Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. உடையார் வம்சத்தின் தொடர் ஆட்சியை, எந்த நிகழ்வு பின்னணியில், இஸ்லாமிய மன்னர்கள் மைசூர் ஆட்சிக்கு வந்தனர்? யார் முதலில் ஆட்சிக்கு வந்தார்?
ஹைதர் அலி HAIDER ALI -1761-1782 – மைசூர் ராணுவத்தில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கியவர். உடையார் ஆட்சியில் திண்டுக்கல் (தமிழ்நாடு) பகுதி ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். ராணுவத்துக்கு, மேற்கு நாடுகள் முறையில் பயிற்சி அளித்ததும், 1759ல் மராத்தியர்களுக்கு எதிராக ஸ்ரீரங்கப்பட்டணத்தை வெற்றிகரமாக காப்பாற்றியதும், இவருக்கு “Fateh Haider Bahadur” (Brave victorious Lion) என்ற சிறப்புப் பட்டத்தை உடையார் அரசாங்கம் வழங்கியது.
"ஹைதர் அலி, பிரதம மந்திரி மற்றும் அரசாங்கத்தை நடத்தி வந்த நஞ்சராஜர் என்பவரை பதவி நீக்கம் செய்து, நிர்வாகத்தை கைப்பற்றினார். அதே சமயம் கிருஷ்ண ராஜ உடையாரை சட்டப்படியான அரசாங்க தலைவர் எனவும் ஏற்றுக் கொண்டார். ஹைதர் அலி அவருடைய காலத்தில், கூர்க், மலபார், பெல்லாரி, குத்தி, கடப்பா போன்ற பகுதிகளை கைப்பற்றினார். இவருடைய நிர்வாக சீரமைப்புகள் மைசூர் ராஜ்யத்தை சக்தி வாய்ந்ததாக மாற்றியது. சென்னைக்கு 5 கி.மீ அருகில் வரை இவர் தனது ஆட்சியில் வந்தடைந்தார். இந்நிலையில் 1769ல் ஆங்கிலேயர்கள் இவருடன் ஒரு நல்லுறவு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, 1772ல் மராத்தியர்கள் போர் தொடுத்து ஹைதர் அலியை தோற்கடித்த போது, இந்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டனர். " "ஹைதர் அலி காலத்தில் முதல் மற்றும் இரண்டாவது ஆங்கிலேயர் மைசூர் போர்கள் நடந்தன. பிறகு அவர் தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் வரை வந்தடைந்து ஆங்கிலேய ராணுவ அதிகாரி பெய்லியை தோற்கடித்தார். மேலும் தெற்கு நோக்கி பயணம் செய்து போர்ட்டோநோவா, பொள்ளிலூர், மற்றும் ஷோளிங்கர் ஆகிய இடங்களில் சர் அய்ர் கூட் என்ற ஆங்கிலேய தளபதியிடம் தோல்வி கண்டார். அதே நேரத்தில், ஹைதர் அலியின் மைந்தர் திப்பு சுல்தான் வந்தவாசி மற்றும் வேலூர் பகுதிகள் மீது படையெடுத்தார். இந்த சமயத்தில், 1782ல் ஹைதர் அலி புற்று நோயால் ஆந்திராவின் சித்தூர் நகரத்தில் மரணமடைந்தார். "
திப்பு சுல்தான் TIPU SULTAN – 1782-1799 – ""மைசூர் புலி"" “tiger of mysore” என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். ஹைதர் அலியின் மரணத்தைத் தொடர்ந்து மைசூர் ராஜ்ய பொறுப்பை ஏற்றார். ராணுவ யுக்தியில் இவரை மிஞ்சுபவர் யாருமில்லை என கருதப்படும் அளவுக்கு, மராத்தா, நிஸாம் மற்றும் ஆங்கிலேயர்களையும் பலத்த சேதத்துடன் தாக்கி ஒடுக்கி வைத்தார். அவரது ராணுவ வெற்றி/தோல்விகள்:
(1) 15வது வயதில், ஒரு குதிரைப்படையை தலைமைதாங்கி, தனது தந்தையுடன், 1767ல் கர்நாடிக் (வேலூர்) பகுதியை தாக்கினார்.
(2) 1767-1769 காலத்தில் முதல் ஆங்கிலேய-மைசூர் போரில் தனது வீரத்தை வெளிப்படுத்தினார். (போர்களைப் பற்றி பிறகு)
(3) அதற்கு பிறகு நடந்த இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்கள திறமையாக எதிர்நோக்கினார்.
(4) இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் 1780-1784 -- இந்தப் போரில் தனது தந்தைக்கு உதவியாக, ஆங்கிலேயர்களை தோர்கடித்து மங்களூர் உடன்படிக்கை ஐ மெக் கார்ட்னி பிரபு உடன் ஏற்படுத்திக்கொண்டார்.
(5) 1790-1792 -- மூன்றாம் ஆங்கிலேயர் மைசூர் போர் -- 1789ல் திருவனந்தபுரம் மீது ஃப்ரெஞ்ச் உதவியுடன் படையெடுத்தார். ஆனால், ஃப்ரெஞ்ச் சரிவர உதவி செய்யாததால் தோல்வி கண்டார். இந்தப் போரில் ராக்கெட்டுகளை திப்பு சுல்தான் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்க விவரம். திப்பு சுல்தான், மலபார், சேலம், அனந்தபூர், பெல்லாரி போன்ற பகுதிகளை இழந்தார். இது மராத்தியர்கள், நிஸாம், மற்றும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அமைந்தது.
(6) 1798-1799 நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் -- இந்த போரில் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களின் பெருத்த அணி, ( மராத்தா, நிஸாம், திருவாங்கூர் மன்னர் படைகள் கொண்ட), யை சந்திக்கும்படி ஆயிற்று. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் 1799ல் திப்புசுல்தான் தோல்வியை தழுவினார். இந்த போரில், திப்பு சுல்தானின் தளபதி மிர் சாதிக் என்பவரின் சதித் திட்டத்தால் தோல்வி/மரணத்தை தழுவும்படி ஆயிற்று. இத்துடன், மைசூரில் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்து, உடையார் ஆட்சி மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டது. கிருஷ்ணராஜ் 3 பதவியமர்த்தப்பட்டு, ஆங்கிலேயர்கள் கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தெற்கு கனரா பகுதிகளைப் பெற்றது.
Q2. திப்பு சுல்தானின் போர் அல்லாத வேறு பங்களிப்பு/சாதனைகள் என்னர்?
1. மைசூரில், ஃப்ரெஞ்ச் வேண்டுகோளின் படி, முதல் கிறித்துவ தேவாலயம் கட்டினார்.
2. மைசூரில் கிருஷ்ண சாகர் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியவர்.
3. பெங்களூரில், ஹைதர் அலியால் தொடங்கப்பட்ட லால் பாக் தோட்டத்தை, முடித்து வைத்தார்.
4. ராக்கெட் எனப்படும் ஏவுகணை தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரில் பயன் படுத்திய பெருமை இவரைச் சாரும். கைப்பற்றப்பட்ட இரண்டு ஏவுகணைகள் இன்றும் லண்டன் உல்விச் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது. இவருடைய ஏவுகணைக் கண்டுபிடிப்பு, பிற்காலத்தில், மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள் கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக அமைந்தது.
5. ஃப்ரெஞ்ச் புரட்சியில் இவருக்கு இருந்த ஈடுபாட்டின் ஒரு சாட்சியாக, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இவர் நட்டுவைத்த ""சுதந்திர மரம்"" ம், ஃப்ரான்சின் ஜேகோபியன் சங்கத்தில் அங்கத்தினர் ஆனது வரலாற்று எடுத்துக்காட்டு.
6. புதிய நவீன தொழிற்சாலைகள் துவங்குவது, ஏற்றுமதியை மேம்படுத்துவது, புது நாணய மற்றும் எடைமுறை அறிமுகம், போன்றவை இவருடைய நிர்வாக சீர்திருத்தங்கள்.
Q3. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை எப்போது திப்பு சுல்தானால் கையொப்பம் இடப்பட்டது, அதன் விளைவுகள் என்ன?
1. 19.3.1792 – இந்த உடன்படிக்கை, காரன்வாலிஸ் பிரபு, ஹைதராபாத் நிஸாம், மராத்தா ராஜ்ய பிரதிநிதி ஆகியோர்களின் கையொப்பம் இடப்பட்டது.
2. திப்பு சுல்தானின் பாதிக்கு மேலான பகுதிகள் ஆங்கிலேயர் வசம் ஆகி, உடன் படிக்கை கையொப்பக் இட்டவர்களால் பிரித்துக் கொள்ளப்பட்டது.
3. போரின் நஷ்ட ஈடாக 3 கோடி ரூபாய் திப்பு சுல்தான் கொடுக்கும்படி ஆயிற்று.
4. மைசூரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உத்திரவாதமாக, திப்பு சுல்தானின் இரண்டு மைந்தர்கள் ஆங்கிலேயர்களுடன் அனுப்பப்பட வேண்டும்.