Khub.info Learn TNPSC exam and online pratice

காகத்திய வம்சம் -- KAKATIYAS – கி.பி.1163 -- 1323.

Q1. காகத்திய வம்ச ஆட்சி எந்த பகுதியில் இருந்தது?
"ஆந்திர பிரதேசத்தின் வாரங்கல் (இன்றைய தெலங்கானா) பகுதியை மையமாகக் கொண்டு ஆண்டனர். (வாரங்கல் அந்த காலத்தில் ஒருகல்லு என அழைக்கப்பட்டது) "

Q2. காகத்திய வம்ச ஆட்சியில் இருந்த முக்கிய அரசர்கள் யாவர்?
"இந்த வம்ச ஆட்சி கி.பி. 1000 வாக்கில் சிறு அளவில் துவங்கி, 1083 வாக்கில் வரலாற்றில் குறிப்பிடும் அளவுக்கு வளர்ந்தது. கி.பி.1110 க்கு பிறகே குறிப்பிடத்தக்க முக்கியமான மன்னர்கள் இருந்தனர். அவர்கள்:
ப்ரோலா 2 -- PROLA II – 1110-1158 – இந்த வம்ச ஆட்சியை நிறுவியவராக கருதப்படுபவர். சாளுக்யர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்த வம்சத்தை நிறுவினார். இந்த வம்ச ஆட்சி சுமார் மூன்று நூற்றாண்டுகள் ஆட்சியில் இருந்தது.
ருத்ர தேவா 2 -- RUDRA DEVA II – 1158 -1195 – தனது பகுதிகளை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொண்டது மட்டுமின்றி தெற்கு ஆந்திராவின் வெங்கி வரை கைப்பற்றினார். அவருடைய கடைசிக் காலத்தில் யாதவர்களால் தோல்வியும் மரணமும் அடைந்தார். வாரங்கல் நகரில் அனுமகொண்டா என்ற இடத்தில் உள்ள 1000 கால் சிவ ஆலயம் இவருடைய காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது.
கணபதி தேவா -- GANAPATI DEVA – 1199 -1261 – சுமார் 63 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இந்த வம்சத்தின் மிக சக்தி வாய்ந்த மன்னராக விளங்கி, தெலுங்கு மொழி பேசப்படும் அனைத்து பகுதிகளையும் தனது ஆட்சியின் கொண்டு வந்தார். வாரங்கல்லில் இரண்டு கோட்டைகளை கட்டி தனது தலைநகராக்கினார்.
ருத்ரமா தேவி (பெண்) -- RUDRAMADEVI – 1262 – 1296 – இந்த வம்சம், மற்றும் ஆந்திர பிரதேசத்தை ஆண்ட பல சிறந்த மன்னர்களில் இவரும் ஒருவர். யாதவ, சோடா மன்னர்களின் எதிர்ப்பை திறம்பட சமாளித்தார். இவர் ஒரு சிறந்த வீரர் அதனால் போர் புரிவதில் முன் நிற்பார் எனவும் கூறப்படுகிறது.
ப்ரதாப் ருத்ரா 2 -- PRATAPRUDRA 2 – 1296 -1323 – சுல்தானிய படைகளின் தொடர் போர் இவரை மிகவும் பாதித்து, 1323ல் துக்ளக் வம்ச தளபதி உலூக் கான் மூலம் தோல்வியில் முடிவடைந்து, இந்த வம்ச ஆட்சியும் முடிவடைந்தது."