Khub.info Learn TNPSC exam and online pratice

முக்கியமான அரசாங்க வகைகள்

Q1. முக்கியமான அரசாங்க வகைகள்
1. ஜன நாயகம் :DEMOCRACY - மக்களால், மக்களுக்காக நட த்தப்படும் ஆட்சி. இவ்வகை ஆட்சியில் இரண்டு வகை உண்டு.1. நேரடி ஜன நாயகம் 2. மறைமுக ஜன நாயகம். இரண்டாவது வகை அதிக நாடுகளில் உள்ளது.
நேரடி ஜன நாயகம் : இதில் மக்களின் தேவைகளை, திட்டங்களை வாக்குப்பதிவின் மூலம் முடிவெடுப்பது. உதாரணம் : சுவிட்சர்லாந்து.
மறைமுக ஜன நாயகம் : இதை பிரதி நிதித்துவ ஜனநாயகம் என்றும் அழைக்கிறார்கள். இவ்வகையில் மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள், மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான திட்டங்களை அரசாங்கத்தின் முன் வைக்கிறார்கள். திட்டங்கள் தீட்டுவதில் பங்கு பெறுகிறார்கள். உதாரணம் : இந்தியா. இவ்வகையை பாராளுமன்ற ஜன நாயகம் என்றும் கூறுவார்கள். ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் தங்கள் தொகுதிகளின் தேவைகளை எடுத்துச் சொல்லி, கிடைக்கச் செய்ய வேண்டியது இந்த அமைப்பின் மூலமே. ஜன நாயகத்தில் இன்னும் சில வகைகளும் உண்டு. ஆனால் புழக்கத்தில் இல்லை.
2. சர்வாதிகாரம் : DICTATORSHIP - எங்கு அரசியல் அரசாங்க நடவடிக்கைகள் ஒரு தனி மனிதனின் கீழ், கடுமையான அல்லது சுமுகமான முறையில் நட த்தப்படுகிறதோ அது சர்வாதிகாரம் ஆகும். இவ்வகையில் பெரும்பகுதி கடுமையான வகையில் தான் ஆட்சி நடந்துள்ளது. உதாரணம் : இடி அமீன், உகாண்டா : ஃபெர்டிணான் ட் மார்கோஸ், பிலிப்பைன்ஸ் : ஹிட்லர், ஜெர்மனி : இவ்வகையில் சர்வாதிகாரியாக இருப்பவர் அரசியல்வாதி அல்லது பாதுகாப்பு துறை தளபதி / அதிகாரியாகத் தான் பொதுவாக இருப்பார்கள்.
3. ராணுவ சர்வாதிகாரம் : MILITARY DICTATORSHIP - இவ்வகை அரசாங்கம் பொதுவாக ஊழல் நிறைந்த, வலிவு குறைந்த அரசாங்கம் அல்லது அரசியல் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு அரசியல் மாற்றம். இதில், அரசு நடத்தும் ஒரு அதிகாரம் ஒரு தனி நபரிடமிருந்தால் அது ராணுவ சர்வாதிகாரம். அதுவே சிலர் ஒன்று சேர்ந்து ஆட்சி நடத்தினால் அது ராணுவ குழு (MILITARY JUNTA) ஆட்சி என அழைக்கப்படும். உதாரணம் : பியான்மார்.
4. பிரபுத்துவம் : ARISTOCRACY - இவ்வகையில் ஆளும் சக்தி, ஒரு குறிப்பிட்ட சக்தி வாய்ந்த சிலரின் வசம் இருப்பது. இந்த சிலர் பெரும் பணக்கார ர்கள், அறிவாளிகள் போன்ற பிரபலமானவர்கள், ஆட்சியை நட த்துவது.
5. அராஜகம் : ANARCHY - எந்த ஒரு சட்ட திட்டங்களின் வரைவுக்குள்ளும் இயங்காத எந்த ஒரு தனி நபர், குழு அல்லாத, அவரவர் விருப்பத்துக்கேற்ப நடப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது. உதாரணம்: சோமாலியா.
6. கம்யூனிச அரசாங்கம் :COMMUNIST STATE - கம்யூனிச கொள்கைகளின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி.
7. எதேச்சாதிகாரம் :AUTOCRACY - ஒரு தனி நபர் கையில் அனைத்து ஆளும் சக்தியும் அடங்கி இருப்பது. இது ஒரு மன்னர் கையிலோ அல்லது தனி நபர் கையிலோ இயங்கும் ஆட்சி.
8. முதியவர்கள் ஆட்சி : GERONTOCRACY - நாட்டில் உள்ள முதியோர்களை வைத்து நட த்தும் ஆட்சி. இவ்வகை நாட்டளவில் இல்லாவிட்டாலும், இன்னும் பல கிராமங்களில் முதியோர்களை முன்னிறுத்தி அவர்களின் அறிவுரைப்படி முடிவுகள் எடுக்கப்படுகிறது.
9. தன்னல குழு ஆட்சி :OLIGARCHY - இவ்வகை ஆட்சியில் நாட்டில் உள்ள சில குடும்பங்கள் (ராஜ பரம்பரை, வியாபாரிகள், பணக்கார ர்கள், கல்வியாளர்கள், ஆன்மீக அல்லது பாதுகாப்பு அதிகாரிகள்) கையில் அடங்கியிருப்பது. இது தலைமுறையாக மாறக்கூடிய ஆட்சியாகவும் இருக்கலாம். பொதுவாக இவ்வகை ஆட்சியில் வன்முறையும், அடக்குமுறையும் இருக்கும்.
10. இடை மருவு ஆட்சி : TRANSITIONAL GOVERNMENT - ஒரு ஆட்சி / அரசாங்கம், ஊழல் நிறைந்ததாகவோ, அராஜகமானதாகவோ அல்லது இயலாததாகவோ இருக்கும் நிலையில், பொதுவாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரெனவோ (COUP) அல்லது அதன் சக்தியை கொண்டு ஆட்சியில் இருப்பவர்களை விலக்கிவிட்டு, அதிகாரத்தை த்ங்கள் கையில் எடுத்துக்கொண்டு, சரியான நிலை திரும்பும் வரை, வேறு ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கும் இவ்வகை மாற்று அரசாங்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. உதாரணம் :எகிப்து.
11. ஊழலாட்சி : KLEPTOCRACY - எந்த ஒரு அரசாங்கம் தன்னலம், பேராசை மற்றும் ஊழல் நிறைந்த்தாக உள்ளதோ அது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
12. பெண்ணாட்சி : MATRIARCHY - தனி ஒரு பெண்ணாலோ, ஒரு குடும்பத்தை சார்ந்த பெண்களாலோ, அல்லது பெண்கள் சிலரால் நட த்தப்படும் ஆட்சி.
13. தகுதியுடையவர்கள் ஆட்சி : MERITOCRACY -ஆட்சி செய்வதற்கு, அந்தந்த துறை வல்லுனர்களைக் கொண்டு நட த்தப்படும் ஆட்சி.
14. முடியாட்சி : MONARCHY - மன்னராட்சி, இது முழுமையாகவோ, அல்லது மன்னரால் நியமிக்கப்பட்ட வல்லு நர்களை கொண்டோ, அல்லது அரசியல் சட்டங்கள் அடிப்படையிலோ (constitutional monarchy ) அல்லது தலைமுறை மன்னராட்சியாகவோ இயங்கும் ஆட்சி. உதாரணம் : இங்கிலாந்து ஒரு அரசியல் சட்ட மன்னராட்சி.
15. செல்வந்தராட்சி : PLUTOCRACY - செல்வந்தர்கள் மற்றும் பணக்கார ர்களால் மட்டுமே நட த்தப்படும் ஆட்சி.
16. தொழில் நுட்ப அறிஞராட்சி : TECHNOCRACY - தொழில் நுட்ப வல்லு நர்களைக் கொண்டு நட த்தப்படும் ஆட்சி.
17. ஆன்மீக ஆட்சி : THEOCRACY -அரசாங்கம், ஒரு ஆன்மீக தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் வழி நட த்தலில் அரசாங்கம் நடப்பது.
18. குடியரசுத் தலைவர் ஜன நாயகம் : PRESIDENTIAL REPUBLIC - அரசாங்க தலைவரும், நாட்டின் தலைவரும் ஒன்றே இவ்வகை அரசாங்கத்தில், அரசாங்க அலுவல்களை கவனிக்க தனிச்சபை இருந்தும், குடியரசுத்தலைவரின் கீழ் ஒரு நிர்வாக சபையும் இயங்குகிறது. இந்த நிர்வாக சபை அரசியல் சபைக்கு நேரடி பொறுப்பல்ல. இவ்வகை அரசாங்கத்தில் குடியரசுத்தலைவரின் நிர்வாக அதிகாரம் மேலோங்கியது. உதாரணம் : அமெரிக்கா.