Khub.info Learn TNPSC exam and online pratice

பிரதம மந்திரி

Q1. இந்திய அரசியல் சாசனத்தின் எந்த விதிகளின் கீழ் பிரதம மந்திரி நியமிக்கப்படுகிறார்?

விதி எண்கள் 63(1) மற்றும் 74(1). 

Q2. பிரதமர் ஆவதற்கான நிபந்தனைகள் யாவை?

1) இந்திய பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2) பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில், பிரதமர் பதவி ஏற்று, ஆறு மாதத்திற்குள் உறுப்பினர் ஆவது அவசியம்.
3) மக்களவை உறுப்பினர் ஆக இருந்தால் 25 அல்லது அதற்கு மேலான வயதுடையவராகவும்,
மாநிலங்களவை உறுப்பினர் ஆக இருந்தால் 30 அல்லது அதற்கு மேலான வயதுடையவராக
இருத்தல் வேண்டும்.
4) லாபகரமான எந்த பதவியிலும் இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின், பிரதமர் பதவியேற்கும் முன்
பதவி விலகி இருக்க வேண்டும்.

Q3. இந்திய பிரதமர்கள் இது வரை
எண் பெயர் Image தொடக்கம் முடிவு கட்சி
1 ஜவஹர்லால் நேரு 15.8.1947 27.5.1964 காங்கிரஸ்
2 குல்ஜாரிலால் நந்தா 27.5.1964 9.6.1964 தற்காலிகம்
3 லால் பகதூர் சாஸ்திரி 9.6.1964 11.1.1966 காங்கிரஸ்
4 குல்ஜாரிலால் நந்தா 11.1.1966 19.2.1966 தற்காலிகம்
5 இந்திரா காந்தி 19.2.1966 24.3.1977 காங்கிரஸ்
6 மொரார்ஜி தேசாய் 24.3.1977 28.7.1979 ஜனதா கட்சி
7 சரண் சிங் 28.7.1979 15.1.1980 ஜனதா கட்சி
8 இந்திரா காந்தி 15.1.1980 31.10.1984 காங்கிரஸ்
9 ராஜீவ் காந்தி 31.10.1984 2.12.1989 காங்கிரஸ்
10 விஷ்ணு பிரதாப் சிங் 2.12.1989 10.11.1990 ஜனதா தளம்
11 சந்திர சேகர் 10.11.1990 21.6.1991 சமாஜ் வாடி/ஜனதா கட்சி
12 பி.வி.நரசிம்ம ராவ் 21.6.1991 16.5.1996 காங்கிரஸ்
13 அடல் பிஹாரி வாஜ் பேயி 16.5.1996 1.6.1996 பா.ஜ.க.
14 H.D. தேவ கவுடா 1.6.1996 21.4.1997 ஜனதா தளம்
15 இந்தர் குமார் குஜ்ரால் 21.4.1997 19.3.1998 ஜனதா தளம்
16 அடல் பிஹாரி வாஜ்பேயி 19.3.1998 22.5.2004 பா.ஜ.க.
17 Dr. மன்மோகன் சிங் 22.5.2004 26.5.2014 காங்கிரஸ்
18 நரேந்திர மோடி 26.5.2014   பா.ஜ.க.
           
           
           
           
Q4. இந்தியாவின் முதல் பிரதமர் எத்தனை ஆண்டுகள் பிரதமராக இருந்தார்?   

 ஜவஹர்லால் நேரு - 15.08.1947 - 27.05.1964 - 17 வருடங்கள். அதிக காலம் பிரதமராக இருந்தவர்.

Q5. நம் நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது?         

லால் பகதூர் சாஸ்திரி - 09.06.1964 - 10.01.1966. இவரது மரணம் தாஷ்கெண்ட், ரஷ்யா (தற்சமயம் உஸ்பெகிஸ்தான்) வெளி நாட்டுப் பயணத்தின் போது மாரடைப்பால் 10.01.1966 அன்று ஏற்பட்டது.

Q6. குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் யார்?     

அடல் பிஹாரி வாஜ்பேயி - 13 நாட்கள் - 16.05.1996 - 1.06.1996

Q7. குறைந்த வயதில் நம் நாட்டு பிரதமர் பதவி வகித்தவர் யார்?     

ராஜீவ் காந்தி - 20.8.1944ல் பிறந்து, தனது 41வது வயதில்  31.10.1984 அன்று பிரதமரானார்.

Q8. மிக அதிக வயதில் நம் நாட்டு பிரதமர் ஆனவர் யார்? 

 மொரார்ஜி தேசாய் தனது 81வது வயதில் பிரதமராக பதவியேற்றவர்.

Q9. பதவியில் இருக்கும் போது மறைந்த பிரதமர்கள் யார், யார்?

1. ஜவஹர்லால் நேரு - 27.5.1964.
2. லால் பகதூர் சாஸ்திரி - 10.1.1966. (தாஷ்கெண்ட் ரஷ்யா-வில் மரணம்)
3. இந்திரா காந்தி - 31.10.1984.

Q10. பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே ஒரே / முதல் பெண் பிரதம மந்திரி. இவருக்கு வேறொரு முதல் இடம் உள்ளது. அது என்ன?     

இவர் தான் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முதல் பிரதம மந்திரி.

Q11. பிரதமர் இந்திரா காந்தியின் மரணம் எவ்வாறு ஏற்பட்டது?       

31.10.1984 - அவருடைய பிரத்தியேக பாதுகாவலர் பியாந்த் சிங் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Q12. எந்த பாரத பிரதமரின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது?     

ஜவஹர்லால் நேரு - 14 - நவம்பர்.

Q13. எந்த பாரத பிரதமரின் பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது?     

இந்திரா காந்தி - 19 நவம்பர். 

Q14. எந்த பாரத பிரதமரின் மறைவு நாள் தீவிரவாத எதிர்ப்பு நாளாக கருதப்படுகிறது?     

ராஜீவ் காந்தி - 21 - மே. 

Q15. இரு முறை இடைக்கால பிரதமராக இருந்தும், நிரந்தர பிரதமராக தேர்ந்து எடுக்கப்படாதவர் யார்?     

குல்ஜாரிலால் நந்தா. இவர் ஜவஹர்லால் நேரு மறைவுக்குப் பிறகு 27.5.1964 முதல் 9.6.1964 வரையிலும், பிறகு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவினால் 11.1.1966 முதல் 24.1.1966 வரையிலும் இருமுறை தற்காலிக பிரதமராக இருந்தவர்.

Q16. எந்த பிரதமர் அவசர காலம் பிரகடனம் செய்தார்?     

 இந்திரா காந்தி. (25.06.1975 முதல் 29.03.1977 வரை அவசர காலம் அமலில் இருந்தது)   

Q17. "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" மந்திரத்தைக் கொடுத்த பிரதமர் யார்?   

லால் பகதூர் சாஸ்திரி. 

Q18. பஞ்ச்சீல கொள்கைக்குரிய பிரதமர் யார்?     

ஜவஹர்லால் நேரு.

Q19. வங்காள தேச விடுதலைக்குக் காரணமாய் இருந்த பிரதமர்?     

இந்திரா காந்தி. 

Q20. பொக்ரான் அணுகுண்டு சோதனையின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்த பிரதமர் யார்?     

அடல் பிஹாரி வாஜ்பேயி.

Q21. இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய பிரதமர் யார்?   

 ராஜீவ் காந்தி -- 1987 - 1990. 

 

Q22. மண்டல் கமிஷன் அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட பிரதமர் யார்?     

  வி.பி.சிங். 

 

Q23. ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிரதமர் யார்?     

 டாக்டர் மன்மோகன் சிங்.  

 

Q24. இரண்டாவது முறை தற்காலிக பிரதமர் பதவியில் திரு. குல்ஸாரிலால் நந்தா வின் பதவிக் காலம் என்ன?

 14 நாட்கள்.       

Q25. பிப்ரவரி 29, அதாவது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது பிறந்த நாளை கொண்டிருந்த பிரதமர் யார்?

 மொரார்ஜி தேசாய். (29.2.1896). தனது பிறந்த நாளில் நாட்டு நிதி அறிக்கை சமர்ப்பித்த ஒரே பிரதமர்.     

Q26. மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பிரதமர் ஆனவர்கள் யாவர்?

 லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, H.D. தேவ கௌடா, இந்தர் குமார் குஜ்ரால்,  Dr.மன்மோகன் சிங்    

Q27. Dr. மன் மோகன் சிங் க்கு முன்னால், மாநிலங்களவையிலிருந்து பிரதமர் ஆனவர் யார்?

 இந்தர் குமார் குஜ்ரால்.   

Q28. கட்டுமானத் துறையில் டிப்ளமோ பெற்ற இந்திய பிரதமர் யார்?   

  தேவ கவுடா.   

Q29. பாரத பிரதமராக அதிக முறை பதவி வகித்தவர்கள் யாவர்?
ஜவஹர்லால் நேரு -- 1947 - 1964.
இந்திரா காந்தி -- 1966 - 1977 மூன்று முறை; பிறகு 1980-1984 வரை.
அடல் பிஹாரி வஜ்பேயி - 16.5.1966 to 1.6.1966; 19.3.1998 to 13.10.1999 மற்றும் 13.10.1999 to 22.5.2004.
Q30. ஒரு பாரத பெண் பிரதம மந்திரியாக திருமதி இந்திரா காந்தியின் சாதனை என்ன?
i) முதல் இந்திய பெண் பிரதமர்.
ii) பாரத பிரதமராக 1966-1977 க்கு இடையில் மூன்று முறையும், 1980-1984 க்கிடையில் ஒரு முறையும் பதவி வகித்தவர்.
iii) 2017 நிலையில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பெண்மணி. மொத்தமாக 15 ஆண்டுகள்.
iv) இந்திய பிரதமர்களுள், தேர்தலில் தோல்வி தழுவிய முதல் பிரதமர்.
Q31. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதுகளை பெற்ற ஒரே பாரத பிரதமர் யார்?
மொரார்ஜி தேசாய் -- பாரத ரத்னா 1991 மற்றும் பாகிஸ்தானின் நிஷான் எ பாகிஸ்தான் விருது 1990.
Q32. மத்திய மந்திரிகளுக்கு இலாக்கா பொறுப்புகளை தீர்மானிப்பவர் யார்?
பிரதம மந்திரி.
Q33. பிரதமர் பதவியேற்பு பொதுவாக குடியரசு தலைவர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெறும். இதிலிருந்து விலகி முதல் முறையாக குடியரசு தலைவர் மாளிகையின் முன் வெளிப்புறத்தில் பதவியேற்றவர் யார்?
சந்திர சேகர். இவரைத் தொடர்ந்து, அடல் பிஹாரி வாஜ்பேயி மற்றும் நரேந்திர மோடி.
Q34. இந்திய அரசியல் சட்டத்தில் துணைப் பிரதமர் பதவிக்கு இடமிருக்கிறதா?
இல்லை. இருப்பினும் அரசியலின் கட்டாயத்தின் காரணமாக இதுவரை கீழ்க்கண்டவர்கள் துணைப் பிரதமர்களாக பணியாற்றி உள்ளனர்.
1. வல்லபாய் படேல் - 15.8.1947 - 15.12.1950 - பிரதமர் நேரு.
2. மொரார்ஜி தேசாய் - 21.3.1967 - 6.12.1969 - பிரதமர் இந்திரா காந்தி - காங்கிரஸ்.
3. சரண்சிங் - 24.3.1977 - 28.7.1979 - பிரதமர் மொரார்ஜி தேசாய் - ஜனதா கட்சி.
4. ஜகஜீவன்ராம் - 24.3.1977 - 28.7.1979 - பிரதமர் மொரார்ஜி தேசாய் - ஜனதா கட்சி.
5. ஒய்.பி. சவான் - 28.7.1979 - 14.1.1980 - பிரதமர் சரண்சிங் - காங்கிரஸ்.
6. சவுத்ரி தேவிலால் - 2.12.1989 - 21.6.1991 - பிரதமர் வி.பி.சிங் மற்றும் பிரதமர் சந்திரசேகர் - ஜனதா தளம்.
7. எல்.கே. அத்வானி - 29.6.2002 - 22.5.2004 - பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி - பாரதீய ஜனதா கட்சி 1979ல் இரு துணைப் பிரதமர்களும், வல்லபாய் படேல் அதிக நாட்கள் துணைப் பிரதமராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்."
Q35. நம் நாட்டின் முதல் துணைப் பிரதமர் யார்?     
சர்தார் வல்லபாய் படேல் - 1947 - 1950.
Q36. 2017 நிலையில், கடைசியாக துணைப் பிரதமராக இருந்தவர் யார்?       
எல்.கே. அத்வானி. 2002 - 2004.
Q37. 1979 ம் வருடம், இரண்டு துணை பிரதமர்கள் பதவி வகித்தனர். அவர்கள் யார்?
சரண் சிங், ஜகஜீவன் ராம்.
Q38. சர்தார் வல்லபாய் படேல், மூன்று மந்திரி சபையில் துணைப்பிரதமராக பதவி வகித்தார். அவருக்கு பிரதமராக இருந்தவர்கள் யாவர்?
ஜவஹர்லால் நேரு மட்டுமே.
Q39. துணைப் பிரதமராய் இருந்து பிறகு பிரதமரானவர்கள் யார்?         
1. மொரார்ஜி தேசாய், 2. சரண் சிங்.