Khub.info Learn TNPSC exam and online pratice

ஏரிகளும் உப்பங்கழிகளும் -- LAKES AND LAGOONS

Q1. ஏரி என்பது என்ன?
அதிகமான பரப்பளவு கொண்ட நிலப்பகுதியில் சேர்ந்துள்ள நீர், அனைத்துப் பக்கங்களிலும் நிலத்தால் அல்லது மலைகளால் சூழப்பட்டிருக்கும்.

Q2. ஏரிகள் பொதுவாக ....?
நன்னீர் கொண்டதாக இருக்கும். ஒரு சில உப்பு நீர் ஏரிகளும் உண்டு. உதாரணம் -- சில்கா ஏரி, ஒடிசா.
Q3. ஏரிகளின் வகைகள் யாவை?
1. பனிப்பாறைகளால் சூழ்ந்த ஏரி Periglacial - பனி உருகி ஏற்படும் ஏரிகள்
2. பனிப்பாறைகளுக்கடியில் உள்ள ஏரி Subglacial
3. செயற்கை ஏரிகள் Artificial -- மனிதனால் உருவாக்கப்பட்ட நிலத்தேக்க நீர்ப்பகுதிகள் -- உதாரணம் - அணைகளால் ஏற்பட்டிருக்கும் நீர்த்தேக்கங்கள். reservoir
4. ஆவியாகும் நீர்பரப்பு ஏரி Endorhic - இவ்வகை ஏரிகளின் நீர் வெளியேற்றம் இருப்பதில்லை. இங்குள்ள நீர் ஆவியாகும் முறையில் மட்டும் வெளியேறும்.
5. நிலப்பகுதி கரைந்து உருவாகும் ஏரி Karst - சுண்ணாம்பு, ஜிப்சம் போன்ற கரையும் தன்மை கொண்ட மலைப்பகுதிகள் கரைந்து, சிதைந்து உருவாகும் ஏரிகள்.
Q4. உலகின் மிகப்பெரிய ஏரி எது?
கேஸ்பியன் கடல் Caspian Sea – 394300 ச.கி.மீ – இது ஒரு உப்பு நீர் ஏரி.
Q5. உலகின் மிக ஆழமான ஏரி எது?
பைக்கால் ஏரி, ரஷ்யா -- 1637 மீ/5471அடி ஆழம்.
Q6. உலகின் கொள்ளளவு அதிகம் கொண்ட நன்னீர் ஏரி எது?
பைக்கால் ஏரி, சைபீரியா, ரஷ்யா.
Q7.
உலகின் பழமையான ஏரி எது?
பைக்கால் ஏரி, சைபீரியா, ரஷ்யா.
Q8. உலகின் உயரமான ஏரி எது?
ஓஜொஸ் டெல் சாலடோ -- சிலி -- 6891 மீ/22608 அடி உயரத்தில் உள்ளது. இது ஒரு எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட ஏரி. இது அர்ஜெண்டினா-சிலி எல்லைப்பகுதியில் ஆண்டிஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
Q9. உலகின் இரண்டாவது உயரமான ஏரி எது?
திபெத் Tibet – 6368 மீ உயரத்திலுள்ளது.
Q10. டிடிகாகா ஏரி -- Titicaca எங்குள்ளது, அதன் சிறப்பம்சம் என்ன?
தென் அமெரிக்காவில் பொலிவியா-பெரு நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. 3812 மீ உயரம்.
1. உலகிலேயே உயரமான வணிக ரீதியாக பயணிக்கக்கூடிய ஏரி.
2. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரி.
3. தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நன்னீர் ஏரி.
Q11. உலகின் தாழ்வான ஏரி (கடலும் கூட) எது?
மரணக்கடல் -- Dead Sea -- இஸ்ரேல் - ஜோர்டா மேற்கு பகுதி -- கடல் மட்டத்திலிருந்து சுமார் 1371 அடி தாழ்வாக உள்ளது.
Q12. உலகில் பரப்பளவில் அதிகமான நன்னீர் ஏரி எது?
சுப்பீரியர் ஏரி -- Lake Superior – ஆண்டேரியோ, கேனடா -- மின்னசோட்டா, அமெரிக்காவுக்கிடையில் உள்ளது -- 82414 ச.கி.மீ
Q13. ஒரு தீவில் அமைந்துள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
ஹ்யூரோன் ஏரி -- மேனிடோவ்லின் தீவு, கேனடா -- இந்த தீவில் சுமார் 108 நன்னீர் ஏரிகள் உள்ளன.
Q14. உலகிலேயே உப்பு நீர் ஏரியில் முதலைகள் வாழும் ஏரி எது?
என்ரிகுல்லோ ஏரி -- டொமினிகன் குடியரசு .
Q15. உலகின் இரண்டாவது மிக உயரமான நன்னீர் ஏரி எங்குள்ளது?
விக்டோரியா ஏரி -- Lake Victoria – 68800 ச.கி.மீ -- தன்ஸானியா, உகாண்டா மற்றும் கென்யா நாடுகளுக்கு இடையில் பரவியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரி.
Q16. உலகிலேயே நன்னீர் அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதற்கு உதவுவது அங்குள்ள 5 பெரிய ஏரிகள். அவை யாவை?
பரப்பளவில் அவை உண்மையிலேயே மிகப் பெரிய ஏரிகள். அவை அனைத்தும் அமெரிக்கா-கேனடா எல்லையை ஒட்டியவாறு அமைந்துள்ளன. அவை:
1. சுப்பீரியர் -- 82100 ச.கி.மீ -- கேனடாவின் அண்டாரியோ மற்றும் அமெரிக்காவின் மின்னசோட்டா, விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் பரவியுள்ளது.
2. மிச்சிகன் -- 58030 ச.கி.மீ -- முழுவதும் அமெரிக்காவில் உள்ள ஒரு ஏரி.
3. ஹ்யூரோன் -- 59588 ச.கி.மீ -- கேனடாவின் அண்டாரியோ மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணங்களில் பரவியுள்ளது.
4. ஈரி -- 25667 ச.கி.மீ -- கேனடாவின் அண்டாரியோ மற்றும் அமெரிக்காவின் ஒஹையோ, நியூயார்க் மற்றும் பென்னிஸ்லேவேனியா மாகாணங்களில் பரவியுள்ளது.
5. அண்டாரியோ -- 19000 ச.கி.மீ -- கேனடாவின் அண்டாரியோ மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணங்களில் பரவியுள்ளது.
Q17. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏரி எது?
அயர் ஏரி Lake Eyre – 9500 ச.கி.மீ.
Q18. கேனடாவின் மிகப் பெரிய ஏரி எது?
க்ரேட் பியர் லேக் -- Great Bear Lake -- 31153 ச.கி.மீ – வட அமெரிக்காவின் 4வது பெரிய ஏரி -- உலகின் 8 வது மிகப்பெரிய ஏரி.
Q19. மாளவி ஏரி எங்குள்ளது?
ந்யாசா ஏரி எனவும் அழைக்கப்படுகிறது. மொசாம்பிக் நாட்டிலிருந்து அண்டை நாடுகளான மாளவி மற்றும் தன்ஸானியா நாடுகளிலும் பரவியுள்ளது. சுமார் 587 கி.மீ நீளமும், 84 கி.மீ அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி -- சுமார் 29600 ச.கி.மீ பரப்பளவு.
Q20.
இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி எது?
சில்கா ஏரி. Chilka Lake – ஒடிசாவின் கட்டாக் அருகில். மகாநதியின் தெற்கு வடக்கு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இது சுமார் 1165 ச.கி.மீ பரப்பளவு -- பழங்காலத்தில் கடலின் ஒரு பகுதியாக இருந்தது எனத் தெரிகிறது.
Q21.
இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
வுலார் ஏரி -- ஜம்மு காஷ்மீர் -- சோபோர் மற்றும் பந்திப்பூர் இடையில் அமைந்துள்ளது.
Q22. இந்தியாவின் வேறு பெரிய நன்னீர் ஏரிகள் எவை?
1. கொல்லேறு ஏரி -- Kolleru Lake – மேற்கு கோதாவரி, ஆந்திரபிரதேசம்.
2. காவேர் ஜீல் -- Khaver Jeel – பெகுசராய், பீஹார்.
Q23. இந்தியாவின் உயரமான ஏரி எது?
குரு டாங்மார் ஏரி -- Guru Dongmar Lake – சிக்கிம் – இந்தியா-சீனா எல்லைக்கருகில், சுமார் 17100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் உயரமான ஏரிகளில் இதுவும் ஒன்று. close to India-China border at an altitude of 17100 feet. One of the world’s highest lake.
Q24. சந்திரா தால் ஏரி எங்குள்ளது, அதன் சிறப்பம்சம் என்ன?
இமாச்சலப் பிரதேச இமாலய மலையில் உள்ளது. இந்த ஏரியை நடை பயணமாக மே முதல் ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே சேர்ந்தடைய முடியும்.
Q25. வேம்பநாடு ஏரி எங்குள்ளது, வருடந்தோறும் இங்கு நடக்கும் புகழ் பெற்ற நிகழ்வு என்ன?
Kerala -- ஆலப்புழை மாவட்டம் - கேரளாவின் மிகப்பெரிய ஏரி -- இந்தியாவின் நீளமான ஏரி -- சுமார் 200 ச.கி.மீ -- இந்த ஏரியில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம், நேரு கோப்பை என்ற படகுப் போட்டி (வல்லம் களி) நடைபெறுகிறது. இது உலகப்புகழ் பெற்றது. இந்தியா மட்டுமல்ல, வெளிநாட்டு பயணிகளும் பார்வைக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Q26. மானசரோவர் ஏரி எங்குள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன?
திபெத்-ல் உள்ளது. சுமார் 4556 மீ உயரத்தில் உள்ளது. இதிலிருந்து தான், ப்ரம்மபுத்ரா, சட்லஜ், சிந்து மற்றும் கர்னாளி நதிகள் உருவாகின்றன. இதுவே உலகின் உயரமான நன்னீர் ஏரி.
Q27. இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலாத் தல ஏரி எங்குள்ளது?
டால் ஏரி, ஜம்மு காஷ்மீர். இங்குள்ள படகு வீடுகளும் (ஷிகார்) மற்றும் இதர சுற்றுச்சூழல், அழகிய தோட்டங்கள் ஆகியவை உலகிலிருந்து பல நாட்டு சுற்றுலா பயணிகளை வரவழைக்கிறது.
Q28. கலீலி கடல் -- Sea of Galilei என்பது என்ன?
இஸ்ரேல் நாட்டுப் பெரிய நன்னீர் ஏரி. டைபீரியஸ் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது.
Q29. இந்தியாவின் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஏரி எது?
இந்திரா சாகர் ஏரி (அணை) -- Indra Sagar Lake, நர்மதா நதி, காண்ட்வா மாவட்டம், மத்தியபிரதேசம்.
Q30. ஏரிகளைப்பற்றிய ஆய்வு/படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லிம்னாலஜி -- Limnology.
Q31. உலகின் உள்ள ஏரிகளில் பாதி ஒரு நாட்டிலேயே உள்ளது. அது எது?
கேனடா. அதனால் இந்த நாட்டை "ஆயிரம் ஏரிகள் நாடு" “Land of Thousand Lakes” என அழைக்கிறார்கள்.
Q32. அமெரிக்காவின் மரணக்கடல் என்றழைக்கப்படும் ஏரி எது?
அமெரிக்காவின் உத்தா Utah பகுதியில் உள்ள மிகப்பெரிய உவர்நீர் ஏரி. ஆனால், இந்த ஏரியினால் பல ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு புகலிடமாக அமைந்துள்ளது.
Q33. கானா நாட்டில் உள்ள அகோசோம்போ அணை -- Akosombo Dam யினால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி எது?
வோல்டா ஏரி -- Lake Volta.
Q34. ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரம் ஏரிகளுக்கு மிகவும் புகழ் பெற்றது. அவை யாவை?
1. ஃபத்தே சாகர் ஏரி -- Fateh Sagar Lake: இதில் இரண்டு தீவுகள் உள்ளன். ஒன்றில் வானியல் ஆய்வு மையமும் மற்றொன்றில் அழகான தோட்டமும் அமைந்துள்ளது.
2. பிச்சோலா ஏரி -- Pichola Lake: ஏரியின் நடுவில் மிக அழகான அரண்மனை மாளிகை உள்ளது.
Q35. "அடிமைகள் ஏரி" “Great Slave” எங்குள்ளது ?
கேனடா. இந்திய அடிமைகளின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. மெக்கென்ஸி நதியால் நீர் பெறுகிறது.
Q36. உப்பங்கழி -- Lagoon என்பது என்ன?
ஆழமில்லாத கடலிலிருந்து வெளிவந்த உவர்நீர்பரப்பு. அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தால் அல்லது மணல் மேடுகள், மலைகளால் கவரப்பட்டுள்ளது.
Q37. இந்தியாவின் மிகப்பெரிய உப்பங்கழி எது?
வேம்பநாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா. இங்கும், படகு வீடுகள் மற்றும் இதர சுற்றுலா மையங்களும் உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை இங்கு அதிகம்.