Khub.info Learn TNPSC exam and online pratice

அரசாங்கம் அமைத்தல்

Q1. அரசாங்கம் அமைத்தல் என்பது என்ன?
ஒரு தேர்தலுக்கு பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி / களால் ஆட்சி செய்வதற்காக அமைக்கப்படும் ஒரு அமைப்பு. இது மத்தியில் தொடங்கி பஞ்சாயத்து வரை ஏற்படும் அமைப்பு.
Q2. தேர்தல் முடிவிற்கு பிறகு, முடிவுகள் அடிப்படையில், எவ்வகையான அரசாங்கங்கள் அமைக்கப்படுகின்றன?

1. அரிதிப் பெரும்பான்மை - ABSOLUTE MAJORITY : அதாவது, போட்டியில் கலந்து கொண்ட கட்சிகளுள், எந்த கட்சி, மொத்த இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு / மேலும் இடங்களில் வெற்றி பெற்று அமைக்கும் ஆட்சி இந்த வகையைச் சாரும். இதன் விளைவு எதிர்ப்பு குறைவு -முடிவுகளில் வேகம். (1952க்கு பிறகு நடந்த சில காங்கிரஸ் அரசாங்கங்கள்).
2. பெரும்பான்மை - SIMPLE MAJORITY : மொத்த இடங்களில் அரை பங்குக்கு மேல் இடங்களில் வெற்றி பெற்று (மூன்றில் இரண்டுக்கு குறைவாக) கட்சியால் அமைக்கப்படும் ஆட்சி. இதன் விளைவு, முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகளை சார்ந்திருக்கும். (2015 பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம்)
3. சிறுபான்மை - MINORITY : சில தேர்தல்களில் ஏதேனும் ஒரு கட்சிக்கு எந்த வகை பெரும்பான்மையும் இல்லாமல், தனிக்கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக இருக்கும்போது, அது மற்ற கட்சிகளுடன் இணைந்து அழைக்கப்படும் அரசாங்கம். இதன் விளைவு - 1.நிலையற்ற தன்மை, 2.எல்லா முடிவுகளுக்கும், எதிர் மற்றும் தோழமை கட்சியை சார்நதே, அரசாங்கம் நடத்த வேண்டும்.3.இந்த வகை அரசாங்கம் நம்பிக்கை தீர்மானம் முன் வைத்து அதில் உரிய ஆதரவை பெற்றாலே ஆட்சி நடத்த முடியும்.
மேற்கூறிய மூன்று வகை, ஜன நாயக அடிப்படையில், குடியரசுத் தலைவர் (மத்திய அரசாங்கம்) ஆளுநர் (மாநில அரசாங்கம்) அழைப்பின் பேரில் ஆட்சிகள் அமைக்கப்படும்.
Q3. கூட்டணி ஆட்சி (COALITION ) என்பது என்ன?
தனிப் பெருங்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சி அமைக்க முடியாத நிலையில், மற்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பது.
Q4. "காபந்து அரசாங்கம்" - CARE TAKER GOVERNMENT - என்றால் என்ன?
ஒரு ஆட்சியின் காலம் முடிந்து, அடுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைக்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் ஆட்சி.
Q5. மத்தியில் அரசாங்கம் அமைப்பதைப் பற்றிய விவரங்கள், இந்திய அரசியல் சட்ட த்தின் எந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது?
விதி எண் 52 முதல் 151 வரை.
Q6. மா நில அரசாங்கங்கள் இந்திய அரசியல் சட்ட த்தின் எந்த விதிப்படி அமைக்கப்படுகிறது?
விதி எண் 168
Q7. தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் ஆயுட்காலம் என்ன?
ஐந்து வருடம் - தானாக ராஜினாமா, அல்லது விலக்கப்பட்டாலோ அல்லது நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி அடைந்தாலோ, இந்தக்காலம் குறையக்கூடும். பொதுவாக இந்தக்காலம் அதிகப்படுத்தப்படவில்லை. ஒரே ஒரு தடவை 1976ல் இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்போது மக்களவையின் காலம் 6 வருடமாக நீட்டிக்கப்பட்ட து.
Q8. மத்தியில் மக்களவை மாநிலங்களில் சட்டசபை உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை என்ன?
மாநிலங்களவை - 525; மத்தியில் மக்களவை - 545. இந்த உச்ச வரம்பு 25 வருடங்களுக்குத் தக்க வைக்க வேண்டும் என்று 84வது சட்டத் திருத்தத்தின் (2001) மூலம் முடிவு எடுக்கப்பட்டது.
Q9. பிரதம மந்திரி மக்கள் / மாநில அவை உறுப்பினராக இருந்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்ப டுகிறாரா?
இல்லை. உறுப்பினராக இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால், தேர்ந்து எடுக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் (மக்கள் / மாநில) ஏதேனும் ஒரு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும். இவ்வாறு இது வரை இந்திய அரசியலில் பதவி விலகல் ஏற்பட்டதில்லை. மாநில முக்கிய மந்திரி தேர்விலும் இதே நிலை தான்.
Q10. பிரதம மந்திரி / முக்கிய மந்திரி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
எந்த கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறதோ, அந்தக் கட்சி தங்களது கட்சி அல்லது உறுப்பினர்களுக்கிடையில் ஒருவரை பிரதம மந்திரி / முக்கிய மந்திரியாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் / ஆளுநர் அழைத்து ஆட்சி அமைக்கப்படுகிறது.
Q11. பிரதம மந்திரிக்கு யார் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்?
குடியரசுத் தலைவர்
Q12. மாநில முக்கிய மந்திரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
ஆளுநர். யூனியன் பிரதேசத்தில் லெஃப்டினன்ட் கவர்னர்.
Q13. மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி முதன் முதலில் எப்போது அமைக்கப்பட்டது?
1977-ல் - மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் சார்பில் ஆட்சி அமைக்கப்பட்ட து.
Q14. மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் ஆட்சி எப்போது அமைக்கப்பட்ட து?
கேரளா - கம்யூனிஸ்ட் கட்சி - 1957 -1959.
Q15. நம்பிக்கை தீர்மானம் என்பது என்ன?
பொதுவாக இந்த சூழ் நிலை "சிறுபான்மை" (SIMPLE MEJORITY) அரசாங்கம் அமையும்போது ஏற்படும். அவ்வாறு அமையும்போது, அந்த அரசாங்கம் அவையின் நம்பிக்கைப் பெற்றிருப்பதை நிரூபணம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த தீர்மானம், குடியரசுத் தலைவர் / ஆளுநர் அவர்கள் நிர்ணயிக்கும் தேதியில், பிரதம் மந்திரி / முக்கிய மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் மக்களவை / சட்டசபையின் முன் வைக்கப்பட்டு வாக்கெடுப்பு மூலம் (பொதுவாக வாய் வழி அல்லது கை உயர்த்தல்) முடிவு எடுக்கப்படுகிறது. தீர்மானம் தோல்வி பெற்றால், சம்பந்தப்பட்ட கட்சி ஆட்சி அமைக்க முடியாது. வேறு கட்சி ஏதேனும் முன் வந்தால் இதே வழி முறை பின்பற்றப்படும்.. ஏதும் இல்லாத நிலையில் சபை கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்படும்.
Q16. நம்பிக்கை - நம்பிக்கையில்லா தீர்மானம் முக்கிய வேறுபாடு என்ன?
நம்பிக்கை தீர்மானம் ஆட்சியில் அமர்த்தப்படும் / அமர்ந்திருக்கும் கட்சியால் அவையில் முன் வைக்கப்படுவது நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மீது முன் வைக்கப்படுவது.
Q17. கட்சி ஆணை/கொரடா - PARTY WHIP - என்ற தொடர் பொதுவாக வாக்கெடுப்பு தீர்மானங்களின் போது பேசப்படும். அது என்ன?
இது ஒரு கட்சி ஆணை. வாக்கெடுப்பின்போது எந்த நிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Q18. எந்த பிரதமருக்கு எதிராக, எப்போது, முதன்முதலாக, நம்பிக்கையில்லா தீர்மானம் முன் வைக்கப்பட்ட து?
ஜவஹர்லால் நேரு - ஆகஸ்ட் - 1963 - இத்தீர்மானம் ஜே.பி.கிருபளானி அவர்களால் முன் வைக்கப்பட்ட து.
Q19. 2014 முடிய, இதுவரை எத்தனை நம்பிக்கையில்லா தீர்மான்ங்கள் மக்களவையில் முன் வைக்கப்பட்டுள்ளது? அவற்றின் முடிவு என்ன?
26 தடவை. அவற்றின் 25 தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன. மீதமுள்ள ஒன்றில் 15-7-1979 அன்று, தீர்மானத்தின் மீது விவாதம் முடிவுறாத நிலையில், மொரார்ஜி தேசாய் அவர்கள் அவரது அமைச்சரவையில் ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
Q20. எந்த பிரதமர் இதுவரை அதிகமான நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்து இருக்கிறார்?
இந்திரா காந்தி - 15. 1966 - 1975க்கிடையில் 12 முறையும் 1981-82க்கிடையில் மூன்று முறையும்.
Q21. நம்பிக்கைத் தீர்மானம் இதுவரை பிரதம மந்திரிகளால் எத்தனை தடவை கொண்டு வரப்பட்ட து? அவற்றின் நிலை என்ன?
இதுவரை ஆறு தடவை இவ்வகை தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவற்றில் ஒன்றில் மட்டும் ஆட்சியிலிருந்த அரசாங்கம் (கட்சி) வெற்றி பெற்றது. மீதி ஐந்தில் தோல்வி கண்டு, அரசாங்கம் ராஜினாமா செய்தது.
Q22. மக்களவையில் பிரதமர்களால் கொண்டு வரப்பட்ட 5 நம்பிக்கை தீர்மானங்கள் தோல்வி அடைந்த விவரங்கள் யாவை?

1. 20.8.1979 : பிரதமர் சரண்சிங் முன் வைத்த நம்பிக்கை தீர்மானம், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்ட தால், தீர்மானம் வாக்கெடுப்புக்கு செல்லாமலேயே, அரசு கலைந்தது.
2. நவம்பர் 1990 : பிரதமர் வி.பி.சிங் முன் வைத்த நம்பிக்கை தீர்மானம், 356 எதிர்வாக்குகளால் தோல்வி அடைந்து அரசு கலைந்த து.
3. 28.05.1996 : காங்கிரஸ் கட்சி அளித்து வந்த ஆதரவு வாபஸ் பெறப்பட்டதால் பிரதமர் வாஜ்பேயி அரசாங்கம் கலைந்தது.
4. ஏப்ரல் 11, 1997 : காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வாபஸ் பெறப்பட்ட தால், பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை தீர்மானத்தில் 338 எதிர் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டு ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
5. 17.04.1999 : AIADMK கட்சியின் ஆதரவு வாபஸ் பெறப்பட்ட தால், வாஜ்பேயி தலைமையிலான ஆட்சி நம்பிக்கை தீர்மானத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஆட்சி கலைக்கப்பட்டது.
Q23. மக்களவையில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்ற ஒரே நிகழ்வு எப்போது, யாருடைய காலத்தில் நடைபெற்றது?
ஜூலை 21-22, 2008. பிரதமர் டாக்டர் மன்மோகன் தலைமையிலான அரசாங்கம்.
Q24. நம்பிக்கை தீர்மானம் முன் வைத்து வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியாத ஒரே பிரதமர்?
டாக்டர் மன்மோகன் சிங் - அவர் மக்களவை உறுப்பினராக இல்லாததால் அவ்வமயம் அவர் மாநிலங்களவை உறுப்பினர்.
Q25. நாட்டை ஆளுவதற்கு ஒரு அமைச்சரவை தேவை என்பதை அரசியல் சட்டத்தின் எந்த விதிகள் வலியுறுத்துகிறது?
விதி எண் 53 (1) மற்றும் 74 (1).