Khub.info Learn TNPSC exam and online pratice

நீர்வீழ்ச்சி -- WATER FALLS

Q1. நீர்வீழ்ச்சி (அருவி) என்பது என்ன?
பரவலாக மட்டமாக பாய்ந்து வரும் நீர்ப் போக்கு, ஒரு பள்ளத்திற்கு, உயரத்திலிருந்து விழுவது நீர்வீழ்ச்சியாகும். பொதுவாக மலைப்பகுதிகளில் மட்டுமே காணக்கூடிய ஒரு இயற்கை அமைப்பு.

Q2. நீர்வீழ்ச்சிகளின் வகைகள் யாவை?
1. Block -- அகலமான ஒரு நதியிலிருந்து நீர் பள்ளத்தை நோக்கி மொத்தமாக இறங்குவது.
2. Cataract -- ஒரு மிகப்பெரிய (அகலம் & உயரம்) நீர்வீழ்ச்சி.
3. Cascade -- மலைத் தடுப்புகளால் படிப்படியாக நீர் இறங்கி வந்து விழுவது.
4. Horse Tail -- குதிரை வாலைப் போல. இறங்கும் நீர் மலைப்பகுதியை தழுவியவாறே இறங்குவது.
5. Plunge -- பாய்ந்து வரும் நீர், மலையுடன் எந்த தொடர்பும் இல்லாமல், செங்குத்தாக கீழே விழுவது.
6. Punch Bowl -- குறுகிய அளவில் கீழே விழுந்து ஒரு பெரிய குளம் போன்ற அமைப்பை ஏற்படுத்துவது.
7. Segmented -- ஒரே நீர்ப்போக்கிலிருந்து, பாறைகளின் பல வழிகளில் தனித்தனியாக விழுவது.
8. Tiered -- நீர்ப்போக்கு, மலைகளின் அமைப்பினால், அடுக்கடுக்காக விழுந்து வருவது.
9. Multi Step -- ஒரே நீர்ப்போக்கில் ஏற்படும், பல நீர்வீழ்ச்சிகள், கீழே விழுந்து தனித் தனி குளங்களை ஏற்படுத்தி பாய்வது.
Q3.
உலகின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்செல் நீர்வீழ்ச்சி -- ANGEL FALLS: வெனிசுலா -- 979 மீ/3212 அடி உயரம் -- தடையில்லாத நீர் வீழ்ச்சி 2648 அடி -- இந்த நீர்வீழ்ச்சியை 1935ல் அமெரிக்கர் ஜேம்ஸ் க்ராஃபோர்ட் ஏஞ்செல் என்பவர் கண்டு பிடித்தார். அதனால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் கெனைமா தேசிய பூங்கா வில் அமைந்துள்ளது.
Q4.
நயாகரா நீர் வீழ்ச்சி எங்குள்ளது?
அமெரிக்கா மற்றும் கேனடா நாடுகளின் எல்லைக்குள் பரவியுள்ளது. இது மூன்று நீர்வீழ்ச்சிகள் அடங்கியது -- 1. கேனடா நீர்வீழ்ச்சி 2. அமெரிக்கா நீர்வீழ்ச்சி 3. ப்ரைடல் வீல் நீர்வீழ்ச்சி - அமெரிக்கா.
Q5.
உலகின் மிக அகலமான நீர்வீழ்ச்சி எது?
இகுவாசு நீர்வீழ்ச்சி -- IGUAZU FALLS -- அர்ஜெண்டினா - ப்ரேசில் எல்லை. சுமார் 2.7 கி.மீ -- சுமார் 270 நீர்வீழ்ச்சிகள் அடங்கியது -- இதில் ""பிசாசின் தொண்டை"" “Devil’s Throat” என்ற நீர்வீழ்ச்சி, நயாகரா நீர்வீழ்ச்சியை விட சுமார் 3 மடங்கு பெரியது.
Q6. நயாகரா நீர்வீழ்ச்சியால உருவாக்கப்பட்டுள்ள தீவின் பெயர் என்ன?
கோட் தீவு -- Goat island.
Q7. விக்டோரியா நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
ஆப்பிரிக்க நாடுகளான ஸாம்பியா -- மற்றும் ஸிம்பாப்வே இடையில் பரவியுள்ளது. ஒரு தனி நீர்வீழ்ச்சியாக பார்க்கும் போது, இது உலகின் மிக நீளமானது -- 1.7 கி.மீ -- 368 அடி உயரமானது. ஸம்பேசி நதியில் அமைந்துள்ள இந்தி நீர்வீழ்ச்சி, இரண்டு நாடுகளுக்கிடையே அமைந்துள்ளது. இது ஒரு யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் புராதனச் சின்னம்.
Q8. உலகின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி எது?
டுகேலா நீர்வீழ்ச்சி -- Tughela Falls – 947 மீ / 3110 அடி – தென் ஆப்பிரிக்காவின் ராயல் நாடல் மாகாணத்தில் அமைந்துள்ளது.
Q9.
தூத்சாகர் நீர்வீழ்ச்சி -- “Doodhsagar Falls” எங்குள்ளது?
""பால் கடல்"" எனப் பொருள். கோவா கர்நாடகா எல்லையில் மாண்டோவி நதியில் கோவா பகுதியில் அமைந்துள்ளது -- பெங்களூரு-கோவா ரயில் பாதியில் அமைந்துள்ளது. மிக அழகானதொரு நீர்வீழ்ச்சி.
Q10.
தென் இந்தியாவில் புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
கர்நாடக மாநிலத்தின், ஷராவதி நதியில், ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 829 அடி/253 மீ உயரமானது. இதை கெர்சோப்பா நீர்வீழ்ச்சி எனவும் அழைப்பர்.
Q11.
சிவசமுத்ரம் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் காவிரி நதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 650 அடி உயரம் கொண்டது.
Q12.
ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் காவிரி நதியில் அமைந்துள்ளது.
Q13.
குற்றாலம் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
தமிழ்நாட்டின் தென்காசி யில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி. மிக முக்கியமான சுற்றுலாத் தலம்.
Q14. இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
நோகாலிக்காய் நீர்வீழ்ச்சி, செராபுஞ்சி, மேகாலயா சுமார் 1115 அடி உயரம்.
Q15. இந்தியாவிலுள்ள இதர நீர்வீழ்ச்சிகள் யாவை?
அருவிக்குழி (கோட்டயம்); கும்பவுருட்டி (கொல்லம்).
எண் மாகாணம் நீர்வீழ்ச்சிகள் பெயர்/மாவட்டம்
1. தமிழ்நாடு தலையார் (திண்டுக்கல்); ஆகாய கங்கை (நாமக்கல்); கிளியார் (ஏற்காடு); கேத்தரின் (நீலகிரி); குட்லாடம்பட்டி (மதுரை)
2. கர்நாடகம் குஞ்சிக்கல் (நிடகொடு); பர்கானா (ஷிமோகா); ஹெப்பே (கெம்மகுண்டி); மகோட் (யெல்லாபூர்); உஞ்சல்லி (உத்தர் கன்னடா); முத்யாலமடுவு (அனேகல்); இருப்பு (கொடகு); அப்பே (மைசூர்); கோகக் (பெலகாவி); சுஞ்சுனகட்டே (கிருஷ்ணராஜசாகர்); கோச்சினமலகி (பெல்காம்); சத்தோடி (சிர்சி);
3. கேரளா அதிரபள்ளி (சாலக்குடி); சூச்சிப்பாரா (வயநாடு); மீன்முட்டி (வயநாடு); வழச்சல் (அதிரபள்ளி); பாலருவி (கொல்லம்); அடயன்பாரா (நீலாம்பூர்);
4. ஜார்க்கண்ட் லோத் (லத்தேஹர்); ஹூன்ரு (ராஞ்சி); ஜோன்ஹா (ராஞ்சி); தாசம் (ராஞ்சி); சத்னி (கும்லா);
5. மத்தியபிரதேசம் சச்சய் (ரேவா); பஹூதி (ரேவா).
6. ஒடிசா ஜொவாண்டா (மயூர்பஞ்ச்); துதுமா (கோராபுட்); சனககாரா & படககாரா (கெண்டுஜார்)
7. சத்தீஸ்கர் சித்ரகூட் (பஸ்தார்);
8. ஆந்திரபிரதேசம் தலகோனா (சித்தூர்); எத்திபொத்தாலா (குண்டூர்); உப்பலமுடுகு (சித்தூர்).
9. உத்தராகாண்ட் கெம்ப்டி (முசோரி);
10. பீஹார் ககோலத் (நவாடா);
11. தெலங்கானா குண்டாலா (அடிலாபாத்);
12. குஜராத் நிநாய் ((நர்மதா).
13. மகாராஷ்டிரா பாண்டவ்கடா (நவி மும்பை).