Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. உடையார் வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
யது ராயா YADU RAYA – 1399. இவர்களுடைய வம்ச ஆட்சியின் 1766க்கு முன்பே இந்த வம்சம் இயங்கி வந்தது. 1399 முதல் 1565 வரை விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமாகவும், 1565 முதல் 1761 வரை தனி சுதந்திர ராஜ்யமாகவும், இயங்கியது. 1734ல் கிருஷ்ணராஜ் உடையார் 2 ஆட்சியிலிருந்து இந்த வம்ச ஆட்சி இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கிடையில் 1761 முதல் 1799 வரை இஸ்லாமிய ஆட்சியும் இடம் பெற்றது. பிறகு 1799ல் இருந்து கிருஷ்ண ராஜ உடையார் 3 ஆட்சி தொடங்கி 1868 வரை ஆட்சி செய்த காலம் இந்திய வரலாற்றில் அதிக முக்கியத்துவமும் வரலாற்று மாற்றங்களையும் ஏற்படுத்தியது. 1868ல் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் முழுமைப் பெற்றதால், அவர்களுக்கு கீழ் ஒரு தோழமை குறு நில மன்னர் “Princely State” ஆட்சியை சுதந்திரமாக நடத்தியது.
Q2. உடையார் வம்ச ஆட்சியின் சில முக்கிய மன்னர்கள் யாவர்?
சாமராஜ உடையார் CHAMARAJA WODEYAR – 1868-1894 – கிருஷ்ணராஜ உடையார் 3 க்கு பிறகு இவர் மன்னராக பதவியேற்றார். 1881 வரை ஆங்கிலேயர்களின் கீழ் சுதந்திரம் இல்லாத ஒரு ஆட்சியை நடத்தினர். 1881ல் இங்கிலாந்து சிறப்பு குழு, மன்னராட்சியை நிலை நிறுத்தி, சாமராஜ உடையார் 9 ஐ மன்னராக்கியது. இவருடைய எல்லைகளில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது. அதுவை இன்றைய கர்நாடக மாநிலம். இவருடைய ஆட்சிக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்: (1) 1894ல் சிகாகோ நகரில் நடந்த சர்வதேச மத மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு முழு நிதி உதவி அளித்தி விவேகானந்தரை கௌரவித்தார். (2) தொழில்துறை, விவசாயம் முன்னேற்றம் அதிக அளவிலேயே ஏற்பட்டது. தசரா தொழிற்துறை கண்காட்சியையும், அதனுடன் சேர்ந்த திருவிழா கொண்டாட்டத்தையும் தொடங்கி வைத்தார். (3) மைசூர் மற்றும் பெங்களூரில் குறிப்பிடும்படியான கட்டுமானங்களை உருவாக்கினார். (4) கலையும் இசையும் பெரும் ஆதரவு பெற்றது. 1894ல், தொண்டை அடைப்பான் - டிப்தீரியா - என்ற நோயினால் பாதிக்கப்பட்டு கல்கத்தாவில் தனது 31வது வய்திலேயே மறைந்தார்.
வாணி விலாஸ் சன்னிதானா -- H.H.VANI VILAS SANNIDHANA – 1894-1902 – சாமராஜ உடையார் 9 ன் துணைவியார். தனது மகன் கிருஷ்ணராஜ உடையார் - 8 வயது - க்கு பாதுகாவல அரசியாக ஆட்சி செய்தார்.
கிருஷ்ணராஜ உடையார் 4 KRISHNARAJA WODEYAR IV – 1894-1940 – 1902 ல் முழு பொறுப்பேற்றார். இவருடைய ஆட்சி, இந்திய பல மன்னர்களும் சிறந்ததாக கருதப்படுகிறது. அவருடைய காலத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் --
(1) இவருடைய ஆட்சியை காந்திஜி ""ராம ராஜ்யம்"" என்றும், மன்னரை ""ராஜ ரிஷி"" என்றும் போற்றினார்.
(2) பெங்களூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் கல்விக்கழகம் - Indian Institute of Science at Bangalore நிறுவ உதவி செய்தது மட்டுமின்றி அதற்கான நிலத்தையும் நன்கொடையாக அளித்தார்.
(3) இவருடைய காலத்தில், பெங்களூர் நகரம், ஆசியாவிலேயே முதன் முதலாக மின் தொடர்பு பெற்ற நகரமாயிற்று.
(4) இவருடைய காலத்தில், உலகிலேயே மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட மாகாணம் என்று மைசூர் கருதப்பட்டது. இந்த சிறப்பை, வட்ட மேஜை மகாநாட்டில் சங்கே பிரபு அறிவித்திருக்கிறார்.
(5) நீர் மின் நிலையம் முதலில் மைசூர் மாகாணத்தில் நிறுவப்பட்டது. (6) டாக்டர் ராஜா ராமண்ணா ஒரு புகழ் பெற்ற பியானோ இசைக்கலைஞர். இந்த மன்னரின் அரசவையில் அடிக்கடி தனது இசைக் கச்சேரியை நடத்தும் பழக்கம் கொண்டவர். கிருஷ்ணராஜா உடையார் 3.8.1940 அன்று மறைந்தார்.
ஜெயசாமராஜ உடையார் பகதூர் JAYACHAMARAJA WODEYAR BAHADUR – 1940-1950 – இந்த வம்சத்தின் 25வது மற்றும் கடைசி மைசூரின் மன்னராவார். 8.9.1940 அன்று மன்னராக பதவியேற்று, 26.1.1950 அன்று இந்தியாவுடன் இணையும் வரை ஆட்சியில் இருந்தார். இவருடைய வாழ் காலத்தில் நடந்த நிகழ்வுகள்:
(1) இந்தியாவுடன் சேர்க்கப்பட்டவுடன், 1956 முதல் 1964 வரை மைசூர் மாகாணத்தின் ஆளுநராகவும், 1964-1966 வரை தமிழ்நாடு ஆளுநகராகவும் பணி செய்தார்.
(2) இவர் ஒரு புகழ் பெற்ற தத்துவஞானி, சில நூல்களும் எழுதியுள்ளார்.
(3) விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணன் லண்டன் விம்பிள்டன் போட்டியில் கலந்து கொள்ள உதவி செய்தார்.
(4) மற்றொரு சமயத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் எரபள்ளி பிரசன்னா மேற்கு இந்திய தீவுகளில் விளையாட, எதிர்ப்பு தெரிவித்த அவரது தந்தையிடம் இருந்து அனுமதி பெற்றுக் கொடுத்தார்.
(5) மேற்கத்திய மற்றும் இந்திய இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஒரு இசை விரும்பி என்ற வகையில், உலகம் அறியாத ரஷ்ய இசை மேதை நிக்கோலய் கார்லோவிச் மெட்னர் ஐ, அவருடைய இசை பதிவுகளை தன் செலவில் உலகமறிய செய்தார்.
(6) 1948ல் லண்டனின் Philharmonia Concert Society ன் முதல் தலைவரானார்.
(7) 1945ல் லண்டனின் புகழ்பெற்ற ட்ரினிட்டி இசைக் கல்லூரியின் நிர்வாக அங்கத்தினர் ஆனார்.
(8) அவர் காலத்து புகழ் பெற்ற இசைக் கலைஞர்களை மிகவும் ஆதரித்தார். 23.9.1974 அன்று மரணம் அடைந்தார்.