஆட்சி 1555 வரை நீடித்தது.

Q2. சூர் வம்ச மன்னர்கள் யாவர்?
ஷேர் ஷா சூரி -- SHER SHAH SURI – 1540-1545 – ஹூமாயூன் இல்லாத நிலையை பயன்படுத்தி, இவர் இந்த வம்ச ஆட்சியை நிறுவினார். இவருடைய காலத்தில்,
1. ராஜபுத்திர மன்னர் மால்தேவாவிடமிருந்து மார்வார் பகுதியை கைப்பற்றினார்.
2. இவர் ஒரு திறமையான நிர்வாகி. ரூபையா என்ற நாணய முறையை, பிற்காலத்தில் ரூபாய் (Rupee), அறிமுகப்படுத்தியவர்.
3. கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவை இணைக்கும் -- வங்காளம் முதல் பெஷாவர் வரை - க்ராண்ட் ட்ரங்க் சாலையை போட்டவர்.
4. கலிஞ்சார் கோட்டையை (பண்டெல்காண்ட், உத்திரபிரதேசம்) கைப்பற்ற நினைத்து படையெடுத்த போது, ஒரு வெடி விபத்து மூலம் இறந்தார்.
ஜலால் கான் -- JALAL KHAN – ISLAM SHAH SURI – 1545-1553 – 1553, தனது மறைவு வரை ஆட்சி புரிந்தார்.
அடில் ஷா சூரி -- ADIL SHAH SURI - 1553 – 1555 – இவர் தனது மாமன் இஸ்லாம் ஷா சூரி யை கொலை செய்து பதவிக்கு வந்தார். இவரது இயற்பெயர் முகமது முபைஸ் கான். தன்னை முகமது ஷா அடில் என பெயர் கொண்டு ஆண்டு வந்தார். ஹூமாயுன் மீண்டும் தனது பலப்படுத்தப்பட்ட படையுடன் படையெடுத்து முகமது ஷா அடில் தோற்கடிக்கப்பட்டு முகலாய சாம்ராஜ்யம் மீண்டும் உருவெடுத்தது. இந்த முகலாய ராஜ்யம் பெருமளவில் வளர்ந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து, இவர்கள் முடிவு, இந்திய வரலாற்றில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியது.