Khub.info Learn TNPSC exam and online pratice

ஹொய்சாளாஸ் -- HOYSALAS – 1026 – 1343 AD

Q1. ஹொய்சாள வம்சம் ஆட்சி செய்த பகுதிகள் யாவை?
"முதலில், பேலூரை தலைநகராகக் கொண்டு மைசூரு பகுதிகள். பிறகு கர்நாடகா முழுவது, தேவசமுத்ரா (இன்றைய ஹாளேபீட்) தலைநகராக ஆட்சி புரிந்தனர். "

Q2. ஹொய்சாள வம்ச ஆட்சியை நிறுவியவர் யார்?
சாலா -- ந்ரிபகர்மா எனவும் அழைக்கப்பட்டார். (1026-1047).
Q3. "ஹொய்சாள வம்ச ஆட்சியை ஒரு சிறு நகரில் தொடங்கி, பிற்காலத்தில் ஒரு சாம்ராஜ்யமாக மாற அடிகோலியவர் யார்? "
பல்லாலா 1 பேலூரை தலைநகராக கொண்டு.
Q4. ஹொய்சாள வம்சத்தின் இதர மன்னர்கள் யாவர்?
"ஹொய்சாளா வினயாதித்யா -1047 – 1098
எரெயங்கா -- 1098 – 1102
வீர பல்லாலா 1 -- 1102 - 1108
விஷ்ணுவர்தனா -- 1108 - 1152
நரசிம்மா 1 -- 1152 – 1173
வீரபல்லாலா 2 -- 1173 – 1220
வீர நரசிம்மா 2 -- 1220 – 1235
வீர சோமேஷ்வரா -- 1235 – 1254
நரசிம்மா 3 -- 1254 – 1291
வீர பல்லாலா 3 -- 1292 – 1343"
Q5. ஹொய்சாள மன்னர்களில் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்?
பட்டிகா -- BATTIGA/VISHNUVARDHANA – 1108 – 1152 – பல்லாலா 1 ன் மைந்தன். இவர் தான் ஹொய்சாள வம்ச ஆட்சியை ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கியவர். சோழர்களின் கங்காவாடி, நளம்பாவாடி போன்ற பகுதிகளை, மற்றும் சுற்று புறத்தில் இருந்த சிறு மன்னர்கள வென்று இந்த ராஜ்யத்தை உருவாக்கினார். சாளுக்ய மன்னர் விக்ரமாதித்யா மீது படையெடுத்து தோல்வி கண்டாலும், சோமேஷ்வரா 3 ஐ வென்று, சில சாளுக்ய பகுதிகளை பிடித்தார்.
பல்லாலா 2 -- BALLALA II –1173 – 1220 - இவருடைய 47 வருட ஆட்சியில் முதல் பாதி, எதிரிகளை சமாளிப்பதில் கழிந்தது. கடம்பர்களை வென்றார். சாளுக்ய வம்சம் முடிவை நெருங்கும் போது தனது பகுதியை சுய ராஜ்யமாக நிலைநிறுத்திக்கொண்டார்.
NARASIMHA III -1254 – 1291 – வட பகுதியில் யாதவ மன்னர்களின் தொடர் தாக்குதல்களிலிருந்து தன் பகுதியை தக்கவைத்துக் கொண்டு ஆட்சி புரிந்தார்.
BALLALA III – 1292 -1343 -- தனது சிநேக அரசர்கள், பாண்டியர்களின் தாக்குதல்களை சமாளித்து ஆட்சி புரிந்த போது, 1310ல் அலாவுதீன் கில்ஜியின் சுல்தானிய தளபதி தாக்குதல்களை சமாளிக்கமுடியாமல் மதுரை அவர்கள் வசம் சென்றது. இதற்கு பிறகு இவர் சுமார் 30 ஆண்டுகள் கில்ஜி மற்றும் துக்ளக் வம்ச தாக்குதல்களை சமாளித்து ஆட்சி புரிந்து வந்த போதிலும், திருச்சியில் நடந்த போரில் மதுரை சுல்தானிடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து ஹொய்சாளா வம்சம் முடிவு பெற்றது.