Khub.info Learn TNPSC exam and online pratice

ஷா மிர் வம்சம் -- SHAHMIR DYNASTY – KASHMIR – 1339 – 1561

Q1. ஷா மிர் வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
ஷா மிர் Shah Mir – இவருடைய தொடக்கம், காஷ்மீரில் முஸ்லீம் ஆட்சி அமையத் தொடங்கியது. இவர் ""சுல்தான் ஷம்சுத்தீன்"" என்ற பட்டமேற்று 1342 வரை ஆண்டார். இந்த வம்ச ஆட்சி 1561 வரை நீடித்தது. டெல்லி சுல்தானியத்துக்கு அடிபணியாமல் ஆட்சி நடத்தி வந்தனர். இந்த வம்சத்தில் சுமார் 16 மன்னர்கள் இருந்த போதிலும், கீழ்க்கண்டவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
சிக்கந்தர் SIKANDER – 1389-1413 – காஷ்மீரின் அவுரங்கசீப் என அழைக்கப்பட்டார். இஸ்லாமியர்கள் மீது அதிக பற்றும், இந்துக்கள அதிக கொடுமைப்படுத்தியும் ஆட்சி நடத்தினார்.
ஸைனுலாதீன் ZAINULAIDIN – 1420 – 1470 – காஷ்மீரின் அக்பர் என அழைக்கப்பட்டார். இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள சீர் செய்தார். மக்கள் நல அரசாங்கம் நடத்துவதில் கவனம் செலுத்தினார். இந்து ஆலயங்களை சீரமைத்தார். மகாபாரதம் மற்றும் ராஜதரங்கிணி நூல்களை பாரசீக மொழியில் மொழி மாற்றம் செய்தார். இவருடைய அவையிலேயே ச்சக் வம்ச பிரபுக்களால் 1561ல் பதவி நீக்கம் செய்யப்பட்டு ச்சக் வம்ச ஆட்சி தொடங்கியது."