Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. மராத்தியர்கள் எவ்வாறு தென் இந்தியாவின் ஒரு கோடியில் உள்ள தஞ்சாவூருக்கு வந்தனர்?
தஞ்சாவூர், சோழர்கள், பாண்டியர்கள், டெல்லி சுல்தானிய மாலிக் காஃபூர், விஜயநகர சாம்ராஜ்யம், மதுரை நாயக்கர்கள் என 1673 வரை தொடர்ந்தது. நாயக் மன்னர்களுக்கு இடையில் வாரிசு சண்டை இருந்ததால், நாயக் வம்சத்தின் பதவியில் அல்லாத ஒருவர், பீஜாப்பூர் சுல்தானின் உதவியை நாடினார். பீஜாப்பூர் மன்னர், வெங்கோஜி ராவ் போன்ஸ்லே என்ற தனது தளபதியை தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார். வெங்கோஜி ராவ், வெற்றிகரமாக அப்போது இருந்த நாயக் மன்னரை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, தானே மன்னராக பதவியேற்று தஞ்சாவூரின் மன்னரானார். இவ்வாறாக மராத்தியர்கள் தஞ்சாவூருக்கு வந்தனர். வெங்கோஜி ராவ் 1674 முதல் 1684 வரை ஆட்சி புரிந்தார். இவர் சிவாஜியின் உறவினர்.
Q2. தஞ்சாவூரை ஆண்ட மன்னர்கள் யாவர், அவர்களது சாதனைகள் யாவை?
வெங்கோஜி -- VENKOJI – 1674 – 1684 – ""ஏகோஜி"" எனவும் அழைக்கப்பட்டார். 1684ல் மறைந்தார்.
ஷாஹூஜி 1 SHAHUJI I – 1684-1712 – முகலாயர்கள் ஆட்சியை ஏற்று, வருடாந்திர கப்பம் கட்டி ஆட்சி நடத்தினார். இலக்கிய படைப்புகளுக்கு அதிக ஆதரவு அளித்தார். பட்டத்தை வெறுத்து, சந்நியாசத்தை தேடி சென்று விட்டார்.
செர்ஃபோஜி 1 SERFOJI I -1712-1718 ;
துக்கோஜி TUKKOJI -1728-1736;
எக்கோஜி 2 EKOJI II – 1736-1737;
சுஜா பாய் SUJA BHAI -1736-1737 எக்கோஜி 2 ன் மனைவி. ஃப்ரெஞ்ச் உதவியுடன் ஷாஹூஜி 2, இவரை பதவியிலிருந்து வெளியேற்றினார்.
ஷாஹூஜி 2 SHAHUJI II -1738-1739 – ஃப்ரெஞ்ச் ஆட்சியாளர்களால் பதவி நீக்கம் செய்தனர்.
ப்ரதாப் சிம்ஹா PRATAP SIMHA – 1739-1763 – துக்கோஜியின் மகன். ஹைதராபாத் நிஜாம் ன் குத்தகைதாரர் ஆகி கப்பம் கட்டி வந்தார். ஃப்ரெஞ்ச் க்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு உதவி புரிந்து வந்தார். 1763ல் மறைந்தார்.
துல்ஜாஜி THULJAJI - 1763-1773 and 1776-1787 – ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொண்டு அவர்களின் கீழ் ஆட்சி புரிந்தார். 1784ல் திப்பு சுல்தானின் மிகப்பெரிய தாக்குதலே இவருடைய காலத்தில் நடந்த பெரிய நிகழ்ச்சி.
அமர் சிங் AMAR SINGH – 1787-1793 -- செர்ஃபோஜி 2 ன் பாதுகாவலர் மன்னராகி, ஆட்சியைக் கைப்பற்றி, 1793-1798 வரை ஆண்டார்.
செர்ஃபோஜி 2 SERFOJI II – 1798-1832 – தஞ்சாவூரின் கடைசி மராத்தா மன்னர். துல்ஜாஜி ன் வளர்ப்பு மகன். மிகப் பெரிய கொடை வள்ளல். சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு (நாயக் காலத்தில் உருவானது) பேராதரவு தந்தார். கண் பொறை நீக்கும் பல அறுவை சிகிச்சைகளை நடத்தியதாகவும் தெரிகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி முழுமையாக நிலவியதால், தஞ்சாவூர் நகர ஆட்சியை ஏற்று ஆட்சி புரிந்து வந்தார். 1831ல் இவர் மறைந்த போது சுமார் ஒரு லட்சம் பேர் (அந்த காலத்தில்) சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என வரலாறு கூறுகிறது.