Khub.info Learn TNPSC exam and online pratice

கச்சாவாஹா வம்சம் KACHHAVAHAS – RAJASTHAN.

Q1. கச்சாவாஹா என்பவர்கள் யார், அவர்கள் எந்த பகுதியை ஆண்டனர்?
"இவர்கள் ஆம்பர் பகுதியை (பிற்காலத்தில் ஜெய்ப்பூர் ராஜ்யம்) ஆண்டனர். சூர்ய வம்சத்தை சார்ந்தவர்கள். இந்த வம்சத்தில் முன்பாக சில மன்னர்கள் இருந்த போதிலும், 1037ல் ஆம்பர் கோட்டையை கக்கில் தேவா, மீனா ஆட்சியிடமிருந்து கைப்பற்றி, அதை தலைநகராக்கி ஆட்சியைத் தொடங்கினர். இவர்கள் மேவார் மன்னரின் கீழ் ஆண்டு வந்தனர். சிறு அளவில் ஆண்டு வந்து, 14ம் நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்றனர். பிற்காலத்தில் முகலாய மன்னர்களுக்கு துணை புரிந்த காரணத்தால் அதிக முக்கியத்துவம் பெற்றனர். இவர்களில், பராமல், பகவாந்தாஸ், மான் சிங் போன்றவர்கள் நேரடியாக முகலாயர்களுக்கு உதவி புரிந்ததால், முகலாய சாம்ராஜ்யம் பலம் பெற்று பெரிய சக்தியாக உருவெடுக்க காரணமாயிருந்தது. "