Khub.info Learn TNPSC exam and online pratice

அவசர காலங்கள்

Q1. இந்திய அரசியல் சட்ட த்தின் எந்த விதிப்படி அவசர கால பிரகடனம் செய்யப்படுகிறது?
விதி எண். 352.
Q2. எந்த காரணங்களுக்காக அவசரக் காலம் நாட்டில் பிறப்பிக்கப்படுகிறது?

1. விதி எண். 352 (ii)ன் படி - போர், எதிரிகளின் தாக்குதல் மற்றும் உள் நாட்டில் ஆயுதம் தாங்கிய புரட்சி.
2. விதி எண். 352 (iii)ன் படி - இந்திய அரசியல் சட்ட விதிகள் மீறல், முடக்கம் அல்லது கடைப்பிடித்தலின் தடங்கல்.
3. நிதி நிலை நெருக்கடி.
Q3. நம் நாட்டில் இது வரை எத்தனை தடவை அவசர காலம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது?

மூன்று முறை.
(1). 1962 - (26.10.1962 --> 10.01.1968) சீனப்போர் - ஜவஹர்லால் நேரு.
(2) 1971 -  (03.12.1971 ---> 21.03.1977) டிசம்பர் - வங்காள தேசப்போர் - இந்திரா காந்தி.
(3) 1974 - ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை - அரசியல் குழப்பங்கள் - சமாளிப்பதற்காக இந்திரா காந்தி அவர்கள் அவசர கால சட்டம் பிறப்பித்து ஆட்சியில் தொடர்ந்தார். இது இன்றும் பேசப்படும் ஒரு சர்ச்சை.
Q4. 1975 - 77ல் அவசர கால பிரகடனத்தை முன் வைத்த பிரதமர், ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் யார்?
இந்திரா காந்தி பிரதமர் முன் வைக்க குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.