Khub.info Learn TNPSC exam and online pratice

Q1. சீக்கிய சாம்ராஜ்யம் என்பது என்ன, அது எவ்வாறு நிறுவப்பட்டது?
இது ஒரு கூட்டமைப்பு. சிறு மற்றும் சிறிது பெரிய சீக்கிய தனி நாடுகள்/மன்னர்களின் கீழ் இயங்கியவை ஒன்று சேர்ந்த கூட்டமைப்பு. முகலாய ஆட்சி சரிவின் போது ஏற்பட்ட கூட்டமைப்பு, ""சீக்கிய சாம்ராஜ்யம்"" என அழைக்கப்பட்டது.
Q2. சீக்கிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த பகுதிகள் யாவை?
பஞ்சாப் -- இந்தியா-பாகிஸ்தான் பகுதிகளில் பரவியுள்ள ஒரே பகுதியாக. மேற்கில் கைபர் கணவாய், வடக்கில் காஷ்மீர், திபெத் எல்லை வரை, தெற்கில் சிந்த் நதி, கிழக்கில் இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகள் அடங்கியவை.
Q3. சீக்கிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர் யார்?
மகாராஜா ரஞ்சித் சிங் -- MAHARAJA RANJIT SINGH – 1801-1839 – சிறு வயதிலேயே பதவியேற்று, தாயின் கவனிப்பு ஆட்சியில் வளர்ந்து, 1796ல் சுயமாக/சுதந்திரமாக இயங்கத் தொடங்கினார்.
Q4. மகாராஜா ரஞ்சித் சிங்கின் ராணுவ மற்றும் இதர சாதனைகள் என்ன?
1. 1799ல் லாகூரை யும், 1802 ல் அம்ரிதசரஸ் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஸமன் ஷா உதவியுடன் கைப்பற்றினார். இதன் மூலம் லாகூர் மாமன்னர் ஆனார்.
2. அமிர்தசரஸ் கோவிலுக்கு பொன் கூம்பு இவர் சேர்த்தார்.
3. 1806 ல் லூதியானா பகுதியை கைப்பற்றினார்.
4. ஆப்கானிஸ்தானின் பஷ்டூன் பகுதியைக் கைப்பற்றி முதல் முஸ்லீம் அல்லாத முதல் மன்னர் ஆனார்.
5. 1818ல் பாகிஸ்தானின் முல்தான் பகுதியை கைப்பற்றினார். 1819ல் காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ல் ஆனந்த் பூர் பகுதிகளையும் கைப்பற்றினார்.
6. இந்தியாவின் முதல் நவீன ராணுவத்தை வெளிநாட்டு ராணுவ நுணுக்கங்கள் அறிந்தவர்களின் உதவியுடன் உருவாக்கியவர் -- ""சீக்கிய கல்சா ராணுவம்"" “Sikh Khalsa Army” . இதனால், ஆங்கிலேயர்கள் பஞ்சாப் பகுதியை கைப்பற்றுவது தாமதிக்கப்பட்டது.
7. முகலாயர்களால் இந்துக்கள் மீது திணிக்கப்பட்ட "ஜஸியா" வரியை நீக்கினார்.
8. எல்லா மதத்தினரையும் ஆதரித்தது மட்டுமின்றி, அனைத்து மதத்தினரையும் தனது அரசவையில் சேர்த்துக்கொண்டார்.
9. அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நிறைய நன்கொடைகள் வழங்கி, கோவிலின் வெளி/உள்புறங்களை அழகு படுத்துவதில் மிக கவனம் செலுத்தி மேம்படுத்தினார்.
10.பாட்னாவில் தக்த் ஸ்ரீ பந்த் சாகிப், நாந்டெட் ல் டக்த் ஸ்ரீ ஹசூர் சாகிப் ஆகிய புகழ் பெற்ற சீக்கிய கோவில்கள் இவரால் கட்டப்பட்டது.
11. மரண தண்டனை யை ரத்து செய்தார்.
12. ஃப்ரெஞ்ச் தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள, மெட்கால்ஃபே தலைமையில் ஆங்கிலேயர்களுடன் 1809ல் ஒரு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார்.
13. 1814ல் ஆப்கானிஸ்தான் ன் ஷா ஷூஜா விடமிருந்து, உலகின் புகழ் பெற்ற ""கோஹினூர்"" வைரத்தை, அவருக்கு பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்து பெற்றார். இந்த வைரம், இரண்டாம் ஆங்கிலேய சீக்கிய போருக்குப் பிறகு, ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, இன்று இங்கிலாந்து அரசிடம் உள்ளது.
14.1838ல் ஆப்கானிஸ்தானில் ஷா ஷூஜாவை ஆட்சியில் மீண்டும் அமர்த்துவதற்காக, ஆங்கிலேயர் ஆக்லாண்ட் ப்ரபு உடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன் விளைவே 1838-1842 முதல் ஆப்கானிஸ்தான் போர். இந்நிலையில், ரஞ்சித் சிங் ஆங்கிலேயர்கள் படையை இந்த போரின் போது தனது பகுதி வழியாக செல்ல அனுமதி மறுத்தார். இந்த சமயத்தில் 1839ல் மரணமடைந்தார். அவருடை சமாதி லாகூர், பாகிஸ்தானில் உள்ளது.
Q5. மகாராஜா ரஞ்சித் சிங், வஸீராபாத் பகுதிக்கு எந்த வெளிநாட்டவரை ஆளுநகராக நியமித்தார். சீக்கிய சாம்ராஜ்யத்தில் அவருடைய பங்கு என்ன?
பாவ்லோ அவிட்டபைல் -- PAOLO AVITABILE - 1826ல் இத்தாலியரான இவர் ஊதிய அடிப்படையில் ஆளுநராக நிறுவப்பட்டார். 1834ல் இவர் பெஷாவருக்கு மாற்றப்பட்டார். இவருடைய ஆட்சி மிகவும் கொடுமை வாய்ந்ததாக இருந்தது. இவருடைய இந்த நடவடிக்கை ஆங்கிலேயர்களுக்கு பிற்காலத்தில் சாதகமாக அமைந்தது.
1842ல் ஆங்கிலேயர்கள் முதல் ஆப்கான் போரை முடித்து திரும்புகையில், ஆங்கிலேயர்களுக்கு பெரும் உதவி செய்து பெருத்த தொகை பெற்று, அதில் பாதிக்கு மேல் தன் சொந்த பயனுக்கு, ஆங்கிலேயர்கள் மூலமாகவே அனுப்பி வைத்தார். சீக்கிய ராணுவ நடவடிக்கை ரகசியங்களை ஆங்கிலேயர்களுடன் பகிர்ந்து கொண்டது, இவர் சாம்ராஜ்யத்துக்கு நேர்மையற்றவராக இருந்தார் என்பது தெளிவாகிறது. ரஞ்சித் சிங் மறைவுக்குப் பிறகும் பதவியில் தொடர்ந்து, 1843ல் ஓய்வு பெற்று தன் ஊரான நேப்பிள்ஸ் இத்தாலிக்கு சென்று குறுகிய காலத்திலேயே மறைந்தார்.
கரக் சிங் -- KHARAK SINGH – 1839-1840 – ரஞ்சித் சிங் ந் மைந்தர். விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். இவருடைய இளைய வயது மகன் நவுனி நிஹால் சிங் பதவிக்கு அமர்த்தப்பட்டார். ஆனால் இவரும் விரைவில் ஒரு கட்டிட இடிபாட்டினால் இறந்தார். இரண்டு மரணத்திலும் கண்டுபிடிக்கமுடியாத மர்மம் இருந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஷேர் சிங் SHER SINGH -1840-1843 – ரஞ்சித் சிங் ன் மற்றொரு மைந்தர். 1840ல் பதவியேற்று 1843 வரை ஆண்டார். இவரும், தனது மகன் தவறாக ஒரு துப்பாக்கி சூட்டினால் மரணம் அடைந்தார். இந்த மரணத்திலும் மர்மம் இருந்ததாக கருதப்படுகிறது, காரணம் இவருடைய பதவியேற்பில் குடும்ப குழப்பம் நிலவியது எனப்படுகிறது.
துலீப் சிங் DULEEP SINGH – 1843 -1893 – ரஞ்சித் சிங் ன் இளைய மைந்தர். ஐந்து வயதில் பதவியேற்றதினால் முடிவெடுக்கும் நிலையில் இல்லாதிருந்தார். இந்நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் சீக்கியர்களுடன் இரண்டு போர் நடத்தி, 1849ல் சீக்கிய சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினர். துலீப் சிங், நாட்டை விட்டு வெளியேறி, லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டு, அவருடைய மீதி வாழ்க்கையை அங்கேயே கழித்தார். 1893ல், பாரீஸ், ஃப்ரான்ஸ் ல் மறைந்தார்.