Khub.info Learn TNPSC exam and online pratice

பாராளுமன்றம் விவகாரங்கள்

Q1. பாராளுமன்றம் என்பது என்ன?
மக்களவையும் மாநிலங்களவையும் சேர்ந்து செயல்படுவதே பாராளுமன்றம் எனப்படும்.மக்கள் பிரதிநிதிகளால் நாட்டு பிரச்சனைகளை விவாதித்து அதற்கேற்ற தீர்வுகளை காண்பதற்கான மன்றம்.
Q2. பாராளுமன்றத்திற்கு எத்தனை தொடர் கூட்டங்கள் (Sessions) நட த்தப்படுகிறது?

மூன்று.
1. நிதி நிலை அறிக்கைத் தொடர் - பிப்ரவரி - மே
2. மழைக் காலத் தொடர் - ஜூலை - ஆகஸ்ட்
3. குளிர்காலத் தொடர் - நவம்பர், டிசம்பர். இரண்டு கூட்ட த்தொடர்களுக்கு இடையில் இடைவெளி ஆறு மாதங்களை தாண்டக் கூடாது. கூட்ட த்தொடர் காலக் கட்ட த்தை குடியரசுத் தலைவர் அறிவிப்பின் மூலம் வெளியிடப்படும்.
Q3. பாராளுமன்ற கூட்டுத் தொடர்கூட்டம் (Joint Session of Parliament) என்பது என்ன?
ஏதேனும் ஒரு மசோதா அல்லது பொது நல கருத்து விவாதத்தில், ஒருமித்த கருத்து வராத நிலையில், மசோதா ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், குடியரசுத் தலைவர் இரு அவைகளையும் ஒன்றாக கூட்டி, விவாதித்து, தீர்வு காண்பதுவே பாராளுமன்ற கூட்டுத் தொடர் ஆகும்.
Q4. 2014 முடிய, இது வரை எத்தனை தடவை என்ன காரணங்களுக்காக, பாராளுமன்றக் கூட்டுத்தொடர் நடைபெற்றிருக்கிறது?
இது வரை மூன்று கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
1. 1961 - வரதட்சணை தடுப்புச் சட்டம்.
2. 1978 - வங்கிப் பணியாளர் குழுமம் அறிக்கையின் மீது விவாதம்.
3. 2002 - தீவிரவாதத் தடுப்புச் சட்டம்.
Q5. தள்ளி வைப்பு - Adjournment என்பது என்ன?
நடந்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை / விவாதத்தை சிறிது நேரத்திற்கு ஒத்திப் போட்டு பிறகு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் / திரும்புதல் (நேரம் குறிப்பிட்டு ஒத்திப் போடுதல்)
Q6. நாள் / நேரம் குறிக்காத ஒத்தி வைப்பு - (Sine-die) என்பது என்ன?
நேரம்/நாள் குறிக்கப்படாமல் அவை விவாதத்தை ஒத்தி வைத்தல்.
Q7. மசோதா (Bill) என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட விவகாரம் / பணச் செலவு பற்றி எடுத்துக் கொள்ள எழுத்தால் சமர்ப்பிக்கப்படும் முன் தாக்கல்.
Q8. சாதாரண மசோதா (Ordinary Bill) என்பது என்ன?
மக்கள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விவகாரத்தை பற்றியும் விவாதிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய முன் தாக்கல். இது 1. பொது மக்கள் (Public) 2. தனியார் (Private) என்ற இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள் ளது. இவ்வகை மசோதாக்கள் இரு அவையிலும் தாக்கல் செய்யலாம்.
Q9. பண மசோதா (Money bill) என்பது என்ன?
பணச் செலவு பற்றிய மசோதா. இந்த மசோதா மக்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மக்களவையில் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின் பரிந்துரைக்காக மட்டும் மாநில அவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவை 14 நாட்கள் வரை தான் பண மசோதாவை தக்க வைத்து விவாதிக்கலாம். அதற்கு மேற்பட்டால் அந்த பண மசோதா மாநிலங்களவையில் அனுமதிக்கப்பட்டதாக கருதப்படும். ஆகவே, பண மசோதாவைப் பொறுத்த வரை, மக்களவை முடிவுதான் கடைசி முடிவு.
Q10. சட்டம் - ACT - என்பது என்ன?
ஒரு மசோதா, இரு அவைகளிலும் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டபின், சட்டமாக இயற்றப்படுகிறது.
Q11. இரு சட்டசபைகள் மாநிலம் - BICAMERAL STATES - என்பது என்ன?

எந்த மாநிலத்தில் இரு சட்டசபைகள் - மேலவை, கீழவை - உள்ளதோ, அந்த மாநிலம் இவ்வாறு அழைக்கப்படும் - உதாரணமாக                    உத்திரபிரதேசம் .......... 403 + 100
மகாராஷ்டிரா .............. 288 + 78
பீஹார் .........................243 + 75
கர்நாடகா .....................224 + 75
ஆந்திரபிரதேசம் .......... 175 + 50[5]
தெலங்கானா ...............119 + 40[6]
ஜம்மு & காஷ்மீர் .........  87 + 36

Q12. ஒரு சட்டசபை மாநிலம் - UNICAMERAL STATE - என்பது...
ஒரே சட்டசபை கொண்ட மாநிலம். உதாரணம் : தமிழ் நாடு.
Q13. அரசியல் உலகில் "CAUCUS - காக்கஸ்" என்பது என்ன?
அரசியல் ரீதியாக மனது ஒத்த அரசியல்வாதிகள் ஒன்று கூடி விவாதித்து ஒரு பொதுவான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுப்பது.
Q14. "CLIMBING ON THE BAND WAGON" என்று அரசியலில் அடிக்கடி சொல்லப்படும் தொடரின் அர்த்தம் என்ன?
இதற்கு தமிழில் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் "காற்று அடிக்கும் போது தூற்றிக் கொள்" என்ற பழமொழியை எடுத்துக் கொள்ளலாம். அரசியல் ரீதியாக, ஒருவர் ஒரு பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என யூகங்கள் உறுதிப்படுத்தப்படும் போது, அவருக்கு ஆதரவாக சேர்ந்து கொள்வது.
Q15. "FILIBUSTER" - என்ற ஆங்கிலச்சொல் அரசியலுக்கு எவ்வாறு பொருந்தும்?
ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய விவாதத்தின் போது, ஒருவர் அந்த விவகாரத்தை தள்ளிப் போட வைக்கவோ அல்லது தடுக்கவோ, தனது விவாதத்தில் தேவையில்லாத அல்லது சம்பந்தமில்லாத விஷயங்களைச் சேர்த்து நீண்ட நேரம் பேசுவது (முட்டுக்கட்டைகள் போடுவது)
Q16. "GALLUP POLL" என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட அரசியல் விவகாரத்தைப் பற்றி பொது மக்களின் கருத்தை அறிய, நடத்தப்படும் பரிசோதனை முறையான கருத்து கணிப்பு வாக்கெடுப்பு. அமெரிக்காவின் டாக்டர் ஜார்ஜ் ஹொரேஸ் காலப் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Q17. "INNER CABINET" என்பது அரசியலில் எதை குறிக்கிறது?
பிரதமருக்கு மிக நெருக்கமாகவும், செல்வாக்கு அதிகமாக உள்ள அமைச்சர்களை இவ்வாறு அழைப்பர். அரசியலின் சில முக்கிய முடிவுகள் இந்த செல்வாக்கு அதிகமுள்ள அமைச்சர்களால் எடுக்கப்படுகிறது என்பது கருத்து.
Q18. "LOBBYING" என்பது அரசியலில் எதை குறிக்கிறது?
ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்து முடித்துக் கொள்வதற்காக மற்றவர்களையும் தூண்டுவது. அவை மன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அரங்கத்தின் உள்ளே அவைத்தலைவர் முன் சென்று கூச்சலிடுவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q19. “LAMB DUCK SESSION” என்பது அவை நடவடிக்கைகளில் எதைக் குறிக்கிறது?
புது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஓய்வு பெறப் போகும் பழைய உறுப்பினர்களால் நட த்தப்படும் கடைசிக் கூட்டம். இதற்கு இப்பெயர் வரக்காரணம், இக்கூட்ட த்தில் எந்த முடிவும் வராது என்பது தான்.
Q20. "PEOPLE SNIFFER" என்பது அரசியலில் எதை குறிக்கிறது?
அரசாங்கத்தை, அங்க்கீகாரபற்ற வழிகளின் மூலம் குறை மற்றும் குற்றம் சாட்டுவது.
Q21. “SNAP VOTE” என்பது என்ன?
கட்சி கொரடா (Party Whip) வழி நட த்தல் இல்லாமலே திடீரென வாக்களிப்பது.
Q22. நட்சத்திர கேள்வி - Starred Question என்பது என்ன?
வாய்வழி பதில் மட்டுமே கொடுக்கப்படும் கேள்விகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q23. நட்சத்திரமல்லாத கேள்வி - UNSTARRED QUESTION என்றால் என்ன?
எந்தக் கேள்விகள் எழுத்து மூலம் பதிலளிக்கப்படுகிறதோ அவை இவ்வாறு அழைக்கப்படும்.
Q24. பூஜ்ய நேரம் - ZERO HOUR என்பது என்ன?
கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் இதர அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்.
Q25. கேள்வி நேரம் - QUESTION HOUR என்பது என்ன?
மக்களவை கூடும் ஒவ்வொரு நாளின் முதல் ஒரு மணி நேரம், உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பவும், அவை சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தேதியன்று பதிலளிக்கவேண்டும் என்று நிர்ணயிக்க ஒதுக்கப்பட்ட நேரம்.
Q26. நடு நிலை குறை தீர் அதிகாரி - OMBUDSMAN என்பது யாரைக் குறிக்கிறது?
பாராளுமன்ற, நீதித்துறை அல்லது அரசாங்க அதிகாரிகளிலிருந்து யாரேனும் ஒருவரை, குறை தீர்க்கும் மற்றும் இரு தரப்பினிடையே உள்ள சர்ச்சைக்கு தீர்வு காண்பது போன்ற அலுவல்களை கவனிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்.
Q27. "வெள்ளைத்தாள் அறிக்கை" “WHITE PAPER STATEMENT”என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட விவகாரத்தைப் பற்றி சிறிய அளவில், புள்ளி விவரங்கள் மற்றும் உண்மை நிலை மற்றும் அது பற்றி அரசாங்கத்தின் நிலை என்னவென்று ஒரு அறிக்கை மூலம் வெளிப்படுத்துதல்.