Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. மராத்தா சாம்ராஜ்யத்தை நிறுவியவர் யார்?
சிவாஜி போஸ்லே.
Q2. சிவாஜியின் பிறப்பிடம் எது, அவருடைய பெற்றோர்கள் யாவர்?
19.2.1627ல், ஜூன்னார், பூனேவுக்கு அருகில், ஷிவ்னேனி கோட்டையில், ஷஹாஜி ராஜே போஸ்லே மற்றும் ஜீஜாபாய் தம்பதிக்கு பிறந்தார். உள்ளூர் பெண்தெய்வமான ஷிவாய் பெயரில் இவருக்கு சிவாஜி என்ற பெயரிடப்பட்டது.
Q3. மராத்தா சாம்ராஜ்யத்தை சிவாஜி நிறுவிய பின்னணி என்ன?
1637ல் சிவாஜியின் தந்தை தனது மறைவின் போது பூனேவுக்கு அருகில் ஒரு சிறு இடத்தை விட்டுச் சென்றார். சிவாஜி அப்போது இளவயதினராய் இருந்ததால், 1647 வரை அவருடைய உறவினர் தாதாஜி கொண்டா தேவ் என்பவரின் மேற்பார்வையில் வளர்ந்து வந்தார். 1645 லேயே பதவிக்குறிய வயதை எட்டிய போதும், தனது உறவினர் மறைவு வரை காத்திருந்து, பிறகு, சிவாஜி நிர்வாகத்தை கையெடுத்து, அருகில் உள்ள பகுதிகளையும் கைப்பிடித்து, 1674ல் இந்த சாம்ராஜ்யத்தை நிறுவினார்.
Q4. பதவியேற்கும் முன் ""சுயராஜ்யம்"" “Swarajya” தேவை என்ற சபதத்தை எந்த இடத்தில் சிவாஜி மேற்கொண்டார்?
பூனே வுக்கு அருகில் ராய்ரேஷ்வர் என்ற இடத்தில் உள்ள கோவிலில் 16 வயதில் இந்த சபதமேற்றார்.
Q5. சிவாஜியின் காலத்தில் மராத்தா சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது எது?
ராய்காட், மகாராஷ்டிரா. இந்த பகுதி அவரால் வெல்லப்பட்ட பகுதி. 1645-1647 களில்.
Q6. சிவாஜியின் ராணுவ வெற்றிகள் யாவை?
1. ராய்கார், கொண்டானா, தோமா பகுதிகளை பீஜாப்பூர் ராஜ்யத்திடமிருந்து 1645-1647 காலங்களில் தனது 18 வயதில் கைப்பற்றினார்.
2. ஜாவ்லி, மகாராஷ்டிரா பகுதியை மராத்திய வீரர் சந்தா ராவ் என்பவரிடமிருந்து 1656 ல் வென்று மாலவா என்ற ஒரு பெரும் பகுதிக்கு மன்னராகி, அந்த ராணுவத்தையும் சேர்த்து ஒரு பெரிய நடை ராணுவத்தை உருவாக்கினார்.
3. 1659 -- ப்ரதாப்கார் போர் -- 1657-58 களில் அடில் ஷாஹி வம்ச பகுதிகளை கைப்பற்றியிருந்தார். அதற்காக, பழிவாங்கும் எண்ணத்துடன், அடில் ஷா, தனது படையை அஃப்சல் கான் தலைமையில் அனுப்பி வைத்தார். சிவாஜி இந்தப் போரில் அஃப்சல் கானை கொன்று, சுமார் 200 கி.மீ தூர அடில் ஷா பகுதிகளைக் கைப்பற்றினார்.
4. கோலாப்பூர் போர் -- டிசம்பர் 1659 -- பீஜாப்பூர் ராஜ்யத்தின் மீது படையெடுத்து ருஸ்தம் ஜமான் என்ற தளபதியைத் தோற்கடித்து பல பகுதிகளைக் கைப்பற்றினார். Immediately after Pratapgarh battle, this one took place in December 1659. This battle was against the Bijapur kingdom led by Rustem Jaman and again Shivaji won the battle.
5. பவன் கிண்ட் போர் -- 1660 – பன்ஹாலா கோட்டையில் சிவாஜி தங்கியிருந்த போது, அடில் ஷாஹி படை சித்தி ஜோகத் என்ற தளபதியின் தலைமையில் திடீரென சிவாஜி மீது தாக்குதல் நடத்தியது. எதிர் பாராததினால், சிவாஜி தன் படைகளுடன் தப்பிச் சென்று, விஷால்காட் கோட்டைக்குள் தஞ்சம் புகுந்தார். அதே சமயம் அவுரங்கசீப்பின் டெக்கான் பகுதி ஆளுநர் சைஷ்டா கான் வட பகுதியிலிருந்து தாக்குதலைத் தொடர்ந்தார். இதனால் சிவாஜி தனது சிறந்த தளபதி பாஜி ப்ரபுதாஸ் பாண்டே என்பவரை இழந்தார். இந்த நிகழ்ச்சிகள் 1660-63 காலத்தில் நடைபெற்றது. தோல்வியைக் கண்ட சிவாஜி, தைரியமாக சைஷ்டா தங்கியிருந்த வேகத்துடன், ஒரு திருமண ஊர்வல வேடத்தில் சென்று தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி, பூனே நகரிலிருந்து சைஷ்டா கானை துரத்தி, பூனே வை கைப்பற்றினார்.
6. 1664 – சைஷ்டா கான் தனது பகுதிகளில் தாக்குதலின் போது கொள்ளையடித்து சென்றதிற்கு பதிலடி கொடுக்கு வகையில், சூரத் ஐ தாக்கி நிறைய சொத்துக்களை சிவாஜியும் எடுத்துச் சென்றார்.
7. 1665 – அவுரங்க சீப், தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஆம்பர் பகுதி தளபதி மிர்ஸா ராஜே ஜெய்சிங் ஐ சிவாஜியைத் தாக்கும்படி கூறவே, அந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிவாஜி சமாதானம் கோரி, புரந்தர் என்ற இடத்தில் சமாதான உடன்படிக்கை, கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் ஏற்படுத்திக் கொண்டார் -- (1) சிவாஜி தனது 23 கோட்டைகளையும் அதன் சுற்றியுள்ள பகுதிகளையும் சரணடையச்செய்ய வேண்டும். (2) சிவாஜிக்குண்டான பகுதிகளை, பீஜாப்பூர் ஐயும் சேர்த்து ஆளவும், பிற பகுதிகளை கைப்பற்றவும் உரிமை அளிக்கப்பட்டது. (3) சிவாஜியின் மைந்தன் பேரில் 5000 மன்சப்தார்கள் அளிக்கப்படவேண்டும்.
8.1666 – அவுரங்கசீப்பின் 50வது பிறந்தநாள் விழாவுக்கு, அழைப்பின் பேரில் சிவாஜி சென்ற போது, அவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து சில நாட்களிலேயே தப்பிச் சென்று, சில காலத்திற்கு அமைதியாக இருக்க விரும்பி வாழ்ந்தார்.
9. 1670 – தனது தளபதி தானாஜி மலுசாரே வை பூனே கொண்டானா கோட்டையை கைப்பற்ற அனுப்பினார். கோட்டை கைப்பற்றப் பட்ட போதிலும், தனது தளபதியை இழந்தார். இந்த நிலையில் சிவாஜி "" கோட்டையைப் பிடித்தேன் ஆனால் சிங்கத்தை இழந்தேன்"" என வர்ணித்தார். அந்த தளபதி நினைவாக அந்த கோட்டையை, ""சிம்ஹகாட்"" கோட்டை என பெயரிட்டார்.
10. 1670ன் கடைசியில், சிவாஜி தெற்கு நோக்கி படையெடுத்து, ஜிஞ்ஜி, வேலூர் போன்ற பகுதிகளை கைப்பற்றினார். ஜிஞ்ஜியை தனது 27 வருட ஆட்சிக்காலத்தில் 9 வருடங்களுக்கு தலைநகராக்கினார். ஜிஞ்ஜியில் இவரால் கட்டப்பட்டுள்ள கோட்டை உலகில் மிக வலிமை வாய்ந்த கோட்டைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.
Q7. சிவாஜியின் கட்டிட மற்றும் கலாச்சார பங்களிப்பு என்ன?
சுமார் 300 கோட்டைகள், பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கட்டியுள்ளார். அவற்றில் மிகவும் புகழ் பெற்றவை -- ராய்காட், ப்ரதாப்கர், ஜிஞ்ஜி, சிந்து துர்க் (உதிரி தகவல்கள் பகுதியில் மேலும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது) . அவர் இந்துவாக இருந்த போதிலும் மற்ற எல்லா மதத்தினரையும் சமமாக பாவித்து, குறிப்பாக சுஃபி பிரிவினருக்கு மிகவும் ஆதரவு அளித்தது மட்டுமின்றி, சுஃபி துறவிகள் கல்லறைகளுக்கு அதிகம் விஜயம் செய்தார். அவர் கட்டிய எல்லா கோட்டைகளுக்கும் சமஸ்கிருத பெயர்களையே வைத்தார்.
Q8. சிவாஜியின் அரசவை மந்திரிகள் மொத்தமாகவும், தனியாகவும் எவ்வாறு அழைக்கப் பட்டனர்?
8 அமைச்சர்கள் கொண்ட குழுவுக்கு ""அஷ்டப்ரதான்"" என அழைக்கப்பட்டனர். தனித்தனியாக, பேஷ்வா -- பிரதம மந்திரி அமத்யா/மஜூம்தார் -- நிதி மந்திரி சச்சீவ்/சிட்னிஸ் -- காரியதரிசி மந்த்ரி/வாக்கேநாவிஸ் -- உளவு மற்றும் உள் துறை அமைச்சர் சேனாபதி/சர் இ நவ்பத் -- ராணுவ முக்கிய தளபதி சுமந்த் -- வெளி உறவு மந்திரி நியாயதிக்ஷ் -- முக்கிய தலைமை நீதிபதி பண்டிட் ராவ் -- முக்கிய ஆன்மீக குரு
Q9. சிவாஜி எங்கு எவ்வாறு மறைந்தார்?
3.4.1680 -- ராய்காட் என்ற இடத்தில், நோய் வாய்ப்பட்டு, 53 வயதில் இறந்தார்.
Q10. சிவாஜியின் மனைவி பெயர் என்ன?
சிவாஜிக்கு எட்டு துணைவியர். இவர்கள் மூலம் இவருக்கு இரண்டு மகன்களும் -- சம்பாஜி & ராஜாராம், 6 மகள்களும் பிறந்தனர்.
Q11. சிவாஜியை தொடர்ந்த மன்னர் யார்?
சில குடும்ப பிரச்சனைகளுக்குப்பிறகு சம்பாஜி பதவியேற்று, 1680-1689 வரை ஆண்டார். இவருடைய காலத்தில், முகலாயர்கள் இடமிருந்து பரான்பூர் பகுதியைக் கைப்பற்றினார். ஜஞ்சிரா கோட்டையைக் கைப்பற்ற முயற்சித்த போது, அவுரங்கசீப் ராய்காட் மீது பெருத்த படையுடன் தாக்குதல் நடத்த வந்ததால், ஜஞ்சிரா கோட்டையைக் கைப்பற்றும் முயற்சியக் கைவிட்டார். சிக்கராஜா தேவா மன்னரிடமிருந்து மைசூரைக் கைப்பற்றினார். கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து கைப்பற்ற நினைத்த போது, அவுரங்கசீப் பெரிய படையுடன் தலையீட்டால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.
Q12. சம்பாஜி எவ்வாறு மரணமடைந்தார்?
சம்பாஜி தனது தளபதிகளுடன், அவுரங்கசீப்பை டெக்கான் பகுதியிலிருந்து அகற்றும் திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கும் போது அவுரங்கசீப் படைகளுடன் சூழப்பட்டு கைது செய்யப்பட்டார். சம்பாஜியின் சொந்த உறவினரே இந்த நிகழ்ச்சிக்கு காரணம். கைது செய்ய்யப்பட்டு சுமார் 40 நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டு, 3.2.1689 அன்று கொலை செய்யப்பட்டார். அவருடைய மரணத்திற்கு வரலாற்று நிபுணர்கள் வேறு சில காரணங்களையும் முன் வைத்துள்ளனர் என்பது இந்நிலையில் குறிப்பிடத்தக்கது.
Q13. சம்பாஜியைத் தொடர்ந்து மராத்தாவுக்கு மன்னராக பதவியேற்றவர் யார்?
ராஜாராம் சிவாஜி ராஜே போஸ்லே. முகலாயர்களின் தொடர் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், ராய்காட் ஐ விட்டு, தனது குடும்பம் மற்றும் படையுடன் ஜிஞ்சி க்கு சென்றுவிட்டார். அதனால் ராய்காட் முகலாயர்கள் வசமாயிற்று. முகலாயர்கள் தொடர்ந்து வந்து, 1698ல் ஜிஞ்சி யையும் கைப்பற்றினர். இந்நிலையில் ராஜாராம் தப்பிச்சென்று விசால்கார்-சின்ஹகாட் க்கு தப்பிச் சென்று, தனது மறைவு 1700 வரை வாழ்ந்தார்.
Q14. மராத்தா வை, அது பிளவு படும் வரை, ஆண்ட இதர மன்னர்கள் யாவர்?
தாராபாய் TARABHAI – 1700-1707 - சம்பாஜியின் புதல்வர்கள் சிறுவயதினராக இருந்ததால், இவர் பிரதிநிதி அரசியாக பதவியேற்றார். சம்பாஜியின் ஒரு மகனை முகலாயர்கள் கைப்பிடித்து 25 வயது வரை வைத்திருந்து, அவுரங்கசீப் குடும்பத்தினரிடையே வாரிசு சண்டை நிலையை பயன்படுத்தி தப்பித்து சென்றார். இதற்கிடையில், தாராபாய் தனது ராஜ்யத்தை பாதுகாத்து வந்தாலும், குடும்பம் பிளவு படுவதை தடுக்கமுடியவில்லை.
ஷாஹூ SHAHU – 1707-1749 – அவுரங்கசீப்பினால் சிறைபட்டு, தப்பித்து வந்து, தாராபாயுடன் சுமார் 7 வருடங்கள் 1707-1714, போர் நடத்தி, கேத் என்ற இடத்தில் நடந்த போரில் தாராபாய் தோற்கடிக்கப்பட்டு, ஷாஹூ சத்தாராவை கைப்பற்றி, தனது ஆட்சியை நிறுவினார். இவருடைய ஆட்சிக்காலத்தில் பேஷ்வாக்களின் (பிரதம மந்திரி) அதிகாரம் தலை தூக்கி, கடைசிக் காலத்தில் இப்பகுதி ஒரு சில மன்னர்கள் சேர்ந்த ஒரு ஒருங்கிணைப்பு ராஜ்யங்களாக -- பரோடா பகுதி கேக்வாட் மன்னர்கள், இந்தூர் மற்றும் மாளவ பகுதிகள் ஹோல்கர் மன்னர்கள், குவாலியர் மற்றும் உஜ்ஜெயின் பகுதிகள் சிந்தியா மன்னர்கள் மற்றும் நாக்பூர் பகுதி போன்ஸ்லே மன்னர்கள் - கூட்டமைப்பாக இயங்கின. தொடக்கத்தில் இவர்கள் ஆங்கிலேயர்களை ஏற்காமல் இருந்த போதிலும், பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. ஷாஹூ 1749ல் மறைந்தார். மற்றொரு பிரிவாக கோலாப்பூர் பகுதியை ராஜாராம் ன் வாரிசுகளும் ஆண்டனர். ராஜாராமைத் தொடர்ந்து, சிவாஜி 2, சம்பாஜி 2 ஆகியோர் ஆண்டு, பிறகு ஆங்கிலேயர்களின் கீழ் குறு நில மன்னர்களாக ஆண்டு வந்தனர். "
Q15. 1749ல் ஷாஹூ ன் மறைவுக்குப் பிறகு மராத்தா ராஜ்யம் என்ன ஆனது?
1749ல் ஷாஹூ ன் மறைவுக்குப் பிறகு சில மன்னரகள் மராத்தாவை சிறு பகுதிகளாக ஆண்டனர். கடைசியில் இது 5 தனி சுதந்திர ராஜ்யமாக -- (1) பேஷ்வா -- பூனே மற்றும் அதை சுற்றிய பகுதிகள்; (2) சிந்தியா -- மாளவா மற்றும் குவாலியர்; (3) ஹோல்கர் -- இந்தூர் பகுதிகள்; (4) போன்ஸ்லே - நாக்பூர் பகுதிகள் மற்றும் (5) கேய்க்வாட் - பரோடா பகுதிகள் -- என பிரிந்தன. இவர்களுக்குள் இருந்த பூசல்களை பயன்படுத்தி, ஒவ்வொரு பகுதியாக ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இவர்கள் ஆங்கிலேயர்களை ஏற்று சுதந்திரம் வரை ஆட்சி செய்தனர்.
Q16. மராத்தாவின் எந்த பகுதியை ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கைப்பற்றினர்?
1839ல் சத்தாரா பகுதியை ஷாஹூவிடமிருந்து கைப்பற்றினர்.
Q17. பேஷ்வா என்பவர்கள் யார்?
பேஷ்வாக்கள் மராத்தா ராஜ்யத்தின் பிரதம மந்திரிகள். மராத்தா ராஜ்யம் பிளவு படத் தொடங்கிய போது, இவர்கள் பூனே பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு, 1713 முதல் 1858 வரை, ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரை ஆட்சி புரிந்தனர்.
Q18. பேஷ்வாக்களில் முக்கியமானவர்கள் யார்?
பாலாஜி விஷ்வநாத் -- BALAJI VISWANATH – 1713-1720 – தொடக்கத்தில் வருவாய் துறை அதிகாரியாக இருந்து, 1713ல் பேஷ்வா ஆனார். அந்த பதவியை பலப்படுத்தியது மட்டுமின்றி, வம்ச தொடர்ச்சியாகவும் மாற்றினார். ஷாஹூ வுக்கு உதவி புரிந்து உள்நாட்டு கிளர்ச்சிகள அடக்கி, மற்ற மராத்தா சிறு பகுதி ராணுவ தளபதிகளையும் கட்டுக்குள் கொண்டு வந்தார். முகலாயர்களின் சய்யித் சகோதரர்களுடன் நட்புறவு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, ஷாஹூ வை ஒரு சுதந்திர மன்னராக இயங்கி, டெக்கான் சில பகுதிகளில் வருவாய் வசூலிக்கவும் அதிகாரம் பெற்றுத் தந்தார். 1719ல் மறைந்தார்.
பாஜி ராவ் BAJI RAO 1720-1740 – பாலாஜி விஷ்வநாத்தைத் தொடர்ந்தார். சிவாஜிக்குப் பிறகு மிகச்சிறந்த மன்னராக கருதப் படுபவர். இவருடைய காலத்தில், மண்டல மற்றும் சிறு பகுதிகளை ஆண்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமே பிற்காலத்தில் மராத்தா ராஜ்யம் 5 தனி சுதந்திர ராஜ்யமாக உருவாக காரணமாயிற்று. அவை தான் - (1) பேஷ்வா -- பூனே மற்றும் அதை சுற்றிய பகுதிகள்; (2) சிந்தியா -- மாளவா மற்றும் குவாலியர்; (3) ஹோல்கர் -- இந்தூர் பகுதிகள்; (4) போன்ஸ்லே - நாக்பூர் பகுதிகள் மற்றும் (5) கேய்க்வாட் - பரோடா பகுதிகள். அவருடைய காலத்து ராணுவ நடவடிக்கைகள்:
(1) 1722 ல் சித்தி வம்சத்தினரிடமிருந்து ஜஞ்சிரா கோட்டையைக் கைப்பற்றினார்.
(2) போர்ச்சுகீசியரிடமிருந்து பசீன் மற்றும் சால்செட் பகுதிகளை 1733ல் கைப்பற்றினார்.
(3) 1737ல் ஹைதராபாத் மன்னர் நிஸாம் உல் முல்க் ஐ போப்பாலுக்கு அருகில் தோற்கடித்து, ""துராய் சராய்"" உடன்படிக்கை ஏற்படுத்தி, மாளவா மற்றும் பண்டேல்காண்ட் பகுதிகளை கைப்பற்றினார்.
(4) முகலாயர்களின் பல வட இந்திய பகுதிகளைக் கைப்பற்றி, மராத்தா ராஜ்யத்தை ஒரு வலுவான ராஜ்யமாக்கினார்.
பாலாஜி பாஜி ராவ் BALAJI BAJI RAO – 1740-1761 – ""நானா சாஹேப்"" “ Nana Saheb” என அன்புடன் அழைக்கப்பட்டார். முகலாயர்களுக்கு உள்நாட்டு எதிர்ப்பு மற்றும் எல்லையின் வெளியிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு உதவி அளிப்பதாக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, முகலாயர்களின் ஆக்ரா மற்றும் அஜ்மீர் பகுதிகளின் வருவாய் பெறும் அதிகாரத்தைப் பெற்றார். இந்த உடன்படிக்கை, ஆப்கானிஸ்தானின் அஹமத் ஷா ஆப்தாலி இந்த உடன்படிக்கையின் மீது கோபம் கொண்டு, மராத்தா - முகலாயர்கள் மீது படையெடுத்ததே 1761 மூன்றாம் பானிபட் போராகியது.
Q19. 1761ல் மூன்றாம் பானிபட் போர் யாரிடையே நடந்தது, முடிவு என்ன?
ஆப்கானிஸ்தானின் அகமது ஷா அப்தாலி ன் படைக்கும், மராத்தியர்களுக்கு இடையே நடந்தது. மராத்தியர்கள் பெரும் தோல்வியை கண்டது மட்டுமின்றி, பாலாஜி ராவ் மகன் விஸ்வாஸ் ராவ், மற்றும், உறவின்ர் சதாஷிவ் ராவ் பாவ் இறந்தனர். 28000 மராத்தா வீரர்களும் இறந்தனர். இந்த போரின் மூலம், யார் இந்தியாவை ஆளலாம், ஆளக்கூடாது என்பது முடிவாகியது. இந்திய வரலாற்று போர்களில் இது மிகவும் முக்கியமானது.
Q20. பூனே வை ஆண்ட இதர பேஷ்வாக்கள் யாவர்?
பாலாஜி பாஜி ராவ் க்கு பிறகு கீழ்க்கண்ட பேஷ்வாக்கள் இருந்தனர்.
மாதவ் ராவ் MADHAV RAO – 1761-1772: திறமையான நிர்வாகி மற்றும் வீரர். 1763ல் ஹைதராபாத் நிஸாமை தோற்கடித்தார். பிறகு மைசூர் ஹைதர் அலியை தோற்கடிக்க சில முயற்சிகள் எடுத்தார். ஆனால் இவருடைய சொந்த மாமன் ரகுநாத ராவின் சதி நடவடிக்கைகளால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. ஹைதர் அலியை தோற்கடிக்க முடியாதது அவருடைய உடல் நலத்தைப் பாதித்தது. 1767ல் ஆங்கிலேயர்கள் வசாய் என்ற பகுதியில் ராணுவ முகாம் அமைக்க அனுமதி கேட்டதை இவர் மறுத்தார். இவரின் புதிய பகுதிகளை கைப்பற்றும் முயற்சிகள், இவருடைய மாமனின் சதி திட்டங்களால் தொடர்ந்து தோல்வியைத் தந்தது. கடைசியில் 1772ல் காச நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
நாராயண ராவ் NARAYAN RAO - 1772-1773: மாதவ் ராவுக்குப் பிறகு பதவிக்கு வந்து, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை விட இவருடைய மாமனின் சதிச்செயல்களே இவரை மிகவும் பாதித்தது. இவருடைய மாமன் ரகுநாத ராவ் பேஷ்வா ஆக முடியாத காரணத்தால், ராணுவ அதிகாரிகள், அண்டைய மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என அனைவரையும் சேர்த்துக் கொண்டு தொடர்ந்து நாராயண ராவுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தார். ரகுநாத ராவ் தன்னுடைய மனைவியின் உதவியுடன் நாராயண ராவை கொல்ல முயற்சித்து தோல்வி கண்டார். இருப்பினும், 1773ல் நாராயணராவ் கொலை செய்யப்பட்டார்.
சவாய் மாதவ் ராவ் SAWAI MADHAV RAO - 1773-1795: குறுகிய கால ஆட்சி, தற்கொலையில் முடிந்தது.
பாஜி ராவ் 2 BAJI RAO II-1795-1818: இவருடைய ஆட்சிக்காலம் முழுவதும் ஆங்கிலேயர்களுடன் போரிடுவதிலேயே கழிந்தது. போதிய ஆட்பலம், மற்ற மன்னர்களின் உதவி இல்லாத காரணத்தால் 1818ல் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து, ஓய்வூதியம் பெற்று ஒதுங்கியவுடன், பேஷ்வா மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.