Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. ஆற்காடு நவாப்கள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கர்நாடிக் -- வேலூரை தலைநகராகக் கொண்டு.
Q2. ஆற்காடு நவாப்களின் கர்நாடிக் ஆட்சியை நிறுவியவர் யார்?
சதாவுத்துல்லா கான் SADAUTULLAH KHAN – 1710-1732 – இந்த வம்ச ஆட்சி 1690 முதல் இருந்தாலும்,1720 முதலே சுதந்திரமாக இயங்கத் தொடங்கியது. இவர் முகலாயர் மற்றும் நிஸாம் காலத்தில் இந்த பகுதியின் ஆளுநராக இருந்தவர். 1732ல் மறைந்தார்.
Q3. ஆற்காடு நவாப்கள் (கர்நாடிக்) யாவர்?
சதாவுத்துல்லா கான் SADAUTULLAH KHAN – 1710-1732 – முகலாயர்கள், நிஸாம் மன்னர்கள் ஆட்சி சரிவை நோக்கிச் செல்லும் போது, இவர் சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார்.
தோஸ்த் அலி DOSTI ALI – 1732-1740 – சதாவுத்துல்லா கானின் வளர்ப்பு மகன் -- தன் ஆட்சியின் கீழ் ஒரு சிறு பகுதியின் முக்கிய தலைவராக இருந்த ஒருவர் வருடாந்திர கப்பம் கட்ட தவறியதால், ராணுவ நடவடிக்கை எடுத்தது, அவருக்கே ஆபத்தாக முடிந்தது. ஏனென்றால் அவருக்கு மராத்தியர்களும், நிஸாமும் ஆதரவு அளித்ததால், நடந்த போரில் தோல்வியும், கடைசியில் மரணத்தையும் சந்தித்தார்.
முகமது சதாவுத்துல்லா கான் 2 MD.SADAUTULLAH KHAN II -1742-44 – இவர் இளையவராக இருந்ததால், அன்வருத்தீன் என்ற பாதுகாவலர்/ஆலோசகர் ஆட்சி புரிந்தார். 1744ல் முகமது சதாவுத்துல்லா கான் 2 கொலை செய்யப்பட்டதால், அன்வருத்தீன் ஆட்சிக்கு வந்தார்.
அன்வருத்தீன் ANWARUDDIN – 1744-1749 – 1743ல் ஹைதராபாதி நிஸாம் ஆல் ஆற்காடு நவாப் ஆக்கப்பட்டவர். 1749ல் ஃப்ரெஞ்ச் படையுடன் நடந்த போரில் சந்தா சாஹிப் என்பவரால் கொல்லப்பட்டார்.
சந்தா சாஹிப் CHANDA SAHIB – 1749-1752 – 1749ல் நடந்த போரில், அன்வருத்தீன் கொலை செய்யப்பட்டவுடன், இவர் நவாப் ஆக பதவியமர்த்தப்பட்டார். இரண்டாம் கர்நாடக (1749-1754) தொடர் போர்களில், ஆங்கிலேய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தப்பி தஞ்சாவூர் சென்ற போது அங்கிருந்த படையால் கொல்லப்பட்டார். முகமது அலி MUHAMMAD ALI – 1752-1795 – அன்வருத்தீன் ன் மைந்தன். ஆங்கிலேயர்களின் உதவியுடன் 1752ல் ஆற்காடு நவாப் ஆனார். 1795ல் அவரது மறைவு வரை பதவியிலிருந்தார். உம்தத் உல் உம்ரா UMDAT UL UMRA – 1795-1801 – இவருடைய 6 வருட ஆட்சிக்காலத்தில், அவர் ஆண்ட பகுதியை விட்டுக் கொடுக்கும் படியான ஆங்கிலேயர்களின் அழுத்தத்திலேயே காலம் ஓடியது. 1801ல் மறைந்தார்.
ஆஸிம் உத் தௌலா AZIM UD DAULA – 1801-1819 – 19 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் பொம்மை நவாப் ஆக ஆண்டு வந்தார்.
ஆஸாம் ஜா AZAM JAH – 1819-1825 followed by Ghulam Md.Ghouse Khan.
குலாம் முகமது கௌஸ் கான் GHULAM MD. GHOUSE KHAN – 1842-1855 – ஆஸாம் ஜா மறைவுக்குப் பிறகு, சிறிய வயதிலேயே, நவாப் ஆக்கப்பட்டு, பாதுகாவலர்/ஆலோசகர் ஆட்சியில் இயங்கி வந்தார். 1842 தக்க வயதை எட்டியவுடன் நவாப் பதவியை ஏற்றார். ஆனால் தனது 31வது வயதிலேயே வாரிசு இல்லாமல் இறந்தார். ஆகவே, ஆங்கிலேயர்கள் இந்த பகுதியை கைப்பற்றிக் கொண்டனர்.