Khub.info Learn TNPSC exam and online pratice

கெஹ்லாத்/சிசோடியா வம்சம் GEHLOT/SISODIA DYNASTY 13வது நூற்றாண்டு TO 1615

Q1. கெஹ்லாத் வம்சத்தினர் யார், அவர்கள் எந்த பகுதியை ஆட்சி செய்தனர், அதன் தலைநகரம் எது?
"ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஒரு பிரிவினர். இவர்கள் ராஜஸ்தானின், மேவார், பன்ஸ்வார், ப்ரதாப்கர், துங்கார்பூர் போன்ற பகுதிகளை, நாக்டா வை தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இவர்களிலேயே சிசோடியா வம்சத்தினர் மற்றொரு பிரிவினர். இவர்களில் சிலரும் ஆட்சியில் இருந்தனர். "

Q2. கெஹ்லாத்/சிசோடியா வம்சத்தின் முக்கிய மன்னர்கள் யாவர்?
ஜெய்த்ர சிங் JAITRA SINGH 1213-1261 – இல்துமிஷ் படையெடுப்பை வெற்றிகரமாக சமாளித்தார். இருப்பினும் இவருடைய தலைநகரம் மிகவும் சேதப்படுத்தப்பட்டதால், சித்தோர் தலைநகரமாக மாற்றப்பட்டது. இவருக்குப் பிறகு ரத்ன சிம்ஹா - 1303ல் அலாவுத்தீன் கில்ஜி படையெடுத்து இந்த பகுதியைக் கைப்பற்றினார். இந்த சமயத்தைப் பயன்படுத்தி, சிசோடியா வம்சத்தினர் மேவார் பகுதியின் ஒரு பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவிக்கொண்டனர்.
Q3. சிசோடியா வம்சத்தின் முக்கிய மன்னர்கள் யாவர்?
ராணா ஹமீர் -- RANA HAMMIR – 1314 – 1378 – சிசோடியா வம்சத்தின் முக்கிய மன்னர். டெல்லி சுல்தானிடமிருந்து மேவார் பகுதியை முழுமையாக கைப்பற்றினார். அருகிலிருந்த சிறு ராஜபுத்திர மன்னர்களின் சில பகுதிகளையும் கைப்பற்றினார். க்ஷேத்ரமித்ரா -- KSHETRASIMHA – 1378-1405 – மாளவா பகுதியின் திலாவார் கான் கூரியுடன் இரண்டு முறை போர் புரியும்படி ஆயிற்று. குடும்ப சண்டையில் கொல்லப்பட்டார். இவருக்கு பிறகு இரண்டு திறமையற்ற அரசர்கள் பதவிக்கு வந்தனர்.
ராணா கும்பாகரண் RANA KUMBHAKARAN – 1438-1468 – மேவார் பகுதியின் மிக சக்திவாய்ந்த மன்னர், மாவீரன். வேதம், உபநிடதம், ஸ்மிருதி, மிமாம்ஸா, வ்யாகர்ணா, அரசியல், இலக்கியம் மற்றும் இசை ஆகியவற்றில் மிகப்பெரிய அறிஞரும் ஆவார். இவர் காலத்தில் 32 கோட்டைகள் கட்டப்பட்டு, மேவாரின் தற்காப்பு பலப்படுத்தப்பட்டது. பல ஆலயங்களையும் கட்டினார். தன் மகனாலேயே கொல்லப்பட்டார். இவருக்கு பின் வந்த சிசோடியா மன்னர்கள், தங்கள் குடும்ப அரசியல் சண்டையிலேயே பலவீனமடைந்து, மாளவ படையெடுப்பின் மூலம் அழிந்தது.
ராணா சங்ராம் சிங் RANA SANGRAM SINGH – 1509-1528 – உடல் ஊனமுற்றவராக இருந்த போதிலும், இவருடைய காலத்தில் மேவார் புகழ் உச்ச நிலைக்கு அடைந்தது. மாளவ மன்னர் மஹ்மூத் கில்ஜி 2, குஜராத்தின் முஸாஃபர் ஷா மற்றும் டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோதி ஆகியோரின் தாக்குதல்கள திறம்பட சமாளித்தார். இருப்பினும், 1527ல் கன்வா என்ற இடத்தில், பாபருடன் நடந்த போரில் பெருத்த தோல்வியை சந்தித்தார். பாபர் எல்லையை கைப்பற்றவில்லை. 1615ல் இந்த வம்சம் ஜெஹாங்கீர் காலத்தில் முகலாய ஆட்சிக்கு அடிபணிந்தது.