Khub.info Learn TNPSC exam and online pratice

மார்வார் ராத்தோர் வம்சம் RATHORS OF MARWAR - 1384 – 1562

Q1. ராத்தோர் வம்ச எந்த பகுதியை ஆண்டனர்?
"ராத்தோர்கள் அடிப்படையாக கனௌஜ் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் பல பிரிவு இருந்தது. ஒவ்வொரு பிரிவினரும், ராஜஸ்தான், மத்ய பிரதேசம், உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள், சத்தீஸ்கரின் சில பகுதிகள் என ஆண்டு வந்தனர். ஆனால் இவர்களுள், பிக்கானீர், மார்வார், பார்மர் ஜெய்சல்மேர், ஆம்பர் மற்றும் ரணதம்போர் பகுதிகளை ஆண்ட மன்னர்களே முக்கியமாக குறிப்பிடப்படுகின்றனர். 13ம் நூற்றாண்டின் நடுக்காலத்திலிருந்து ஆட்சியில் இருந்த போதிலும் கீழ்க்கண்டவர்களே வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றனர். சுண்டா CHUNDA 1384-1423. ஜோதா Jodha (1438-1489) ஜோத்பூர் நகரம் இவரால் உருவாக்கப்பட்டு, கோட்டை எழுப்பப்பட்டு தலைநகரமாக்கப்பட்டது. மால்தேவா MALDEVA or MALDEO 1532 to 1562. மார்வார் பகுதியை ஆண்ட மன்னர்களில் மிக சிறந்த சக்தி வாய்ந்த மன்னர். ஷேர் ஷா இவர் மீது படையெடுத்து வெற்றி கொள்ள முடியாமல் இவருடன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார் என்பதிலிருந்து இவருடைய சக்தி வெளிவருகிறது. "