Khub.info Learn TNPSC exam and online pratice

பொதுக் கேள்விகள் -- GENERAL QUESTIONS

Q1. கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த அறிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
அஷ்டதிக்கஜா

Q2. கிருஷ்ணதேவராயர் அஷ்டதிக்கஜா அறிஞர்களில் மிகச்சிறந்த அறிஞராக அறியப்பட்டவர் யார்?
அல்லாசானி பெத்தண்ணா -- இவரை ""ஆந்திர கவிதா பிதாமகா"" என்ற சிறப்புப் பெயரில் அழைத்தனர். இவருடைய படைப்புகள் -- ""மனுசரித்ரம்"" மற்றும் ""ஹரிகதா சாராம்சமு"".
Q3. கிருஷ்ணதேவராயர் அரசவையிலிருந்த உலகப்புகழ்பெற்ற நகைச்சுவை உணர்வு அதிகமுடன் இருந்த அறிஞர் யார்?
தெனாலி ராமகிருஷ்ணா -- "பாண்டுரங்கா மகாத்யம்" என்ற நூலையும் எழுதியுள்ளார்.
Q4. நிர்வாக காரணங்களுக்காக விஜயநகர சாம்ராஜ்யம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது? நிர்வாகிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மண்டலம்/ராஜ்யம் -- மாகாணங்கள்
நாடு -- மாவட்டம்
ஸ்தலம் -- தாலுக்காக்கள்
க்ராமா -- கிராமங்கள்.
மண்டலேஸ்வரா/நாயகா -- ஆளுநர்.
கௌடா -- கிராம தலைவர்
நாயகா/பாலேகர் -- ராணுவத் தலைவர்
நாட ப்ரபு -- மாவட்டம் மற்றும் தாலுக்கா ராணுவ அதிகாரி.
Q5. விஜயநகர சாம்ராஜ்யத்தில் சாதி முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
விப்ருலு -- பிராமணர்கள். ஆசிரியர்கள், ஆசாரியர்கள்
ராஜூலு/ராச்சவரா -- ஆளும் வம்சத்தின் வம்சாவளிகள் (சூத்திரர்கள்)
மதிகாரத்லு/வைஷ்யா -- வணிகர்கள்
நளவாஜதிவாரு -- விவசாயிகளும் இதர தொழில் புரிபவர்களும்.
Q6. விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு விஜயம் செய்த வெளிநாட்டு யாத்திரிகர்கள் யாவர்?
இபின் பட்டுட்டா -- மொராக்கோ ஆப்பிரிக்கர்;
நிக்கோலோ டி காண்டி -- இத்தாலியர்;
அப்துர் ரஸாக் -- பாரசீகர்;
டொமிங்கோ பேஸ் -- போர்ச்சுகீசியர்
டுவார்ட் எட்வார்டோ பார்போசா -- போர்ச்சுகீசியர்
ஃபெர்னாட் நூநிஸ் -- போர்ச்சுகீசியர்.
Q7. நிக்கோலோ டி காண்டி என்ற இத்தாலிய யாத்திரிகர் யாருடைய காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்துக்கு விஜயம் செய்தார்?
தேவ ராயா 1
Q8. "கஜபெண்டகாரா" என்ற சிறப்புப்பட்டம் பெற்ற விஜயநகர மன்னர் யார்?
தேவராயா 2
Q9. சீனாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பிய விஜயநகர மன்னர் யார்?
புக்கா 1
Q10. விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வம்சத்தை வரிசைப்படுத்துக.
சங்கமா, சளுவா, துளுவா, அரவீடு.
Q11. கிருஷ்ணதேவராயர் ஆதரித்த மொழிகள் யாவை?
சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், தமிழ்
Q12. கிருஷ்ண தேவராயரின் சிறப்புப்பெயர் என்ன?
ஆந்திர போஜா
Q13. கிருஷ்ண தேவராயரின் சுய இலக்கிய படைப்புகள் யாவை?
"அமுக்தமால்யதா" -- தெலுங்கு-- அரசியலைப்பற்றி; " ஜம்பவதி கல்யாணம் " -- சமஸ்கிருதம்.
Q14. எந்த பஹ்மானிய வம்ச அரசர் தனது தலைநகரை குல்பர்காவிலிருந்து பிதார் க்கு மாற்றினார்?
அஹமது ஷா வாலி
Q15. பஹ்மானி வம்சம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
175 ஆண்டுகள்.
Q16. பஹ்மானி வம்ச ஆட்சி எப்போது நிறுவப்பட்டது?
கி.பி1347.
Q17. விஜயநகர சாம்ராஜ்யத்தின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது எது?
பெனுகொண்டா.
Q18. காவல் துறையினருக்கு ஊதியம் எந்த நிதி மூலம் வழங்கப்பட்டது?
இரவு விடுதிகள் மற்றும் விலை மாதர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து.
Q19. கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட ஆலயங்கள் யாவை?
விட்டலசாமி மற்றும் ஹசாரா ராமசாமி ஆலயங்கள், ஹம்பி, கர்நாடகா.
Q20. விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் இருந்த பெரிய நிர்வாக பகுதி என்ன?
மண்டலம்.
Q21. "வராஹா" என விஜயநகர காலத்தில் அழைக்கப்பட்டது என்ன?
தங்கக் காசுகள்.
Q22. கிருஷ்ணதேவராயர் நிர்மாணித்த நகரம் எது?
நாகலாபுரம்.
Q23. விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய சங்கமா சகோதரர்கள் எந்த வம்ச மன்னர்களிடம் பணி புரிந்தவர்கள்?
காகத்திய சாம்ராஜ்யம்.
Q24. பஹமானி மன்னர் ஃபிரோஸ்ஷா மற்றும் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இடையில் நடந்த போர் எவ்வாறு வர்ணிக்கப்பட்டது?
"பொற்கொல்லர் மகளின் போர்" “War of the Goldsmith’s daughter”
Q25. விஜயநகர ஆட்சியில் ராணுவத்துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
கந்தச்சாரா -- நாயகா இதன் தலைவராக.
Q26. விஜயநகர ஆட்சியில் குத்தகை முறை விவசாயம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
குட்டகாரி.
Q27. விஜயநகர ஆட்சி காலத்தில் நில வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
அஸ்தவானா.
Q28. விஜயநகர காலத்தில் கிராம கணக்காளர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
சேனா போவா அல்லது சண்போகா.
Q29. விஜயநகர காலத்தில் போலீஸ் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
காவல்கர்.
Q30. விஜயநகர சாம்ராஜ்யத்தின் அதிகமான ஏற்றுமதி பொருள் எது?
மிளகு (கருப்பு)
Q31. விஜயநகர மன்னர் அஸ்யுத தேவ ராயா காலத்தில் விஜயம் செய்த வெளிநாட்டு யாத்திரிகர் யார்?
ஃபெமாவ் நுநிஸ்
Q32. விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரவீடு வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
திருமல ராயா -- தலைநகரம் பெனுகொண்டா, ஆந்திரபிரதேசம்.
Q33. பஹ்மானியர்களிடமிருந்து, கோவா துறைமுகத்தைக் கைப்பற்றிய முதல் விஜய நகர மன்னர் யார்?
ஹரிஹரா 2
Q34. விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவிய சங்கம சகோதரர்களை முகமது பின் துக்ளக் கட்டாயப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றினார். பிறகு யாருடைய தூண்டுதலால் மீண்டும் இந்து மதத்திற்கு மாறினர்?
கம்பிலியில், டெல்லி சுல்தான்களுக்காக தங்களுடைய ஆட்சியை நிலை நிறுத்திய பிறகு, வித்யாரண்யா என்ற துறவியின் அறிவுரையின் பேரில், தங்களை சுதந்திரமாக அறிவுத்துக்கொண்டு, இந்து மதத்திற்கு மாறி, விஜயநகர் என்ற நகரத்தை உருவாக்கி, இந்த சாம்ராஜ்யம் உருவானது.
Q35. எந்த விஜயநகர மன்னர், பஹமானி ஃபிரோஸ் ஆல் தோற்கடிக்கப்பட்டு, ஒரு பெரிய தொகை கப்பமாக பெற்ற, அவருடைய மகளையும் திருமணம் முடித்தார்?
தேவராயா 1
Q36. விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட சங்கம வம்ச 4 மன்னர்களில் யார் மிகவும் சிறந்தவர் என கருதப்படுகிறார்?
தேவராயா 2
Q37. கிருஷ்ணதேவராயரால், கோவில்கொண்டா போரில், கொலை செய்யப்பட்ட அடில் ஷாஹி மன்னர் யார்?
யூசுஃப் அடில் ஷா.
Q38. 1511ல், கிருஷ்ணதேவராயருடன் நட்புறவு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்ட போர்ச்சுகீசிய ஆளுநர் யார்?
ஆல்பகுர்கு. Albuquerque.
Q39. விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்கம வம்ச மன்னர்களை வரிசைப்படுத்துக.
ஹரிஹரா 1, புக்கா 1, தேவராயா 1, தேவராயா 2, மல்லிகார்ஜூனார், ப்ரந்த தேவா.
Q40. விஜயநகர சாம்ராஜ்யத்தின் துளுவ வம்ச மன்னர்களை வரிசைப்படுத்துக.
வீர நரசிம்மா, கிருஷ்ண தேவா, அஸ்யுத தேவா, வெங்கடா, சதாசிவா.
Q41. வாரங்கல் பகுதியை ஆண்ட வம்சங்கள் யாவை? Which dynasties ruled over Warangal?
காகத்தியா, முன்சூரி நாயக், ரேச்சர்லா வேலமா.
Q42. பஹ்மானி வம்சத்தை நிறுவியவர் யார்?
அலாவுத்தீன் ஹசன் பஹ்மன் ஷா (ஹசன் கங்கு) -- 1347.
Q43. பீஜாப்பூரில் உள்ள புகழ்பெற்ற மிகப்பெரிய உருளைகூம்பு Gol Gumbaz கட்டியவர்?
முகமது அடில் ஷா -- அடில் ஷா வம்சம்.
Q44. பஹமானி சுல்தான்களின் ஆலோசகர்/அறிவுரையாளர் யார்?
மஹ்மூத் கவான்.
Q45. கோல்கொண்டா கோட்டையை கட்டியவர் யார்?
கூலி குதுப் ஷா -- குதுப் ஷாஹி வம்சம், கோல்கொண்டா.
Q46. ஹைதராபாத் நகரின் முக்கிய அடையாளமான "சார்மினார்" யாரால் கட்டப்பட்டது?
கூலி குதுப் ஷா -- ஹைதராபாத் நகரை நிறுவியவரும் இவரே.
Q47. கிருஷ்ணதேவராயர் விஜயநகர வம்சங்களில் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
சளுவா
Q48. நகைச்சுவையும் அறிவுக்கூர்மையும் நிறைந்த தெனாலிராமன் எந்த மன்னர் காலத்தில் வாழ்ந்தார்?
கிருஷ்ணதேவராயர்.
Q49. இல்யாஸ் ஷாஹி வம்சம் எந்த பகுதிகளை ஆண்டது?
வங்காளம்
Q50. ஆஹோம் வம்சம் எந்த பகுதிகளை ஆண்டது?
கிழக்கு இந்தியா -- குறிப்பாக அஸ்ஸாம் மற்றும் அதன் கிழக்கு பகுதிகள்.
Q51. இடைக்கால வரலாற்று காலத்தில் அஸ்ஸாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காம்ரூபா
Q52. புவனேஷ்வர் லிங்கராஜா கோவில் மற்றும் பூரி ஜகந்நாதர் கோவிலை கட்டியவர் ….Which dynasty/ruler built the Lingaraja temple at Bhubaneswar and the Jagannath Temple at Puri?
கிழக்கு கங்கா வம்ச அனந்தவர்மன் சோடா கங்கா.
Q53. கொனாரக் ல் சூரிய பகவான் கோவில் கட்டியவர் யார்?
நரசிம்மா 1 -- கிழக்கு கங்கா.
Q54. சூர்யவம்சி கஜபதி வம்சம் எந்த பகுதியை ஆண்டனர்?
ஒடிசா.
Q55. ஷர்கி வம்சம் எந்த பகுதிகளை ஆண்டனர்?
ஜான்பூர், உத்திரபிரதேசம்.
Q56. கெஹ்லாட் வம்ச ஆட்சி எந்த பகுதியை மையமாக ஆட்சி கொண்டிருந்தது?
மேவார், ராஜஸ்தான்.
Q57. கச்சாவாஹா வம்ச ஆட்சி எந்த இடத்தை மையமாகக் கொண்டிருந்தது?
ஆம்பர், (ஜெய்ப்பூர்) ராஜஸ்தான்.
Q58. ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் பகுதியை ஆண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
"பட்டி" “the Bhattis”.
Q59. காந்தேஷ் பகுதி எந்த நதியின் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது?
தபதி
Q60. அக்பர் ன் முழு இயற்பெயர் என்ன?
அப்துல் ஃபத் ஜலாலுத்தீன் முகமது அக்பர்.
Q61. முகலாய மன்னர்கள தங்களை எவ்வாறு அழைப்பதை மிகவும் விரும்பினார்கள்?
சகத்தாயிட்ஸ் -- Chaghatayids – செங்கிஸ் கான் அவர்களின் இரண்டாவது மைந்தன் சகத்தாய் நினைவாக.
Q62. பாபர் முகலாய வம்ச ஆட்சியை, யாரைத் தோற்கடித்து நிறுவினார்?
அடிமை வம்ச மன்னர் இப்ராஹிம் லோடி யை -- முதல் பானிபட் போர் 1526ல்
Q63. பாபரின் கல்லறை அமைந்துள்ள தோட்டத்தின் பெயர் என்ன?
பாக் எ பாபர், காபூல் (பாக் = தோட்டம்)
Q64. முகலாய சாம்ராஜ்ய ஆட்சியின் தொடர் ஆட்சியைத் தடுத்த வம்ச ஆட்சி எது?
சூர் வம்சம் -- ஷேர் ஷா சூரியால் நிறுவப்பட்டு 1540 முதல் 1555 வரை ஆட்சியிலிருந்தது.
Q65. ரூபையா (இப்போது ரூப்பி) என்ற நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஷேர் ஷா சூரி.
Q66. இந்தியாவின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் விதமாக வங்காளத்திலிருந்து பெஷாவர் வரை கிராண்ட் ட்ரங்க் சாலையை அமைத்தவர் யார்?
ஷேர் ஷா சூரி
Q67. சிறந்த நிர்வாகியான ஷேர் ஷா சூரி ஒரு விபத்தினால் மரணமடைந்தார். எவ்வாறு?
வெடி மருந்து விபத்து -- 1545ல்.
Q68. டெக்கான் பகுதியில் ஒரு அறிவு மையமாக விளங்குவதற்காக, பிதார் ல் ஒரு கல்லூரியை நிறுவியவர் யார்?
மகமூத் கவார் -- பஹமான் சுல்தான்களின் அறிவுரையாளர்.
Q69. ""நான் கபா விலோ அல்லது கைலாசத்திலோ இல்லை"". ""கடவுளே மூச்சு"" இந்த கூற்று யாருடையது?
கபீர்.
Q70. கவிஞர் கபீர் எழுதிய இருவரி கவிதைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
தோஹா.
Q71. கோவில் கொண்டா போரில் கிருஷ்ண தேவராயரால் கொலை செய்யப்பட்டவர் யார்? Who was killed by Krishna Deva Raya in the battle of Kovilkonda?
யூசுஃப் அடில் ஷா -- பீஜாப்பூர் அடில் ஷா வம்ச ஆட்சியை நிறுவியவர்.
Q72. எந்த முஸ்லீம் மன்னர் "காஷ்மீரின் அக்பர்" என அழைக்கப்பட்டார்?
ஸைனுலாபிதீன். Zainul Abideen.
Q73. எந்த முஸ்லீம் மன்னர் "சிலை உடைப்பவர் -- But-Shikan or Idol Breaker” எனப்பட்டார்?
சிக்கந்தர் ஷா --- ஷா மிர் வம்சம், காஷ்மீர். இவர் இந்துக்களுக்கு ஏற்படுத்திய கொடுமைகளினால் இவ்வாறு அழைக்கப்பட்டார்.
Q74. எந்த டெல்லி சுல்தானின் மறைவுக்குப் பிறகு, காந்தேஷ் பகுதி ஆளுநர் மாலிக் ஃபாருக்கி தன்னை சுதந்திர மன்னராக அறிவித்துக்கொண்டார்?
ஃபிரோஸ்ஷா துக்ளக்.
Q75. பஹமானி ராஜ்ய அரசவையை விஜயம் செய்த ரஷ்ய யாத்திரிகர் யார்?
நிகிடின் -- முகமது ஷா 3 ன் ஆட்சியின் போது (1463-1482).
Q76. புலவர் கபீர் அவர்களின் கல்லறை எங்குள்ளது?
மகர், உத்திரபிரதேசம். 1398-1448 காலத்தில் வாழ்ந்த துறவி/புலவர்.
Q77. "கீதாவாலி, கவிதாவாலி, வினய பத்ரிகா" இந்த நூல்களை எழுதியவர் யார்?
துளசிதாஸ் -- Tulsidas – 1532-1623 – முகலாயர் காலத்தில் வாழ்ந்தவர். "ராமச்சரிதமானஸ்" என்ற நூலையும் எழுதியவர்.
Q78. எந்த சுஃபி துறவி யின் தத்துவங்கள் அவுரங்கசீப்பை மிகவும் மனரீதியாக தூண்டியது?
ஷேக் அஹமத் சிர்ஹிந்தி
Q79. சளுவா வம்சத்தை நிறுவிய சளுவ நரசிம்மா முன்பு என்னவாக இருந்தார்?
சந்திரகிரி பகுதியின் முக்கிய அதிகாரியாக இருந்தவர்.
Q80. மஹ்மூத் கவான், எந்த பஹவான் சுல்தானின் ஆலோசகர் மற்றும் மந்திரியாக இருந்தார்?
முகமது ஷா 2
Q81. பஹமானி வம்ச காலத்தில் "தரஃப்தார்" “tarafdars” என அழைக்கப்பட்டவர் யார்?
மண்டல ஆளுநர்கள்.
Q82. 1420-1470 காலத்தில் காஷ்மீரை ஆண்ட ஸைனுலாபுதீன் எந்த வம்சத்தை சேர்ந்தவர்?
ஷா மிர் வம்சம்.
Q83. ராஜஸ்தானில் சித்தோர் ல் "கீர்த்தி ஸ்தம்பா" (தூண்) கட்டியவர் யார்?
இது ""வெற்றித் தூண்"" எனப்படும். மேவார் மன்னர் ராணா கும்பா வால் 1458ல் கட்டப்பட்டது. 37 மீட்டர் உயரமும், 9 அடுக்கு (மாடிகள்) கொண்டது.
Q84. அஹமதாபாத் நகரை நிறுவியவர் யார்?
அஹமது ஷா -- 1411ல் -- குஜராத்தின் சுல்தானாக இருந்தார். முஸாஃபரித் வம்சத்தை சேர்ந்தவர்.
Q85. ஒடிசா பகுதில் கஜபதி வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
கபிலேந்திரா.
Q86. இரண்டாம் பானிபட் போர் யாருக்கிடையில் எப்போது நடைபெற்றது?
1556 ல் அக்பர் -- ஹேமு இடையில் -- ஹேமு தோல்வி அடைந்தார். between Akbar and Hemu. Hemu was defeated.
Q87. மதுரையில் சுல்தானிய ஆட்சியை நிறுவியவர் யார்?
ஜலாலுத்தீன் அஹ்சான் -- Jalaluddin Ahsan – இந்த மன்னராட்சியை 1335ல் நிறுவி 1378 வரை ஆண்டார். மலபார் பகுதியின் ஆளுநகராக இருந்த இவர், முகமது பின் துக்ளக், நிதி நெருக்கடியையும் ஆட்சிப் பின்னடைவும் சந்தித்த போது, சில சுல்தானிய ஆளுநர்கள் தங்களை சுதந்திர மன்னர்களாக அறிவித்துக்கொண்ட போது, இவரும் ஒருவர்.
Q88. அக்பரின் பாதுகாவலர்/ஆலோசகர் ஆக இருந்த பைராம் கான் எவ்வாறு மறைந்தார்?
அக்பரின் மாற்றுத்தாயின் கட்டாயத்தின் அடிப்படையில் இவர் மெக்காவுக்கு புனித யாத்திரை செல்லும் போது, வழியில் 1561ல் குஜராத்தின் பத்தான் என்ற இடத்தில் ஒரு ஆப்கான் வீரரால் கொலை செய்யப்பட்டார்.
Q89. 1572ல் குஜராத்தை வென்ற பிறகு அக்பர் எவ்வாறு கொண்டாடினார்?
ஃபத்தேஹ் பூர் சிக்ரி என்ற நகரம் மற்றும் புலந்த் தர்வாஸா என்ற நினைவுச் சின்னத்தையும் நிறுவினார்.
Q90. 1576 ஹல்திகாட்டி போர் யாரிடையே நடந்தது?
அக்பருக்கும், மேவார் மன்னர் ராணா ப்ரதாப் இடையில் நடை பெற்றது. (அக்பர் படையை மான் சிங் என்ற தளபதி முன்னின்று போரை நடத்தினார்)
Q91. ராஜபுத்ர வம்சத்துடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள அக்பர் யாரை மணந்தார்?
ஹீரா குன்வாரி -- HIRA KUNWARI – ராஜபுத்ர ஆம்பர் மன்னர் ராஜா பராமல் மகள். (அக்பருக்கு 36 மனைவிகள்)
Q92. அக்பர் அரசவையில் இருந்த கிறித்துவ மத போதக உறுப்பினர் யார்?
பாதிரியார் மான்சரேட் Father Monserrate – போர்ச்சுகீசியர் - 1580-1583ல் அக்பர் அரசவையில் இருந்தார்.
Q93. அக்பரால் உருவாக்கப்பட்ட மதத்தின் பெயர் என்ன?
தீன் இலாஹி -- Din-I- Ilahi – அக்பரின் மறைவுக்குப் பிறகு இந்த மதம் தானாகவே அழிந்தது.
Q94. அக்பரின் சுயசரிதை மற்றும் அரசியல் வாழ்க்கையைப் பற்றிய நூலின் பெயர் என்ன?
அக்பர் நாமா -- Akbar Nama – சுய சரிதை; அயினி அக்பரி -- அரசியல் வாழ்க்கை. எழுதியவர் அபுல் ஃபசல் - அக்பரின் ஆலோசகர்.
Q95. அக்பரின் முக்கிய ஆலோசகர் அபுல் ஃபசல் எவ்வாறு மறைந்தார்?
பீர் சிங் என்ற பண்டேலா பழங்குடி இன தலைவரால் 1602ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை ஏற்பாட்டை செய்தவர் ஆம்பர் பகுதி மன்னர் ராஜா பகவான் தாஸ்
Q96. அக்பரின் மறைவு எப்போது ஏற்பட்டது?
1605 - ல் நோய் வாய்ப்பட்டு மறைந்தார் -- சிகந்த்ரா (பாகிஸ்தான்) என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
Q97. ஜஹாங்கீர் க்கு சலீம் என்ற இயற்பெயர் இடக் காரணம் என்ன?
இஸ்லாமிய சுஃபி என்ற மத நம்பிக்கை துறவி ஷேக் சலீம் சிஸ்டி அக்பர் குழந்தைச் செல்வம் பெற ஆசீர்வதித்ததால்.
Q98. ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன?
உலகை வென்றவர்.
Q99. ஜஹாங்கீர் ன் முழுப்பெயர் என்ன?
மிர்ஸா நூருத்தின் பெய்க் முகமது கான் சலீம்
Q100. ஜஹாங்கீரைத் தவிர்த்து, அக்பரின் மற்றொரு மைந்தனின் பெயர் என்ன?
குஸ்ரூ.
Q101. Tuzuk-i-Akbari துஸூக் எ அக்பரி என்ற தனது வாழ்நாள் நினைவுகளை அக்பர் எந்த மொழியில் எழுதினார்?
துருக்கிய மொழி.
Q102. போர்ச்சுகீசியர்களுடன் ஒரு கப்பலில் பேச்சுவார்த்தை நடத்தும் போது கடலில் தவறி விழுந்து இறந்த குஜராத் சுல்தான் (அக்பரின் சமகாலத்தில் இருந்தவர்) யார்?
பகதூர் ஷா. குஜராத்தை 1526 - 1537 வரை குஜராத்தை ஆண்டார்.
Q103. அக்பருடன் 1556ல் இரண்டாம் பானிபட் போர் புரிந்த ஹேமு என்பவர் யார்?
சூரி வம்ச மன்னர் முகமது அடில் ஷாவின் கீழ் இருந்த முக்கிய ராணுவ தளபதி -- ஒரு இந்து.
Q104. யாருடைய ஒழுங்கீனச் செயல், பைராம் கான் ஐ அக்பரை எதிர்க்க தூண்டியது?
பீர் முகமது.
Q105. ஜஹாங்கீர் மனைவிகளில் நூர் ஜஹான் ஒருவர். அவர் அதற்கு முன்பு யார்?
வங்காள கவர்னருக்கு எதிரான போரில் மறைந்த வீரர் ஷேர் ஆப்கான் ன் விதவை -- மெஹர் உன்னிசா. ஜஹாங்கீரை மணந்த பிறகு நூர் ஜஹான் என பெயர் பெற்றார். ஷேர் ஆப்கான் வங்காளத்தின் புர்த்வான் பகுதியின் ஆளுநகராக இருந்தவர். அவருடைய முழுப் பெயர் அலி கூலி இஸ்தாஜ்லு.
Q106. எந்த ராஜபுத்ர மன்னர்கள், முதன் முதலில் அக்பர் இடம் சரணடைந்து அவரது ஆட்சியை ஏற்றுக் கொண்டனர்?
கச்சாவாஹா வம்சம், இராஜஸ்தான்.
Q107. 1576 ஹல்திகாட்டி போரில் முகலாயருக்காக போரில் முன் நின்று போரிட்ட தளபதி யார்?
மான் சிங்
Q108. முகலாயர் காலத்தில் "பந்தோபஸ்து முறை" என்ற வருவாய் விதிமுறை என்பது என்ன?
ஜப்தி என்ற கையகப்படுத்துதல் முறை. Zabti.
Q109. விதவைகள், மற்றும் "சத்தி" முறையுடன், அக்பருக்கு அளிக்கப்படும் கௌரவம் என்ன?
அக்பர் சத்தி பழக்கத்தை தடுத்தார். ஆனால், விதவை தானாகவே முன் வந்து அந்த பழக்கத்தை ஏற்பதாயிருந்தால் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
Q110. ஜஹாங்கீர் எத்தனை முறை திருமணம் முடித்தார்?
20 முறை.
Q111. ஜஹாங்கீரின் எந்த மனைவிக்கு ஷா ஜஹான் பிறந்தார்? (ஷா ஜஹானின் தாயார் யார்?)
ஜகத் கொசெய்ன் -- ஒரு ராஜபுத்ர வம்ச இளவரசி.
Q112. ஷா ஜஹான் தொடக்கத்தில் என்ன பெயரிடப்பட்டார்?
குர்ரம்.
Q113. ஜஹாங்கீர் ன் எந்த மகன் வாரிசு சண்டையில் ஈடுபட்டார்?
குஸ்ரூ -- 1606ல்.
Q114. எந்த சீக்கிய மத குரு ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டார், காரணம் என்ன?
குரு அர்ஜன் தேவ் (5வது குரு) -- குஸ்ரூவுக்கு சாதகமாக இருந்ததாலும், இஸ்லாமியத்திற்கு மாற மறுத்ததினாலும். ஆனால், குரு அர்ஜன் தேவின் மறைவைப் பற்றி வரலாற்று நிபுணர்களின் கூற்றுகள் பல விதங்களில் உள்ளன.
Q115. ஆங்கிலேயர்களுக்கு சூரத்தில் வணிகம் புரிய வணிக உரிமை அளித்த முதல் முகலாய மன்னர் யார்?
1613ல் ஜஹாங்கீர். ஆங்கிலேய வணிகர் குழுவின் தலைவராக இருந்தவர் கேப்டன் ஹாக்கின்ஸ். 1609 லேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், போர்ச்சுகீசியர்கள் இதை எதிர்த்து, ஆங்கிலேயர்களுடன் 1612ல் போர் நடத்தியதாலும் இந்த அனுமதி வழங்குவதில் (1613 வரை) தாமதம் ஏற்பட்டது. இந்தப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.
Q116. ஜஹாங்கீர் எங்கு மறைந்தார், எங்கு அவர் கல்லறை உள்ளது?
1627ல், காஷ்மீரில் பிம்பார் என்ற இடத்தில் மறைந்த அவர், லாகூரின் அருகில் ஷாஹாதாரா என்ற இடத்தில் தில்குஷா தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ளார்.
Q117. ஜஹாங்கீர் ன் வாழ்க்கைச் சரித்திரத்தின் பெயர் என்ன?
துஸூக் இ ஜஹாங்கீரி. Tuzuk-i-Jahangiri.
Q118. ஜஹாங்கீரின் அரசவைக்கு வந்த ஆங்கிலேய தூதுவர் யார்?
சர் தாமஸ் ரோ -- இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் 1 ன் தூதுவராக வந்தார். 1615ல் ஜஹாங்கீர் அரசவைக்கு வந்து 1618 வரை தங்கியிருந்தார். அந்த காலத்தில், பல பகுதிகளில் தங்களது வணிக தொழிலகங்களை தொடங்க அனுமதி பெற்றார். 1619ல் இங்கிலாந்துக்கு திரும்பி சென்றார்.
Q119. ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் பொருள் எது?
புகையிலை.
Q120. ஜஹாங்கீர் எந்த ஆங்கிலேயர் க்கு "கான்"“Khan” என்ற சிறப்பு பெயர் அளித்தார்?
ஹாக்கின்ஸ் Hawkins – இவர் தான் ஜஹாங்கீரை 1609ல் சந்தித்து வணிக உரிமம் பெற்றார்.
Q121. ஹூமாயுன் யாரை மணந்தார், அவர்களுக்கு பிறந்த மைந்தன் பெயர் யார்?
ஹமீத் பானு பேகம் -- அக்பர் -- 1542ல் அமர்கோட் என்ற இடத்தில் பிறந்தார்.
Q122. ஹூமாயுனுக்கு மன்னர் பதவியைப் பறிக்க உதவிய அவருடைய நம்பிக்கையான தளபதி யார்?
பைராம் கான்.
Q123. ஹூமாயுன் ன் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதியவர் யார்?
ஹூமாயுன் நாமா -- அவருடைய தமக்கை குல்பதன் பேகம் ஆல் எழுதப்பட்டது.
Q124. ஹூமாயுன் ன் கல்லறை எங்குள்ளது?
நிஸாமுத்தீன், டெல்லி. முகலாய கட்டிடக்கலை நிறைந்த ஒரு கட்டுமானம். 1993 முதல் இது ஒரு உலக புராதனச் சின்னம்.
Q125. ஹூமாயுன் ன் வாழ்க்கை/மரணம் எவ்வாறு வர்ணிக்கப்பட்டது?
"வாழ்க்கையில் கரணம் போட்டார், கரணம் போட்டு வெளி வந்தார்“ "Tumbled in life and tumbled out of it”
Q126. முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் யார்?
பகதூர் ஷா ஸாஃபர் 2 -- (1837 to 1857).
Q127. பகதூர் ஷா ஸாஃபர் ன் கல்லறை எங்குள்ளது?
ஷ்வேடகாவ்ன் பகோடா, யாங்கோன் (ரங்கூன், மியான்மார்) .1857 புரட்சிக்குப் பிறகு, இவர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு, சிறைவாசத்திலிருந்து 1862ல் மறைந்தார்.
Q128. முகலாய காலத்து "ஜாகிர் Jagir" டெல்லி சுல்தானிய காலத்தில் சமநிலை என்ன?
இக்தா.
Q129. முகலாய காலத்து எந்த மந்திரி, ஊதியம் வழங்கும் உயர் அதிகாரியாக pay master general வும் இருந்தார்?
மீர் பக்ஷி
Q130. முகலாய காலத்து "ஹரகாரா" எனப்பட்டவர்கள் யார்?
உளவாளிகள் மற்றும் சிறப்பு தபால் சிப்பந்திகள்.
Q131. அக்பர் காலத்திலும், அவுரங்கசீப் காலத்திலும் எத்தனை மாகாணங்கள் இருந்தன?
அக்பர் 15 ; அவுரங்கசீப் 21.
Q132. முகலாய காலத்து "தனாப்" “tanab” என்பது என்ன?
நில அளவைக்கான ஒரு அளவு கோல். மூங்கில் கொம்புகள், இரும்பு வளையங்களால் இணைக்கப்பட்டது.
Q133. முகலாயர் காலத்தில் "ஜாஜ்மானி" “Jajmani” முறை என்பது என்ன?
விவசாயிகளுக்கும் இதர தொழில் பிரிவினருக்கும் இடையில் இருந்த பகிர்வு முறை.
Q134. முகலாயர் காலத்து எந்த கல்லறை, தாஜ்மஹாலைப் போலவே உருவாக்கப்பட்டு, முதல் முறையாக ஒரு அழகிய தோட்டத்தின் நடுவில் அமைக்கப்பட்டது?
டெல்லியில் உள்ள ஹுமாயுன் கல்லறை.
Q135. முகலாய காலத்து எந்த கலைநய கட்டுமானம், நீளம் மற்றும் அகலத்தில் ஒரே அளவு கொண்டது?
ற்
Q136. முகலாயர் காலத்தில், புகழ் பெற்ற ""மயில் அரியணை"" “Peacock Throne” வைக்கப்பட்டிருந்தது?
டெல்லி செங்கோட்டையின் "திவான் இ ஆம்" அறையில் வைக்கப்பட்டிருந்தது.
Q137. முகலாயர் காலத்து எந்த மசூதி, "முத்து மசூதி " என அழைக்கப்பட்டது?
மோதி மசூதி
Q138. அவுரங்கசீப் ன் ஆட்சியைப் பற்றி எழுதப்பட்ட நூல் எது?
"முதாகாப் உல் லுபாப்" “Mutakhab-ul-Lubab” -- கஃபி கான் என்பவரால் எழுதப்பட்டது.
Q139. மகாபாரதத்தின் பாரசீக் மொழி பெயர்ப்பின் பெயர் என்ன?
" ரஸ்ம் நாமா " -- அக்பர் காலத்தில் எழுதப்பட்டது.
Q140. முகலாய ஆட்சியின் சிறந்த மன்னர்களை வரிசைப்படுத்துக.
பாபர், ஹூமாயுன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப்.
Q141. முகலாயர்கள் காலத்தில் விஜயம் செய்த ஃப்ரான்ஸ் நாட்டு யாத்திரிகர்கள் யாவர்?
பெர்னியர், தெவெனாட், தாவேர்னியர்.
Q142. பாபர் ஐ, இந்தியா மீது படையெடுக்கத் தூண்டியவர்கள் யார்?
மேவாரின் ரண சங்கா, தௌலத் கான் லோதி மற்றும் ஆலம் கான் லோதி.
Q143. அக்பரின் தனித்த புதுமையாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிமுறைகள் என்ன?
ஜப்தி மற்றும் தஹ்சாலா.
Q144. 1656-1658 காலத்தில் பதவிக்காக வாரிசுச்சண்டை போட்டுக்கொண்ட ஷா ஜஹானின் நான்கு மைந்தர்கள் யார்?
தாரா சிக்கோ, ஷூஜா, முரத் மற்றும் அவுரங்கசீப்.
Q145. ஷா ஜஹான் புதல்வர்களுக்கிடையில் நடந்த வாரிசுச் சண்டையில், தாரா சிக்கோ வுக்கு உதவியாக போரிட்டவர் யார்?
ராஜா ஜஸ்வந்த் சிங், ஜோத்பூர்.
Q146. உள்சண்டையின் போது, தாரா சிக்கோ படையில் இருந்த இத்தாலிய வீரர் யார்?
மனுக்கி -- Manucci.
Q147. உள்சண்டையின் போது, அவுரங்கசீப்புக்காக அவருடைய ராணுவத்தில் பணியில் ஈடுபட்ட ஃப்ரான்ஸ் நாட்டு யாத்திரிக வீரர் யார்?
பெர்னியர்.
Q148. அக்பரின் சம காலத்தில் வாழ்ந்த வரலாற்று அறிஞர்கள் யாவர்?
அபுல் ஃபஸல், பதௌனி, முல்லா தௌத், நியமுத்தீன் அஹமத்.
Q149. முகலாய கட்டிடக் கலையின் முக்கிய அம்சங்கள் யாவை?
1. பாரசீக பிரம்மாண்ட கலையுடன் இந்திய கலைநயமும் கலந்தது.
2. சாம்ராஜ்யம் ஒரே மாதிரியான கலை நயமும் நுணுக்கமும் கைப்பற்றப்பட்டது.
3. தோட்டங்களின் நடுப்பகுதியில் உயர மேடையில் கல்லறைகள் அமைப்பது.
4. கட்டுமானங்களின் வெளிப்புறத்திலும் உட்பகுதியிலும் கூம்பு (dome) அமைபது.
5. நான்கு மூலைகளிலும் தூண்களின் மீது கோபுர வடிவ அமைப்புகள் (Cupolas) 6. அரண்மனையின் நடுப்பகுதியில் மிகப்பெரிய கலை நயத்துடன் கூடிய அரங்கம்/மண்டபம் அமைப்பது. (halls)
7. மிகப் பெரிய முகப்பு வாயில் கதவுகள்.
Q150. ஃபத்தேஹ் பூர் சிக்ரி நகரம் முகலாய கட்டிடக்கலைக்கு புகழ் பெற்றது. அங்குள்ள முகலாய காலத்து கலைநய கட்டுமானங்கள் யாவை?
1. சுஃபி துறவி சலீம் சிஸ்டி ன் கல்லறை
2. உயர்த்தப்பட்ட கதவு -- புலந்த் தர்வாஸா
3. மரியம் மற்றும் சுல்தானா அரண்மனைகள் Palaces of Mariam and Sultana.
4. பஞ்ச் மஹால் --Panch Mahal.
Q151. ஹூமாயுனுடன் இந்தியாவுக்கு வந்து, முகலாய கட்டுமானங்களின் வண்ணம் தீட்டும் பணியை கவனித்த பாரசீக வண்ணக் கலை நிபுணர்கள் யாவர்?
சய்யித் அலி தப்ரேஸி மற்றும் அப்துஸ் சமத்.
Q152. ஷாஜஹான் ன் மைந்தர் தாரா ஷிக்கோ வின் இலக்கிய படைப்புகள் யாவை?
சஃபினத் உல் அவுலியா Safinat-ul-auliya;
சகினல் உல் அவுலியா Sakinal-ul-auliya;
ஹசனல் உல் ஆரிஃபின் Hasanal-ul-arifin மற்றும்
மஜ்மா உல் பஹ்ரைன் Majma-ul-bahrain.
Q153. பாபரின் சொந்த ஊர்/நகரம் எது?
உஸ்பெகிஸ்தான் ல் ஃபெர்கானா பகுதி.
Q154. குஜராத் மன்னர் பகதூர் ஷா வுக்கு, சித்தோர் கோட்டையைத் தாக்க உதவிய துருக்கிய பொறியாளர் யார்?
ருமி கான்.
Q155. எந்த போருக்குப் பிறகு ஹூமாயுன் தப்பித்து எங்கு சென்று தஞ்சம் புகுந்தார்?
1540 வங்காளத்தில் பில்க்ராம் என்ற இடத்தில் ஷேர் கானுடன் நடந்த போருக்கு பிறகு ஆக்ராவுக்கு தப்பித்துச் சென்றார்.
Q156. "பாபர் நாமா = துஸூக் இ பாபரி" நூலை பாரசீகத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
அப்துர் ரஹீம் -- இந்த நூல் துருக்கிய மொழியில் எழுதப்பட்ட பாபரின் வாழ்க்கைச் சரித்திரம்.
Q157. இந்தியாவில் முகலாய ஆட்சியை மீண்டும் நிறுவ, ஹூமாயுனுக்கு 12000 போர் வீரர்களை கொடுத்து உதவிய பாரசீக மன்னர் யார்?
ஷா தமாஸ்ப்.
Q158. அக்பரின் மேற்பார்வையாளர்/ஆலோசகர் பைராம் கான் ஐ அகற்றுவதற்கு சதித் திட்டம் தீட்டியவர் யார்?
"அத்கா கைல்" “Atkah Khail” என அழைக்கப்பட்ட அக்பரின் உறவினர்கள் அடங்கிய குழு.
Q159. ஒடிசாவில் ஆப்கானிய ஆட்சியை ஒடுக்கியவர் யார்?
மான் சிங் -- Man Singh. அக்பரின் நம்பிக்கையான தளபதி.
Q160. அக்பருடன் பேச்சு வார்த்தை நடத்திய கிறித்துவ மத போதகர் யார்?
அந்தோனி மான்ஸர்ரேட் -- போர்ச்சுகீசியர்.
Q161. "தபாகத் இ அக்பரி" "Tabaqat-i-Akbari" என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்?
நிஸாமுத்தீன் அஹமத். அக்பரின் அரசவையில் இருந்தவர்.
Q162. ஜஹாங்கீர் காலத்தில் கந்தஹார் பகுதியின் மீது படையெடுத்த பாரசீக மன்னர் யார்?
ஷா அப்பாஸ்.
Q163. எந்த போருக்குப் பிறகு ஹூமாயுன் தப்பித்து கங்கையை கடந்து சென்றார்?
சௌசா போர் -- 1539ல் ஷேர் ஷா சூரியுடன் நடந்த போர்.
Q164. ஜஹாங்கீர் மைந்தர் இளவரசர் குஸ்ரூ வுக்கு நிதி உதவியும் பிரார்த்தனைகளும் செய்து உதவிய சீக்கிய மத குரு யார்?
அர்ஜன் தேவ்.
Q165. முகலாய மன்னர்களுள் மிகச்சிறந்த கவிஞர் எனக் கருதப்படுபவர் யார்?
பாபர்.
Q166. முகலாய மன்னர்களுள் ராஜபுத்திர தாய்களுக்கு பிறந்ததால் பகுதி ராஜபுத்திரர்கள் என அழைக்கப்படுகின்றனர்?
ஜஹாங்கீர் மற்றும் ஷாஜஹான்.
Q167. ஜஹாங்கீர் அரசவைக்கு விஜயம் செய்த முதல் ஆங்கிலேயர் யார்?
கேப்டன் ஹாக்கின்ஸ்.
Q168. இந்தியாவுக்கு வந்த முதல் கப்பல் ன் பெயர் என்ன?
ரெட் ட்ராகன் -- Red Dragon.
Q169. அக்பர் ஒரு இசைக்கருவி வாசிப்பதில் வல்லுநர். அது எது?
நக்காரா -- Nakkarah. விலங்குகள், உதாரணம் ஒட்டகம், போன்ற மிருகங்களின் மீது ஏற்றிச் செல்லும்படியான மிகப் பெரிய அளவிலான பேரிகை (மத்தளம் போன்ற) ஒரு இசைக்கருவி. மங்கோலியர்கள் மற்றும் பாரசீகர்கள் பயன்படுத்துவது.
Q170. ""சியாஹி"" “Siyahi” என்ற புதிய முறையான வண்ணம் தீட்டும் முறையை அறிமுகப்படுத்திய முகலாய மன்னர் யார்?
ஷ்ா ஜஹான்.
Q171. முகலாயர் காலத்து ""ஜப்தி"" “Zabti” முறையில், வேளாண் உற்பத்தியில் எவ்வளவு அரசாங்க பங்காக நிர்ணயம் செய்யப்பட்டது?
மூன்றில் ஒரு பங்கு.
Q172. யாரை கௌரவிக்கும் வகையில், அக்பர் ஃபத்தேஹ்பூர் சிக்ரி என்ற நகரத்தை உருவாக்கினார்?
இஸ்லாமிய மத சுஃபி கோட்பாட்டு துறவி சலீம் சிஸ்டி.
Q173. ஜஹாங்கீருக்கு நம்பிக்கையாக இருந்த ஒரு தளபதி, பிற்காலத்தில் அவரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். அவர் யார்?
1626ல் மஹபத் கான் ஜஹாங்கீருக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினார். நூர் ஜஹானின் கபட செயல்கள் காரணமாக.
Q174. "நீதிச் சங்கிலி" “Chain of Justice” என்ற முறையை அறிமுகப்படுத்திய முகலாய மன்னர் யார்?
ஜஹாங்கீர். இது சுமார் 80 அடி நீளமும், 60 மணிகள் அடங்கிய தங்க சங்கிலி. குறைகள் தீர்க்கப்படாத போது, மக்கள் இந்த சங்கிலியை அசைத்து ஓசை எழுப்பி மன்னரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நிறுவப்பட்டது.
Q175. அவுரங்கசீப் அநேக இந்து கோவில்களை அழித்ததாக சரித்திரம் கூறுகிறது. அந்த வகையில் தப்பிய முக்கிய கோவில் எது?
ஒடிசாவில் பூரி நகரில் உள்ள ஜகந்நாதர் கோவில்.
Q176. "12 அரசாணைகள்" “twelve edicts” என்ற தொடர் எந்த முகலாய மன்னருடன் சம்பந்தப்பட்டது?
ஜஹாங்கீர்.
Q177. முகலாயர் காலத்தில், ஒரு நகர காவல் துறை முக்கிய அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கோட்வால்.
Q178. முகலாயர் காலத்தில், இந்தியாவுக்கு 6 முறை விஜயம் செய்து, இந்தியாவைப் பற்றி ஒரு நூலை எழுதிய ஃப்ரான்ஸ் நாட்டு யாத்திரிகர் யார்?
டாவெர்னியர் -- TAVERNIER. ஷா ஜஹான் காலத்தில் விஜயம் செய்தார். இவர் எழுதிய நூலின் பெயர் "6 பயணங்கள் Six voyages” .
Q179. அக்பர் காலத்து புகழ் பெற்ற வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்/கள் யார்?
சூர்தாஸ், பைஜூ பாவ்ரா, ராமதாஸ்.
Q180. முகலாயர் காலத்தில் ஓவியத்தைப் பற்றி எழுதப்பட்ட நூல் எது?
ஹம்சா நாமா.
Q181. எந்த வெளிநாட்டு மருத்துவர், எந்த முகலாய மன்னரின் பிரத்தியேக மருத்துவராக பணி செய்தார்?
ஃப்ராங்காய்ஸ் பெர்னியர் -- அவுரங்கசீப்பின் பிரத்தியேக மருத்துவர்.
Q182. எந்த முகலாய மன்னர் தனது அரசவையில் மராத்தியர்களை சேர்த்துக் கொண்டார்?
ஜஹாங்கீர்.
Q183. எந்த முகலாய மன்னர் இந்தி மொழியில் பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவராக இருந்தார்?
ஜஹாங்கீர்.
Q184. முகலாயர்கள் காலத்தில் "முராக்கா" “Muraqqas” எனப்பட்டது என்ன?
சிறிய அளவிலான ஓவியங்களின் தொகுப்பு ஏடு. Albums.
Q185. முகலாயர்கள் காலத்தில் "ஜாகிர்" “Jagir” என்பது என்ன?
ஒரு நில அளவை.
Q186. முகலாயர்கள் காலத்தில் "மன்சப்தார்" “Mansabdars” என அழைக்கப்பட்டவர் யார்?
முகலாயர்கள் காலத்தில், ஊதியத்திற்கு பதிலாக "ஜாகிர்" முறையில் நிலங்களைப் பெற்றவர்கள்.
Q187. முகலாயர்கள் காலத்தில் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த முதல் வெளிநாட்டவர்கள் யார்?
போர்ச்சுகீசியர்கள். 1498ல் வாஸ்கோடகாமா காலிகட் என்ற கேரள கடற்கரைப்பகுதியில் வந்திறங்கினார். அதற்குப் பிறகு, பெட்ரோஸ் ஆல்வாரெஸ் காப்ரால் என்பவர் 1500ல் வந்த போது எதிர்ப்புகள் இருந்த போதிலும், 1502ல் வாஸ்கோட காமா மீண்டும் வந்து வணிக முயற்சியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கம் சிறு அளவில் தொடங்கியது.