Khub.info Learn TNPSC exam and online pratice

மீண்டும் முகலாய சாம்ராஜ்ய ஆட்சி -- MUGAL EMPIRE REVIVED

Q1. எப்போது, யாரால், எப்படி, முகலாய சாம்ராஜ்யம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது?
"1555ல் ஹூமாயூன், தன்னுடைய திறமையான தளபதி பைராம் கான் உதவியுடன், அடில் ஷா சூரியை (சூரி வம்சம்) , சர்ஹிந்த் என்ற இடத்தில் தோற்கடித்து, முகலாய சாம்ராஜ்யத்தம் மீண்டும் நிறுவினார். 1556ல் ஒரு எதிர்பாராத விபத்தில் மரணம் அடைந்தார்."

Q2. ஹூமாயூன் எவ்வாறு மரணம் அடைந்தார்?
ஜனவரி 1556ல், ஒரு நூலகப் படிக்கட்டிலிருந்து, தவறி விழுந்து மரணம் அடைந்தார்.
Q3. ஹூமாயூன் ஐ தொடர்ந்தவர் யார்?
"அக்பர் -- AKBAR – ஹூமாயூன் மறைவுக்குப் பிறகு, உடனடியாக இவர், தனது 14வது வயதிலேயே பதவியேற்றார். இவருக்கு உதவியாக, ஆலோசகராக பைராம் கான் நியமிக்கப்பட்டார். "
Q4. அக்பர் தனது 14 வது வயதிலேயே ஒரு போரை சந்திக்க நேர்ந்தது. அது என்ன?
"ஹேமு என்ற ஆப்கானிய வீரர், ஆக்ரா பகுதியிலிருந்த முகலாயர்களை துரத்தியடித்த பிறகு, டெல்லியையும் கைப்பற்றினார். இதனால் அக்பர் பானிபட் என்ற இடத்தில் 1556ல் (இரண்டாம் பானிபட் போர்) ஹேமு வுக்கு எதிராக போரிடும் படியாக நேரிட்டது. இந்த போரில் ஹேமு கண்ணில் காயமுற்று தப்பியோட, டெல்லியை அக்பர் மீண்டும் கைப்பற்றினார். "
Q5. அக்பர் எப்போது ஆட்சியை சுயமாக ஆட்சி செய்யத் தொடங்கினார், அவருக்கு குடும்பத்திலிருந்த ஏற்பட்ட இன்னல்கள் யாவை?
"கி.பி.1560ல் 18 வயது அடைந்தவுடன் அக்பர் முழு மன்னர் பொறுப்பேற்று தானே ஆட்சியை நடத்த விரும்பினார். அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவருடைய இரண்டாம் தாய் மஹம் அனாகா அவரை ஆக்ராவுக்கு மாற்றம் செய்தார்"
Q6. அக்பர் முழு பொறுப்பு ஏற்றவுடன், அவருடைய ஆலோசகராக இருந்த பைராம் கானுக்கு என்ன ஏற்பட்டது?
பைராம் கான் மெக்காவுக்கு கட்டாயத்தின் பேரில் அனுப்பப்பட்டார். ஆனால், 1561ல் வழியில் ஒரு ஆப்கான், பத்தான் (குஜராத்) என்ற இடத்தில் கொலை செய்தார்.
Q7. அக்பருடைய காலமான 1506-1605 காலத்தில் ராணுவ வெற்றிகள் யாவை?
அக்பர் அவருடைய காலத்தில் தொடராக பல வெற்றிகள் பெற்றார். அதன் மூலம் வட இந்தியா முழுமையும், கிழக்கில் அஸ்ஸாம் எல்லை வரை, மத்தியில் டெக்கானின் சில பகுதிகள் வரை வென்றார். அவை:
1. 1561ல் பேஸ் பகதூரிடமிருந்து மாளாவா பகுதி.
2. 1564ல் கோண்ட்வானா (கோண்ட் இன மக்கள் அதிகமாக வாழ்ந்த ஒடிசா, தெலங்கானா பகுதிகள்)
3. 1572ல் குஜராத்
4. 1574ல் பீஹார் மற்றும் வங்காளம்.
5. 1576ல் மேவார்
6. 1581ல் காபூல்
7. 1586ல் காஷ்மீர் மற்றும் பலுச்சிஸ்தான்
8. 1591ல் சிந்த்
9. 1592ல் ஒரிஸ்ஸா
10. 1595ல் காந்தாஹார்
11. 1601ல் காந்தேஷ் மற்றும் அஹமத் நகர்.
Q8. 1572ல் குஜராத் வெற்றியைத் தொடர்ந்து அக்பர் செய்தது என்ன?
ஃபத்தேஹ்பூர் சிக்ரி நகரத்தை உருவாக்கி அங்கு "புலந்த் தர்வாஸா" என்ற நினைவுச் சின்னத்தையும் ஏற்படுத்தினார்.
Q9. அக்பரின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்த போதிலும், அக்பர் காஷ்மீரை படையெடுத்து கைப்பற்ற வேண்டிய அவசியம் என்ன?
அப்போது காஷ்மீரை ஆண்டவர் யூசுஃப் கான். இவர் அக்பரின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார். இருப்பினும் அக்பர் இதை ஏற்றுக்கொள்ளாததிற்கு காரணம், அக்பரின் பிராமண நண்பர் பீர்பால் யூசுஃப் கான் ஆல் கொல்லப்பட்டதே காரணம். அதனாலேயே படையெடுத்து யூசுஃப் கானுக்கு சேதம் விளைவித்து காஷ்மீரைக் கைப்பற்றினார்.
Q10. அக்பர் மேவார் பகுதியை எந்த போரின் மூலம் கைப்பற்றினார்?
மேவார் பகுதியின் ராணா மன்னர்கள் அக்பரின் ஆட்சியைத் தொடர்ந்து எதிர்த்தனர். அவ்வமயம் மேவார் பகுதியை ஆண்ட ராணா ப்ரதாப் மன்னரை, 1576ல் ""ஹல்திகாட்டி"" என்ற இடத்தில், தனது தளபதி மான் சிங் மூலம் வென்று கைப்பற்றினார்.
Q11. அக்பர், மற்ற மதங்களையும் சமமாக பாவித்து ஆதரவளித்ததை எடுத்துக் காட்டுபவை எவை?
1. இவருடைய நெருங்கிய நண்பர் ஒரு பிராமணர் -- பீர்பல்
2. ராஜா பகவன் தாஸ் -- RAJA BHAGWANDAS – இந்து -- ஒரு நம்பிக்கையான தளபதி.
3. மான் சிங் -- MAN SINGH – ராஜா பகவான் தாஸ் வளர்ப்பு மகன். தளபதி.
4. முஸ்லீம் அல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த ""ஜஸியா"" வரியை நீக்கினார்.
5. அக்பர் ஒரு ராஜபுத்ர இளவரசியை மணந்தது மட்டுமின்றி அவரை இந்து சமயத்தை அனுசரிக்கவும் அனுமதித்தார்.
Q12. அக்பர் மணந்த இந்து இளவரசி யார்?
"கச்சாவாஹா ராஜபுத்ர வம்ச இளவரசி ஹீரா குன்வாரி -- ஆம்பர், ராஜஸ்தான் பகுதி மன்னர் ராஜா பாராமல் மகள். இதனால் ராஜபுத்திரர்களுடன் இவர் நட்புறவு வளர்ந்தது."
Q13. அக்பர் எப்போது இறந்தார்?
1605 -- நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய கல்லறை சிகந்த்ரா (பாகிஸ்தான்) வில் உள்ள்து.
Q14. அக்பருடைய அரசவையில் இருந்த முக்கியமான மந்திரிகள் எவ்வாறு அழைக்கப் பட்டனர்? அவர்கள் யாவர்?
""நவரத்தினங்கள்"" என அழைக்கப்பட்டனர். அவர்கள்:
1. அபுல் ஃபஸல் -- ABUL FAZL – முக்கிய ஆலோசகர். ""அக்பர் நாமா"" மற்றும் ""அயினி அக்பரி"" என்ற நூல்களை எழுதியவர்.
2. ஃபைஸி FAIZI – அரசவைப் புலவர் -- சமஸ்கிருத இலக்கிய நூல் நள தமயந்தி ஐ நூலை பாரசீக மொழியில் எழுதியவர்.
3. மியான் தான்ஸென் -- MIAN TANSEN – இவர் ஒரு இந்து -- இயற்பெயர் ராம்தானு பாண்டே. அரசவை இசைக் கலைஞர்.
4. பீர்பல் BIRBAL – நகைச்சுவை மிகுந்த அறிஞர் -- அக்பரின் சிறந்த நண்பர். காஷ்மீர் மன்னர் யூசுஃப் கானால் கொலையுண்டார்.
5. ராஜா மான் சிங் -- RAJA MAN SINGH – அக்பரின் மிக நம்பிக்கையான தளபதி.
6. ராஜா தோடர்மல் RAJA THODARMAL – இந்து -- நிதி அமைச்சர்.
7. அப்துல் ரஹீம் கான் இ கானா ABDUL RAHIM KHAN I KHANA – பாரசீக, சமஸ்கிருத, இந்துஸ்தானி கவிஞர் --
8. ஃபகீர் ஆஸித் தின் FAKIR AZID DIN – ஆலோசகர்
9. முல்லா MULLAH DO RAZA – ஆலோசகர்
Q15. அக்பரைத் தொடர்ந்து வந்த முகலாய மன்னர் யார்?
"சலீம் - பிற்காலத்தில் ஜெஹாங்கீர் (உலகத்தை வென்றவன் எனப் பொருள்) -- இவருடைய முழு இயற்பெயர் நூருத்தீன் முஹமது ஜெஹாங்கீர். தாயார் ஜோதா பாய் -- இஸ்லாமிய சுஃபி பிரிவு துறவி ஷேக் சலீம் சிஸ்டி என்பவர் நினைவாக சலீம் எனப்பெயரிடப்பட்டார். 1569ல் பிறந்தார். "
Q16. ஜெஹாங்கீர் எப்போது மன்னர் பதவி ஏற்றார்?
1605ல், 36வது வயதில், அக்பர் மறைவுக்குப் பின்.
Q17. ஜெஹாங்கீர் எத்தனை முறை திருமணம் செய்து கொண்டார். அவர்களுள் முக்கியமானவர் யார்?
"20 முறை. முக்கியமானவர், மெஹருன்னிசா -- வங்காள ஆளுநருக்கு எதிராக போரிட்டு மறைந்த ஷேர் ஆப்கான் என்பவரின் விதவை. மெஹருன்னிசா பிற்காலத்தில் ""நூர் மஹால்"" (அரண்மனை ஒளி) எனவும் ""நூர் ஜஹான்"" (உலகின் ஒளி) எனவும் அழைக்கப்பட்டார். நூர் ஜஹான் எனவே பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். ஜெஹாங்கீரின் மற்றொரு முக்கிய மனைவி, ஜகத் கொசெய்ன். இவர் ஒரு ராஜபுத்ர இளவரசி. இவர் மூலமாக பிறந்தவரே இளவரசர் குர்ரம் -- பிற்காலத்தில் ஷா ஜஹான் என ஆட்சி செய்தவர்."
Q18. ஜெஹாங்கீரை எதிர்த்த அவருடைய மகன் யார், எவ்வாறு ஜெஹாங்கீர் தண்டிக்கப்பட்டார்?
1606ல் குஸ்ரூ என்ற மகன் ஜெஹாங்கீரை எதிர்த்து, அவரை குருடராக்கி, சிறையிட்டார். இவ்வாறே, ஷா ஜெஹானின் பாதுகாப்பில் இருந்து 1621ல் பர்ஹான்பூர் என்ற இடத்தில் மறைந்தார்.
Q19. ஜெஹாங்கீர் காலத்து ராணுவ சாதனைகள் என்ன?
குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. மேவார் பகுதியை ஆண்ட அமர் சிங் உடன் 1615ல் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்தார்.
Q20. ஜெஹாங்கீர் தனது ஆட்சிக்காலத்தில் எடுத்த எந்த முடிவு, 200 வருடங்களுக்குப் பிறகு இந்திய சரித்திரத்தையே மாற்றியது?
"இவருடைய காலத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் வணிகம் புரியும் உரிமையைப் பெற்றனர். இந்த ஆங்கிலேயர்கள் அடங்கிய குழுவுக்கு தலைவராக இருந்தவர் கேப்டன் ஹாக்கின்ஸ். 1606ல் ஜெஹாங்கீரின் அரசவைக்கு விஜயம் செய்து சூரத் நகரில் ஒரு தொழிற்சாலை நடத்த உரிமைப் பெற்றனர். இருப்பினும் இந்த முடிவு நடைமுறைப்படுத்த போர்ச்சுகீசியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டிருந்தது. 1612ல் சூரத் அருகில் ஸ்வாலி என்ற இடத்தில், கேப்டன் பெஸ்ட் தலைமையில், போர்ச்சுகீசியர்களை தோற்கடித்ததால், ஆங்கிலேயர்கள் சூரத்தில் வணிகம் செய்யும் உரிமை 1613ல் நடைமுறைக்கு வந்தது. "
Q21. ஜெஹாங்கீரின் மறைவு எப்போது, அவை கல்லறை எங்குள்ளது?
1627ல் காஷ்மீர் பிம்பார் என்ற இடத்தில் மறைந்து, லாகூருக்கு அருகில் ஷாதாரா என்ற இடத்தில் ""தில்குஷா தோட்டம்"" என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
Q22. ஜெஹாங்கீரைத் தொடர்ந்த முகலாய மன்னர் யார்?
ஷா ஜஹான் SHAH JAHAN – 1627-1658. பதவியேற்பதற்கு முன் அவருக்கு குடும்பத்திலிருந்து எதிர்ப்புகள் பலமாக இருந்ததால் அவர்களை அழித்து, மன்னராக பதவியேற்றார்.
Q23. ஷா ஜஹானின் முழு இயற் பெயர் என்ன?
ஷஹாபுத்தீன் முகமது ஷா. குர்ரம் என அழைக்கப்பட்டார். மன்னர் பதவியேற்றவுடன் ஷா ஜஹான் என அழைக்கப்பட்டார்.
Q24. ஷாஜஹானின் திருமணம் யாருடன் நடந்தது?
அருமாந்த் பானு பேகம் -- பிற்காலத்தில் மும்தாஜ் மஹால் என அழைக்கப்பட்டார்.
Q25. ஷாஜஹானின் ராணுவ நடவடிக்கைகள்/சாதனைகள் யாவை?
"இவர் அதிகமான ராணுவ நடவடிக்கைகள்/போரில் ஈடுபடவில்லை. இருப்பினும் 1639-1647 காலத்தில், மத்திய ஆசியாவின் ட்ரோன்ஸோக்ஸியானா என்ற பகுதியை கைப்பற்ற எடுத்த முடிவு, இவருக்கு பலத்த படை சேதத்தை ஏற்படுத்தியதால் அந்த முயற்சியைக் கைவிட்டார். உள் நாட்டில், அஹமத்நகர் ராஜ்யத்திலிருந்து தௌலாத்தாபாத், பிறகு பீஜாப்பூர், கோல்கொண்டா, காந்தேஷ், பேரார், தெலங்கானா போன்ற பகுதிகளை அரசியல் அழுத்தம் கொடுத்து கைப்பற்றி, அவுரங்கசீப் ஐ அந்த பகுதிகளின் ஆளுநராக்கினார். "
Q26. 1657ல், ஷா ஜஹான் நோய்வாய்ப்பட, குடும்பத்தில் பதவிக்கு ஏற்பட்ட குழப்பம் என்ன?
"1657-1659 வாரிசுச் சண்டை ஏற்பட்டு, குடும்பத்துக்குள்ளேயே அவருடைய நான்கு மைந்தர்களுக்கிடையில் ஒரு போர் மூண்டது. அவுரங்கசீப் (டெக்கான் ஆளுநர்), தாரா சிக்கோ (உரிய இளவரசர்), ஷூஜா (வங்காள ஆளுநர்), மற்றும் முரத் பக்ஷ் (மாளவா மற்றும் குஜராத் ஆளுநர்) இந்த போரில் ஈடுபட்டனர். மகள்கள் ஜஹானாரா பேகம் மற்றும் பேகம் ஷாஹிபா தாரா ஷிக்கோவுக்கும், ரோஷனாரா அவுரங்கசீப்புக்கும் தங்கள் ஆதரவை அளிக்க, குழப்பத்தை மேலும் அதிகரிக்க, மற்றவர்கள் தூதுவர்களாகவும், உளவாளிகளாகவும் சேர்ந்தனர். கடைசியில், (1) ஷா ஷூஜா, வங்காள கவர்னர், தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் குடுப்பத்துடன் அரக்கபள்ளத்தாக்குக்கு தப்பிச் சென்றார். (2) முரத் பக்ஷ் அவுரங்கசீப்பால் கொலை செய்யப் பட்டார். (3) தாரா சிக்கோவும், தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் தப்பிச் செல்லும் வழியில் ஆப்கான் தலைவர் மாலிக் ஜிவன் என்பவரால் கைப்பற்றப்பட்டு, டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இவ்வாறாக், அவுரங்கசீப் மன்னர் பதவிக்கு எஞ்சியவராகி 1658ல் பதவி ஏற்றார். இதற்கிடையில் அவுரங்கசீப் தனது தந்தை ஷ ஜஹானை ஆக்ரா கோட்டையில் அடைத்து வைத்தார். அங்கேயே 10 ஆண்டுகள் சிறைபட்டு 1666ல் மறைந்தார். "
Q27. ஷா ஜஹான் காலத்தின் புகழ் பெற்ற கலைநய கட்டுமானங்கள் யாவை?
1. தாஜ்மஹால்-மனைவி மும்தாஜ் மஹால் நினைவாக கட்டப்பட்டது.
2. செங்கோட்டை, டெல்லி.
3. ஜூமா மஸ்ஜீத், டெல்லி
4. ஷாலிமார் தோட்டம், லாகூர்
5. ஜஹாங்கீர் சமாதி, லாகூர்.
Q28. ஷாஜஹானை தொடர்ந்த முகலாய மன்னர் யார்?
1658-1707 -- அவுரங்கசீப் - AURANGAZEB -- முகலாய சரித்திரத்தில், மிகவும் கொடூரமான முறையில் பதவிக்கு வந்த ஒரு மன்னர். தன்னுடைய இரண்டு சகோதரர்களை நாட்டைவிட்டு துரத்தியது, ஒரு சகோதரரை கொன்று, தனது தந்தையை சிறைவாசம் செய்து மன்னராக பதவி பெற்றவர்.
Q29. அவுரங்கசீப்பின் இயற்பெயர் என்ன, அவர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அபு முஸாஃபர் மொஹியுத்தீன் முகமது அவுரங்கசீப். "ஆலாம்கீர்" என அழைக்கப்பட்டார்.
Q30. அவுரங்கசீப்பின் ஆட்சி எவ்வாறு இருந்தது?
"இவருடைய ஆட்சி இவரது முன்னோர்களைப் போன்று அனைத்து மதத்தினரும் கூடி வாழும் நோக்கமில்லாமல் இருந்தது. இவர் அதிகமாக இஸ்லாமிய முன்னேற்றத்துக்கும், மற்ற மதத்தினரை, இஸ்லாமிய ஷியா பிரிவு மக்களையும் சேர்த்து, ஒடுக்குவதிலும், அதிக கவனம் செலுத்தியது.
(1) இஸ்லாமிய சன்னி பிரிவினர் விதி முறைகளையும் பழக்கங்களையும் திணிப்பது, ஷியா இஸ்லாமிய பழக்கங்களையும் அடக்குவது;
(2) சுங்க வரி இஸ்லாமியர்களுக்கு குறைக்கப்பட்டது, அதே சமயம் இந்துக்களுக்கு இரட்டிப்பாக்கப்பட்டது.
(3) 1669ல், இந்து மத கோவில்களையும் மத சம்பந்தப்பட்ட அனைத்து கட்டமைப்புகளையும் இடித்து சேதப்படுத்த உத்தரவிட்டார். வாரணாசியின் விஸ்வநாதர் ஆலயம், மதுராவின் கேசவ ராய் ஆலயமும் முழுமையாக இடிக்கப்பட்டது.
(4). ஏப்ரல் 1679ல், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீது ஜஸியா வரியை மீண்டும் புகுத்தினார்.
(5) 9வது சீக்கிய மத குரு தேஜ் பஹதூர் ஐ இஸ்லாமியராக மாற்ற முயற்சித்து, அவர் நிராகரித்து விடவே, அவரை கொன்றதினால், சீக்கியர்கள் எதிர்ப்பும் புரட்சியிலும் ஈடுபட்டனர். "
Q31. அவுரங்கசீப்பின் ராணுவ நடவடிக்கைகள் யாவை?
இவருடைய ஆட்சியின் முதல் 10 வருடங்களில் இவருக்கு ராணுவ வெற்றிகள் கிட்டின. எல்லா விதமான புரட்சிகள், போராட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக ஒடுக்கினார். 1661ல், அஸ்ஸாமின் ஆஹோம் வம்சத்தை, அவருடைய தளபதி மீர் ஜூம்லா உதவியுடன் கைப்பற்ற நினைத்து படையெடுத்து தலைநகரம் வரை சென்றடைந்த போதும், தாக்குப்பிடிக்க முடியாமல் திரும்பி வந்து விட்டனர். ஆஹோம் மன்னருடன் சமரச உடன்படிக்கை ஏற்படுத்தி விட்டு திரும்பி வரும் வழியில் மீர் ஜூம்லா மரணம் அடைந்தார். இதற்குப் பிறகு அவுரங்கசீப்புக்கு ராணுவ ரீதியாக பின்னடைவு தொடர்ந்தது. அவுரங்கசீப்பின் ராணுவ நடவடிக்கைகள்:
1. மதுராவின் ஆளுநராக இருந்த அத்-உன்-நபி இந்துக்களுக்கு எதிராக நடத்திய அநீதிகளால் ஜாட் இனமக்கள் ஒன்று கூடி முகலாயர்களுக்கு எதிராக பயமின்றி போர் தொடுத்து ஆக்ரா, டெல்லி வரை வந்து, அக்பரின் கல்லறையை தோண்டினர்.
2. 1675ல் சீக்கிய குரு இஸ்லாமியராக மாற மறுத்ததை அடுத்து, டெல்லியின் இஸ்லாமிய மத குருவின் உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அடுத்த சீக்கிய மத குரு கோவிந்த் சிங், சீக்கியர்கள் மற்றும் இதர இன மக்களும் ஒன்று கூடி முகலாயருக்கு எதிராக போரிட தொடங்கினர். இதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கும் முகலாயர்களுக்கும் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் அவுரங்கசீப்பின் மறைவு வரை நடக்கத் தொடங்கின.
3. 1681ல் அவுரங்கசீப்பின் நான்காவது மைந்தர் அக்பர் 2, ராஜபுத்திரர்களின் உதவியுடன் தன்னை டெல்லியின் மன்னராக அறிவித்துக்கொண்டார். இதனால் அவுரங்கசீப், ராஜபுத்திரர்களை அக்பர் 2 வின் உறவிலிருந்து தூரப்படுத்தி, அக்பர் 2 ன் மீது படையெடுக்கவே, அக்பர் 2 மராத்திய மன்னர் சம்பாஜியிடம் சரணடைந்தார்.
4. 1686ல், அடில் ஷாஹி வம்சத்திடமிருத்து, சிக்கந்தர் அடில் ஷாவை தோற்கடித்து, பீஜாப்பூரைக் கைப்பற்றி, அந்த வம்ச ஆட்சியை முடித்து, முகலாய ஆட்சியை நிறுவினார்.
5. 1687ல் அபுல் ஹசன் குதுப் ஷா வைத் தோற்கடித்து கோல்கொண்டாவைக் கைப்பற்றினார்.
6. மராத்தா பகுதியில் சிறிதளவே அவுரங்கசீப்பால் வெற்றி காண முடிந்தாலும், மராத்தா மன்னர் சம்பாஜி ஐ சிறைபிடித்து அவரைக் கொன்றார். இருப்பினும் மராத்திய வீரர்களின் திடீர் தாக்குதல்களை சமாளிக்கமுடியமல், டெக்கான் பகுதியில் முகலாய பிடிப்பு பலவீனமடைந்தது. ஆனாலும், அவுரங்கசீப் அவருடைய காலத்தில் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதியையும், ஆப்கானிஸ்தானையும் அவருடைய ஆட்சியின் கீழ் வைத்திருந்தார்.
Q32. அவுரங்கசீப்பின் மறைவு எப்போது ஏற்பட்டது?
1707ல் தனது 87வது வயதில், அஹமத்நகர் என்ற இடத்தில். இவருடைய ஆட்சிக்குப்/மறைவுக்குப் பிறகு சில மன்னர்கள் வந்த போதிலும், முகலாய ஆட்சி பலவீனமடையத் தொடங்கியது.
Q33. அவுரங்கசீப்பின் கட்டிடக்கலை பங்களிப்பு என்ன?
பீபீ கா மக்பரா -- BIBI KA MAQBARA – அவுராங்கபாத்தில் இவருடைய முதல் மனைவியின் கல்லறை. லாகூரில் பாத்ஷாஹி மசூதி.
Q34. அவுரங்கசீப்பைத் தொடர்ந்த முகலாய மன்னர்கள் யாவர்?
பஹதூர் ஷா 1 BAHADUR SHAH – 1707-1712 – அவுரங்கசீப்பின் மைந்தன் -- தனது சகோதரர்களுடன் வாரிசுச் சண்டையிட்டு வென்று பதவிக்கு வந்தவர். சீக்கியர்களுடன் சமரசம் ஏற்படுத்திக் கொண்டு, குரு கோபிந்த் சிங் அம் தனது அரசாங்க பணியில் ஈடுபடுத்திக்கொண்டார். சீக்கிய குரு கோபிந்த் சிங் மறைவுக்குப் பிறகு, சீக்கியர்கள் பந்தா பஹதூர் தலைமையில் எதிர்ப்பை தொடங்கினர். பண்டேலா மற்றும் ஜாட் இன மக்களின் தலைவர்கள் சத்ரஸால் அண்ட் சௌராமன் ஆகியோரை தனது அரசாங்கத்தில் சேர்த்துக்கொண்டு சமாதானம் ஏற்படுத்திக் கொண்டார். 1712ல் மரணம் அடைந்தார்.
ஜஹந்தர் ஷா JAHANDAR SHAH 1712-1713 – பகதூர் ஷா 1 ன் மைந்தன் -- Son of Bahadur Shah I – இவரும் சகோதரர்களுடன் போரிட்டு ஸூல்ஃபிகார் கான் என்ற அரசவை அதிகாரியின் உதவியுடன் பதவிக்கு வந்தவர். இவருடைய ஆட்சி மிக குறுகிய காலமே. 1713ல் தனது உறவினர் ஃபரூக் சியார் உடன் நடந்த போரில் தோற்று பிறகு கொல்லப்பட்டார்.
ஃபரூக் சியார் FARUQ SIYAR – 1713-1719 – பகதூர் ஷா 1 ன் பேரன். ஜஹந்தர் ஷா வை, சய்யித் சகோதரர்கள் உதவுயுடன் கொன்று பதவியை கைப்பற்றினார். ஃபரூக் சியார் மிகவும் பலவீனமான அரசர், சய்யித் சகோதரர்களை நம்பி ஆட்சி நடத்தினார். அதுவே அவருக்கு எதிராக இருந்தது. சய்யித் சகோதரர்கள் இவரை கொலை செய்து, ரஃபி உத் தராஜாத் என்பவரை மன்னராக்கினார். அவரும் விரைவில் மரணம் அடைந்தார்.
ரஃபி உத் தராஜாத் (ஷா ஜஹான் 2) RAFI UD DARAJAT (SHAH JAHAN II) 1719 – குறைவான ஆட்சிக்காலத்திலேயே நோயினால் மரணம் அடைந்தார்.
முகமது ஷா MUHAMMAD SHAH – 1719-1748 – சய்யித் சகோதரர்களின் உதவியுடன் இவர் ஷா ஜஹான் 2 ஐ தொடர்ந்தார். சய்யித் சகோதரர்களின் அதிகாரத்தாலும், அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், சய்யித் சகோதரர்கள் கொலை செய்யப் பட்டனர். இவருடைய காலத்தில் முகலாய சாம்ராஜ்யம் பிளவு படத் தொடங்கியது. இவரிடம் முக்கிய மந்திரியாக இருந்த நிஸாம் உல் முல்க், மராத்தியர்களுடன் சேர்ந்து, டெக்கான் பகுதி ஆளுநரை கொன்று, நிஸாம் முல்க் டெக்கான் பகுதிக்கு மன்னராக அறிவித்துக் கொண்டார். இவ்வாறாக ஹைதராபாத் நிஸாம் ஆட்சி தொடங்கியது. இதைத் தவிர்த்து, சிந்த் பகுதியில் சில பகுதிகளையும் இழந்தார். இவருடைய காலத்தில் முகலாயர்களின் முக்கிய இழப்பு, டெல்லியை 1738-1739 காலத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷா கைப்பற்றியதால், விலை மதிக்கமுடியாத ""மயில் அரியணை"" “Peacock Throne” நாதிர் ஷா விடம் கைமாறியது. மேலும், மராத்தா மன்னர் பாஜி ராவ் தொடர் தாக்குதல்களை நடத்தி பெருத்த சேதம் விளைவித்தது மட்டுமின்றி, பல பகுதிகளையும் இழந்தார். இவ்வாறாக, முகலாய சாம்ராஜ்யம் சிறிது சிறிதாக பலவீனம் அடையத் தொடங்கியது. 1748ல் இவர் மறைந்தார்.
அஹமத் ஷா AHMAD SHAH – 1748-1754 – முகமது ஷா வின் மைந்தன். பலவீனமடைந்த ஒரு முகலாய சாம்ராஜ்யத்தை ஏற்று மன்னரானார். அவருடைய அரசவைக்குள்ளேயே அநேக குழப்பங்கள். அதை சரி செய்ய முயன்ற போது, அவருடைய அரசவைப் பிரபுக்களாலேயே (இமாத் உல் முல்க்) குருடராக்கப்பட்டு, சிறையடைக்கப்பட்டார். இதற்கும் மேலாக, 1748ல் ஆப்கானிஸ்தான் அஹமத் ஷா அப்தாலி (நாதிர் ஷா வின் தளபதியாக இருந்தவர்) பெரும் படையுடன் தாக்கியதால் பலத்த சேதம் ஏற்பட்டது. இவ்வாறாக இவருடைய கால முகலாய சாம்ராஜ்யத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் சரிவை நோக்கியே சென்றது. 1775ல் மரணம் அடைந்தார்.
ஆலாம் கீர் ALAM GIR II 1754-1759 – அஹமது ஷா வைத் தொடர்ந்து, மந்திரி இமாத் உல் முல்க் ன் உதவியுடன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் மீண்டும் அஹமது ஷா அப்தாலி படையெடுத்து, பஞ்சாப் சிந்த் பகுதியைக் கைப்பற்றியதால், முகலாய சாம்ராஜ்யம் மேலும் பலவீனமடைந்தது. அவரிடமே பணி செய்த மந்திரி மராத்தியர்களுடன் சேர்ந்து, முதல் மந்திரி நஜீப் உத் தௌலா வை மிகவும் சேதம் ஏற்படுத்தித் தோற்கடித்தார். கடைசியில் இவருடைய மந்திரியாக இருந்தவர் ஆலாம் கீரை 1759ல் கொலை செய்தார்.
ஷா ஆலாம் 2 SHAH ALAM II – 1759-1806 – ஆலாம் கீர் ன் மைந்தன் 1759ல் பதவியேற்றார். இருப்பினும் அவர் இமாத் உல் முல்க் க்கு பயந்து டெல்லியைத் தவிர்த்து ஆட்சி நடத்தி வந்தார். இவருடைய ஆட்சிக்காலம் இந்தியாவின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்று. 1764 ல் பக்ஸார் என்ற இடத்தில் நடந்த போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியடைந்தார். அவருடைய பிற்கால முயற்சிகளும் பயனளிக்காமல், 1803ல், மீண்டும் ஆங்கிலேயர்களிடம் தோல்வியடைந்து டெல்லியையும் இழந்தார். இருப்பினும், அவர் மன்னராக, ஆங்கிலேயர்களின் கீழ் பணி புரிய அனுமதிக்கப்பட்டு, 1806ல் மரணமடைந்தார்.
அக்பர் 2 AKBAR II – 1806 – 1837 – ஷா ஆலாம் க்கு பிறகு பதவிக்கு வந்து ஆங்கிலேயர்கள் கீழ் ஆட்சி புரிந்தார். இவருடைய காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வு -- ராம் மோகன் ராய்க்கு ""ராஜா"" என்ற பட்டத்தை வழங்கி, தனக்காக இங்கிலாந்து சென்று மன்னருக்கான ஓய்வூதியத்துக்காக வாதாடுமாறு கேட்டுக்கொண்டார்.
Q35. முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் யார்?
பகதூர் ஷா 2 BAHADUR SHAH II 1837-1858-1862. (முழுப் பெயர் பகதூர் ஷா ஸாஃபர்)
Q36. பகதூர் ஷா 2 ன் முழு இயற்பெயர் என்ன?
அபு ஸாஃபர் சிராஜூத்தீன் முகமது பகதூர் ஷா ஸாஃபர். 1775ல் அக்பர் 2 + லால்பாய் என்ற இந்து தாய்க்கும் பிறந்தவர்.
Q37. பகதூர் ஷா 2 ன் ஆட்சிக்கால நிகழ்வுகள் யாவை?
"இவர் ஒன்றுமில்லாத ஒரு ராஜ்யத்தை பெற்றார். இவர் காலத்தில், இவர் மீது இருந்த ஆங்கிலேய ஆதிக்கம், அதைத் தவிர்த்து மராத்தா மற்றும் பஞ்சாப் வலுவான ராஜ்யங்களாக உருவெடுத்து இருந்ததால் இவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் ஆட்சி நடத்தி வந்தார். இதற்கிடையில் ஆங்கிலேயர்கள் தென், தென் கிழக்குப் பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றி, மேலும் பல பகுதிகளையும் கைப்பற்றி வந்தனர். இவருடைய காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வு -- 1857ல் நடந்த சிப்பாய் கலகம் (இதைப்பற்றி பிறகு), அதுவே முகலாய ஆட்சிக்கு முடிவைக் கொடுத்தது. "
Q38. முகலாய ஆட்சி மற்றும் முகலாய கடைசி மன்னர் ன் முடிவு எவ்வாறு ஏற்பட்டது?
"1857 சிப்பாய் கலகம் குறிப்பாக வட இந்தியா முழுமையும் பரவியது. இந்த புரட்சிக் கலகத்திற்கு டெல்லி மன்னர் பகதூர் ஷா ஸாஃபர் தலைமேயேற்று நடத்தும்படி புரட்சிக்காரர்கள் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், ஆங்கிலேயர்கள் இந்த புரட்சியை ஒடுக்கி, டெல்லியை கைப்பற்றி இருந்த புரட்சிக்காரர்களை தோற்கடித்து, டெல்லியைக் கைப்பற்றி, பகதூர் ஷா ஸாஃபர் மற்றும் அவருடைய மூன்று மகன்களும் சிறைப்படுத்தப்பட்டு, மகன்கள் கொல்லப்பட்டனர், பகதூர் ஷா ஸாஃபர் ரங்கூன் க்கு (மியான்மார்) நாடு கடத்தப்பட்டு, அங்கு 7.11.1862ல் மறைந்தார். "